இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தி யாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் அண் மையில் சந்தித்திருந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு. இச் சந்தர்ப்பத்தில் இலங்கையில் வாழ்ந்து வரக்கூடிய ஏனைய சிறுபான்மை சமூகங்களான மலையக மற்றும் முஸ்லிம் மக்களையும் இணைத்து கொண்டு இவ்வி டயத்தில் கூட் டமைப்பு செயற்பட வேண்டும் என்றும் குறிப்பாக இந் திய வம்சாவளி மலையக மக்களை தவிர்த்து தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணு வது கடினம் என்றும் மோடி தெரிவித்திருந்ததாக செய் திகள் வெளியாகியிருந் தன.
மலையக சமூகத்தை பொறுத்தவரையில் இது ஒரு நம் பிக்கை ஒளிக்கீற்றை தரும் செய்தியாகவே இருக்கின்றது, காரணம் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக் களின் சமூக மற்றும் பிரதேச ரீதியான வேறுபாட்டை இந் தியா தற்போதாவது விளங்கிக்கொண்டுள்ளதே என்பதே அது.
இலங்கையில் மலையக மக்கள் என்ற சமூகத்தினர் வாழ்ந்து வருவது பற்றியோ அவர்கள் தென்னிந்தியாவி லிருந்து வந்தவர்கள் போன்ற தகவல்கள் தமிழ் நாட்டி லுள்ள பலருக்கே தெரியாமலிருந்தது.
இறுதி யுத்த காலகட்டத்தில் உயிரிழந்தோர் இடம்பெயர்ந்தோரில் அதிகமானோர் இந்திய வம்சாவளி மக்களே.
இந்நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்து இந்திய மத்திய அரசாங்கத்தின் அக்கறை வர வேற்கக்கூடியதொன்று.
இலங்கை தமிழர்கள் என்றால் வடக்குகிழக்குவாழ் தமி ழர்கள் மட்டுமே என்ற மாயை இந்தியாவில் பல கால மாக இருந்து வந்ததொன்று. இதற்கு பிரதான காரணம் மலையக மக்கள் பற்றிய தகவல்கள் அருகிலுள்ள இந் தியா மற்றும் இந்த மக்களின் நேரடித்தொடர்பு கொண்ட மாநிலமான தமிழ்நாட்டில் கூட உரிய முறையில் கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் வடக்குகிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமது பிரதேச மக்கள் பற்றிய விடயங்களை சர்வதேசம் வரை கொண்டு சென்று விட் டனர்.
இவ்விடயத்தில் மலையக மக்களின் பிரதிநிதிகள் மேற் கொண்ட நகர்வுகள்தான் என்ன? உழைப்பதற்காக தென் னிந்தியாவிலிருந்து வந்த இந்த மக்களின் வாழ்வியல் பற்றி அக்கறைப்படவேண்டிய கடப்பாடும் பொறுப்பும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு உண்டு,அதை உரிய முறையில் எடுத்துக்கூறும் பணிகளை இவர்கள் கடந்த காலங்களில் செய்திருந்தால் தற்போது இந்த மக்கள் எதிர்நோக்கி வரும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்க இலங்கை அரசாங் கத்திற்கு இந்தியா அழுத்தங்களை கொடுத்திருக்கக்கூடும்.
ஆனால் தற்போது வரை அது இடம்பெறவில்லை.இவ் விடயத்தில் கூட்டமைப்பையும் குறை கூற முடியாது. காரணம் அவர்களுக்கு அவர்களது மண்ணும் மக்களுமே முக்கியம். ஆகவே அவ்விடயத்தில் அவர்கள்சர்வதேசத் திற்கும் விளங்கும் விதத்தில் பரப்புரைகளை செய்து வரு கின்றனர். ஆனால் மலையக மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தேசிய அளவிலேயே பேசப்படாது இருக்கும் போது எப்போது தமிழ் நாட்டையும் இந்தியாவையும் தாண்டி போகப்போகிறது?
தமது மண் பறிபோகிறது மக்களின் வாழ்வாதாரத் திற்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வேண்டும் என வடக்கு கிழக்கு பிரதிநிதிகள் சர்வதேசத்தின் காதுகளுக்கு தினந் தோறும் ஏதாவது ஒரு செய்தியை வழங்கி வரு கின்றனர், ஆனால் தான் குடியிருக்கும் நிலம் தனக்கு சொந்தமில்லை என்ற விடயம் கூட தொழிலாளிக்குத் தெரியாமலிருக்க வேண்டும் அப்படித்ததெரிந்தாலும் அது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்ற ரீதியில்தான் இங்கு அரசியல் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமை எப் போது மாறப்போகின்றது? ஒரு வேளை இந்தியா நேர டியாக தலையிட்டு மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து விட்டால் தமக்கு இங்கு 'அரசியல் " செய்ய முடியாது போய் விடும் என்ற பயமோ தெரியவில்லை.
இருப்பினும் இலங்கை தமிழர்கள் பற்றிய விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையை மலையக அரசியல் பிரதிநிதிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வட பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் இரண்டு இலட்சம் இந்திய வம்சாவளி மக்கள் கிட்டத்தட்ட மறக்கப்பட்டு விட்டனர். அவர்களின் நலன் மற்றும் தற்போது மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி புதிய பிரதமரிடம் மலையக அரசியல் பிரதிநிதிகள் சென்று பேச்சு நடத்தினால்தான் என்ன?
சிவலிங்கம் சிவகுமாரன் - முகநூல் வழியாக நன்றியுடன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...