Headlines News :
முகப்பு » » ஊவா தேர்தல் முடிவுகள்: அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒரு கண்ணோட்டம் - எம்.எம்.ஏ.ஸமட்

ஊவா தேர்தல் முடிவுகள்: அரசியல் கட்சிகளுக்கிடையிலான ஒரு கண்ணோட்டம் - எம்.எம்.ஏ.ஸமட்


6ஆவது ஊவா மாகாண சபைத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்திருக்கிறது. ஊவா மாகாணத்தின் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலிருந்து மொத்தமாக 34 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இரு மாவட்டங்களையும் சேர்ந்த 942,730 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.

பதுளை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பி னர் களைத் தெரிவு செய்வதற்காக 609,966 வாக்கா ளர்களும் மொனராகலை மாவடடத்திலிருந்து 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 332,764 வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
இருந்தபோதிலும், கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலினூடாக பதுளை மாவட்டத்திலிருந்து 21 உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

2013ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம் மொனராகலை மாவட்டத்தின் சனத்தொகையானது 448,194 ஆகவும் பதுளை மாவட்டத்தின் சனத்தொகையானது 811,225 ஆகவும் இருந்ததன் காரணமாக இரு மாவட்டங்களினதும் சனத்தொகை வளர்ச்சி வித்தியாச அதிகரிப்பின் காரணமாக மொனராகலை மாவட்டத்திற்குக்கு 3 ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டது.

எது எவ்வாறு இருந்த போதிலும், அரசியல் கட்சிகளினதும் அவற்றின் நடவடிக்கைக ளினதும் திருப்தியும் அதிருப்தியும் தொடர்பான மக்கள் தீர்ப்பு ஒரே மாதிரி அமையாது என்பதை நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் நன்கு புலப்படுத்துகின்றன.

அந்தவகையில், கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆவது ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற மொத்த வாக்குகளிலும் பார்க்க நடந்து முடிந்த 2014 ஊவா மாகாணசபைத் தேர்தலில் அக்கட்சி கணிசமான வாக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

தேர்தல் திணைக்களத்தின் தேர்தல் முடிவு களின் பிரகாரம் கடந்த 2009 மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஊவா மாகாணத்தின் இரு மாவட்டங்களிலுமுள்ள சகல தேர்தல் தொகுதிகளிலும் பெரும் வெற்றியீட்டியது. ஆனால், இம் முறை நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் 3 தொகுதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பறிகொடுத்துள்ளதை காணமுடிகிறது.

2014 மற்றும் 2009ஆம் ஆண்டுகளுக்கான ஊவா மாகாண சபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதுளை மாவட்டத்திலுள்ள 9 தேர்தல் தொகுதிகளிலும் மொனராகலை மாவட்டத்திலுள்ள 3 தேர்தல் தொகுதிகளிலும் பெற்ற வாக்குகளின் விபரம் வருமாறு:

இவ்விரு ஆண்டுகளிலும் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை 2009ஆம் ஆண்டில் ஆதரித்த வாக்காளர்களில் கணிசமான தொகையினர் நடந்து முடிந்த 2014ஆம் ஆண்டுக்கான ஊவா  காண சபைத் தேர்தலில் ஆதரிக்கவில்லை என்பது புலப்படுகிறது.

இவ்வாறே 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்காத பல வாக்காளர்கள் இத்தேர்தலில் இக்கட்சியை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். 2014 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற வாக்குகளை இம்மாகாணத்தின் இரு மாவட்டங்களிலும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இவ்விரு மாகாண சபைத் தேர்தல் முடிகளின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சி 2009 ஆண்டை விடவும் 2014ஆம் ஆண்டில் பலம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

இவ்விரு மாவட்டங்களினதும் 12 தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த 2009ஆம் ஆண்டை விடவும் நடந்து முடிந்த 2014ஆம் ஆண்டுக்கான ஊவா மாகாண சபைத் தேர்த லில் கணிசமான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. அது தவிர, ஹாலிஎல, பதுளை மற்றும் வெலிமட ஆகிய தேர்தல் தொகுதிகளில் ஐக்கி தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இவ்வெற்றியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இலங்கையின் பெரும்பான்மை இன அரசியல் கட்சிகளின் வரிசையில் மக்கள் விடுதலை முன்னணி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருவதையும் அதன் வளர்ச்சியையும் இம்மாகாண சபை முடிவுகள் புடம்போட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி கடந்த தேர்தலை விடவும் இத்தேர்தலில் பலம்பொருந்தியுள்ளதை தேர்தல் முடிவுகள் சொல்லி நிற்கின்றன. அதற்கமைய இவ்விரு ஆண்டுகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி பெற்ற வாக்குகளை ஒப்பிடுகையில், மக்கள் விடுதலை முன்னணியும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தோ்தலில் பெற்ற வாக்குகளை விட நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஒப்பீட்டவில் இரு மாவட்டங்களினதும் 12 தொகுதிகளில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.


இந்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சமூகத்திற்காகவா அல்லது அரசியல் அழுத்தங்களின் காரணமாகவா கூட்டிணைந்தன என்ற கேள்வியை முஸ்லிம்கள் எழுப்பிக்கொண்டிருக்கையில், கடந்த 2009ஆண்டில் நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸ் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச்சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டது.

2009ஆம் ஆண்டில் பதுளை மாவட்டத்தின் 9 தேர்தல் தொகுதியிலும் மரச்சின்னத்தில் போட்டியிட்டு மொத்தமாக 4121 வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிட்டு 5045 வாக்குகளையே பெற்றுள்ளன. ஆக 924 வாக்குகளை அதிகப்படியாக பெறுவதற்காக இவ்விரு கட்சிகளும் கூட்டிணைந்தனவா அல்லது அரசியல் அழுத்தங்களின் பின்னிணயிலா என்ற முஸ்லிம் மக்களின் கேள்விக்கான விடையை மக்களே தீர்மானித்துக்கொள்வர் என முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் கூட்டாகவும் ஊவாக மாகாண சபைத் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட வாக்குகளை அறிவதும் அவசியமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இரு கட்சிகளினதும் கூட்டணியும் பெற்றுக்
்கொண்ட வாக்குகள்:

ஆக இத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் வாக்கு வரிசைகள் அதிகரித்தும் குறைந்தும் காணப்படுவதை இத்தரவுகளிலிருந்து அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற 5ஆவது ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 418,906 வாக்குகளைப் பெற்று 25 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் இக்கட்சி மொத்தமாக 349,906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதன்படி நோக்குகின்றபோது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 69,000 வாக்காளர்களை இழந்துள்ளதுடன் 6 ஆசனங்களையும் தவறவிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியானது 129,639 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. ஆனால் 2014க்கான இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 274,773 வாக்குகளைத் தனதாக்கிக் கொண்டு, 13 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஆக 145,134 அதிகப்படியான வாக்குகளை 2009இலும் பார்க்க 2014இல் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுள்ளதை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை, 2009ஆம் ஆண்டில் 14,634 வாக்குகளைப் பெற்று ஒரு ஆனத்தை தனதாக்கிக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 36,580 மக்கள் வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை இக்கட்சியும் மக்கள் ஆதரவைப் பெற்றுவருவதைக் காணமுடிகிறது. கடந்த 5வது ஊவா மாகாண சபைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் 21,946 வாக்குகளை மக்கள் விடுதலை முன்னணி பெற்றுள்ளது.

இதுதவிர, கடந்த 2009இல் தனித்துப்போட்யிட்டு 9,227 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை பதுளை மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது. இம்முறை மலையக மக்கள் முன்னணி இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைத்து போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 19 உறுப்பினர்களில் 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 13 உறுப்பினர்களில் ஒருவருமாக 4 மலையகத் தமிழ் உறுப்பினர்கள் ஊவா மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எந்தவொரு கட்சியிலுமிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினர் தெரிவு செய்யப்படவில்லை என்பதுகவலையளிக்கும் விடயமாகும்.

ஒட்டுமொத்தமாக இந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் 682,797 அங்கீகரிக்கப்பட்ட வாக்குகளில் மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 140,840 வாக்குகளும் 8 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 77,065 வாக்குகளும் 5 ஆசனங்களும் கிடைத்துள்ளன. அத்துடன், மக்கள் விடுதலை முன்னணிக்கு 15,985 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறு பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்புக்கு 209,056 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் 9 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 197,708 வாக்குகளும் 8 ஆசனமும் கிடைத்துள்ளதுடன் மக்கள் விடுதலை முன்னணிக்கு 36,580 வாக்குகளும் ஒரு ஆசனமும் கிடைத்துள்ளது.

இருப்பினும், 2009ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஆதரித்த 69,000 மக்கள் இம்முறை ஆதரிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தஅரசியல் பிரமுகர்களின் செயற்பாடுகளில் கண்ட குறைபாடுகளாலும் மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்துள்ளதினாலும் இந்த 69ஆயிரம் வாக்காளர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லையா?

அல்லது பொது அபிவிருத்திகளுக்கு அப்பால் தனிநபர் வாழ்வாதரமும் பொருளாதாரமும் அபிவிருத்தி செய்யபட வேண்டும் அதற்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுதல் வேண்டும் என்ற செய்தியை மக்கள் தெரிவித்துள்ளனரா அல்லது மாற்றங்களால் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற செய்தியினை உணர்த்தியுள்ளனரா என அரசியல் கட்சிகள் சிந்திப்பது அவசியமாகவுள்ளது.

குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த கட்சிகளின் செயற்பாடுகள் சமூகம் சார் நடவடிக்கைகளுக்கு அப்பால் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ளாததன் நிமித்தத்தின் விளைவாக, பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியை பெருவாரியாக முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை. தன்னலத்திற்கு அப்பால் சென்று சமூகத்தின் நலனுக்கு முன்னுரிமை வழங்க முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் என்ற செய்தியையா இததேர்தலில் முஸ்லிம் அரசியல் கூட்டணிக் கட்சிகளுக்கு முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர் என்று ஆய்வு செய்யப்படுவதும் அவசியமாகவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூடடமைப்பு மொத்தம் 34 ஆசனங்களில் 19 ஆசனங்களைப் பெற்று மீண்டும் ஊவா மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதுடன், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை மக்கள் நிராகரித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பெற்றிபெறச் செய்துள்ளதாகவும் வெற்றிபெறச் செய்த மக்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தமது நன்றியையும் தெரிவித்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் மக்களின் தீர்ப்பு விடயத்தில் அரசியல் கட்சிகள் அக்கறை செலுத்துவது இன்றியமையாததே!

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates