நாளைய தினம் தபால் மூலமான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த வாக்களிப்பானது மலையக சமூகத்தை பொறுத்தவரை மிகவும் காத்திரமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணமாகும். உலக வராறு முழுவதிலும் கல்வி கற்ற மத்திய தர வர்கத்தின் பங்கு அரசியல் ரீதியான விழிப்புணர்ச்சிக்கும் அரசியல் தளங்களிலும் சித்தாந்தங்களிலும் மாற்றங்களையும் புரட்சிகரமான சிந்தனைகளையும் தோற்றுவித்து வந்துள்ள சமூகமாகும் அந்த வகையில் மலையகத்தில் கல்வி கற்ற ஒரு சமூக அபிவிருத்திக்கு பிரதான காத்திரமான பங்கை நல்க கூடிய சமூகமாக மலையக ஆசிரியர் சமூகம் காணப்படுகின்றது.
அதன்படி மலையக அரசியல் தளத்தில் மட்டுமல்ல சமூக பொருளாதார ரீதியாகவும் மலையக சமூகத்தை முன்னோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்புக்குரியவர்களாக ஆசிரியர் சமூகம் காணப்படுகின்றனர். நாளைய தினத்தில் மலையக சமூகத்தை எல்லா வழிகளிலும் முன்னோக்கிய பாதையில் இட்டு செல்ல கூடிய தலைவர்களை தெரிந்தெடுப்பதற்கு மலையக ஆசிரியர்களின் வாக்கு ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையின் வட,கிழக்கு மற்றும் முஸ்லிம் உட்பட்ட சிறுபாண்மை மக்கள் தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் பிரதி நிதிகளை கற்றவர்களாகவும் குறிப்பாக மருத்துவர்கள,; சட்டதரணிகள் ஓய்வு பெற்ற நீதிபதிகள், துறை சார் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்போரையே தெரிவு செய்து அனுப்புகின்றனர் ஆனால்மலையகத்தில் மட்டும் அவ்வாறான தெரிவுகள் இடம் பெறுவதில்லை. 21ஆம் நூற்றாண்டின் சகல விடயங்களிலும் முகங்கொடுத்து செயற்படும் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டிய தருணமாகும்.
ஒரு நல்லாட்சி சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கு அதனை அறிந்து சிந்தனை பூர்வமாக செயற்படும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் மக்களையும் அவர்களின் வாழ்கை தரத்தையும் ஒரு நல்லாட்சி பாதையிலும் வறுமை, வேலையில்லா பிரச்சினை, சிறந்த கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற இன்னொரன்ன விடயங்களில் மலையக சமூகம் இன்னும் பின்னோக்கியே காணப்படுகின்றது
அதிலிருந்து எல்லாவகையிலும் மீட்சி பெற கூடிய வகையில் மக்களின் நலனில் அக்கரை கொண்டு செயற்படும் மக்களின் பிரதி நிதிகளை தெரிவு செய்ய வாக்களியுங்கள் மலையக மக்களை தாரை வார்த்து கொடுத்து சுயநல அரசியல் தேடுபவர்களையும், போதை பொருள் கடத்தல், அதிகார துஸ்பிரயோகம், இலஞ்சம் ஊழல் உட்பட பல குற்றங்களை புரிந்தவர்கள், சமூகத்திற்கு ஒவ்வாத வியாபாரம் செய்பவர்கள், தமது குடும்ப அரசியலையும் தமது உறவினர்கள் சுற்றத்தார் என்போரின் ராஜ்யமாக அரசியலை பயன்படுத்துபவர்களும், மலையகத்தின் முதுபெரும் இலக்கியவாதிகள்,அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க வாதிகளின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடாத்துபவர்களையும், சுற்றாடலை நாசகரமாக்குபவர்கள், ஊழல் நிறைந்த நிதி உடன் படிக்கைகளில் ஈடுபட்டோர், பெண்கள் மற்றும் இளையோர் துஸ்பிரயோகம் மற்றும் அவற்றிக்கு உடந்தையாக இருத்தல், போன்றவர்களிடம் இருந்து விடுவித்து மலையக சமூகத்திற்கு தன்னை முழுமையாக அர்பணித்து செயற்படும் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்ய சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் மலையக சமூகம் காணப்படுகின்றது.
மக்களின் பணங்களில் சுகபோக வாழ்கையையும் விடுதிகளில் சுய இன்பத்தையும், பெரும் முதலாளித்துவ வர்த்தகர்களுடன் அவர்களின் கைகூலிகளாகவும், மக்களின் வாழ்கை தரத்தினை பாதாளத்திற்கு தள்ளுபவர்களையும், புறக்கனிக்க வேண்டியது கற்ற சமூகத்தின் முக்கிய திறவுகோலாகம் அத்துடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தின் காசல்ரீ, விருந்துபசார விடுதிகளிலும், கொட்டகலை தொழிற்சங்க மத்திய நிலையங்களிலும் கல்வி கற்ற சமூகத்தை விலை கொடுத்து வாங்கி கொள்ளும் திட்டங்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது ஆiகையால் மலையகத்தில் நாளைய தின தபால் மூல வாக்களிப்பு கல்வி கற்ற சமூகத்தின் சிந்தனை பூர்வமானதாகவும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் சுதந்திரமாகவும் உரிமையுடனும் வாக்களிக்குமாறு கேட்டு கொள்கின்றோம்.
நன்றி
சுயாதீன ஊடகம் பசுமை தாயகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...