Headlines News :
முகப்பு » » ‘எமது கருத்துக்கள் செயற்பாடுகள் யாவும் மானுடத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே ஆகும்‘ பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்

‘எமது கருத்துக்கள் செயற்பாடுகள் யாவும் மானுடத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே ஆகும்‘ பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்


அதிபர் தரம்–111க்கான போட்டிப் பரீட்­சையை முன்­னிட்டும் அதி­பர்­க­ளுக்­கான வினைத்­திறன் பரீட்­சையை முன்­னிட்டும் இல­வச செய­ல­மர்­வு­களை இலங்கை கல்விச் சமூக சம்­மே­ளனம் திரு. லெனின் மதிவானம் தலைமையில் அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்­லூ­ரியில் நடைப்பெற்ற போது சம்மேளத்தின் பொதுச் செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணன் தமதுரையில்
‘இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவை எட்டி நிற்கின்ற வரலாற்றுப் பயனத்தின் இடைவெளியில் பல ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் கல்வித் துறை சார்ந்தவர்களின் பங்கேற்றும் பிரசன்னமும் ஒன்று சேரலும் எமக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. கல்விச் சுமூகத்தினர் அலை அலையாக எமது சம்மேளனத்தில் சேர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் ஆசிரியர்களின் உரிமைகள், சுயகௌரவம் என்பனவற்றில் அதிக கரிசனை காட்டி வருகின்ற அதே சமயம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியிலும் கவனமெடுப்பது எங்களது பிரதான இலக்காகும். சமூகமாற்றத்தில் கல்விச் சமூகத்தினரின் பங்கு எந்தளவு என்பது சுவாரசியமான கேள்வியாகும். சமூகமாற்றத்துக்கான பயனிப்பில் ஆசிரியர்-மாணவர்கள், மற்றும் புத்தி ஜீவிகள் போன்ற ஏனைய  தளங்களையும் சமூக உணர்வு பெற உந்தித்தள்ளுவதே எமது இலக்காகும். ஒருவகையில் எமது கருத்துக்கள் சிந்தாந்தங்கள் யாவும் மானுடத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே ஆகும். இதற்காக தான் நாங்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடாத்திய சமூக இலக்கிய கட்டுரைப் போட்டிகளும் நமது சமூகம் குறித்த தேடலையும் மீனாட்சியம்மாள், போராசிரியர் கைலாசபதி முதலிய ஆளுமைகளையும் முன்னிறுத்தியே நடாத்தப்பட்டன. இப்போட்டியினூடாக சமூகம் பற்றிய தேடலில் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர் எமது செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டு அணுசரனை வழங்கியுள்ளனர். மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் அவர்கள் வழங்கிய பங்களிப்பு விலைமதிப்பற்றது. அதற்கான கணக்கு விபரங்கள் மிக தெளிவாக சமர்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் பெருமித்த்துடன் கூறிக் கொள்கின்றேன். அந்தவகையில் அதிபர் ஆசிரியர்கள் தமது போட்டி பரீட்சையை வெற்றிகரமாக எதிர் கொள்வதுடன் அதற்கு நன்றி செலுத்துமுகமாக சமுகத்திற்காக செயற்படுவதே ஆகும் என்றுக் கூறுவதைவிட வேறென்ன பெருமை‘

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜனஜித்  கல்லூரியின் அதிபர் எம். சாந்தகுமார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அலி ஜின்னா, சீடா செயற்றிட்ட இணைப்பாளர் வீ.விஜயானந்தன்,டாக்டர்கள் டி. சந்திரராஜன், ரவிவர்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் இந்தியாவில் Master Athletics Federation of India நடத்திய 5000M ஓட்டப் போட்டியில் முதலிடத்தை (தங்க பதக்கத்தை) பெற்ற SLECOவின் நலன்புரி அமைப்பின் தலைவர் சந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழாவும் இடம்பெற்றது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates