நாடு முழுவதும் தற்போது வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தோட்டப்புறங்களில் வாக்காளர் பதிவை முறையாக மேற்கொள்வதற்கு மலையக தொழிற்சங்கங் கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தோட்ட மக்களுக்கு வாக்காளர் பதிவு விண்ணப்பங்களை பூர்த்தி செய்துகொடுத்து கிராம சேவகர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அண்மைக்காலங்களில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் கணிசமானோர் வாக்க ளிக்கும் சந்தர்ப்பங்களை இழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
தோட்ட மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தும் அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதேவேளை,அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த விடயத்தில் மக்களுக்கு உதவுவதில்லை. ஆனால், தேர்தலின் பின்னர் மக்கள் எம்மை ஏமாற்றிவிட்டனர். எமக்கு வாக்களிக்கவில்லை என்று மக்களை குறை சொல்கின்றனர் ஆனால், இவர்கள் தேர்தலுக்கு முன்னர் மக்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்று கேட்டால் அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
மலையகத்தில் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமானால். வாக்காளர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக தோட்டப்புறங்களில் வாக்காளர் பதிவு இடம்பெறுவதில்லை. வாக்காளர்கள் பதிவு செய்யப்படும் காலங்களில் கிராம சேவகர்களினூடாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டபோதும் அவை பூர்த்தி செய்யப்பட்டு கிராம சேவகர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை.
சில இடங்களில் தமிழ் கிராம சேவையா ளர்கள் குறைவாக காணப்படுவதும் இந்நிலைமைக்கு காரணமாக உள்ளது. உதாரணமாக நுவரெலியா மாவட்டத்தில் சுமார் 1,00,000 மக்களைக் கொண்ட ஹங்குரான்கெத்த தேர்தல் தொகுதியில் 131 கிராம சேவகர்களும், 1,14,000 மக்களைக் கொண்ட வலப்பனை தேர்தல் தொகுதியில் 121 கிராம சேவகர்களும், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் 1,30,000 மக்களைக் கொண்ட கொத்மலை தேர்தல் தொகுதியில் 99 கிராம சேவகர்களும், 2,11,000 மக்களைக் கொண்ட நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 67 கிராம சேவகர்களுமே பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சில இடங்களில் வாக்காளர் பதிவு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படு வதில்லை. அவ்வாறு விநியோகிக்கப்பட்டா லும் அவை மீள சேகரிக்கப்படுவதில்லை. இதுவும் தற்போது வாக்காளர்களின் எண்ணி க்கை குறைந்துவருவதற்கு காரணமாக இரு க்கின்றது. வாக்களிக்கும் வயதினை எய்தியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருட மும் அதிகரித்து வருகின்றபோதும் அவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் சில கிராம சேவகர்கள் திட்டமிட்டு தோட்ட மக்களின் வாக்குரிமையை குறைத்து வருகின்றனர். தற்போது மலையகத்தின் சனத்தொகை 1.7 மில்லியனாகும். இவை அதிகரிக்கப்படுமானால் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்தால் தோட்டமக்களுக்கான அபிவிருத்திகளும் அதிகரிக்கும். அபிவிருத்திகள் அதிகரித்தால் தோட்ட மக்களின் வாழ்வும் சுபீட்சமடையும்.
எனவே, மலையக மக்கள் வாக்களிக்கவில்லை, உணர்வற்றவர்கள் நன்றி இல்லாதவர்கள் என்றெல்லாம் கூறிவருகின்ற அரசியல்வாதிகள் மலையக மக்களின் வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அதேவேளை மக்களுக்கு வாக்குரிமைபற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் போதிய விளக்க மின்மையும் இதற்கு ஒரு பிரதான காரணமாக காணப்படுகின்றது. தேர்தல் கால ங்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக் கும் வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாததினால் வெறுப்படைந்த மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதிலும் அக்கறை கொள்வதில்லை
தற்போது பிரதிநிதித்துவம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்ற எண்ணத்தில் சிலர் காணப்படுகின்றனர். இந்த நிலையில் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு முறையாக விளங்கப்படுத்தவேண்டும். பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் செயல்களில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் விலகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் வாக்குகளை முறையாக உணர்வுடன் அளிக்க முயற்சிப்பார்கள் அதேவேளை வாக்காளர்களாக பதிவுசெய்துகொள்ள ஆவணங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன இல்லாமையும் வாக்காளராக பதிவு செய்துகொள்வதில் பின்னடைவு ஏற்படக் காரணமாகும். அதனையும் பெற்றுக்கொள்ள பிறப்பு அத்தாட்சி பத்திரமும் இல்லை. இவ்வாறு ஆவணங்களில் உள்ள குறைபாடுகளும் (எழுத்துப்பிழை, பெயர் மாற்றம்) காரணமாகும். இதனையும் நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடி க்கை எடுக்க வேண்டும்.
மலையகத்தில் தமிழ்மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் தமிழ் கிராம சேவகர்கள் நியமிக்கப்படவேண்டும் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பங்களை வழங்கி அவற்றைப் பூர்த்திசெய்து கொடுக்கவேண்டும். விண்ணப்பங்கள் பூர் த்தி செய்யும்போது பெரும்பான்மையின உத்தியோகஸ்தர்கள் தமிழ்மொழியை பேச முற்படும்போது, அதனை அம் மக்கள் தெளி வாக விளங்கி கொள்ளாத அவ்விடத் திலும் பிரச்சினை ஏற்படுகின்றது இங்கு மொழி ரீதியாகவும் மக்கள் பாதிப்படைகின்றனர். இதனால் வாக்காளர் பதிவுகளில் பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது.
அதேநேரம் தொகுதிவாரி தேர்தல்முறை அறிமுகப்படுத்தப்படுமானால் மலைய கத் தில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கப் படும் பட்சத்தில் மாத்திரமே பிரதிநிதித்து வத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என் பதை கவனத்தில் கொள்ளவேண்டும். வாக் குரிமை என்பது எமக்குள்ள உரிமைகளில் மிக முக்கியமானதொன்றாகும். தோட்டங்களி லிருந்து வெளிநாடு செல்பவர்களின் எண் ணிக்கை தற்போது நாளுக்குநாள் அதிகரி த்து வருகின்றது. இந்நிலையும்கூட வாக் காளராக பதிவு செய்வதுமுதல் அதனை பாதுகாத்துக்கொள்வது வரையில் பல பிரச் சினைகளை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது.
எனவே, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பதிவு நடவடிக்கையில் மலையக அரசியல் கட்சிகளும் தோட்ட மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன்மூலம் மலையக பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதிகரித்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்குமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி 08.06.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...