ஒரு சமூக இடப்பெயர்வுக்கு மிக அடிப்படைக் காரணி கல்வியாகும். எந்தவொரு சமூகமும் தாழ்ந்த நிலையிலிருந்து உயர் நிலைக்குச் செல்வதற்கு கல்வித் துறையே படிக்கல்லாகவும் அடிப்படை அம்சமாகவும் காணப்படுகின்றது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அமைவது போல ஒரு சமூகத்தின் சிறப்பம்சம் அச்சமூகம் பெற்றுக்கொண்ட கல்வி நிலையிலேயே தங்கியுள்ளது.
இன்று வளர்ச்சியடைந்து காணப்படும் எந்தவொரு சமூகத்தை எடுத்துக் கொண்டா லும் அச்சமூகம் கல்வித்துறையில் வளர்ச்சியடைந்த சமூகமாகவே காணப்படுகின்றது. எனவே ஒரு சமூகத்தின் கல்வி வளர்ச்சிக் கும் அச்சமூக முன்னேற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதை அவதானிக்கலாம்.
மலையக மக்களின் வரலாறு 200 வருட ங்களைத் தாண்டிய போதும் எமது கல்வி வரலாறு இன்னும் ஒரு நூற்றாண்டிற்கான வளர்ச்சியை பிரதிபலிக்கவில்லை என்பதை அவதானிக்கலாம். ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது எமது கல்வி வரலாறு முப்பது வருடங்கள் பின்தங்கிய நிலையிலேயே எமக்கு கிடைத்தது.
இருப்பினும், பல சவால்களுக்கு மத்தியிலும் மலையக மக்களின் பிள்ளைகளில் அதிகமானோர் ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் சட்டத்தரணிகளாகவும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களாகவும் அரசாங்க தனியார் துறை உத்தியோகஸ்தர்களாகவும் இருக்கின்றனர் என்பதை பார்க்கும் போது எமக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இருப்பினும், 1977 ஆம் ஆண்டிற்கு பின் னர் தோட்டப்பாடசாலைகள் யாவும் அரசா ங்க பாடசாலைகளாக பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர் எமக்கு கிடைத்த கல்விக்கான சம வாய்ப்பினை சரிவர பயன்படுத்திக் கொண்டோமோ என்பதை சிந்தித்துப் பார்த் தால் அதில் இன்னும் பூரணமான வெற்றி அடையவில்லை என்றே கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல வரலாற் றுத் தவறுகளும் இருக்கலாம்.
எமக்கு கிடைத்த முப்பது வருட காலப்பகுதியை பின்னோக்கிப் பார்த்தால் பெருந்தோட்டப் பாடசாலைகளில் இருந்து கல்வி கற்று வெளியேறிய மாணவர்களின் பெறுபேற்று ஆய்வுகள், இடைவிலகல்கள், ஆசி ரிய மாணவர் தொடர்பு, பெற்றோர் ஆசிரி யர் தொடர்பு,பாடசாலை பழைய மாணவர், சமூக நலன் விரும்பிகள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பாடசாலை நிர்வாகத்துடன் கொண்டுள்ள தொடர்புக ளில் முழுமையாக வெற்றி கண்டுள்ளோமா என்பதை ஆராய்ந்தால் பல விடயங்களி லும் நாம் இன்னும் பின் தங்கியே இருக்கின் றோம். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.
குறிப்பாக, ஒரு விடயத்தை எடுத்து நோக்கினால் பெருந்தோட்டத்துறை பெற்றோர் கள் தங்களின் பிள்ளைகளின் கல்வி நடவ டிக்கைகள் தொடர்பாக பாடசாலை நிர்வா கம், பாட ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள், விசேட கல்வித்துறை சார்ந்தவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டங்கள், பாடசாலை அபிவிருத்தி தொடர்பான செயலமர் வுகள் போன்றவற்றில் இவர்களுடைய பங்களிப்பு என்பது மிக மிக குறைவாக காணப்படுவதை அவதானிக்கலாம்.
பெற்றோர்களின் வேலை நேரம், வேலை ப்பளு,கல்வித் தகைமை, கல்வி பற்றிய விழி ப்புணர்வுமின்மை, தூர சிந்தனை இன்மை, வறுமை, போஷாக்கின்மை, வீட்டுப் பிரச்சினை, இன்றைய விலைவாசி உயர்வு, மின்சார வசதியின்மை, லயத்து வாழ்க்கை முறை, தாம் வாழும் சூழல், தொற்று நோய்கள், சுகாதார பிரச்சினைகள், வேறு தொழிலில் இணைந்து தொழில் செய்ய முடியாமை, வானொலி தொலைக்காட்சி யின் பயன்பாடு முறையான வழிகாட்டல், ஆலோசனை இன்மை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் பெருந்தோட்டத்துறை பெற்றோர்களிடையே காணப்படுகின்றன என்பதை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
பல பிரச்சினைகள் இப் பெற்றோர்களிடையே காணப்பட்டாலும் தங்களுடைய வாழ்க்கையின் சுபீட்சத்துக்காக இருக்கின்ற ஒரே ஒரு முதலீடு கல்வி மட்டும் என்பதை உணர முடியாதவர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப வகுப்புக்களில் மிகவும் ஆர் வத்துடன் தங்களுடைய பிள்ளைகளை சேர் க்கின்றனர். ஆனால், அப்பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை பெற்றோர்களால் தொடர்ச்சியாக கவனிக்க முடியாமையால் இம்மாணவர்களின் கல்வி சார் நடவடிக்கை கள் பல வழிகளிலும் தடைப்படுவதை அவதானிக்கலாம்.
பிள்ளைகளின் கல்வி சார் நடவடிக்கை களில் ஆரம்ப வகுப்பு தொடக்கம் இறுதி வரை தொடர்ச்சியான அவதானிப்பும் மேற்பார்வையும் குறையும்போது பிள்ளைகளின் இலக்கு திசை மாறிப்போகின்றது. ஒரு பயிரை நட்டால் மட்டும் போதாது, அப்பயிரை தொடர்ச்சியாகவும் முறையாகவும் பராமரிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இறுதியில் நாம் அதிலிருந்து உச்ச பயனை பெறலாம். இது போன்றே பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளிலும் ஒரு தொடர்ச்சியான பராமரிப்பு காணப்பட வேண்டும். ஏதாவது ஒரு நிலையில் சிறு தவறுகள் ஏற்பட்டாலும் அது பிள்ளைகளின் எதிர்காலத்தையே சூனியமாக்கி விடும். முன்னேற்ற அறிக்கையை பார்த்த பின்பும் தகுதியான பெறுபேறுகள் கிடைக்காதபோது ஆத்திரப்படுவதிலும் பிள்ளைகளை திட்டுவதிலும் எவ்வித பிரயோசனமும் இல்லை. எனவே இவ்வாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது.
எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்க ளுடைய பிள்ளைகளின் இளமைக்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக இறுதி வரையிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தமக்கு எவ்வளவுதான் வாழ்க்கையில் கஷ்டங்கள், பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பிள்ளைகளின் கல்வியைத் தொடர வழிசெய்ய வேண்டும். அதேவேளையில் பிள்ளைகளும் பெற்றோர்களது நிலையை உணர்ந்து ஆர்வத்தோடும் இலட்சியத்தோடும் கல்வி கற்க வேண்டும். தொழிலாளர்களின் பிள்ளைகள் மீண்டும் தொழிலாளர்களாக வாழ நினைக்கக்கூடாது. படிக் காவிட்டால் பரவாயில்லை ஏதாவது ஒரு தொழிலுக்கு சென்று விடலாமே என்ற சிந்தனை மாணவர்களின் மனதில் இருக்கக் கூடாது. குறிப்பாக, உயர்தரத்தில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட்டும் தாம் வாழப் போகும் போட்டியான உலகிற்கு ஏற்றவாறும் கல்வியினை தொடர வேண்டும்.
மாணவர்கள் கல்வி கற்கும்போது எவ்விதமான பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர் கொள்ளத் தயாராக இருத்தல் வேண்டும். நினைத்தால் எதனையும் சாதிக்கலாம். எமக்கிருக்கின்ற தனிப்பட்ட பிரச்சினைகளை தொடர்ந்து கூறிக்கொண்டு இருந்தால் ஒரு நாளும் எமது சமூகத்துக்கும் விமோசனம் கிடைக்காது. எதிர்காலத்திலும் இச்சமூகம் இதே நிலையில் வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை உருவாகும் என்பதில் ஐயமி ல்லை.
இன்று பிரச்சினைகள் நடைபெறும் பிரதேசங்கள் கூட சிறப்பான பெறுபேற்று அடைவுகளை பெறுவதை நாம் காண்கின் றோம். எனவே அப்பிரதேசங்களோடு ஒப்பிடும்போது எமக்கு ஓரளவு வசதிகளும் வள ங்களும் கற்றலுக்கு கிடைத்துள்ளன. இவ ற்றை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் எம்முடைய பெறுபேறுகளை அதிகரித்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இவற்றிற்கு பாடசாலை மட்டத்தில் மட் டும் முயற்சி செய்தால் பலனில்லை. மாண வர்களும் தங்களுடைய முழுமையான பங் களிப்பைச் செய்ய வேண்டும். சினிமா வில் வருவது போன்று பாடசாலை வாழ் க்கையை அமைத்துக் கொள்ள முடியாது. பெருந்தோட்ட பெற்றோர்களும் மாணவர் களும் கிடைத்துள்ள இந்த இலவச கல்வியின் சம வாய்ப்புக்களை சரிவர பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பாடசாலை வாழ்க்கையானது சிலருக்கு கசப்பாக இருப் பதற்கு காரணம் சிலரின் கற்றலில் ஆர்வம் இன்மையே ஆகும். இந்த பிரச்சினை எந்த வடிவத்தில் வந்தாலும் கற்றவர்கள் மனம் தளரக்கூடாது. ஆகவே எதிர்கால வாழ்க்கை க்கு தேவையான விடயங்களை ஆர்வத்து டன் தேடிப்படிக்க வேண்டும். விடா முய ற்சியுடனும் எதையும் சாதிக்கக் கூடிய மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் படித்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...