Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 09 (1ஆம் பாகம் முற்றும்) - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 09 (1ஆம் பாகம் முற்றும்) - இரா சடகோபன்

""இறந்திருக்க காணப்பட்டான் காரணம் தெரியவில்லை''
இலங்கை பெருந்தோட்ட வரலாற்றின் முதற் கட்டம் கோப்பிக் காலம். இலங்கையில் கோப்பித் தோட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து (1824களுக்குப் பின்னர்) அவற்றில் வேலை செய்ய பெருந்திரளான தொழிலாளர் தென்னிந்திய மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து இங்கு வந்தபோது, பாதையில் எவ்வளவு அல்லல்பட்டனர் என்பதை இதற்கு முன்பும் பார்த்தோம். இவர்களது  துன்ப, துயரங்களைப் பற்றிப் பேசி ஆறுதலளிக்க எவருமே  முன்வரவில்லை. இவர்கள் தம்முடன் சேர்த்து தமது மதம், கடவுளர்கள், கலை, கலாசார  விழுமியங்கள் என்பவற்றையும்  சேர்த்தே கொண்டுவந்தனர். தாம் தங்கியிருந்த இடங்களில் அரசமரம், ஆலமரம், வில்வமரம் போன்ற மரங்களுக்கடியில் கல்லொன்றை  வைத்து  தத்தமது இஷ்டதெய்வங்களின்  பெயர்களை அதற்குச் சூட்டி அத்தெய்வங்களிடமே தத்தமது துயரங்களை முறையிட்டனர். இவர்கள் மன்னாரிலிருந்து குருநாகல் வழியாக கண்டிக்கு அழைத்து வரப்பட்டபோது, மாத்தளையில் தடுப்பு முகாம் ஒன்றில் (கிதச்ணூச்ணவடிணழூ இச்ட்ணீ) ஒரு வார காலம் தடுத்து வைக்கப்பட்டு தொற்றுநோய்  பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். கொலரா மருந்துகளும், மலேரியா, அம்மை தடுப்பூசிகளும் போடப்பட்டன. இந்த  முகாம் இருந்த இடத்துக்கு சற்றுத்தள்ளி முன்பு தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட கொட்டகைகள் இருந்தன. ஆரம்பத்தில் இவ்விடத்தில் ஒரு வில்வ மரம் காணப்பட்டது.  அம்மரத்தின் அடியில் கல்லொன்றை நாட்டி அதனை மாரி அம்மனாகக் கருதி வழிபட்டு வந்தனர். அம்மை, பொக்குளிப்பான், வைசூரி முதலான  கொடிய நோய்களைத் தீர்க்க வல்ல சக்தி மாரியம்மனுக்கும், வேப்பிலைக்கும் உண்டென்று அவர்கள் பூரணமாக  நம்பினர். மேற்படி மரத்தடியில் கல்நட்டு  அன்று வணங்கிய மாரியம்மன் கோவிலே இன்று பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந்து மாத்தளை  ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானமாக புகழ்பூத்து  விளங்குகின்றது என்பதனை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இக்கோயில் 1824 களில்  வெறும்  மரத்தடி கோயிலாக இருந்து பின்னர் 1852ஆம் ஆண்டு சிறு கட்டிடமாக உருவானது என வரலாறு தெரிவிக்கின்றது. மேற்படி பழைய வில்வமரத்தின் பட்டுப்போன அடிமரம் இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்துக்கருகில் இப்போதும்  பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிலவேளை இதுவே இம்மக்களின்  முதலாவது  வழிபாட்டுத் தலமாக  இருந்திருக்கலாம்.

----

தேயிலை பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இந்திய வம்சாவளித் தமிழர்கள் தோட்டங்களில் நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினர். கோப்பிக் காலத்தில்  கோப்பி அறுவடை செய்வதற்காக மாத்திரம் வந்து போகும் பருவகாலத் தொழிலாளர்களாக மாத்திரமே இவர்கள் இருந்தனர்.
பெருந்தோட்டத்  தொழிலாளர் மத்தியில் 14 வகையான மரணங்கள் வழக்கமாக  நிகழ்கின்றன என்றும் ஏனைய சமூகத்தவர்களிலும் பார்க்க இவர்கள் மத்தியில் அதிக சதவீத மரணங்கள் நிகழ்வதாகவும் 1859ஆம் ஆண்டு ஏ.எம். பெர்கியூசன் தெரிவித்திருந்தார் (அ.ஆ. ஊழூணூஞ்தண்ணிண). பெர்கியூசன் கைநூல் (ஊழூணூஞ்தண்ணிண ஈடிணூழூஞிவணிணூதூ) அப்போது பிரபலமான தகவல் களஞ்சியமாக இருந்தது. இவர் தனது அறிக்கையில் 1837ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் பத்து இலட்சம் இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் அவர்களில் 2,50,000 பேர் கல்லறைகளில் சமாதியாகி விட்டனர் என்றும் தெரிவித்தார்.

நோயுற்ற தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்து அதிகாரிகளால் விரட்டப்பட்டனர் என்றும் அவர்கள் பாதையோரம் விழுந்து இறந்து  கிடந்தனர் என்றும் எந்த விசாரணையும் இன்றி அவர்கள் உடல்கள் வீசப்பட்டன என்றும் இது மிகப் பரிதாபகரமானது என்றும் அப்போது கிறிஸ்தவ கூலி மிஷன் (இடணூடிண்வடிச்ண இணிணிடூதூ ஆடிண்ண்டிணிண இஇஆ) அமைப்புக்குப் பொறுப்பாக  இருந்த அருட்திரு. செப்டிமஸ் ஹொப்ஸ் (கீழூதி. குழூணீவடிட்தண் ஏணிஞஞண்) "ஒப்சேவர்' பத்திரிகைக்கு எழுதினார். கோப்பித் தொழிலாளர் மத்தியில் நிகழ்ந்த  14 வகையான மரணங்களில் அதிக அளவில் நிகழ்ந்த மரணங்கள், கொலரா, மலேரியா, போதிய மருத்துவ வசதியின்மை, பிரசவத்தின்போது, கடுமையான காலநிலை,  பாம்புக்கடி என்பவற்றாலேயே ஏற்பட்டன. சுகவீனம்  காரணமாக  தோட்டத்தில் வேலை  செய்ய முடியாதவர்கள் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்விதம் சுகவீனமுற்றவர்கள் மருத்துவ வசதியின்றி பாதையோரங்களில் மரணித்தனர். இத்தகைய மரணங்களின்போது அதிகாரிகள் "இறந்திருக்கக் காணப்பட்டான். காரணம் தெரியவில்லை. (ஊணிதணஞீ ஞீழூச்ஞீ, ஞிச்தண்ழூ தணடுணணிதீண) என்று குறிப்பெழுதி இரண்டு தொழிலாளர்களைக் கொண்டு அவ்விடத்திலேயே குழிவெட்டி புதைப்பார்கள். அல்லது பள்ளங்களில் போட்டு மூடி விடுவார்கள். இவர்களின் மரணங்கள் பதிவாளருக்கு அறிவிக்கப்படாததால் எவ்வளவு பேர் இறந்தனர் என்பதைச் சரியாக அறிய முடியவில்லை.

இத்தகைய மரணங்கள் 17ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட கருப்பின அடிமைகள் மத்தியில் அதிகம் நிகழ்ந்தபோது எஜமானர்கள் சுகவீனமுற்ற அடிமைகளை கைவிடக்கூடாது என்றும் இத்தகைய மரணங்களுக்கு எஜமானர்கள் பொறுப்புக் கூற வேண்டுமென்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இரண்டு நூற்றாண்டின் பின்னர் இது இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர் மத்தியில் நிகழ்ந்த போது இந்த அநீதிக்கு  எதிராகக் குரல் கொடுக்க எவருமே இருக்கவில்லை.
ழூழூழூ

மலையகப் பெருந்தோட்ட மக்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு வளர்ச்சிப்படி நிலைகளைத் தாண்டி வந்துள்ளனர். இன்றுங்கூட ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடுகையில் மிகப் பின்தங்கியே காணப்படுகின்றனர்.  
இக்கால கட்டங்களில் இவர்களை பல பட்டப்பெயரிட்டு அழைத்து சமூகத்தில் ஓரங்கட்டி வைத்திருந்தனர். அத்தகைய பெயர்களை மீண்டும் சொல்வதற்கே கூச்சமாக உள்ளது. 

கூலிகள், வந்தேறு குடிகள், வடக்கத்தியான், கள்ளத் தோணி, இந்தியாக்காரன், கறுப்பன், நாடற்றவன், டி.ஆர்.பி. (கூ.கீ.க. 'கூழூட்ணீணிணூச்ணூதூ கீழூண்டிஞீழூணவடிச்டூ கழூணூட்டிவ') என்பன அவற்றுள் சில.
இவற்றுள் கூலி என்ற பெயரே நீண்ட காலம் நீடித்த பெயர். "கூலி' என்ற பெயரை புறந்தள்ளி "தொழிலாளர்' என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்க, முதல் மலையகத் தொழிற்சங்கத் தலைவர் என்று பெயர் பெற்ற கோ.நடேசய்யரால் கடுமையாகப்போராட வேண்டியிருந்தது.  

1917 களைத் தொடர்ந்து சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட கம்யூனிஷ, மார்க்சிய, சோஷலிசப் புரட்சிøய அடுத்து, மூன்றாம் உலக  நாடுகளில் சமத்துவம் கோரி போராட்டங்கள் நடைபெற்றன. இத்தகைய போராட்டங்களை இலங்கையில் இடதுசாரித் தலைவர்கள் முன்னின்று நிகழ்த்தினர். 1917 தொடக்கம் 1927  வரை இலங்கையின் முன்னோடித் தொழிற்சங்கத் தலைவர் ஏ.ஈ. குணசிங்கவுடன் இணைந்து கோ.நடேசய்யரால் தொழிலாளர்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். 

இவற்றில் துறைமுகத் தொழிலாளர் போõரட்டம், அச்சுத் தொழிலாளர் போராட்டங்கள்  பிரசித்தி பெற்றன. எனினும் ஏ.ஈ. குணசிங்கவின் சிங்கள பேரினவாதக் கொள்கையால் வெறுப்புற்ற கே. நடேசய்யர் அவருடன் பிரிந்து சென்று இந்திய தோட்டத் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்பதற்காக 1931ஆம் ஆண்டு இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற தொழிற்சங்கத்தை முதன் முதல் தோற்றுவித்தார்.

இக்காலத்தில் நகர்புறத்தைச் சேர்ந்த துறைமுக, ரயில்வே , அச்சக தொழிலாளர்கள் என்போர் தொழிலாளர்கள் என இனங்காணப்பட்டிருந்தனர். எனினும்  தோட்டத்öதாழிலாளர்களை பலரும் அங்கீகரிக்க மறுத்தனர். கே.நடேசய்யர் இந்த அந்தஸ்தினை தோட்டத்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க சட்ட நிறுவன சபையிலும் இராஜ்ய சபையிலும் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. 

1942ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசர் சேர். பிரான்சிஸ் சோர்ட்ஸ் அவர்களின் முன்னிலையில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆறு தோட்டத் தொழிலாளர்கள் சி.ஏ.ஜி. போப் என்ற தோட்டத் துரையைக் கொலை செய்த குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டனர். அச்சமயம்  இவர்களை "கூலிகள்' என்று பிரஸ்தாபிக்கப்பட்டபோது, "கூலி' என்ற வார்த்தையை மன்றில் மனிதர்களை அழைக்கப் பயன்படுத்தக் கூடாது என்றும் "தொழிலாளர்' என்று அழைக்குமாறும் நீதியரசர் ஆவணங்களில் திருத்தம் செய்தார். அதனைப் பகிரங்கமாக  அறிவிக்கவும் செய்தார். என்றாலும்கூட "கூலி' என்ற வார்த்தை இப்போதும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.  

முதல் பாகம்  முற்றும்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates