கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் இடம் பெற்ற மண்சரிவு அபாயத்தில் சிக்குண்டு உயிர் இழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் மீரியபெத்த பிரதேசத்தில் மீட்பு பணிகளை துரித படுத்த கோரியும், இந்த சம்பவம் குறித்து மலையக அரசியல் வாதிகள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென கோரியும் இன்றையதினம் பொகவந்தலாவ நகரில் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றதுள்ளது.
இந்த ஆர்பாட்டதில் பொகவந்தலாவ செல்வகந்த, கொட்டியாகலை, குயினா, பொகவான, டியன்சின், சினாகலை ஆகிய தோட்டங்களை சோர்ந்த 1000கும் மேற்பட்ட மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...