தலவாக்கலை தழிழ் மகா வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
தலவாக்கலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினால் இன்று வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்குரிய இடத்தில் லிந்துலை நகரசபையினால் வர்த்தக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று காலை முதல் தலவாக்கலை தமிழ் வித்தியாலய மாணவர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 4000கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்ததனர்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்குரிய இடத்தில் தலவாக்கலை லிந்துலை நகரசபையினால் வர்த்தக கட்டிடங்கள் அமைக்கபட்டு வருவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் குறித்த படசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பாடசாலை கட்டிடம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு உடனடியாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வருகைதந்து தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோஷமிட்டனர்.
அமைச்சர் வரும்வரை தங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும்மென எச்சரித்த ஆர்ப்பாட்டக்கார்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தினால் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் போக்குவரத்து பலமணி நேரம் தடைபட்டிருந்தது.
இதேவேளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம்- அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றனர்.
குறித்த கட்டடப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும்- இது குறித்து அடுத்து நடைபெறவுள்ள நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் உறுதியளித்தார்.
குறித்த காணி தலவாக்கலை பாடசாலைக்கு பெற்று கொடுக்கப்படுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...