லோறன்ஸ் |
மலையக தமிழ் மக்களையும் இணைத்துக்கொண்டு,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செயல்பட வேண்டுமென்று
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருப்பதானது மலையக தமிழ் மக்களின் பிரச்சினையிலும்
இந்தியா அக்கறையோடிருப்பதை புலப்படுத்துகிறது என தெரிவித்த மலையக மக்கள் முன்னணியின்
செயலாளர் நாயகம் அ. லோறன்ஸ் , இந்த சூழலை மலையக
தலைமைகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, மலையக
தமிழ் மக்களின் பிரச்சினையையும் இலங்கையின் இனப்பிரச்சினையின் ஒரு சட்ட பூர்வமான
பங்குதாரர் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கவேண்டுமெனவும்
குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது
அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு
தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், இந்திய பிரதமர்
நரேந்திர மோடியை சந்தித்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவிடம், இந்திய பிரதமர் இந்தியா நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை தமிழர் பிரச்சினையில்
ஈடுபாட்டை காட்டும் என்ற வகையில் பிரஸ்தாபித்திருப்பது ஒரு முன்னேற்றகரமான விடயமாகும்.
இந்த நிலைப்பாட்டை பயன்படுத்தி, இலங்கையின் இனப்பிரச்சினையை
தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்க வேண்டும்.
இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடி இலங்கையிலுள்ள ஏனைய தேசிய இனமான மலையக தமிழ் மக்களையும்
முஸ்லிம் மக்களையும் இணைத்துக்கொண்டு, தமிழ்த்தேசிய
கூட்டமைப்பு செயல்பட வேண்டுமென்று குறிப்பிட்டிருப்பது அதுவும் மலையக தமிழ் மக்கள்
தொடர்பாக குறிப்பாக சுட்டிக்காட்டியிருப்பது, மலையக தமிழ் மக்களின் பிரச்சினையிலும் இந்தியா அக்கறையோடிருப்பதை
கோடிட்டு காட்டுவதாக அமைகின்றது.
ஆகவே, இந்த சூழலை மலையகத்திலுள்ள கட்சிகளும், அதன் தலைவர்களும் பயன்படுத்தி, மலையக தமிழ் மக்களின் பிரச்சினையையும், இலங்கையின் இனப்பிரச்சினையில் மலையக தமிழ் மக்களும் ஒரு சட்ட பூர்வமான
பங்குதாரர் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கவேண்டும்.
இவ்விதமான சந்தர்ப்பங்களை பயன்படுத்த மலையக தலைமைகளும், மலையக தமிழ் மக்களும் தவறுவார்களானால் ஒரு வரலாற்று தவறை
விட்டவர்களாகவே கணிக்கப்படுவர் என்றார்
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...