Headlines News :
முகப்பு » , » அகாலம்: புஷ்பராணியின் நினைவுக் குறிப்புகள் - லெனின் மதிவானம்

அகாலம்: புஷ்பராணியின் நினைவுக் குறிப்புகள் - லெனின் மதிவானம்


இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக நடைப்பெற்று வந்த நீண்ட போராட்டமானது முடிவுக்கு வந்துள்ளது.; நேர் செய்ய முடியாத நிலையில் பெரும் வாரியான உயிரிழப்புகளையும், அழிவுகளையும நாம் சந்தித்திருகின்றோம்;.  பேரிவாதத்தாலும் வலதுசாரி தமிழ்தேசியத்தாலும்  பாதிக்கப்பட்ட மக்கள் தமது இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலையில்- அவர்களது பண்பாட்டை இழந்த நிலையில் வாழ வழியின்றித் தவிக்கின்றனர். மிக திட்டமிடப்பட்டவகையில் தமிழ் மக்களின் இருப்பை இல்லாதொழிக்கும் வகையிலான பேரினவாத கருத்துக்களும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம்,  இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான கோரிக்கைகள் அடிப்டைப்பிரச்சனையை தெளிவின்றி  அவ்வவ் போது தமது இருப்பை நிலைநிறுத்த மட்டும் எடுக்கும் முயற்சிகளின் அவலநிலை தொடர்ந்தவண்ணமே உள்ளது. சர்வதேச மட்டத்திலிலும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை பயங்கரவாதமாக பார்க்கப்பட்டளவிற்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையாக பார்க்கப்படவில்லை.

 இவ்வாறே கடந்த காலங்களில் குறுந் தமிழ் பாஸிச சக்திகளால் வரலாறு காணாத மனித அழிப்புகள் மட்டுமல்ல, சாட்சியங்கள் கூட அழித்தொழிக்கப்பட்டன. முரண்பட்ட சக மனிதர்களையும், பேராளிகளையும், இயக்கங்களையும் ஈவிரக்கமற்றவகையில் அழித்தொழிப்பதில் அவர்கள்; சமாதானமும் திருப்தியும் அடைந்தனர். அதேவேளை, வரலாற்றை தமது வீர சாகசங்களின் வரலாறாக மாற்றியமைக்க முற்பட்ட அவர்கள் இனவெறியை துண்டுகின்ற  படைப்புகளை வெளிக்கொணர்ந்தனர். அப்படைப்புகளை தமிழ் மக்களை அவ்வப்போது உசுப்பேத்தும் வகையிலும் அவர்களின் அரசியல் போராட்டத்தை திசைதிருப்பும் வகையிலும் பாஸிச ஆதரவாளர்களும் ஊடகங்களும் அவற்றை வரவேற்று பிரசுரித்திருந்தனர். எனவே போர்காலத்தின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

 இவ்வாறான சூழலில், தோல்வி அடைந்த தமிழ் தேசிய போராட்டத்தின் சாட்சியங்கள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் வெளிவந்த வண்ணமே உள்ளன. நாளுக்கு நாள் அவ்வாய்வுகள் மதிப்பீடுகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் அவ்வாய்வுகள் மதிப்பீடுகள் யாவும் ஒருப்புறத்தில் பேரினவாதத்தையும் மறுபுறத்தில் குறுந் தமிழ் தேசிய போராட்டத்தையும் நியாயப்படுத்திய வண்ணமே உள்ளன. இவ்வாறு அகநிலைச் சார்பாக  வெளியாகியிருக்கும் இவ்வாய்வுகள் மதிப்பீடுகள் இனவாததை மேலும்; நிலை நிறுத்துகின்ற முயற்சியாகவே அமைந்துக் காணப்படுகின்றன. இவ்வாறானதோர் காலக்கட்டத்தில்; தமிழ் தேசிய போராட்டத்தின் ஆரம்பகால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் இயங்கிய சி. புஸபராணி தனது சாட்சியங்களை அகாலம் என்ற நூலின் ஊடாக வெளிக்கணொர்கின்றார்.  இதே காலக்கட்டத்தில் இப்போராட்டம் பற்றி வெளிவந்த பதிவுகளில் திரு. சி புஷ்பராஜாவின் ‘ஈழ போராட்டத்தில் எனது சாட்சியம்’, கணேசன் ஐயரின்; ‘ஈழ போராட்டத்தில் எனது பதிவுகள்’ ஆகிய நூல்கள் முக்கிய கவனிப்புக்குரியவையாகும். அவரவர் தம் இயங்கிய காலக்கட்டத்தில் சந்திக்க நேர்ந்த அனுபவங்களையும் தமது அரசியல் பின்புலத்தில் நின்று பதிவாக்கியிருக்கின்றார்கள். இப்பதிவுகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது தம்காலத்து அனுபங்களை முடிந்தவரையில் மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் பதிவாக்க முனைந்துள்ளமையை அதன் பலமான அம்சமாகும்;. அவை தன்னையோ அல்லது தான் சார்ந்த அமைப்புகளையோ முதன்மைப்படுத்திக் கொள்ளாமல் அதற்க மாறாக ஆதாரங்கள் தென்படும் போது அவற்றை எதிர் கொள்வதற்கு நிரம்ப துணிச்சலும் நேர்மையும் வேண்டும். அவர்களின் அரசியல் நோக்கு, தத்துவ பின்னணி என்பனவற்றில் வேறுப்பாடுகள் காணப்பட்ட போதினும் மக்களை நேசிக்கின்ற பண்பு இப்பதிவுகளில் இழையோடியிருப்பது திடுக்கிட வைக்கும் அளவுக்கு அவ்வெழுத்துகளுக்கு வளத்தை சேர்த்திருக்கின்றன. அவை தன்காலவோட்டத்தின் அனபவமாக ம்டடுமல்லாமல் சுயவிமர்சனமாகவும் அமைந்திருக்கின்றன.  அந்தவரிசையில் புஷ்பராணியின் அகாலம் பற்றி நோக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

 ஐரோப்பிய சமூவமைப்பில் வர்க்கப் பிளவுக் காணப்பட்டது போன்று எமது இனக்குழு சமூகவமைப்பு அமைந்திருந்ததில்லை. சாதியக் கட்டமைப்பு என்பது எமது சூழலுக்கான யதார்த்தமாக அமைந்துக் காணப்பட்டது. அவ்வமைப்பு இந்திய இலங்கை வாழ் முறைகளுக்கு அமைய பொதுமைகளையும் சிற்சில தனித்துவங்களையும் கொண்டு இயங்கி வந்துள்ளன என்பதை இவ்விரு சமூகவமைப்புகள் பற்றி வெளிவந்த ஆய்வுகள் எடுத்துகாட்டியிருக்கின்றன. இவ்விடத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் யாதெனில்இ இந்திய வாழ்முறையின் சுரண்டலுக்கான ஏற்றத்தாழ்வுடைய சமூகவமைப்பு (மாற்று வடிவம்) சாதி என்பதை புரிந்து கொள்ளல் அவசியமாகும். தலித்தியம் எனும் அடையாள அரசியலானது மேல் சாதியினரைத் தமது வர்க்க எதிரியாக நோக்குகின்ற  தன்மையிலேயே வளர்த்தெடுக்கப் படுகின்றது. இங்கு சாதியத்திற்கு எதிராக போராடக் கூடிய சகல விதமான ஜனநாயக சக்திகளையும் ஒன்றினைத்தல் அவசியமாகும். இலங்கையில் வட பகுதியில் சிறுபான்மை தமிழர் மகா சபையும்(அனைத்து ஒடுக்கபட்ட சாதியினரையும்) தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் அனைத்து நேச சச்திகளையும்(நல்லெண்ணங் கொண்ட ஆதிக்க சாதியினரையும்) இணைத்துக் கொண்டு சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தை முன் வைத்தனர். தீண்டாமை வெகுஜன இயக்கம் ‘சாதி ஒழியட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்’ என அவர்கள் சாதியையும் தீண்டாமையையும் குறி வைத்து போராடிய அதேசமயம் சகல ஒடுக்கு முறைகளுக்கும் எதிரான வர்க்க பார்வை என்ற சமூக விஞ்ஞான தளத்துடன் இணைத்திருந்தது அதன் முற்போக்கான அம்சமாகும்.  அல்லாவிடின் தலித் மக்களின் போராட்டம் கூனி குறுகி இறுதியில் படுத் தோல்வி அடைந்திருக்கும்.

 இந்நூல் முழுமையிலும் வெளிப்படும் முக்கியமாதோர் அம்சம் தான் சமூக முரண்கள் மீதும் அதன் போலி ஆசாரங்கள் மீதும் கொண்ட எதிர்புணர்ச்சியாகும். அந்தவகையில் சாதியத்தின் மீது அவர் கொண்டுள்ள எதிர்ப்புணர்வு இந்நூலில் பல இடங்களில் நேரடியாகவும் மறைமகமாகவும் வெளிப்புடுகின்றது. புஷ்பராணி ஒரு தலித்தாக இருந்தமையினால் அவர் சமூகத்தில், பாடசாலையில், பொலிஸில், சிறையில் தான் சந்திக்க நேர்ந்த கசப்பான அனுபவங்களை பதிவாக்கியிருக்கின்றார். அவ்வாறு அவ்வனுபவங்களை கூறுகின்ற போது விரக்தியில் மூழ்கி வசைகளை அல்லித் தெளிக்கவோ அல்லது அழுது கண்ணீர் வடிக்கவோ முனையவில்லை. வாழ்க்கை மீதான காதலும் வாழ வேண்டும் என்ற முனைப்பும் அவரில் வேர் கொண்டு கிளைப்பரப்புகின்றது. அந்தவகையில்  வட பகுதியில் இடம் பெற்ற சாதி எதிர்ப்பு போராட்டங்கள் பற்றிய தமிழ் கூட்டணியினர் கொண்டிருந்த நிலைப்பாடு  குறித்து அவரது அரசியல் பார்வை பின்வருமாறு அமைந்துக் காணப்படுகின்றது.

 “நாங்கள் அடையப் போகும் தமிழீழத்தில் சாதிவேற்றுமைகள் இருக்க கூடாது என்று விரும்பினோமே தவிர, சாதி தமிழீழத்தில் இருக்காது என்று நாங்கள் முழங்கினோமே தவிர சாதியின் தோற்றம், அதன் வரலாற்றுப் பாத்திரம், இந்து மதத்திற்கும் அதற்குமுள்ள தொடர்புக் குறித்தெல்லாம் நாங்கள் எந்த தெளிவுமற்றே இருந்தோம். அமையப் போகும் தமிழீழத்தில் இறுக்கமான சட்டங்களைப் பொட்டுச் சாதியை ஒழித்து விடலாம் என்றளவில் தான் எங்களுடைய அரசியல் புரிதலிருந்தது.” (ப.65)…‘கூட்டணித் தலைவர்கள் மேட்டுக்குடி அரசியல்வாதிகள் என்ற விமர்சனம் சரியானது தான். ஆவர்கள் தீண்டாமை ஒழிப்பு வெகுசன போராட்ட காலங்களில் தலித் மக்களின் விடுதலை உணர்வை அங்கிகரிக்கவில்லை என்ற விமர்சனமும் மொத்தச் சரியானதுதான். ஆனால் அவர்கள் தலித் மக்களையும் தலித் தலைவர்களையும் கொன்றவர்கல்ல. தங்களுக்காக மில்லியன் கணக்கில் செல்வத்தை மக்களிடமிருந்து கொள்ளையடித்தவர்களும் அல்ல.’(ப.187)

ஆனால் இந்த மாற்றத்திற்கான அரசியல் – வழிமுறைகள் என்ன என்பது பற்றிய தெளிவு இவர்களிடம் இல்லாதிருந்ததால் தமிழ் கூட்டணியினரின் வர்க்க நலனை உணர்ந்துக் கொள்ள முடியாமல் இருந்தமை துரதிஸ்டவசமான தொன்று. இருப்பினும் வரலாறு இவர்களுக்கான பாடத்தை கற்று தந்த போது அது குறித்து இவர் சுயவிமர்சனம் செய்யவும் தயங்கவில்லை: இவ்வம்சம் இவரது பரந்துப்பட்ட இதயத்தை மட்டுமல்ல நேர்மையையும் காட்டுகின்றது. மறுபுறத்ததில், யாழ்ப்;பாண சமூகவமைப்பில் நிலவிய சாதிய அமைப்புக்கு எதிராக கம்ய+னிஸ்டுகள் மேற்கொண்ட பிரயத்தனங்கள் பற்றிய பதிவுகளை இந்நூலாசிரியர் மிக நேர்மையடன் முன் வைக்கின்றார். அந்தவகையில் அந்நூலில் பின்வரும் பந்தி கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
“’1943 இல வட இலங்கைச் சிறுப்பாண்மைத் தமிழர் மகாசபை’ என்ற சாதிய விடுதலைக்கான தலித் அமைப்பு ஆரம்பிக்கபட்டது. இந்த அமைப்புடைய போராட்டங்களிலும், பின்பு தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் போராட்டத்தின் மூலமும், பnhதுவுடமைக் கட்சிகளின் வழிக்காட்டலினாலும் 1960களில் நகர்புறங்களில் சில உரிமைகளை தலித்துகள் வென்றெடுக்க கூடியதாக இருந்தன.(34)

இலங்கையில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவமாக இருந்தது போன்று  எழுபதுகளில்  தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டமும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன்காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாக பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும். அன்றைய சூழலில் இடதுசாரிகள் எவ்வாறு தமிழர் சமூவமைப்பில் புரையோடி போயிருந்த சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய கவனமெடுத்தினரோ அவ்வாறே தமிழரசுக் கட்சியினர் பேரிவாதத்திற்கு எதிரான முற்போக்கான சிந்தனையை கொண்டிருந்தனர். பின் வந்த காலங்களில் ஒரு நசிவு தரும் அரசியல் சூழலில் தமிழ் கூட்டணியனர் தமது முற்போக்கு தன்மையை இழந்து பிற்போக்குவாதிகளின் கூடாரமாக அவ்வமைப்மை மாற்றியமை துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.  காலப்போக்கில் தமிழரசுக் கட்சியினரிடமிருந்த இடதுசாரி அணியினரின் கருத்துக்கள் முடமாக்கப்பட்டு இராணுவவாதமே முனைப்படைந்து முதன் நிலையை அடைந்திருந்தது. மக்களின் விடுதலைக்காக தோன்றிய தமிழ் தேசிய போராட்டம் புலிகள் இயக்கத்தினால் கையேந்தப் பட்டு; குறுந்தேசியமாக  உருவெடுத்ததுடன் அதனையும் கடந்து அவ்வியக்கம் ஆயுதத்தை காட்டி மக்களையே பணயமாக்கியிருந்தார்கள். அவ்வமைப்பு இராணுவாதமாக முன்னெடுக்கப்பட்ட முன்னெடுக்கப்பட்ட போது விமர்சனங்களையும் கருத்து வேறுப்பாடுகளையும் கொண்டிருந்தோரை அழித்தொழிக்க முற்பட்டது. முரண்பட்ட போராளிகளையும் இயக்கங்களையும் ஈவிரக்கமற்றவகையில் வேட்டையாடினார்கள். இதன் பேறு இன்று அப்போராட்டம் சிதைக்கப்பட்டுள்ளது.   புஷ்பராணியின் பதிவுகள் சிறப்பாகவே அடையாளம் காட்டி நிற்கின்றன.

“மிதவாத போக்கில் வெறுப்புற்ற தமிழ் இளைஞர்கள் ஆயதம் தரித்த விடுதலை இயக்கங்களாக திரண்டபோhது இயக்கங்களை ஆதரித்து தமிழ் மக்கள் அவர்களுடன் நின்றார்கள். விடுதலை இயக்கங்கள் வெகு விரைவிலே அதிகார மையங்களாக மாறுவார்கள் என்றும் சொந்த மக்களையே கொன்று குவிப்பார்களென்றும் அப்போது யாரும் கருதியிருக்க. இயக்கங்களைத் தொடங்கிய போராளிகள் கூட அவ்வாறு கருதியிருக்க மாட்டார்கள் என்றெ நினைக்கின்றேன்.’

“சகோதர இயக்கங்களை அழித்துவிட்டு எமது விடுதலைப் போராட்டத்தைப் புலிகள் தங்களது கையிலெடத்துக் கொண்டதிலிருந்து எமது போராட்டமல்ல எமது இனத்தின் வீழ்ச்சியே ஆரம்பமாகிறது என்பேன். விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதான ஆயுதப் போராட்டமாக, பாஸிச அரசியல்நெறியாக புலிகள் வளர்த்துச் சென்றார்கள். அவர்கள் நடாத்திய இலங்கை இராணுவத்திற்கு எதிரான வீரம் சொறிந்த தாக்குதல்கள் இராணுவ ரீதியாக முக்கியமானவையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நடாத்திய அப்பாவி சிங்கள மக்கள் மீதான படுகொலைகளும் முஸ்லிம் மக்கள் மீது நிகழ்த்திய இனச் சத்திகரிப்பு நடவடிக்கையும் தாமீகரீதியாக கேடுக் கெட்டவை. எமது விடுதலைப் போராட்டத்தை அவை பயங்கரவாத செயல்களாக அடையாளம் காட்டின”(189).

 மேலும் புலிகள் இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் சுயநிர்யத்திற்கான உரிமைப் போராட்டம் யாழ்பாணத்து தமிழர்களை மட்டுமே முதன்மை படுத்தியதாக அமைந்திருந்தது இன்னனொரு துயரகரமான அம்சமாகும்.  அத்தகைய அரசியலின் பின்னணியில் இலங்கையில் வாழ்ந்த எனைய சிறுப்பாண்மை மக்களான, முஸ்லீம் மக்கள், கிழக்கு மகாணத்தமிழர், மலையகத் தமிழர் என்போர் புறக்கணிக்கப்பட்டமைக் குறித்தும் இந்நூலாசியர் கவனம் செலுத்த தவறவில்லை.

 போராட்டங்கள் யாவற்றிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. அந்தவகையில் நிலபிரபுத்துவ சமூக புனிதங்களிலிருந்து வழியும் சீழினை நக்கி பிழைப்போட்டும் ஒரு பின்னணியில் அத்தகைய மரபுகளை புஷ்பராணி தனது சொந்த வாழ்வை எங்கோ தொலைத்து விட்டு அரசியல் ரிதியாகவும் அமைப்பாக்க செயற்பாடுகளிலும் இயங்கியவர். அந்தவகையில்  பெண் என்ற வகையில் சிறையிலும் பின் சமூகத்திலும் அனுபவித்த கொடுமைகளையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. இத்தகைய கொடுமைகளுக்கு மத்தியிலும்  மனிதர்களையும் வாழ்வையும் நேசித்து சமூக முரண்பாடுகளை ஒழிப்பதற்கான முனைகின்ற பண்பு புஷ்பராணியில் அடிப்படையான மனிதநேயமாக விளங்குகின்றது.  சிறைகாலத்து தோழிகள் பற்றிய நினைவுகளை பகிர்ந்துக்  கொள்கின்ற போது இந்நாகரிகம் இயல்பானவே விகர்சிக்கின்றது. இலங்கையில் இடம் பெற்ற தமிழ் தேசிய போராட்டத்தின் முதலாவது வரிசையில் நின்ற பெண் போராளியின் நினைவுக் குறிப்புகள் என்ற வகையிலும் இந்நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.

 மனித வாழ்வுக் குறித்த இந்நூலாசிரியன் காதல் சோகத்தை இசைத்தாலும் அவைக் கூட மனிதனை நிராசையில் விரக்த்திக்கு கொண்டு செல்வதாக அல்லாமல் வாழ்க்கை மீதான நம்பிக்கையை தருகின்றது. சரித்திரத்தில் நம் மீது நீண்ட கொடிய பலாத்தகாரம் கொண்டுள்ள அலைகழிப்புகளினூடே ஒரு நாகரிகத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்சியின் வெளிப்பாடாகவும் இந்நூலின் நினைவுப் பதிவுகள் அமைத்திருக்கினறன. ஓர் ஒப்புவமை வசதிக்கருதி, நமது பண்பாட்டு அரசியல் சூழலில் வெம்மை சூழ்கொண்டெழுந்த ஒரு பெண் போராளியின் அனுபவங்களை பிறிதொரு புரட்சிகளில் வெளிப்பட்ட பெண் ஆளுமையுன்(நாவலி வருகின்ற பாத்திரமாக இருப்பினும் அன்றை சூழலில் இயங்கிய மாந்தர்களையே அவை குறிப்பதாக அமைகின்றது) ஓப்பு நோக்குவது அவசியமானதொன்றாகும்.

சீன நாவலாசிரியர் யங்மோவினால் எழுதப்பட்ட ‘இளமையின் கீதம்’ என்ற நவீனம் பழைமைச் சமூகத்தை எதிர்த்துப் போரிட்ட ஒரு இளம் பெண் அறிவு ஜீவியின் கதையாகும். “தாய்”; நாவலில் ஒரு சாதாரண தாய் எவ்வாறு புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டாளோ, அவ்வாறே இந்நூலில் ஒரு சாதாரண பெண் புரட்சிகர ஆளுமைக்குள் கொண்டு வரப்பட்டு, மிகத் தீவிரமான கம்யூனிஸ்டாக மாறி சீன தேசத்தின் விடுதலைக்காகப் போராடுகிறாள். மறுபுறத்தில் சீனாவின் பண்ணையடிமைத்தனத்திற்கு பலியான தனது தாய் லிண்டோவைப் போன்று அந்த அடிமை வாழ்க்கை முறைக்குள் மட்டும் கட்டுண்டுக் கிடக்காது, கதாநாயகி டாவோ சிங் தனது முதல் காதலன் சந்தர்ப்பவாதி என்று தெரிந்ததும் அவனைத் துணிவாக விட்டு விலகிச் செல்கின்றாள். அந்தவகையில் ஒரு பெண்ணின் ஆளுமையை அழகுறச் சித்திரித்துக் காட்டப்படுவதில் இந்நாவல் வெற்றியடைகின்றது.

இவ்விடத்தில் சில கேள்விகள் எழவும் நியாயமிருக்கின்றது. தாய் நாவலில் வருகின்ற தாயை போன்றோ அல்லது இளமையின் கீதம் என்ற நாவலில் வருகின்ற டாவோ சிங் போன்றோ புரட்சிகரமான ஆளுமைகளாக புஷபராணி போன்ற பெண் போராளிகளால் வர முடியாமல் போனமை ஒரு தற்செயல் நிகழ்ச்சியல்ல. இலங்கையின் யதார்த்த சூழல் வேறுவிதமாக இருந்த்து. எமது நாட்டில் அரசியல் சமூகப் பின்புலத்தின் அடியாக தோன்றிய பேரினவாதம், அது தோற்றுவித்த தமிழ் தேசிய போராட்டம் என்பதே எமது வாழ்வின் நிசர்சனமாகிவிட்டதோர் காலக்கட்டத்தில் தேசியத்தை பார்க்காத மார்க்சியமோ அல்லது மார்க்சியத்தை பார்க்காத தேசியவாதமோ சமூகப் போராட்டத்தை சிதைக்கும் என்ற உணமையை எமது நாட்டின் போராட்ட வரலாறு எண்பித்திருக்கின்றது. இப்போராட்டத்தில் வெளியிலிருந்து ஏற்படுத்தப்பட்ட தவறுகளுக்கு நிகராக உள்ளரங்கிலும் எத்தகைய தவறுகளும் தனிநபர் பயங்கரவாதமும் இடம்பெற்றன என்பதை கணேசனின் ‘‘ஈழ போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற நூல் அனுபவ வாயிலாக தருகின்றது.

 வடக்கில்  கம்யூனிஸ்டுகளாலும் ஜனநாயக சக்திகளாலும் முன்னெடுக்கப்பட்ட சிறபடபாண்மை தமிழர் மகாசபை மற்றும் தீண்டாமை வெகுசன ஒழிப்பு போராட்டங்கள் வெற்றிப் பெற்றவையாக திகழ்கின்றன. இப்போராட்டத்தில் உயிர் நாடியாக நின்ற மனிதாபிமானது, மனிதனுக்கு மதிப்பு தரும் மனிதாபிமானமாகும். உழைக்கும் வர்க்கத்தை நேசிக்கும் மனிதாபிமானம்: அது முதலாளித்துவ மனிதாபிமானத்திற்கு எதிரானது. இதனால் தான் அந்த மனிதாபிமானத்தில் மனிதரது சுதந்திரம், நல்வாழ்வு, இன்பம், மனிதனின் சர்வாம்ச வளர்ச்சி என்பன அதன் அடிநாதமாக விளங்குகின்றது. அப்போராட்டம் பற்றிய கோட்பாட்டு உருவாக்கம் செய்யப்படாவிடினும் அது பற்றிய பதிவுகளை வெளிக் கொணரும் வகையில் வெகுஜனன், இராவணா ஆகியோர் எழுதிய ‘இலங்கையில் சாதியமும் அதற்கு எதிரான போராட்டங்களும்’ என்ற நூலும், எஸ். சந்திரபோஸ் அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட ‘எம்.சி ஒரு சமூக போராளி’ என்ற நூலும்  வெளிவந்திருப்பது அவதானத்திற்குரியதாகும். இவ்வாறே இலங்கையில் தேசிய முதலாளித்துவ நோக்கில் சாதிய பிரச்சனைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அரசியல், பண்பாட்டுச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை யோகரட்ணத்தின் ” தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்” என்ற நூல் சாட்சியாக பதியவைக்கின்றது. 
அவ்வாறே, இலங்கையில் தோன்றிய தமிழ் தேசிய போராட்டமானது பேரிவாதத்திற்க எதிராக தேன்றிய ஒன்று என்ற போதினும் காலப்போக்கில் உருவான நசிவு தரும் அரசியலின் பின்னணியில் கேவலமானதோர் நிலையை எட்டியப் போது அப்போராட்டம் மக்களிலிருந்து பிரிந்து, அம்மக்களையே பகடை காயாக பாவித்து இறுதியில் சிதைந்து சின்னாப்பின்னமாக்கப்பட்டது. இப்போராட்டம் குறித்து அப்போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகளே அத்தகைய பதிவுகளை வெளிகொணர்கின்றனர். 

இவ்வாறான சூழலில், காலத்திற்குகொவ்வாத வரட்டுக் கோட்பாடுகளை கைவிட்டு, எமது வாழ்நிலைக்கான கோட்பாட்டு பிரயோகத்தை செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும். எமது பிரயோக சூழலுக்குகேற்றவகையிலான ஆழமான நுட்பமான மார்க்சிய ஆய்வுகளின் ஊடாகவே இதனை சாத்தியமாக்க முடியும். எப்போதும் பலமான விடயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது பின்னடைவிற்கும், பலவீனமான அம்சங்களை மட்டுமெ பேசிக் கொண்டிருப்பது விரக்த்திக்கும் இட்டுச் செல்லும் என்பது வரலாற்று நியதி. எனவே ‘தவறை விமரிசன விழிப்புணர்வோடு கண்டறிந்து சாதக அம்சங்களைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பது முற்னேற்றத்துக்கான வழி. இடதுசாரி தமிழ் தேசியத்தை ஐக்கியப்படுத்துவதற்கு உரிய அத்திவசியமான சக்தியாகக் காண முற்போக்கு இயக்கம் தவறியதென்றால், தமிழ் தேசியம் வலதுசாரி பிற்போக்குவாதிகளால் முன்னெடுக்கப்படுவதாய் ஆகி, தனக்கு முந்திய முற்போக்கு செலநெறியைத் துரோகமிழைத்த செயற்பாடு என சித்திரித்து, அதிலிருந்து கற்றுக் கொள்ள மறுத்தது என்பார் ந. இரவீந்திரன். வரலாற்றிலிருந்து கற்று வளர்திசையின் படிக் கற்களாக்குவதே இன்றைய புறப்பாட்டின் அவசியமாகும்.

இறுதியாக இந்நூலக்கத்தில் கையாளப்பட்டுள்ள எழுத்து நடைப் பற்றிக் கூறுவதாயின்,  இந்நூலாசிரியர் தம் காலத்து அனுபவங்களை- எத்தகைய புரட்சிக்குமுரிய முன் நிபந்தனையாக உள்ள கம்பீரத்தை அடுத்த தலைமுறiயினரிடம் ஒப்படைப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட சொற்கள், செறிவான சுருக்கமான வசன நடைகள், குறுகிய பந்தியமைப்புகள், தெளிவான சிந்தனைக்கு உறுதுணையாக விளங்கம் தரும் தலைப்புகள் இவையாவும் வாசகனுக் சோர்வு தட்டாதவகையில் இந்நூலை வாசிக்க தூண்டுகின்றது.
 நன்றி- எதுவரை
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates