1. மலையகத் தமிழர் ஓர் அறிமுகம்
கி.பி 1820-1840 காலகட்டத்தில் இந்தியாவின் தென் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் காலனியாதிக்க ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டவர்களே மலையக தமிழ் மக்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும்இ ஆளுநரும் சேர்ந்து மலையக பிரதேசங்களில் பெருந்தோட்ட வர்த்தக பயிர் செய்கையை மேற்கொள்ள மனித வளம் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில் இலங்கையின் அப்போதைய குடிகள் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்கள். அடிப்பணிந்து வேலை செய்ய இணங்காமையினால்இ வறுமை நிலையை பயன்படுத்தி அழைத்து வரப்பட்ட இனமே மலையக தமிழ் இனம்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்இ கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர். பின் நடையாக இலங்கையின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தற்காலிக குதிரை லாயங்களில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் இன்று வரை ( அதையொத்த ) அதே வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 1931ம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947இ 1948 களில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய ஒப்பந்தம்இ சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம்இ பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமாக பறிக்கப்பட்டு பலர் 2003ம் ஆண்டு வரை நாடற்றவர்களாக வாழந்து வந்துள்ளனர்.
1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் பழைய விதமான கொத்தடிமை வாழ்க்கையும்இ சுரண்டலும்இ இன்னல்களும் இந்த மக்களை பொருத்த மட்டில் குறையவே இல்லைஇ அவர்கள் ஒரு தேசிய இனமாக கருதப்படவும் இல்லை.
உலகின் மிகவும் கொடுரமாக மக்களை நடாத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கி இருக்கக்கூடிய அளவுக்கு மக்கள் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டன. இவ்வாறான கொடுமைகளிலிருந்தே மீண்டு வருவதற்கு முடியாத இனமாக வாழும் மலையக மக்களின் மனித உரிமைகளின் நிலை பற்றி நான் எடுத்தாராய தீர்மானித்தேன.;
2. மலையக மக்களின் உரிiமைகளைப் பேண அரசு வழங்கிய சர்வசன வாக்குரிமை திட்டம்.
மலையக மக்களின் அரசியல் வரலாற்றில் சர்வசன வாக்குரிமைக்கு உரித்துடையவர்களாக்கப்பட்டமை மிகவும் முக்கிய விடயமாகும். டொனமூர் சீர்திருத்தங்களுக்கு முன்னர் குடித் தொகையில் 4மூ மக்களே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். வாக்குரிமைக்கு தகுதியாக கல்விää சொத்துää வருமானம் இருந்தமையினால் ஏனைய பொது மக்களைப் போலவே மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. எனினும் டொனமூர் குழு நாட்டில் நிலையான அக்கறையுடையோர் அல்லது நிலையாக வசிக்கும் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாக்குரிமையை சிபாரிசு செய்தது. இச் சிபாரிசுடன் பெண்களுக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை வழங்குவது பற்றிய பிரச்சினை பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டது.
சர்வசன வாக்குரிமை தொடர்பாக இடம்பெற்ற அனைத்து விவாதங்களையும் கருத்துகளையும் ஆராய்ந்த பின்னர் டொனமூர் குழு முடிவில் இலங்கையைத் தாயகமாகக் கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் வாழ்ந்து கல்விää சொத்து ää வருமானத் தகைமை கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வசித்து மேலும் நிலையாக வசிக்கும் நோக்கமுடையோருக்கு வழங்கப்படும் குடியுரிமை சான்றிதழைப் பெற்றோர் ஆகியோருக்கு வாக்குரிமை வழங்குவதற்கு ஏற்பாடுகளைச்செய்தது.
இதில் மூன்றாவது வகை சார்ந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் வாக்குரிமையை பெறுவதற்கான உரிமையைப் பெற்றிருந்த போதும் நிரந்தர பதிவு பற்றிய சான்றிதழை பெற வேண்டியிருந்தது. மலையகத் தோட்டங்களில் காணப்பட்ட பெருந்தோட்ட இராச்சிய முறை மற்றும் அக்காலத்தில் மலையக மக்கள் மத்தியில் நிலவிய குறைந்த எழுத்தறிவுää அரசியல் பிரக்ஞையின்மை ஆகியன காரணமாக நிரந்தர பதிவுச் சான்றிதழ் பெற்று வாக்குரிமை பெறும் போக்கு மிகக் குறைவாகவே காணப்பட்டது. இது எதிர்பார்க்கக் கூடியதே. இதனால் 1931 ஆம் ஆண்டில் இந்தியர்கள் மொத்தமாக 8ää 18ää500 பேரும் அதில் மலையகத் தோட்டத் தொழிலாளர் கள் 602ää000 பேர் இருந்த போதும் சுமார் 100ää000 பேர் மட்டுமே மலையக மக்கள் என்ற வகையில் வாக்குரிமை பெற்றிருந்தனர். எனவே குறைவானவர்களே வாக்குரிமைக்கு விண்ணப்பித்து வாக்குரிமை பெற்றிருந்தமை தெளிவு. முதலில் இவ்வாறு குறைவான வாக்காளர்களே மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடம் காணப்பட்ட போதும் இது பின்னைய காலங்களில் மலையகத்தில்ää அரசியல் தொழிற் சங்க பிரக்ஞைகளுக்கு ஆதாரமாக அமைந்திருந்தது. மிகவும் முக்கியமாக அவர்கள் தங்களை இலங்கை பிரஜைகள் என்பதனை மேலும் உறுதிப்படுத்துவதற்கான அம்சமாக இது அமைந்திருந்தது.
மலையகத் தமிழரின் அரசியல் தொழிற் சங்க வரலாற்றில் 1931- 1947 காலப் பகுதியானது எழுச்சியான காலமாகும். பிரித்தானியர் மலைய மக்களை பிரஜைகளாக அங்கீகரித்து 1931 டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வழங்கியமை இந்த எழுச்சிக்கான உந்துதலாக அமைந்திருந்தது. 1930 கள் ஆகின்ற போது மலையகத் தொழிலாளர்களை அரை அடிமை முறையிலான கங்காணி முறையில் இருந்து விடுவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் அமுலாக்கப்பட்ட நிலையில் கங்காணி முறை வலுவிழந்தமையும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் நடேசய்யரின் தொழிற் சங்கப் பணி தொழிற் சங்க செயற்பாடுகளையும் தொழிற் சங்க அடிப்படையிலான அணிதிரள்வையும் சாத்தியப்படுத்தும் சூழலை ஏற்படுத்தி இருந்தன.
3. மலையகத் தமிழரின் பிரஜா உரிமை மறுப்பு
மலையக மக்களுக்கு பிராஜவுரிமை மறுக்கப்பட்ட போது அதற்குக் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்த இடதுசாரிகள் பாராளுமன்றத்திற்கு வெளியில் எந்த எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள துணியவில்லை. இ. தொ. காங்கிரஸும் 1952 ஆம் ஆண்டு வரையில் பிரஜாவுரிமை பறிப்புக்கு எதிராக அரசியல் தொழிற் சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1952 ஆம் ஆண்டு தேர்தல் திகதி குறிக்கப்பட்ட பின்னரே மலையக மக்களுக்கு பிரஜா உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் படி கேட்டு தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை பிரதமர் அலுவலகம் முன்பாக மேற்கொண்டனர். இந்த சத்தியாகிரகத்திற்கு இடதுசாரித் தலைவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர்.
மலையக மக்களின் பிரஜாவுரிமை மீட்பு என்பது சத்தியாகிரக போராட்டத்தோடு நிறுத்தப்பட்டதுடன் அதன் பின்னர் அது இலங்கை இந்திய அரசுகளுக்கு இடைப்பட்ட விவகாரமாகக் கருதப்பட்டு இரு நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கைகள் மூலம் தீர்க்கப்பட முயற்சிகள் செய்யப்பட்டன. இந்த முயற்சிகள் மலையக மக்களை மேலும் அவலத்திற்கு உட்படுத்தின. 1964 ஆம் ஆண்டு சிறி மா சாஸ்திரி உடன்படிக்கையும் அதன் பின்னர் 1974 இல் செய்யப்பட்ட சிறிமா இந்திரா உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. இந்த உடன்படிக்கை அடிப்படையில் இலங்கையில் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்த மலையக மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்படக் கூடாது என்ற அடிப்படையிலேயே பரிசீலிக்கப்பட்டன.
4. சுதந்திர இலங்கையும் மலையகத் தமிழர் உரிமை மீதான
ஒடுக்கு முறைகளும்: 1947 - 1971
1931 ஆம் ஆண்டில் சர்வசன வாக்குரிமை மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற இன வர்க்க கண்ணோட்டத்தின் தொடர்ச்சியினை 1948 இல் பிரஜா உரிமை தொடர்பாக சிங்கள வலதுசாரி தலைவர்களின் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தி இருந்தன. இடதுசாரி தலைவர்கள் மலையக மக்களின் பிரஜா உரிமையை பறிப்பதில் உள்ள வர்க்க சார்பையும் இனவாதத்தையும் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினர்.
1948 பிரஜா உரிமை சட்டத்தின் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்ட 1949 இந்திய பாகிஸ்தானியர் வதிவிடச் சட்டம் 1949 தேர்தல்கள் திருத்தச் சட்டம் ஆகியன முழு மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் இழக்கச் செய்யும் வகையில் அமைந்திருந்தன. பிரஜா உரிமைச் சட்டங்கள் சிங்களவர்கள்ää இலங்கைத் தமிழர்கள் இலங்கை முஸ்லிம்கள் ஆகியோருக்கு பரம்பரை அடிப்படையில் தாமாக குடியுரிமை பெற்றுக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. எனினும் மலையக மக்களைப் பொறுத்தவரையில் இலங்கையில் பிறந்த ஒருவர் தான் இலங்கை பிரஜை என்ற தகுதியைப் பெறுவதற்கு தனது தந்தை அல்லது தந்தை வழிப் பாட்டன் இலங்கையில் பிறந்திருப்பதை நிரூபிக்க வேண்டும். குறித்த நபர் இலங்கைக்கு வெளியே பிறந்தவராக இருந்தால் அவரது தந்தையும் தந்தையின் தந்தையும் இலங்கையில் பிறந்தமைக்கான சான்றுகளை சமர்ப்பித்தாக வேண்டும் என்ற ஏற்பாட்டிற்கு உட்பட்டே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். மலையக மக்களின் பிறப்புச் சான்றிதழே இதற்கான வலிதான சான்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1895 ஆம் ஆண்டில் இருந்தே இலங்கையில் பிறப்பை பதிவு செய்வதும் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முறையும் அமுலுக்கு வந்திருந்த நிலையில் இச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் ஏறக்குறைய அனைவரும் தமது பிரஜாவுரிமையை முழுமையாக இழந்தனர். இந்தச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய டீ.எஸ். சேனாநாயக்கவிற்கு குடியுரிமை பெற முடியாது என இடதுசாரி தலைவர் பீட்டர் கெனமன் அப்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. பிரஜா உரிமையை அடிப்படையாகக் கொண்டு திருத்தப்பட்ட 1949 தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
1920 1940 காலப் பகுதிகளில் இலங்கையை தமது சொந்த நாடாக கருதி மலையக மக்கள் வாழ்ந்து வந்திருந்தனர். 1927 இல் டொனமூர் குழுவினர் 40மூ 60மூ இடைப்பட்ட மக்கள் இலங்கையை தமது சொந்த நாடாக கருதி வாழ ஆரம்பித்து விட்டனர் என்று அறிக்கையிட்டிருந்த அதேவேளை 1938 இல் ஜெக்சன் குழுவினர் அது 60மூ என்று அறிக்கையிட 1946 இல் சோல்பரி குழுவினர் 80மூ என குறிப்பிட்டிருந்த நிலையிலேயே இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மலையக மக்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
5.இலங்கையில் மலையக மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள்
1940ம் ஆண்டு செப்டெம்பர் 7ம்இ 8ம் திகதிகளில் கம்பளையில் 'நேரு நகர்' பந்தலில் நடைபெற்ற விழாவில் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும்இ நிலைநாட்டவும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான் கங்கணம் கட்டிக்கொண்டதாக வரலாறு புகழ்கின்றது. இதுவே மலையக மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தொழிற்சங்க பாதையில் உத்வேகத்துடன் போராட எடுத்த ஆரம்ப கட்டமாகும். இதைத் தொடர்ந்து இவரது வாழ்க்கை வரலாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபனத்துடன் பின்னிப் பிணைந்து இருந்தது.
இவருடைய தலைமையில் மலையகம் எழுச்சி கண்டது. இந்திய சமுதாயத்தினருக்கு விசேடமாக தோட்டப்புற மக்களுக்கு பிரஜாவுரிமைஇ வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகள் பெறப்பட்டன. இந்திய சமுதாயத்தினர் "நாடற்றவர்" என்ற பதத்தில் இருந்து விடுபட்டனர். மலையகம் படிப்படியாக இருளை விட்டு நீங்க வழி பிறந்தது.
இவர் இந்திய வம்சாவளி மக்களுக்காக முன்னெடுத்த போராட்டங்கள் பலவாகும். இந்நாட்டின் முதுகெலும்பாய் உழைத்த தோட்டப்புற மக்களுக்கு பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை வழங்காமையை எதிர்த்து தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் வரலாறு படைத்தவையாகும்.
1952ம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடாத்திய மூன்று மாத சத்தியாக்கிரக போராட்டம் அன்றிருந்த அரசாங்கத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 1958ம் பிரஜாவுரிமை சட்டத்தின் பிரகாரம் பிரஜாவுரிமை பெற்றவர்களைத் தவிர ஏனைய "நாட்டற்றவர்களாக" கருதப்பட்ட இந்திய வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கும் விசேட சட்டம் 1988 நவம்பர் 9ம் திகதி நிறைவேற்றப்பட்ட சட்ட மூலமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாற்பது வருடங்களாக அரசியல் இழுபறிகளால் தீர்வு காணாத பெரும் பிரச்சினை தீர்ந்தது. இது அமரர் தொண்டமானின் சிறந்த தலைமைத்துவத்திற்கும்இ அரசியல் சாணக்கியத்திற்கும்இ விடாமுயற்சிக்கும்இ போராட்டத்திற்கும் மகுடமாய் விளங்கியது.
இதைத் தொடர்ந்து 1989 ஏப்ரல் 26ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "வாக்குரிமை வழங்குவதற்கான திருத்தச்சட்டம்" புதிதாக பிரஜாவுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினரை தம்மை வாக்காளர்களாக பதிவு செய்ய கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்த சட்டமூலத்தினாலேயே இந்திய சமுதாயத்தினர் விசேடமாக தோட்டப்புற மக்கள் இன்று வாக்குரிமை பெற்று ஏனைய சமூகத்தோடு அரசியல் நீரோட்டத்தில் பங்குபற்றுகின்றனர். இதுவே இம்மக்கள் இன்று பாராளுமன்றத்திலும்இ மாகாண சபைகளிலும்இ பிரதேச சபைகளிலும் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் அரசியல் பிரவேசம் செய்ய வழிவகுத்து இருக்கின்றது. இதுவும் அமரர் தொண்டமான் எடுத்த போராட்ட கோர்வையின் பயன் ஆகும்.
இந்த இரண்டு சாதனைகளால் தான் இன்று இந்திய வம்சாவளி மக்கள் ஏனைய சமூகத்தோடு அரசியலிலும் ஏனைய துறைகளி லும் பங்குகொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு 75மூ வீதம் இட ஒதுக்கீடு கேட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றவர் அமைச்சர் செளமியமூர்த்தி தொண்டமான் அவர்களேயாவார்.
அன்னார் தொழிற்சங்கவாதியாக வும்இ பாராளுமன்ற உறுப்பினராக வும்இ அமைச்சராகவும் இருக்கும்பொழுது சகல சமூகத்தினரின் நன் மதிப்பையும் பெற்றிருந்தார். எனவே தான் இ. தொ. கா. வில் பெரும்பான்மை சமூகத்தினரும் அங்கத்தவர்கள் ஆனார்கள். இன்றும் ஏராளமானோர் இருக்கின்றனர்.
இன ஒற்றுமையையும்இ தேசிய ஒற்றுமையையும் அன்னார் எப்பொழுதுமே அடிப்படைக் கொள்கையாகவே ஏற்றிருந்தார். எனவே தான் அவர் மறைவு இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற் கும் ஒரு பேரிழப்பானது செளமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்இ நலிவுற்ற பின் தங்கிய மக்கள் பயன்படும் வகையில் பல்வேறு சுயதொழில் உதவி திட்டங்களையும்இ பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி திட்டங்களையும்இ தொழில் பயிற்சித் திட்டங்களை யும்இ கலைஇ கலாசார திட்டங் களையும் அமுல் நடத்துகின்றது. இதனால் தோட்டப்புற இளைஞர்கள் பெரிதும் பலன் அடைந்து தொழில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
6.மலையக தமிழரின் கல்வி உரிமையில் அரசின் தாக்கம்
கோளமயம் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளதுடன் சமுதாயத்தின் கல்விஇ அரசியல்இ பொருளாதாரம் பற்றிய மீள் சிந்தனை யாக்கத்திற்கு வித்திட்டுள்ளது. அன்றைய மலையகத்துடன் இன்றைய மலையகத்தை ஒப்பிடும் போது அதன் மாற்றங்களை எம்மால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மலையக சமூகம் புறக்கணிக்கப்படா மல் இருக்க வேண்டுமாயின் எதிர்கால சந்ததியினருக்கான கல்வி வழங்கலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
மலையக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையான இலவசக் கல்வி பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே கிடைக்கப்பெற்றது. எனினும் இக் கல்வி உரிமை முழுமையடையாத நிலையில் ஏனைய உரிமைகளை அனுபவிப்பது தொடர்பான தெளிவின்மை காரணமாகவே தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். சமூகஇ பொருளாதார அரசியல்இ கலாசார ரீதியான புறக்கணிப்புகளிலிருந்து தொழிலாளர்கள் விடுபட வேண்டுமாயின் கல்விச் சிந்தனை ஒன்றின் மூலமே மாற்ற முடியும்.
இக்கல்வியைப் பெறுவதிலும்இ வழங்குவதிலும் மலையகத்தில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. சமுதா யத்தின் மீதான அக்கறை இன்மைஇ பாடசாலைகளில் புதிதாக மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக பெற்றோரி டம் பெருமளவு நிதி அறவிடப்படுவதுஇ அதிபர்இ ஆசிரியர்கள் மற்றும் வளப் பற்றாக்குறைஇ மாணவர்களின் இடை விலகல்இ என கல்வியில் பின்னடை வதற்கான பட்டியல் நீண்டு செல்கிறது.
இந்நிலையில் மலையக பட்டதாரி மாணவர் ஒன்றியம் க. பொ. த. (உஃத) பரீட்சைக்கு தோற்றவுள்ள மலையக மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு களை நடத்த முன் வந்திருக்கிறது. இ. தொ. காவின் நிதியுதவி மற்றும் நுவரெலியாஇ பதுளைஇ இரத்தினபுரிஇ கேகாலைஇ மாத்தளைஇ கண்டி ஆகிய மாவட்டங்களில் பல்கலைக்கழக பட்டதாரிகளின் விரிவுரைகளுடன் இலவசக் கருத்தரங் குகள் நடத்தப்பட்டன
7.மலையகத் தமிழர் உரிமைகளை அரசு பேணினாலும்ää இன்றைய போக்குப் பற்றிய ஒரு விமர்சன பார்வை.
இலங்கையில் அரை அடிமை தொழிலாளர்களாகவும் கூலித் தொழிலாளர்களாகவும் மலையக மக்கள் முதலாளித்துவ பொருளாதார முறைக்கு தேவையான மூலதனத் திரட்சியை உருவாக்குவதற்குப் பங்களித்துள்ளனர். 1970 கள் வரை இலங்கையின் பொருளாதாரம் பெருந்தோட்டப் பொருளாதாரத்தில் தங்கி இருந்தது. இவ்வாறான பங்களிப்பை மலையக மக்கள் வழங்கிய போதும் அவர்களின் உரிமைகள் இலங்கை அரசாங்கங்களினால் பறிக்கப்பட்டு அவர்களை திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வந்தனர். காலனித்துவ காலத்தில் இருந்து இன்று வரையும் மிதமிஞ்சிய சுரண்டலுக்கு உட்படுவதை உறுதி செய்த அதேவேளை அரசியல் சமூக உரிமைகளையும் மறுத்து ஓரங்கட்டப்பட்டமையின் விளைவு இலங்கையின் ஏனைய இனப்பிரஜைகளைவிட சமூக பொருளாதார அடைவுகளில் இவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றனர்.
மலையகத்தில் நிலவிய தொழிற்சங்க அரசியல் பாராளுமன்ற அரசாங்கத்துடனான அபிவிருத்தி அரசியல் என்ற அத்தனை அரசியலும் அதற்கு தலைமை தாங்கிய ää தாங்கி வருகின்ற தலைவர்களும் மலையகத்தில் உள்ள ஒரு இனப் பிரஜையின் முகவரி வீடு காணி உரிமைகளையேனும் இதுவரை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் நாட் சம்பளத்திற்கு பணிபுரிகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான கல்விää சுகாதாரம்ää போக்குவரத்துää வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றன. அவர்களது வாழ்க்கைத் தரம் நாட்டின் ஏனைய பொது மக்களது வாழ்க்கைத் தரத்தையும் விட கீழ் மட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் வாழ்வதற்குத் தகுதியற்ற முறையில் காணப்படுவதோடுää காலசாரம் மற்றும் வாழ்க்கை முறை மாத்திரமன்றிää குடும்ப உறவுகளைக் கூட நெருக்கடிக்குள் தள்ளும் “லைன் காம்பரா’ எனும் குடியிருப்புக்குள்ளேயே வைக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர் மத்தியில் வறுமை வீதம் 32 மூ ஆக இருப்பதோடு முழு இலங்கையினதும் வறுமை வீதம் 15.2மூ க்கும் குறைவாக உள்ளது. தோட்ட மக்கள் தொகையில் 49.2மூ நாளொன்றுக்குத் தேவையான கலோரி தேவையான அளவு கிடைக்காததோடு அதன் விளைவாக தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் ஆரோக்கியம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பிறந்து 28 நாட்களுக்குள் மரணிக்கும் குழந்தைகளின் விகிதாசாரம் நாட்டின் பொதுவான வீத ஆயிரத்துக்கு 13.9 ஆக இருக்கும் போது தோட்டப் பகுதிகளில் அது 31 ஆக இருக்கிறது. 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளின் மரண விகிதாசாரம் ஆயிரத்துக்கு 51.6 மூ தோட்டப் பகுதிகளில் பிறக்கும் பிள்ளைகளின் வளர்ச்சிக்குன்றல் நகர்ப்புற பிள்ளைகளைவிட மூன்று மடங்காகும். இன்று மலையக மக்கள் தோட்ட வைத்தியசாலையை நம்பி இருக்கின்ற நிலையில் அவைகளின் சேவை மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன. 1970 களில் பின்னர் படிப்படியாக அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரம் மற்றும் வளங்கள் விநியோகம் நாட்டின் தேசிய மட்டத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே உள்ளது. பாடசாலை இடைவிலகல் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. 5 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகளின் விகிதாசாரம் 8.4மூ ஆகும். கிராமம் மற்றும் நகரத்தைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய சமூக பொருளாதார நிலைமைகளிலேயே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நன்றி - எழுத்து
+ comments + 1 comments
அரிதான கட்டுரை
ஒரு சந்தேகம் மட்டும் இன்று இலங்கையில் தமிழர் எனும் போது ஏன் ஈழத்தமிழரை மட்டும் சர்வதேசம் முன்னிலைப்படுத்துகின்றது?
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...