நேற்று ஸி.வி நூற்றாண்டு மலரொன்ன்றில் எனது கட்டுரையை பிரசுரிப்பது தொடர்பில் உரையாடிய நண்பருடன்(தொலைப்பேசியில்) தவிர்க்க முடியாத வகையில் ஸி.வியின் பெயரை எவ்வாறு எழுதுவது என்பது தொடர்பான விவாதத்திற்கு செல்லவேண்டியதாயிற்று. சி என்ற எழுத்துக்கு பதிலாக ஸி என்ற எழுத்தை உபயோகித்தால் இதுவரை ஸி.வி பற்றி எழுதியவர்களை குறிப்பாக சாரல் நாடன் போன்றவர்களை நிராகரிப்பதாக அமையாதா என்றார்.அந்த நண்பர் யார் என்பது இங்கு முக்கியமாதல்ல. ஆனால் ஸி.வியின் ஆய்வு தொடர்பில் இடம்பெற்றுள்ள தவறுக் குறித்து சுட்டடிக்காட்ட வேண்டியுள்ளது.
ஸி.வி தாம் எழுதிய அனைத்து நூல்களிலும் எழுத்துக்களிலும் தமது பெயரை ஸி.வி வேலுப்பிள்ளை என்றே உபயோகித்துள்ளார். ஆனால் இதுரையிலாக அவர் பற்றி வெளிவந்த எழுத்துக்களில் சி.வி.வேலுப்பிள்ளை (ஸி என்ற எழுத்துக்கு பதிலாக சி என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது) என்றே உபயோகிக்கப்பட்டு வருகின்றது. ஒரு எழுத்தாளரின் பெயரை மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்பதை ஆய்வு விதிமுறைகளையும் நாகரிகத்தையும் தெரிந்தவர்களுக்கு புரியும். இவ்விடயம் பாரிய விளைவுகளை ஏற்படுத்த வில்லையாயினும் அத்தவறு தொடர்வது ஆய்வு நாகரிகம் அல்ல. ஆய்வும் தேடலும் என்பது ஒரு குட்டையில் முடங்கிய நீரல்ல. அது தொடர்ந்தும் தமது தவறுகளை திருத்தி வளரக் கூடியது. எதுவுமே முடிந்த முடிபல்ல. நண்பர் மல்லியப்புச் சந்தி திலகர் தொகுத்த மாவலி(ஸி.வி. சிறப்பிதழில்) சில இடங்களில் சி.வி என பதிவுசெய்யப்பட்டிருப்பினும் பல இடங்களில் ஸி.வி என சரியாகவே கவிஞரின் பெயர் பதிவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே பாக்கியா பதிப்பகத்தின் வெளியீடான ஊற்றுக்களும் ஓட்டங்களும் என்ற நூலில் கவிஞரின் பெயர் ஸி.வி. வேலுப்பிள்ளை என சரியாகவே பிரசுரிக்கப்பட்டிருந்தது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...