2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நுவரெலியா பிரதேச சபையினால் பல வேலைத்திட்டங்களை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் வாசகர்களை ஊக்கமூட்டும் வகையிலும், எமது பிரதேச மாணவர்களுக்கு தரமான புத்தங்களை பெற்றுக்டிகொடுக்கும் நோக்கிலும், விஷேட விலை கழிவுகளுடன் கொள்வனவுகளை மேற்கொள்வதற்காக பிரபல்யம் வாய்ந்த புத்தக பிரசுரிப்பாளர்களான பூபாலசிங்கம் புத்தக சாலை மற்றும் சரசவி புத்தக சாலை இரண்டினையும் ஒன்றிணைத்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் போன்ற மூன்று மொழி அடங்களாக மாபெரும் புத்தகக்கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 2014.10.13ம் திகதி தொடக்கம் 2014.10.16ம் திகதி வரை மு.ப 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 வரை கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய மண்டபத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உங்களுக்கும், உங்கள் நிறுவனத்திற்கு, பாடசாலைகளுக்கு தேவையான புத்தகங்களை மலிவு விலையில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தலைவர்
நுவரெலியா பிரதேச சபை
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...