Headlines News :
முகப்பு » » கொஸ்லாந்த அனர்த்தம் மலையகத்தை அவலமாக்குமா? - அருட்திரு மா. சத்திவேல்

கொஸ்லாந்த அனர்த்தம் மலையகத்தை அவலமாக்குமா? - அருட்திரு மா. சத்திவேல்


மலையக பண்டரவளை நகருக்கு அண்மையில் கொஸ்லாந்த மீரியபத்த தேயிலை தோட்டமும் லயன் வீடுகளும் மக்களோடு முற்றாகவே மண்ணில் புதையுண்டு உள்ளன. 2009 ம் ஆண்டு தமிழ் மக்கள் பாரிய இனஅழிவை சந்தித்த பின்னர் மலையக தமிழ் மக்களாக சமூக அழிவை சந்தித்து இருக்கின்றனர். இறந்தோர் தொகை 300 அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. உயிர் தப்பியோர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிள்ளைகளை இழந்த பெற்றோர் ,பெற்றோரை இழந்த பிள்ளைகள் , குடும்பத்தோரை இழந்த உறவுகள் , எல்லாவற்றையும் இழந்து அவல நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை அனர்த்த்தால் மக்கள் மண்ணில் புதையுன்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் ஊடகங்களின் உடனடி செய்தி. இயற்கையின் சீற்றம் என இன்னுமொரு செய்தி. ஆனால் இவ்வாறான மண்சரிவு ஏற்படும் இடம் என அடையாளபடுத்தப்பட்டடும் தோட்ட நிர்வாகமும் அவர்களது கம்பனிகளும் இவர்களை வேறு பாதுகாப்பான பிரதேசங்களில் வீடுகள் அமைத்து ஏற்கனவே குடியேற்றாதது ஏன்? அதற்கான திட்டம் இல்லாதது ஏன்? திட்டம் இருந்திருந்தால் நிறைவேற்ற காலம் தாமதமானது ஏன்? இதற்கு காரணமானவர்கள் யார்? இக்கேள்விகளுக்கு உடனடி பதில் இல்லை. இம்மக்கள் இயற்கை அனர்த்தத்தால் மரணமடைந்தார்களா? அல்லது அதிகார தரப்பினரின் கவலையீனத்தால் கொல்லப்பட்டார்களா? விசாரணை நடக்குமா? விசாரணை ஆனைக்குழு அமைக்கப்படுமா? கொல்லப்பட்டோர் தொடர்பாக இந்நாட்டில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளிவருவதில்ல. ஊதாரணமாக வெலிவேரிய சம்பவம் மற்றும் கட்டுநாயக்க  ஒய்வூதிய போராட்டம் தொடர்பாக நடந்த விசாரணை அறிக்கைகளை குறிப்பிடலாம். பாதிக்கப்பட்ட சிங்கள மக்களுக்கே இவ்வாறான நிலை என்றால் 200 வருடங்களாக அரசியல் சமூக அநாதைகளாக வாழும் மலையக மக்களுக்கு என்ன கதியோ?
மேலும் அனா;த்தங்கள் ஏற்படலாமென மலையகத்தின் பல பகுதிகள் அடையாளபடுத்தபட்டுள்ளன. பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகின்றது. ஆண்டாண்டுகாலமாக உழைத்து வாழ்விலே தேய்ந்துபோன மக்கள் எங்கு போவாh;கள்? எவ்வாறு போவார்கள் ? இதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளனவா? சொந்தக்காணியோ வீடோ இல்லாதவர்கள் இவர்களி;ன் உறவுகளும் சொந்த பந்தங்களும் அநாதை சமூகமாக நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றனர். 

இது மலையகத்தின் ஒட்டுமொத்த அடிப்படை மனித உரிமைப்பிரச்சினை. அரசியல் பிரச்சினை. அரசுக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கின்ற மலையக கட்சிகள் , பாரளுமன்றத்தில் 2015 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்தொடர்பாக விவாதம் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் பாரளுமன்றத்தில் கேள்வியெழுப்புமா? கடந்தவாரம் பாராளுமன்றத்pல் காணிதொடர்பாக விவாதம் நடைபெற்றபோது மலையகம் தொடர்பாக கதைப்பதற்கு எந்தவொரு மலையக பிரதிநிகளும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லையே? இது ஏன்? மலையக மக்களின் வாக்கு மட்டும் வேண்டும், அவர்களின் பிரச்சினையை வேறுயாராவது  கதைக்வேண்டும் என்ற மனப்பாண்மையா? (பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினாராம்) அல்லது தமக்கு கிடைக்கும் சலுகைகள் இல்லாமல் போய்விடும் என்ற பயமா?

இதைவிட இண்னுமொரு முக்கியமான விடயம் நடப்பு ஆட்சியாளர்களின் National Physical Plan 2030 2030  திட்டத்தில் முழுமலையகமும் அபிவிருத்தி எனும் பெயரில் உல்லாச புரியாக்கப்படவுள்ளது. அதற்காண திட்டங்கள் ஏற்கனவே தீட்டப்பட்டுள்ளன. இந்த அனர்த்த சந்தர்ப்பத்தை அரசு பாவித்து தாம் விரும்பிய பெரும்தோட்டங்களை ஆட்சியாளர்கள் மூடலாம். தாம் திட்டமிட்டபடி மக்களை தமக்கு இசைவான வேறு பிரதேசங்களில் குடியேற்றலாம். இதுவும் அபிவிருத்தி பாதுகாப்பு எனும் போர்வையில் நிறைவேற்றப்படும் இன அழிப்பே. தற்போதைய அனர்த்தம் நல்லதொருவாய்ப்பை ஏற்படுத்திகொடுத்துள்ளது.
மலையகமக்களின் தனித்துவ மிக்க அரசியல் சமூக அபிவிருத்தில் அக்கறை கொண்டவர்களும் அமைப்புகளும் மலையக சமூக நலன் கருதி ஒன்றித்து இயங்கினால் மட்டுமே மலையத்தின் விடிவை நோக்கி பயணிக்கலாம். சிவில் சமூகம் ஒண்றித்து இயங்குவதன் மூலம் மலையக அரசியல் கட்சிகளை மலையகத்தின் தேசிய அரசியலை நோக்கி நகா;த்தமுடியும்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates