பிக்கு ஒருவர் நையப் புடைக்கப்பட்டு அவரின் சீருடையை கழட்டி லுங்கி அணிவித்திருக்கிறார்கள் கிராமத்தவர்கள்.
கண்டி மாவட்டத்தில் பன்வில எனும் சிங்கள பிரதேசத்தில் கடந்த கடந்த 28 அன்று விகாரைக்குள் புகுந்த கிராமத்தவர்கள் அங்கிருந்த பொருட்களை உடைத்து வெளியில் எறிந்து பிக்குவையும் தாக்கி அருகிலுள்ள பஸ் தரிப்பிடத்துக்கு கொண்டுவந்து அவரது சீருடையை கழட்டி லுங்கியை அணிவித்து தூணில் கட்டிவைதிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 28 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நம்முடைய அவதானமெல்லாம் இது தான்.
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை தாக்குவதற்காக பொதுபல சேனாவோ, அப்பிரதேசத்தை சேர்ந்த பௌத்த சாசன சபையோ பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைக்கவோ, கூடியிருந்து தாக்கவோ இல்லை.
எந்தவொரு அமைப்பும் சுவரொட்டி அடிக்கவுமில்லை. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கவுமில்லை.
மூன்றாவது நாளாகியும் பொது பல சேனா அங்கு இன்னும் கூட்டம் நிகழ்த்தவும் இல்லை. பிரபல பாடகர் மதுமாதவ அரவிந்த வந்து இனவாத பாடல் பாடி எவரயும் உசுப்பெத்தவுமில்லை. வெளியிடங்களிலிருந்து சண்டியர்கள் இறக்கப்படவுமில்லை. ஞானசார கூட அன்கு வந்து தாக்கியவர்களில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் கோவிந்தா கோவிந்தா என்று மிரட்டவுமில்லை. (ஞானசார அளுத்கம கூட்டத்தில் “தாக்கியவர்களின் கடைகளுக்கும் வீடுகளுக்கும் “அப சரனை” என்றது குறிப்பிடத்தக்கது – அந்த சொல் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லுக்கு நிகரானது).
பிக்குமார்களை அழைத்துக்கொண்டு முஸ்லிம் வீதிகளில் ஊர்வலம் போகவுமில்லை. சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்களை அழிக்கவுமில்லை, எவரையும் கொல்லவுமில்லை.
இனி ஒரு பிக்குவுக்கு இப்படி நேர்ந்தாலும் தர்கா, நகர், அளுத்கம, பேருவல, மக்கொன அனைத்துக்கும் நாங்கள் யார் என்று காண்பிப்போம்என்று கூறிய ஞானசார. ஒரு வீதியில் நடந்த தற்செயல் சம்பவத்தை இனவாத பக்கத்திற்கு திருப்பி பேரழிவை ஏற்படுத்திய ஞானசார; திட்டமிட்டு பலரால் நடத்தப்பட்ட இந்த சம்பவத்துக்கு என்ன சொல்லபோகிறார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு கலவரத்துக்கு எந்தவித காரணமும் தேவையில்லை. இடமும், திகதியும் மட்டுமே நிர்ணயிக்கப்படவிருந்தது. அளுத்கம வீதி தகராறு அதை நிர்ணயிக்க உடனடி வாய்ப்பைத் தந்தது அவ்வளவு தான்.
சிங்களத்தில் ஒரு பழமொழியுண்டு “பூசாரி; கோவிலில் மூத்திரமடிக்கக் கூட முடியும்”.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...