Headlines News :
முகப்பு » » மூடப்பட்டிருக்கும் கலாசாலைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவேன்

மூடப்பட்டிருக்கும் கலாசாலைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவேன்


வடக்கில் போருக்கு பின்னரான காலப்பகுதியில் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள், சர்வ கலாசாலைகள் ஆகியவை தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும். அதுமட்டுமன்றி அங்கு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அங்குள்ள முதலமைச்சர் உட்பட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுக்கவும் இதுதொடர்பாக எமது ஜனாதிபதி, பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவரவும் எதிர்பார்க்கின்றேன்' என இராஜாங்க கல்வி அமைச்சர் வேலூசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


இலங்கை தேசிய கல்வியல்; கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கலாசாலை, ஆசிரிய மத்திய நிலையங்களுக்கான தமிழ் மொழி மூலம் 107 பேரும் சிங்கள மொழி மூலம் 108 பேருமாக மொத்தம்  215 பேருக்கான நியமனங்கள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோரால் நேற்று செவ்வாய்க்கிழமை(20) வழங்கிவைக்கப்பட்டது.


இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
 'ஒரு நாட்டின் பல்வேறு துறைகளும் கல்வியின் மூலமே அபிவிருத்தியடைய முடியும். உலகின் ஏனைய நாடுகளுக்கு நிகராக எமது இலங்கை உயர்வடைய வேண்டுமானால் கல்வித்துறை சரியான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.


எமது நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் சம வாய்ப்பை பெற்றுக் கொடுக்க எனக்கு கிடைத்துள்ள இந்த அமைச்சு பதவியை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வேன்.
மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மூவினத்தைச் சேர்ந்த கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் இணைந்து கல்வி மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயலாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.


மலையக கல்வி வளர்ச்சி பின்னடைந்து காணப்படுகிறது. ஐந்து வீதமான மாணவர்கள் பழ்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறவேண்டிய இந்த காலகட்டத்தில் ஒருவீதமான மாணவர்கள் அனுமதி பெறுகின்றமை மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.


மலையகத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பிரிவில் விஞ்ஞான, வர்த்தக துறைகளுக்கு தகுதியான மாணவர்கள் உள்வாங்கப்படும்போதும் உயர்தரத்தில் இத்துறைகளில் பணிபுரிய போதிய ஆசிரிய ஆளனியினர் இல்லாமல் காணப்படுகின்றது.


எனவே ஓரிரு பட்டதாரி ஆசிரியர்களுடன் மூன்று பாடங்களையும் சித்திபெறுவதற்கு மாணவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மாணவர்கள் பல்கழைக்கழக அனுமதியை பெறுவது மிகவும் சவாலான ஒரு விடயமாகும்.


இத்துடன் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் ஆங்கில பாடம் கற்பிப்பதற்கும் அத்துறைசார் நிபணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.


எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 74 ஆவது உத்தேச நலன்சார் வேலைத்திட்டத்தின்படி பாடத்துறை சார்ந்த விசேட பாடசாலைகளை இணங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு குறைபாடான பாடரீதியான ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.


அதேசமயம் தமிழ்மொழி மூலமான பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் விரைவுபடுத்தவும் ஆவண செய்யப்படும்.
இலங்கையில் இயங்குகின்ற முஸ்லிம் பாடசாலைகளிலும் பௌதீகவள, மனிதவள குறைபாடுகளுடன் இயங்கி வருவதை நானறிவேன். இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களுடனும் பணிபாளர்களுடனும் அந்தந்த மாவட்டததுக்கு  சென்று கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன்.


பாடசாலைகளில் பல வருட காலமாக நிலவும் குறைபாடுகளான காவலாளி, தொழிலாளி, ஆய்வுகூட உதவியாளர் போன்ற சிற்றூழியர்களை நியமிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


சிங்கள மொழி மூல பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அமைச்சரின் கவனததுக்கு கொண்டுவந்து அவற்றை தீர்த்துவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates