2010இல் இந்நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 7ஆவது பாராளுமன்றம் கடந்த மாதம் 26ஆம் திகதி நள்ளிரவுடன் கலைக்கப்பட்டது. 8ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஆக்ஸ்ட் மாதம் 17ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்நிலையில் மலையகத்தைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியமான அவசியமான தேர்தலாகும்.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மலையக அரசியல் களத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்வரும் தேர்தலிலும் ஒரு மாற்றம் ஏற்படும்.
ஜனவரி 10ஆம் திகதி அமைக்கப்பட்ட அமைச்சரவையின் மலையகப் பிரதிநிதிக ளும் பங்காளார்களாக இணைக்கப்பட்டனர். தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்ச ராக பி.திகாம்பாமும், கல்வி இராஜாங்க அமைச்சராக வி.இராதிகிருஷ்ணனும், பெருந்
தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக கே.வேலாயுதமும் பதவியேற்றனர். இவ்வதிரடி அரசியல் மாற்றம் மலையகத்தில் எவரும் எதிர்பாராத ஒரு நிகழ்வாகும்.
இதன் பின்னனியில் உருவானதே தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி இணைந்த தமிழ் முற்போக்கு கூட்டணியா கும். ஒது ஓர் ஆரோக்கியமான அரசியல் மாற்றமாகும்.
இன்றைய நல்லாட்சி அரசு அமைக்கப்பட்ட பின்னர் மீரியபெத்தை உட்பட பல பெருந்தோட்டங்களில் வீடமைப்புத் திட்டம் உருவாக்கம் பெற்றது. இவ்வீட்டமைப்புத் திட்டம் எந்தளவில் முன்னேற்றம் பெற்று வருகின்றது என்ற தகவல் முழுமையாக இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை இந்திய அரசின் முழுமையான நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டு ஒரு வருடத்தை கடந்தும் திறக்கப்படாது உள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் ஏழு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் இவ்வைத்தியசாலை விடயத்தில் எவருமே ஆக்கபூர்வமான செயல்களை முன்னெடுக்காது உள்ளனர்.
ஏனைய மாவட்ட விடயத்தை தினமும் பேசுவோர் மலையக மக்கள் விடயத்தில் பின்னடைவை காட்டுவது ஏன் என மஸ்கெலியா, டிக்கோயா, ஹட்டன் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்படவேண்டிய கிளங்கன் வைத்தியசாலை இன்று கவனிப்பரற்று உள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்காக இந்திய அரசால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை மாகாண சபையின் கீழ் இயங்குவதா? மத்திய அரசின் கீழ் இயங்குவதா? என்ற நிர்வாக சிக்கலுக்குள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே சிக்கலுக்கான காரணம் எனப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி பாட்டாளி வர்க்கமேயாகும். ராஜபக் ஷவின் அரசும் சரி இன்றைய அரசும் சரி கிளங்கன் விடயத்தில் மௌனத்தையே மேற்கொண்டுள்ளது. இம்மாவட்ட மக்கள் பிரதிநிதிக ளும் மௌனத்துடனேயே இருக்கின்றனர்.
இவ்வாறான சிக்கலான பின்னடைவை எட்டிவரும் நிலையில் மீளவும் பெருந்தோட்டமக்கள் பாராளுமன்ற தேர்தலொன்றை சந்திக்கவுள்ளனர்.
2010இல் நடைபெற்ற பாராளுமன்றத்தேர்தலில் பல கனவுகளோடு பல வாக்குறுதிகளையும் நம்பியே நுவரெலியா மாவட்டத்தில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை இம்மாவட்ட மக்கள் தெரிவு செய்தனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐ.ம.சு முன்னணியில் போட்டியிட்டு ஆறுமுகம தொண்டமான் 60,997 வாக்குகளையும், இராதகிருஷ்ணன் 540,83 வாக்குகளையும், பி.இராஜதுரை 49228 வாக்குகளையும் மற்றும் ஐ.தே.கட்சியின் பட்டியலின் இடம்பெற்ற பி.திகாம்பரம் 39,490 வாக்குகளையும், ஸ்ரீரங்கா ஜெயரத்னம் 33,948 வாக்குகளையும் பெற்றனர். தேசியப்பட்டியல் ஊடாக முத்து சிவலிங்கம் (ஐ.ம.சு.மு) ஆர்.யோகராஜன் (ஐ.தே.க) ஆகியோரும் தெரிவானவர்கள்.
ஊவா மாகாணத்தின் மாகாண சபைக்காக ஹரின் பெர்னாண்டோ தெரிவானதையடுத்து அவ்வெற்றிடத்துக்கு பதுளை மாவட்டத்திலிருந்து கே.வேலாயுதம் தெரிவானார்.
இவ்வாறு மக்களின் தெரிவு இடம்பெற்ற நிலையில் மலையகத்தில் இன்னும் சம்பளப்பிரச்சினை தீர்ந்ததாக இல்லை. கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்ட கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் விடயமும் மூன்றுமாதமாக இழுபறியில் உள்ளது.
மலையக பாட்டாளி வர்க்கத்தின் உழை ப்பை பெற்றுக்கொள்ளும் தோட்டக் கம்பனி கள் அவர்களுக்கான ஊழியத்தை வழங்குவதில் வருடாவருடம் பின்னடிக்கின்றன.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் சாதித்த சாதனைகளை இன்று நுவரெலியா மாவட்டத்தில் ஏழு பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியும் சாதிக்கமுடியவில்லை. மாவட்டத்தில் அபிவிருத்து ஏற்படவில்லை என்பதை உணரவேண்டும்.
மலையக மண்ணின் தரைதோற்றம், வரலாறு, குடித்தொகை, பொருளாதாரம், கல்வி நிறுவனங்களின் குறைகள், சுகாதாரம், சமய நெறிகள், கலைகள், போஷாக்கு குறைபாடுகள், பெருந்தோட்டப்பகுதி தாய்மார்களு க்கான பாதுகாப்பு, மது ஒழிப்பு, காணியுரிமை, உழைப்பிற்கேற்ற வேதனம், வீதிகள், வீட்டுரிமை, மோசடிகள், ஊழல்கள் என அனைத்தையும் இன்றைய மலையக இளம் சமூகம் உணர்ந்துள்ளது. இவர்கள் நாட்டைப்பற்றியும் வெளி உலகத்தையும் அறிந்துள்ளனர். உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் வாக்குகளை வழங்கும் இச்சமூகம் இந்நிறுவனங்களால் அரசின் செயற்றிட்டங்கள் வகைப்படுத்துகையில் அத்திட்டங்கள் இன்னும் பெருந்தோட்டமக்களை சென்றடையவில்லை.
இவ்வாறே பெருந்தோட்ட மக்கள் மீது அரச இயந்திரங்கள் தேங்கிய நிலையிலேயே உள்ளது. எதிர்வரும் தேர்தலில் பெருந்தோட்ட மக்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.
அதை அனைத்து வாக்களர்களும் உணர வேண்டும். சுயலாபத்தை குறிக்கோளாக கொண்டவர்களின் தெரிவால் இச்சமூகத்தில் வாழும் மக்கள் குறைவான வாழக்கை காலத் தையே பெற இயலும்.
இதை கடந்த காலத்தில் இச்சமூகம் உணர்ந் துள்ளது. அரசியல்வாதிகளால் வழங்கப் படும் கோவில் விளக்குகளும், கிரிக்கெட் பட்டைகளும் அபிவிருத்திகள் இல்லை என் பன மக்களும் உணர்ந்தே உள்ளனர்.
தேர்தல் திருவிழாவை யொட்டி அனைத் துக் கட்சியினரும் மறுபடியும் பெட்டி படுக்கைகளுடன் தோட்டங்களுக்கு வருகை தருவார் கள்.
லயத்தை பார்வையிடுவார்கள், குறை களை கேட்பார்கள் நாட்டு வைத்தியரைப் போல்
பதில் தருவார்கள். இது எல்லாம் தேர்தல் கால வித்தைகள்.
இவ்வாறானவர்களை 1977 முதல் எத் தனை தேர்தல்களில் இச்சமூகத்தினர் கண் டுள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததும் இவர்க ளின் குறட்டைச் சத்தம்தான் கேட்கும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...