Headlines News :
முகப்பு » » மலையக சிறுவர்களின் நிலை

மலையக சிறுவர்களின் நிலை


சிறுவர்களை பொக்கிஷங்களாக மதிப்போம்என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறுவர் உரிமைகள் கண்டு கொள் ளப்படாத நாடுகளின் வரிசையில் இன்று இலங்கை யும் உள்ளடங்கி விட்டதே என்ற கேள்விகளுக்கு மத் தியில் நாமும் இலங்கையில் சிறுவர் தினத்தை அனுஷ் டித்தோம். இலங்கையைப்பொறுத்தவரை மொத்த சனத் தொகையில் சுமார் 50இலட்சம் பேர் சிறுவர்களாவர். இவர்களில் 816 வயது வரையிலான சிறுவர்களில் 80 வீதமானோர் மட்டுமே பாடசாலை கல்வி பெறும் வாய்ப்பினை பெற்றிருக்கின்றனர். மிகுதியானவர்கள் அந்த வாய்ப்புகளில்லாது வீட்டுப்பணியாளர்களாவும் ஏதாவது அடக்குமுறை தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.

உலகில் இரண்டரை கோடி சிறுவர்கள் கடினத்தொழி ல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என யுனிசெப் அறி க்கை கூறுகிறது. ஆனால் இலங்கையைப் பொறுத்த வரை கூடுதலாக இவ்வாறான தொழில்களில் அதிக மான. மலையக பெருந்தோட்டப்பகுதி சிறார்களே ஈடு படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் தலை நகரில் இடம்பெற்ற சிறுவர் மரணங்கள், சித்திரவதைகள் இதற்கு கட்டியும் கூறி நிற்கின்றன.

இன்று இலங்கையின் பிரதான நகரங்களில் 1417 வயதுக்கிடைப்பட்ட ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பணி யாற்றி வருகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம். பணி யாற்றும் சிறுவர்களின் நிலை இவ்வாறு இருக்க பாட சாலைக்கு செல்லும் சிறார்களின் நிலை மிகவும் அபாய கட்டத்திற்குள் இருக்கின்றது. இன்று பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவர்களை வழிநடத்தும் பணியை செய்து சமூகத்தில் நற்பிரஜைகளாக மாணவர்களை உருவாக்குபவர் என ஆசிரியர்கள் மீது நம்பிக்கை வைத்தால் சில ஆசிரியர் களின் செயற்பாடு மிகவும் கீழ்த்தரமாகவும் அபாயகர மாகவும் இருக்கின்றன. பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்களை சில அதிபர்களும் மூடி மறைத்து விடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளே இச்சம்பவங்கள் அதிகரிக்கவும் காரணமாகின்றன.

அதைவிட சில மாணவர்களை தண்டனை என்ற பெ யரில் சில பாடசாலை நிர்வாகங்கள் நடத்தும் முறை மிகவும் பாரதூரமாக உள்ளது. சிறுவர் தினமன்றே மலையக பாடசாலை ஒன்றில் குறித்த வகுப்பு மாண வர்களை கொளுத்தும் வெய்யிலில் மண்டியிடச்செய்து பாடம் கற்க செய்த சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள் ளது.

மலையக பெற்றோர்களின் பலகீனங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் இவ்வாறான ஆசி ரியர்களும் அதிபர்களும் இந்த சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களாகவே கணிக்கப்படுவர்.பாட சாலை சமூகத்தை நம்பி எமது நாட்டில் 45 இலட்சம் மாணவர்கள் உள்ளனர். நாளைய இலங்கை இவர் களின் கைகளில் என்று மேடைகளில் பேசி வந்தால் மட்டும் போதுமா அவர்களை பாதுகாக்கும் வழிமுறை களை கையாள வேண்டாமா?

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர்கள் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலகட்டம் இது . ஒரு பக்கம் பாடசாலைகளில் பாலியல் துஷ்பிர யோக சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்றால் மாண வர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபா ரமும் இடம்பெற்றுவருகிறது. இவை எல்லாவற்றிற்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மாணவர்களின் மீது மேற்கொள்ளப்படும் குற்றச்செயல்களுக்கு காரண மானவர்களை குறுகிய காலத்தில் விசாரணை செ ய்து அதிகபட்ச தண்டனை வழங்கும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். எமது பிள்ளைகளை பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அனைவருக்கும் உள்ளது என்பதே இவ்வருட தொனிப்பொருளின் விரிவாக்கமாகும்.


நன்றி - சிவகுமார் சிவலிங்கத்தின் முகநூலிலிருந்து நன்றியுடன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates