சக்தி தொலைகாட்சியில் மின்னல் நிகழ்ச்சிக்கு ஊடாக பலராலும் அதிகம் அறியப்பட்ட ரங்கா தனது வளர்சிகள் அனைத்தையுமே பின் கதவால் பெற்று லாபமடைந்து வந்தவர் என்பது ரங்காவை அறிந்த பலருக்கும் தெரியும். கொழும்பு பல்கலைக்கழக நுழைவு கூட எப்படி கிடைத்தது என்பதை ரங்காவை சக பல்கலைக்கழக நண்பர்கள் "குதிரை ரங்கா" என்று அழைப்பதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். பல்கலைக்கழகத்திலேயே பலரையும் திருட்டுத்தனமாக வீழ்த்திவிட்டு வளர்ந்த கதைகளால் சக மாணவர்கள் பலரின் வெறுப்புக்கும் அதிருப்திக்கும் அப்போதே ஆளாகியிருந்த ரங்கா பின்னர் சக்தி தொலைகாட்சி, மகிந்தவின் ஊடக செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் என்று எப்படி எல்லாம் திருகுதாளங்கள் உள்ளன என்பது பற்றி பல கதைகளை புட்டுபுட்டு வைக்கலாம்.
ரங்காவின் பாராளுமன்ற பிரதிநித்தித்துவத்துக்கு காரணம் மனோகணேசன் என்பதை பலர் இன்று மறந்துவிட்டார்கள். மனோகணேசனும் அதனை நாசூக்காக மறைத்து வருகிறார். சென்ற தடவை ஐ.தே.கவுக்கான வேட்பாளர் பட்டியலில் ஆசனங்கள் பிரிக்கப்பட்ட போது மனோகணேசனால் பட்டியலில் போடப்பட்ட இருவர் அவருக்கே ஆப்பு வைத்தார்கள். அவர்களில் ஒருவர் அவரது தம்பி பிரபா கணேசன். அவர் கண்டியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு பின்னர் மனோகணேசனை புறம்தள்ளிவிட்டு கட்சியிலிருந்தும் நீங்கி இன்னொரு கட்சியை ஆரம்பித்து மகிந்தவோடு போய் இணைந்துகொண்டார். இன்று வரை மனோ கணேசனை கடுமையாக எதிர்த்து வருபவர். அடுத்தவர் இந்த ரங்கா மனோகணேசனின் சிபாரிசில் போடப்பட்ட இந்த ரங்காவும் நுவரேலியா மாவட்டத்தில் வெற்றி பெற்று பின்னர் மகிந்த ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். மகிந்த குடும்பத்துக்கு மிக நெருங்கிய ஒருவராக ஆனார் ரங்கா. ஆனால் மனோகணேசன் கொழும்பில் தோல்வியடைந்தார். அவருக்காக பாராளுமன்ற ஆசனத்தை விட்டுகொடுக்க எவரும் எஞ்சியிருக்கவில்லை.
ரங்கா ஒரு அரசியல் பிரதிநிதி என்கிற வகையில் மக்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த அம்பலப்படுத்தல்கள் இப்போது அவசியமாகியுள்ளன. குறிப்பாக மலையகத்தில் தற்போது தோன்றியிருக்கும் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு ரங்காவின் அணுகுமுறைகள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது, பிரதான கட்சிகள் எதுவும் கண்டுகொள்ளாத நிலையில் தனது பிரஜைகள் முன்னணி சார்பில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி தான் நாடாளுமன்ற உறுப்பினராகும் கேவலமான முயற்சியில் இறங்கியிருக்கிறார் என்றே தோன்றும். ஆனால் அது மட்டுமல்ல. இன்றைய நிலையில் மலையகத்தில் வாக்குச் சிதறலை ஏற்படுத்தி வாக்குகளை துண்டாடி, அந்த வாக்குகளை பெருமதியற்றதாக்குகின்ற கைங்கரியமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நிச்சயம் பிரஜைகள் முன்னணி ஒரு ஆசனங்களையும் இம்முறைப் பெறப்போவதில்லை. அப்படியிருக்க அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் வீணாகப் போகப் போகிறவை அல்லவா. அவை தமிழ் பிரதிநித்தித்துவதைப் பலப்படுத்த அவசியப்படுபவை அல்லவா. இந்த துரோகத்தனத்தை நிச்சயம் நம் மலையக மக்கள் அனுமதிக்கக் கூடாது. ரங்காவின் பண பலம், செல்வாக்கு, மகாராஜா நிறுவன பின்புலம், அதன் ஊடக பலம் என்று அனைத்தையும் இந்த துரோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நன்றாக தெரிகிறது. சக்தி தொலைக்காட்சியின் செய்திகளில் பிரஜைகள் முன்னணியின் உப்புசப்பற்ற செய்திகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறந்த சான்று சக்தி தொலைகாட்சி மலையகத்தின் எதிர்காலத்துக்கு வேட்டு வைக்க ரங்காவால் கச்சிதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது.
ரங்கா சமீபத்தில் சக்தி தொலைகாட்சியில் இ.தொ.கா பிரதிநிதி சக்திவேலை பயன்படுத்தி ரங்காவின் அரசியல் எதிரிகளை மோசமாக சித்தரிக்க செய்த முயற்சி இன்று ஊடகங்கள் அனைத்தும் அம்பலப்படுத்தி வருகின்றன.
சமீபகால இலங்கையின் ஊடக வரலாற்றில் மோசமான ஊடக தர்ம மீறலை செய்த ரங்காவை நீக்குவதற்குப் பதிலாக மகாராஜா நிறுவனம் ரங்காவுக்காக பிரச்சாரம் செய்வது மிகவும் கேவலம் கேட்ட ஒரு போக்கு. உண்மையில் இந்த செயலுக்காக சக்தி தொலைக்காட்சியும், மகாராஜா நிறுவனமும் பொதுமன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். இலங்கையின் ஊடக ஏகபோகத்தை தொடர்ந்தும் பல வருடங்களாக தக்கவைத்திருக்கும் மகாராஜா நிறுவனம் ஒரு ஊடக மாபியா நிறுவனம் என்பது மக்கள் அறிந்த உண்மை. அது கொண்டிருக்கும் ஏகபோகம் ஊடகத் திமிர்த்தனத்தை கோலோச்ச செய்திருக்கிறது. ஊடக அராஜகத்தனத்தின் விற்பன்னர்களாக ஆக்கியிருக்கிறது. ரங்கா போன்றோர் இத்தகைய நிறுவனத்தில் இருப்பதில் எவருக்கும் ஆச்சரியம் இருக்க முடியாது.
தனக்கு பிடிக்காத அரசியல்வாதிகளை எப்படி பலிவாங்குவது என்று மிகவும் நிதானமாக திட்டம் தீட்டி கிளிப்பிள்ளைகளான அரசியல்வாதிகளுக்கு தான் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை எழுதிக் கொடுத்து, அதை அவர்கள் பேசுவது போல் பேச செய்யும் கபட நாடகம் கடந்த ஜுலை 5ம் திகதி அரங்கேறியது.
ரங்காவை அம்பலபடுத்தும் அந்த வீடியோ காட்சியை நீக்கும்படி யூடியுப் Youtube நிறுவனத்துக்கு மகாராஜா முறைப்பாடு செய்து அந்த வீடியோவை நீக்கியிருகிறது. அதாவது உண்மையை நீக்கியிருக்கிறது. இதற்கு மகாராஜா நிறுவனம் கூறியிருக்கும் காரணம் அது உருத்துரிமையை (Copyrights) மீறும் செயலாம்.
அந்த வீடியோ மீண்டும் மீண்டும் வேறு வழிகளில் ஏற்றி இதனை எங்கிருந்தும் துடைதேரியாதபடி பார்த்துக்கொள்ளவேண்டியதும் நம்போன்றவர்களின் கடமை.
இது ரங்காவின் இத்தனை வருட நாடகங்களில் அம்பலப்பட்ட ஒரு காட்சி
பின்னணியில் நிகழ்ந்த அனைத்து மோசடிகளும் எடிட் செய்யப்பட்டு சக்தியில் வெளியான அதே மின்னல் நிகழ்ச்சி
மலையக தோட்டப் பெண்களை ஆசை காட்டி தேர்தலில் குதிக்க செய்த ரங்கா அவர்களுக்கு மஞ்சள் நிற சாரி கொடுத்து அணியச் செய்து அவர்களை அழகு நிலையம் கொண்டு சென்று அழகுபடுத்தி தேர்தல் முடியும் வரை இப்படியே பிரசாரத்துக்கு போக வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது.
ரங்காவின் மோசடிகளை நிறுத்துவதற்கான பொது அபிப்பிராயம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் முகநூலில் ரங்காவின் குட்டைப் போட்டு உடைக்கிறார்
தேர்தல் காலத்தில் திடீர் அன்பு மலையகத்தில் ரங்காவுக்கு பெருக்கெடுத்துள்ளது. சில தோட்டங்களுக்கு சென்று தமது ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட தெரிவு செய்யயப்பட்ட சிலருக்கு வழங்கிய சேலை இது. இந்த சேலையை பெற்றுக்கொண்ட ஆதரவாளருக்கு இன்னமும் ரங்காவின் கட்சியின் பெயரும் தெரியாது. கட்சியின் சின்னமும் தெரியாது. பாருங்கள்
ரங்காவின் தில்லுமுல்லுகளை மிக அழகாக நகைச்சுவைப்படுத்தி வசந்தம் தொலைகாட்சி தயாரித்து வெளியிட்டுள்ள நிகழ்ச்சி
பிரஜைகள் முன்னணின் சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளர் எம். சீதாலட்சுமியோடு வீரகேசரி இணையத்தளம் தொடர்புகொண்டபோது நடந்த உரையாடல். தனது கட்சியின் தலைமை வேட்பாளர் கூட தெரியவில்லை. கல்வித்தகமையை சொல்ல தயங்குகிறார். அவர் உளரிவிடுவார் என்று இன்னொருவர் கூறுகிறார். மேலும் கேளுங்கள்
லங்காசிறி ரங்கா பற்றி தயாரித்த 30 நிமிட விவரணம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...