கௌரவ சபாநாயகர் அவர்களே…
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தற்போது திட்டமிடல் பணிகளும் வரவு செலவுத்திட்டத் தயாரிப்புப் பணிகளும் நடைபெற்றுக் கொணடிருக்கின்றன.
புதிய நல்லாட்சி அரசாங்கமானது கடந்த ஜனவரி 8 புரட்சிக்குப்பின்னர் முன்வைத்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் பல முற்போக்கான முன்வைப்புகளைச் செய்து அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புகளை வழங்கி சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்து தமது நல்லாட்சிக்கான அடையாளங்களை வெளிப்படுத்தியிருந்தது.
அந்த நல்லெண்ண செயற்பாடுகளுக்கு பிரதியீடாக ஆகஸ்ட் 17 ம் திகதி இன்னுமொரு புரட்சியினை ஏற்படுத்திய இந்த நாட்டு மக்கள் புதிய பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் இணக்கப்பாட்டுக்கு; ஆணை வழங்கியுள்ளனர்.
அந்த ஆணைக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக ஒதுக்கீட்டுச்சட்ட மூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு சபை அமர்வுகளின் போது எனது கன்னியுரையை இந்த உச்ச சபையிலே ஆற்றுவதிலே பெருமை அடைகின்றேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே….
இன்றைய அமர்வில்அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் சில சட்ட ஒழுங்குவிதிகள் திருத்தத்திற்கும் மாற்றத்திற்குமாக இந்த சபையிலே இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே அபிவிருத்தி உபாயங்கள் குறித்து உரையாடும் அமர்வில் அபிவிருத்தியின் தேவை அதிகமாகவுள்ள சமூகத்தின் பிரதிநிதி என்ற வகையில் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்களின் பிரதிநிதியாக எனது கருத்துக்களை முன்வைப்பது எனது கடமை என்று நினைக்கிறேன்.
இந்த நாட்டில் வாழும் ஐந்து தேசிய இனங்களில் ஒன்றாக இந்திய தமிழர்கள் என இலங்கையின் உத்தியோகபு+ர்வ அறிக்கைகளில் அடையாளப்படுத்தப்படும் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் வாழ்கிறார்கள். அந்த மக்களின் பிரதிநிதியாக நுவரெலியா மாவட்டத்தில் இருந்து இந்த முறை நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியினூடாக 67761 வாக்குகளை வழங்கி மாவட்ட மக்கள் என்னை இந்த உச்ச சபைக்கு தெரிவு செய்துள்ளார்கள். எனது கன்னி உரையின் போது முதலில் நுவரெலியா மாவட்டத்தில் எனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவு செய்துகொள்கினறேன்.
தொழிலளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளராக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதிச்செயலாளராக மக்களின் பிரதிநிதியாக எனக்கு முன் பல பொறுப்புகள் உள்ளதை நான் அறிவேன். தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளான தொழிலாளர் தேசிய முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஜனநாயக மக்கள் முன்னணி உறுப்பினர்கள் அனைவரும் எனக்கான ஆதார வாக்குகளை வழங்கியிருந்தார்கள். அந்த மூன்று கட்சிகளினதும் உறுப்பினர்களுக்கும் அந்த மூன்று கட்சிகளினதும் தலைவர்களான கௌரவ அமைச்சர்கள் பழனி திகாம்பரம், மனோ கணேசன் மற்றும் வே.இராதாகிருஷ்ணன் ஆகிய மூவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
தேசிய அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அபிவருத்தி குறித்து இந்த சபையிலே எடுத்துக் கூறவேண்டிய கடப்பாட்டைக்கொண்டுள்ளோம். அதேபோல எமது மாவட்டத்தில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களது அபிலாஷைகளை நிறைவேற்றுவதும் எமது கடமையாகிறது. நாங்கள் இதனைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளோம்.
வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்களில் மலையக மக்கள் பிரதானமானவர்கள். இலங்கையின் அபிவிருத்தி குறிகாட்டிகளை புள்ளி விபரங்களின் ஊடாக வெளிப்படுத்தும் உத்தியோகபு+ர்வ ஆவணங்கள் நகரம், கிராமம், தோட்டம் ருசடியn, ஏடைடயபநள, நுளவயவநள என மூன்று நிலை நின்று வெளிப்படுத்தப்படுவதனை அவதானிக்கலாம். இலங்கையின் சமூகக் கட்டுமானம் அவ்வாறே அமைந்து காணப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்படும் தோட்டத்துறை சார்ந்தே இன்றைய விவாதத்தில் எனது கருத்துக்களைப்பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
இலங்கையில் தோட்டத்துறை என்பது காலனித்துவ ஆட்சிக்காலத்திலேயே தோற்றம் பெற்றது. கிராமிய பொருளாதாரத்தை அடிநாதமாகக் கொண்ட இலங்கையின் பாரம்பரிய பொருளாதார முறைமையை ஏற்றுமதி நோக்கிய பொருளாதார முறைமையாக மாற்றியது இந்த தோட்டத்துறையின் அறிமுகம் தான்.
இந்த தோட்டத்துறை பொருளாதார நோக்கோத்தோடு பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதில் நிலம் இந்த நாட்டுக்குரியதாகவும் முதலீடும் முயற்சியும் பிரத்தானியர்களுடையதாக அமைந்தபோது உழைப்பு எனும் உற்பத்திக்காரணி இந்தியத் தொழிலாளர்களாக அமைந்ததுதான் வரலாறு.
இந்தியத் தொழிலாளர்களை உழைப்பாளர்களாகக் கொண்டு இந்த தோட்டத்துறை அமைந்ததன் காரணமாகத்தான் நாங்கள் இன்றும் இலங்கையில் ‘இந்தியத் தமிழர்கள்’ என சட்ட ரீதியான தேசிய இனமாக அழைக்கப்படுகிறோம்.
அவ்வாறுதான் நாங்கள் தொடர்ந்து அழைக்கப்படல் வேண்டுமா என்பது பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாம்.
அந்த உழைப்பாளர் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற வகையில் அபிவிருத்தி குறிகாட்டிகள் சுட்டிநிற்கும் தோட்டத்துறை சார்ந்தவனாக அந்த துறையின் அபிவிருத்தி குறித்து நிதி திட்டமிடல் அமைச்சினதும் அபிவிருத்தி உபாயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சுகளின் ஓதுக்கீட்டு சட்ட மூல விவாதத்தில் எனது உரை மிகவும் பொருத்தமானது என நினைக்கிறேன்.
இன்றைய விவாதத்தில் இந்த தோட்டத்துறை மக்களின் அபிவிருத்தி நிலைமைகள் அவற்றை நிவர்த்திப்பதற்கான எதிர்கால உபாயங்கள் என்ன என்பது தொடர்பாக உரையாடுவது பொருத்தமானது.
பொருளாதார நோக்கம் கொண்டதாக அமைக்கப்பட்ட தோட்டத்துறையில் உழைப்பாளர்கள் என்றவகையில் லட்சக்கணக்கான மக்கள் உள்வாங்கப்பட அங்கு தோட்டத்துறை சார்ந்த சமூகம் ஒன்று உருவாகி அவர்கள் இந்த நாட்டில் ஒரு அங்கமாகிப் போயுள்ளார்கள். அவர்களது வரலாறு இந்த நாட்டில் இப்போது இருநூறு வருடங்களை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த தோட்டத் துறையின் தொழில் நிர்வாகம் மாத்திரம் அல்ல சமூக நிர்வாகமும் கூட தனியார் வசமே வருடக்கணக்கில் அமைந்துவிட்டமை துரதிஷ்டவசமானது.
இன்று நகரம், கிராமம் என ஏனைய துறையுடன் ஒப்பிடும்போது இந்த தோட்டத்துறை புள்ளிவிபர குறிகாட்டிகள் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதற்கு தனியாரின் நிர்வாகத்தின் கீழ் தோட்டப்புற மக்கள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டதே பிதான காரணம் என நாங்கள் கருதுகின்றோம். தேசிய திட்டமிடல் நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த மக்கள் முறையாக உள்வாங்கப்படவில்லை. அதனால்தான் இருநூறு வருட பழமைவாய்ந்த லயம் என்று மக்கள் அழைக்ககக்கூடிய டுiநெ எனப்படும்; தொடர் குடியிருப்புகளில் அந்த மக்கள் நூற்றாண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர்.
கௌரவ சபாநாயகர் அவர்களே
தேசிய அபிவிருத்தித் திட்டமிடலில் இந்த மக்கள் உள்வாங்கப்பட்டிருந்தால் இந்த நூற்றாண்டுத் துயரத்தில் இருந்து அந்த மக்கள் எப்போதோ விடுபட்டிருப்பார்கள்.
இந்த நாட்டுக்கு இந்தியாவில் இருந்து அழைத்து வந்த பிரித்தானியர்கள் அவர்களது ஆட்சிக்காலத்திலேயே இந்த மக்கள் தேசிய அரசியலில் பங்கேற்கும் உரிமையை வழங்கியிருந்தார்கள். 1931 ஆம் ஆண்டு சோல்பெரி ஆணைக்குழுவின் அரசியலமைப்பின்படி இந்த மக்களை பிரதி நிதித்துவப்படுத்தி 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ஏற்பாடு சுதந்திரத்துக்கு முன்னர் இந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
1947 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த உழைப்பாளர் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள். அதற்கு மேலதிகமாக சகோதர இடதுசாரி பிரதிநிதிகளுக்கு இந்த மக்கள் வாக்குகளை வழங்கி உரிமை மிக்க உழைப்பாளர் சமூகமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தார்கள்.
எனினும் இலங்கை நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த அதே 1948 ஆம் ஆண்டில் உழைப்பாளர் சமூகமான எங்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு நாம் நாடற்றவர்களானது இலங்கையில் இடம்பெற்ற கறைபடிந்த வரலாறாகும் என்பதை எனது கன்னியுரையிலே பதிவு செய்ய வேண்டும். நினைக்கிறேன்.
இதன் மூலம் நான் சொல்ல வருவது தோட்டத்துறை ஒன்றும் அரசியல் பங்கேற்பில் பின்நிற்கும் துறையல்ல. தேசிய அரசியலில் ஒரு தோட்டம் இத்தகைய பங்களிப்பைச் செய்யும் வல்லமை கொண்டது.
அதேநேரம் அபிவிருத்தி நிலையில் இந்த தோட்டத் துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது என்பதுதான் எனது வாதமாக இருக்கின்றது.
இலங்கையின் தோட்டத்துறை எனப்புடுகின்ற துறை அபிவிருத்தி குறிகாட்டிகளில் பின்தங்கிய துறையாக அமைந்து காணப்படுகின்றது. அதனையே தேசிய புள்ளிவிபரங்கள் காட்டிநிற்கின்றன. ஏனைய துறையிலும் பின்னடைவுகள் உண்டு. ஆனால் தோட்டத்துறை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலைமை புரிந்துகொள்ளப்படல் வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை புதிய நல்லாட்சி அரசாங்கம் அதனைப் புரிந்து கொண்டுள்ளது என நினைக்கிறோம். அதனால் தான் அந்த தோட்டத்துறையை புதிய கிராமங்களாக மாற்றும் அமைச்சினை அதிமேதகு ஜனாதிபதி அவர்களும், கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.
கடந்த ஆட்சியில் இல்லாதொழிக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை மீளவும் உருவாக்கி 100 வேலைத்திட்டத்தில் ஒரு வௌ;ளோட்டமாக அமைச்சர் திகாம்பரம் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அதனைப் பெற்றுக்கொண்ட கௌரவ அமைச்சர் திகாம்பரம் தான்தோன்;றித்தனமாக அல்லாது மக்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொண்டு சகோதர கட்சிகளையும் இணைத்துக்கொண்டு வெற்றிகரமாக வேலைத்திட்டத்தை முன்னெடுத்துக்காட்டியுள்ளார். அவரின் இணைப்புச் செயலாளராகவிருந்து என்னாலும் அந்த முயற்சியில் பங்கேற்க முடிந்தது. அதன் பயனாகவே அமைச்சர் திகாம்பரத்தின் மீது நம்பிக்கை கொண்டு ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் இன்று புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினை பெற்றுக்கொடுத்துள்ளார்கள். அதற்காக அவர்களுக்கு மலையக மக்கள் சார்பாக நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அதிமேதகு ஜனாதிபதியினதும் கௌரவ பிரதமரினதும நோக்கம் இலங்கையில் பலவீனமான துறையாக அடையாளம் கண்டுள்ள தோட்டத்துறை எனப்படுகின்ற சமூகக்கட்டுமானத்தை இல்லாதாக்கி அவற்றை கிராமங்களாக மாற்றுவதேயாகும். அதன் பின்னர் இந்த நாட்டில் நகரங்களும் கிராமங்களும் மாத்திரமே அமைந்து காணப்படும்;.
சர்வதேச வரத்தகத்திற்கும்; பொறுப்பாக இந்த அமைச்சு வருகின்றபோது தோட்டத்துறையின் ஆதாயமாக இருக்கும் தேயிலை, இறப்பர் பொருட்களின் ஏற்றுமதிகளை தக்க வைக்கும் பணியும் இந்த அமைச்சுக்கு இருக்கின்றது. எனவே தொழில் துறையை அபிவிருத்தி செய்வதும் அங்கு வாழும் சமூகத்தின் அபிவிருத்தியை ஏற்படுத்துவதும் இன்றைய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை கொண்டு வரும் நிதி அமைச்சு மற்றும் அபிவிருத்தி உபாய முறைகளுக்கான அமைச்சு ஆகிய இரண்டுக்கும் பொறுப்பாகவுள்ளது.
இலங்கை நாட்டுக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் துறையாக தேயிலை ஏற்றுமதி திகழ்கிறது. ஆனால் அந்த தொழில்துறையில் தங்கிவாழும் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கான ஊதியத்தை தீர்மானிப்பதில் தேசிய திட்டமிடலில் உள்வாங்கப்படுவதில்லை. அது முழுக்க முழுக்க தனியாரின் கைகளினாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதி பொருளாக இருக்கக்கூடிய தேயிலைத் தொழில் துறையின் தொழிலாளர்களின் உழைப்புக்கான சம்பளத்தை தீர்மானிப்பதில் அரச தலையீடு ஏதுமற்ற நிலைமை நீக்கப்படல் வேண்டும். நாட்டின் ஏனைய தனியார் துறைகளில் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் அறிவிப்புகள், தலையீடுகள் உள்ள போதும் பெருந்தோட்டங்களில் அவ்வாறான நிலைமை இல்லை. இது தொழிற்சங்கத்துக்கும் கம்பனிகளுக்குமிடையிலான கூட்டு ஒப்பந்த முறைமைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவுள்ளது.
இன்றைய உலக ஒழுங்கு நிலைத்துநி;ற்கும் அபிவிருத்தியை குறிக்ளோகக் கொண்டது. 2030 ஆம் ஆண்டளவில் டுநயஎந ழே ழநெ டிநாiனெ அதாவது யாரையும் அபிவருத்தியில் பின்விட்டுச் செல்வதில்லை என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு அபிவிருத்தி இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கில் இருந்து மலையக மக்கள் விடுபடாத வண்ணம் இலங்கையின் தேசிய அபிவிருத்தித் உபாய முறையை வடிவமைக்கும் போது மலையக மக்களின் அபிவிருத்தி உள்வாங்கப்படல் வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். அவர்களது தொழில் நிலைமைகளும் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும்.
ஏற்கனவே மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் என சொல்லப்டுகின்ற பத்தாயிரமாம் ஆண்டு அபிவிருத்தி நிகழ்ச்சி;த் திட்டத்தில் தோட்டப்பகுதி அபிவிருத்திக்கான பத்தாண்டுத்திட்டம் தேசிய நடவடிக்கைத் திட்டம் 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் நிறைவுறுத்துவதற்கு வடிவமைக்கப்பட்டபோதும் அது தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்குள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அதேநேரம் நாங்கள் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஒழுங்குடன் இணைந்ததாக செயற்படுத்த மீண்டும் தோட்டப்பகுதி சமூக அபிவருத்திக்கான பத்தாண்டு திட்டத்தை மீண்டும் முன்வைக்கவுள்ளோம். அதனை தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கி இலங்கையின் ஏனைய சமூகங்களைப்போன்று தோட்ட சமூகத்தையும் உள்வாங்கி,
அதிமேதகு ஜனாதிபதியின் நோக்கமான
‘பலமிக்கதும் உறுதியானதும், முன்னேற்றமானதும், யாவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடொன்றினைக் கட்டியெழுப்பி அங்கு வாழும் சகல இலங்கையரும் ஒற்றுமையுடன், பன்மைத்துவத்திற்கும், தேசிய அடையாளத்திற்கு மதிப்பளித்து அதற்கு உத்தரவாதமளிப்பதுடன் ஒவ்வொரு பிரசையும் தனது பொருளாதார சமூக கலாசார மற்றும் அரசியல் ரீதியாக சமமமான சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற வகையில் செயற்படுதல் எனும் இலக்கினை அடைய ஒத்துழைக்குமாறு இந்த உச்ச சபையின் அனைத்து உறுப்பினர்களையும் வேண்டிக்கொண்டு விடைபெறுகின்றேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...