லயத்து வாழ்க்கையை ஒழித்துவிட்டே தொண்டமானும், அரசியல் வாதிகளும் மக்களிடம் வாக்கு கேட்க முன்வர முடியும்.
மீரியபெத்த மண்சரிவும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் அவலங்களும் பெருந்தோட்ட மக்களின் காணி வீட்டு உரிமையற்ற நிலைiயை முழு உலகின் முன் கொண்டு வந்திருக்கிறது.
இருநூறு வருடங்கள் பழமையான நவீன காலத்து வாழக்கை முறைக்கு எந்த விதத்திலும் ஒத்துவராத லயத்து வாழ்க்கை இவ்வளவு ஆண்டுகளாக நிலைத்திருப்பதற்கு காரணகர்ததாக்களாக இருக்கும் இதொகவும், ஆறுமுகம் தொண்டமானும் அவரது அடிவருடிகளுமே இந்த நிலைமைக்கு காரணம் என்பதும், இதுவரை மலையக மக்கள் தொடர்பான இவர்கள் சொல்லி வந்த பொய்களை மீரியபெத்த சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டது.
இந்த மக்களுக்கு பாதுகாப்பான சொந்த நிலங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை கட்டாயம் நிறைவேற்றியே ஆகவேண்டும், மலையக மக்கiளும், மலையக மக்களுக்காக குரல் கொடுத்த வடகிழக்கு மக்களும் தலைவர்களும், புலன் பெயர் தமிழர்களும் கண்ணில் வெண்ணெய் வைத்துக் கொண்டு இந்த விடயங்களை அவதானிக்கப் போகிறார்கள் என்பது உறுதி.
எனவே தொண்டமான் இதுவரை காட்டிவந்த மாயவித்தைகளையும், ஏமாற்றுத் தந்திரங்களும் இனிப் பலிக்கப் போவதில்லை.
மீரியபெத்த சம்பவம் முழு மலையக சமூகத்திலும் காணி வீட்டு உரிமை தொடர்பான முன்னர் காணாத முறையில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பின்னணியில் இலங்கையின் நுவரெலியா மாவட்டதின் டயகம தோட்டத்தில், இடம்பெற்றுள்ள தீவிபத்து லயத்து வாழ்க்கையை ஒழித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை தொண்டமானுக்கும் இதொகாவிற்கும் அரசுக்கு வக்காலத்து வாங்கும் மற்றை தொழிற்சங்க தலைவர்களுக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
வழமைபோல தனது பாதுகாவலர் பரிவாரங்களோடு அங்கே சென்று தற்போதைக்கு ஏதாவது நிவாரணத்தை வழங்கிவிட்டு செல்லும் பழைய பாணியிலான நடைமுறையை தொண்டமானும் மற்றை மலையக தலைவாகளும இம்முறை செய்ய முடியாது.
இந்த விபத்தில் 24 வீடுகள் முற்றாக எரிந்து 24 குடும்பங்களி;ல் உள்ள 84 பேர் நிர்கதியாகி உள்ளனர். அவர்களின் அனைத்து உடமைகள், இழக்கப்பட்டுள்ளன. 26 பாடசாலை செல்லும் பிள்ளைகள் தங்கள் உடைகள், புத்தகங்கள் ஆவணங்களை இழந்துள்ளனர். வாழ்க்கையை முற்றுமுழுதாக ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இவர்கள் உள்ளனர்.
இந்த தீவிபத்திற்கு என்ன காரணம் முதலும் முக்கியமானதுமான காரணம் வீடுகள். வுரிசையாக லயங்களாக அமைந்துள்ளதாகும்.
ஒரு புறம் 12ம் மறு பக்கம் 12 மாக ஒன்றோடு ஒன்று இடைவெளி இல்லாமல் நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகளாக இவை இருப்பதால் எந்த ஒரு வீட்டில் தீ பற்றினாலும் உடனடியாக மற்றைய வீடுகளுக்கும் தீ பரவிவிடுகிறது. எந்த ஒரு வீட்டிற்கும் பின்புற வாசல் கிடையாது.
நகர கிராம பகுதிகளில் எந்த ஒரு வீட்டுக்கும் மின்சார இணைப்பு வழங்கப்படும் முன்னர் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பின்னரே மின்சார இணைப்புக்கள் செய்யப்படுகின்றன.
ஆனால் பெருந்தோட்ட பகுதியில் எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதில்லை. மின்சார சபைக்கு பணம செலுத்தியவுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மக்கள் அறிவ+ட்டப்படாததால் அவர்கள் ஏற்படக்கூடிய ஆபத்தை தெரிந்து கொள்ளமால் தற்காலிக இணைப்பை ஏற்படுத்துகிறார்கள்.
மின்சார இணைப்பில் நடக்கும் முறைகேடுகளை கண்காணிக்க வேண்டிய எந்த வித அரசு சேவையும் பெருந்தோட்ட பகுதியில் கிடையாது. இதனை பெற்றுத் தரவேண்டியது மலையக அரசியல் வாதிகள் பொறுப்பு.
மிகவும் நெருக்கடியான வீட்டு வசதியே இருப்பதால் விறகு உட்பட இலகுவில் தீபற்றக்கூடிய பெருட்கள் வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் மிக விரைவிலேயே தீ பரவுகிறது.
பெருந்தோட்ட பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் நகரங்களைப் போல உடனடியாக பெறக் கூடிய முறையில் தீ அணைப்பு சேவைகள் எதுவும் பெருந்தோட்ட பகுதிக்கு அண்மையான பகுதியில் கிடையாது.
இதனை பெற்றுத் தரவேண்டியதும் மலையக அரசியல் வாதிகள் பொறுப்பாகும். .
பெருந்தோட்ட பகுதிக்கு இதொகா மூலம் மின்சாரம் பெற்றுக்கொடுத்து விட்டதாக இதொகவின் தலைவரும் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்து சிவலங்கம் பல முறை கூறி பெருமைப்பட்டிருக்கிறார்.
மின்சாரம் வழங்கப்பட்ட பின்னர் இதுவரை இவ்வாறு நூற்றுக்கணக்கான லயன் அறைகள் தீயினால் நாசமடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் அநாதரவாகி இருக்கிறார்கள்.
ஒவ்வோரு முறையும் தீ விபத்திற்கான மேற்படி காரணங்கள் தொண்டான் , சிவலிங்கம் உட்பட மலையக தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஆகக்குறைந்தது லயன் காம்பிரா முறை ஒழக்கக்ப்படும் வரையாவது அவ்வப்பகுதி மின்சார சபைகள் ஊடாக எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க இவர்கள் எந்தவித முயற்சியும் செய்தது கிடையாது.
ஆகவே இந்த அனர்த்தத்திக்கும் இவர்களே பொறுப்பு. பெருந்தோட்ட பகுதி முற்று முழுதாக அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர இவர்கள் இதுவரை தங்களால் ஆனதை செய்யவில்லை . அந்த நிலைமை வரும் வரை பெருந்தோட்டங்களில் நடக்கும் இது போன்ற அனைத்து அனர்த்தங்களுக்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இந்த பின்னனியில் வழமைபோல தனது பாதுகாவலர் பரிவாரங்களோடு அங்கே சென்று தற்போதைக்கு ஏதாவது நிவாரணத்தை வழங்கிவிட்டு செல்லும் பழைய பாணியிலான நடைமுறையை தொண்டமானும் இதொகவும் மற்றைய மலையக தலைவர்களும இம்முறை செய்ய முடியாது. மக்கள் லயத்து வாழக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை மேலும் அதிகமாக வலியுறுத்தப் போகிறார்கள்.
தனது மக்களுக்கு இத்தனை துயரங்களுகம் நடந்து கொண்டிருக்கும் போது இதொகாவில் தனது அரசியலை ஆரம்பித்து தற்போது மலையக மக்கள் முன்னனயின் தலைவராகி தனது குடும்ப அரசியலை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கும் இராதாகிருஸ்ணன் அலரிமாளிகைக்கு சென்று ஜனாதிபதிக்கு மலையக மக்களுக்கு செய்த சேவைகளுக்;காக (?) பொன்னாடை போர்த்தி மக்கள் சார்பில் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் எல்லோதும் அடுத்து வரும் எந்த தேர்தலிலும் பெருந்தோட்ட மக்களின் லயத்து வாழ்க்கை ஒழிக்ப்படும், நிலஉரிமைக்கான உத்தரவாதம் தருகிறோம் என்ற உறுதியோடு மட்டுமே மக்கள் முன்னர் செல்ல முடியும் என்பதை ஞாபகத்தில வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது இவர்களை திருப்பி விரட்டிவிடும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
மீரியபெத்த சம்பவமும் தற்போது டயகமை தீவிபத்தும். முழு மலையக சமூகத்திலும் காணி வீட்டு உரிமை தொடர்பான முன்னர் காணாத முறையில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எஸ்.ஜீவா சிவா வின் முகநூல் குறிப்பு நன்றியுடன் பகிரப்படுகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...