Headlines News :
முகப்பு » » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) -அத்தியாயம் 02 - இரா சடகோபன்

கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) -அத்தியாயம் 02 - இரா சடகோபன்


சிவில் சேவையாளர்கள்
கோப்பித்தோட்ட சொந்தக்காரர்கள்
கோப்பி பெருந்தோட்டச் செய்கை ஆரம்பிக்கப்பட்ட போது  மலை நாட்டுச் சிங்களவர்களின் பெருந்தொகையான காணிகள் சுவீகரிக்கப்பட்டு ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. ஆனால், எந்த அளவுக்கு இவர்களது காணிகள் சுவீகரிக்கப்பட்டன என்பதை அறிய போதுமான ஆதாரங்கள் இல்லை.
காணிச் சுவீகரிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி தகுந்த ஆவண ரீதியான உரித்து (உறுதி) இருக்குமாயின் அவை சுவீகரிக்கப்படலாகாது என்ற ஏற்பாடு காணப்பட்டது. ஆனால் இக்காலப் பகுதியில் காணிச் சொந்தக்காரர்களில் எவ்வளவு  பேர் காணி உறுதி வைத்திருக்கக்கூடும் என்பது கேள்விக்குரியதே.
பெருந்தோட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே பிரிட்டிஷ் சிவில் சேவையைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் காணிகள் வழங்கியதுடன், அவர்கள் பல்வேறு பயிர்ச்செய்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆள்பதி பிரடரிக் நோர்த் சிவில் சேவையாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்துள்ளார். இதற்குக் காரணம் அப்போதைய சிவில் சேவையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சம்பளம் மிகக் குறைவானது என அவர் கருதியதாகும்.
ஆனால், ஆள்பதி தோமஸ் மெயிற்லன்ட் (1805  1811) இதற்கு மாறாக சிந்தித்தார். அவர் அரச சிவில் சேவையாளர்கள் இத்தகைய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது அரச சேவையை பாதிக்கும் என்றும், அக்கறைகளின் முரண்பாடு (இணிணழூடூடிஞிவ ணிழூ ஐணவழூணூழூண்வ) உண்டாக்கும் என்றும் கூறினார். இதனால் "நம்பிக்கைப் பொறுப்பு' உள்ள பதவிகளில் இருப்பவர்கள் காணி வாங்குவதும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் 1813ஆம் ஆண்டு பிரகடனம் ஒன்றின் மூலம் தடை செய்யப்பட்டது. எனினும், இத்தகைய தடை ஒருபோதும் அமுல்படுத்தப்படவே இல்லை. பார்ண்ர்ஸ் ஆள்பதிகூட தனது வர்த்தக நடவடிக்கைகளைக் கவனித்துக்கொள்ள ஜேம்ஸ் ஸ்டூவர்ட் (ஒச்ட்ழூண் குவதச்ணூவ) என்ற உதவியாளரை  சம்பளத்துக்கு அமர்த்தியிருந்தார். பின்னர் பார்ண்ஸ் ஆள்பதி ஓய்வு பெற்று இங்கிலாந்துக்கு சென்றபோது அவரது வர்த்தக நடவடிக்கைகள், சொத்துகள் பற்றி இங்கு கேள்வி எழுப்பப்பட்டு விவாதத்துக்குட்படுத்தப்பட்ட போது பார்ண்ஸ் இலங்கையில் இருந்த தனது வர்த்தக முயற்சிகளைக் கைவிட்டார்.
1845ஆம் ஆண்டு கவர்னராக இருந்த கெம்பெல் சிவில் சேவையாளர் மீது இருந்த மேற்படி தடையை சற்று இலகுவாக்கினார். அதன்படி 1845, பெப்ரவரி 1ஆம் திகதிக்கு முன்பு யாரும் காணிகள் வாங்கியிருப்பார்களாயின் அதனை சட்ட பூர்வமாக்கினார். எனினும் அவர்கள் தாமே தோட்டத்துரைமார் உத்தியோகத்தில் ஈடுபடக் கூடாதென்றும், பதவியுயர்வு, பென்சன் என்பன வழங்கப்படும் போது காணிச் சொந்தக்காரர்களல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
எனினும், இவற்றாலெல்லாம் பிரித்தானிய சிவில் சேவையாளர்கள் காணி வாங்குவது கட்டுப்படுத்தப்படவில்லை. இவர்களைத் தவிர பெருந்தொகையான தொழில்சார் நிபுணர்களும் இத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். 1847ஆம் ஆண்டு 50,000 ஏக்கர்களாக இருந்த கோப்பிச் செய்கை 1871ஆம் ஆண்டு 196,000 ஏக்கர்களாக அதிகரித்திருந்தது. 1840களில் 90,000 மெ.தொன்களாக இருந்த கோப்பி ஏற்றுமதி 1860களில் 939,000 மெ.தொன்களாக அதிகரித்தது. பிரித்தானியாவின் சனத்தொகையில் பெருந்தெகையானவர்கள் கோப்பிப் பானத்தை பிரியமுடன் அருந்தத் தொடங்கினர்.
ழூழூழூ

கோப்பிப் பொருளாதாரமும்
கோல்பு×க்  கமரன் சிபார்சுகளும்
இலங்கையின் பொருளாதாரம் ஒரு ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றமடைவதற்கு  கோல்பு×க்  கமரன் சிபார்சுகள் பிரதான காரணியாக அமைந்ததென்பது பலருக்குத் தெரியாது. இவர்களது அரசியல் சீர்த்திருத்தங்களை மட்டுமே பலரும் நன்கறிவர். இலங்கையின் அரசியல், நிர்வாகம், வருவாய்த்துறை, அரச நிறுவனங்கள் முதலான துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள 1829ஆம் ஆண்டு வில்லியம் கோல்பு×க் என்பவரும், நீதித்துறை தொடர்பில்  விதந்துரைகள் செய்ய 1830ஆம் ஆண்டு சார்ள்ஸ் கமரன் என்பவரும் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
அசோகா பண்டாரகே என்ற அரசியல் வரலாற்று ஆசிரியர் 1833ஆம் ஆண்டின் கோல் பு×க்  கமரன் சிபார்சுகளே இலங்கையின் நவீன பொருளாதாரத்தை வடிவமைக்கக் காரணமாக இருந்ததென்று கூறுகிறார். இதற்கு கோப்பிப் பயிர்ச்செய்கை மிக உதவியாக இருந்திருக்கின்றது என அவர் கருதினார். இதனால் இலங்கையின் 19ஆம் நூற்றாண்டு பொருளாதாரம் முற்றிலும் திசை திருப்பப்பட்டு விட்டது. ஆனால், கோல்பு×க்கும் கெமரனும் இலங்கையில் இருந்த போது கோப்பி இலங்கையின் பொருளாதாரத்தில் பிரதானமான  பங்கு வகிக்கவில்லை. இவர்களே கோப்பிப் பயிர்ச் செய்கையை தனியாருக்கு கொடுக்க வேண்டுமென்று கூறினர்.
கோல்பு×க் 1829 ஏப்ரல் 11ஆம் திகதி தொடக்கம் 14 பெப்ரவரி 1831 வரை இலங்கையில் இருந்தார். கமரன் 26 மார்ச், 1830இல் இலங்கை வந்து கோல்பு×க்குடன் திரும்பிச் சென்றார்.
இவர்கள் இருவரும் இவாஞ்சலிக்கல் மதத்தைச் சேர்ந்த லிபரல்வாதிகள். இலங்கைக்கு வரமுன் மொறீசியஸ் மற்றும் ஆபிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (இச்ணீழூ ணிழூ ஞ்ணிணிஞீ ஏணிணீழூ) ஆகிய நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு விதந்துரை செய்திருந்தனர். ஏற்கெனவே கோல்பு×க் இலங்கையில் இருந்த பிரித்தானிய இராணுவத்தில் 1805  1807 வரை கடமையாற்றி இருந்தார். அதனால் இலங்கையின் நிலைவரம் தொடர்பில் அவருக்கு ஏற்öகனவே ஒரு புரிந்துணர்வு இருந்தது. அதேபோல் இலங்கை பிரித்தானியாவின் ஏனைய காலனித்துவ நாடுகள் மத்தியில் ஒரு "மாதிரி' நாடாக விளங்கும் என்று நினைத்தார். "இலங்கையானது கிழக்காசியாவில் டொமினியன் அந்தஸ்து பெற்ற நாடுகளில் பிரித்தானியாவின் அபிலாசைகளை நிறைவேற்ற மிகப் பொருத்தமான நாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் செய்த சிபார்சுகளான சட்டசபை, அதன் உத்தியோக பற்றுள்ளதும், உத்தியோகப் பற்றற்றதுமான உறுப்பினர்கள், பிரதான அரச அலுவலர்களின் பேரவை (உதுழூஞிதவடிதிழூ இணிதணஞிடிடூ ணிழூ கணூடிணஞிடிணீச்டூ ழுழூழூடிஞிழூணூண்) நாடு 5 மாகாணங்களாக பிரிக்கப்பட்டமை, நீதித்துறையின் சுதந்திரம் என்பன நீண்டகாலத்துக்கு மாற்றப்படவில்லை.
கோல்பு×க் மீண்டும் பிரித்தானிய படையில் சேர்ந்து படைத்தளபதிகளில் ஒருவராக  உயர்த்தப்பட்டார். இவர் 1870ஆம் ஆண்டு தனது 83ஆவது  வயதில் மரணமடைந்தார். கமரன் 1875ஆம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு வந்தார். அப்போது  அவரது வயது 80. அவர் இங்கு வந்து கோப்பித் தோட்ட உரிமையாளரானார். இவரது மனைவி ஜூலியா மிகச் சிறந்த புகைப்படப் பிடிப்பாளராக விக்டோரியா சங்கத்தால் பாராட்டப்பட்டவர். கமரன் தனது 85ஆவது வயதில் நுவரெலியாவில் வைத்து காலமானார். இவருக்குச் சொந்தமõக இருந்த  கோப்பித் தோட்டமான "கெமரன் தோட்டம்' இப்போதும் அப் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகின்றது.
ழூழூழூ

5 சில்லிங்குகளுக்கு ஒரு ஏக்கர் காணி
இலங்கையின் கோப்பிப் பயிர்ச் செய்கையின் ஆரம்பத்துடன், இலங்கையில் வாழ்ந்த ஐரோப்பிய சமூகத்தினர் மத்தியில் "கோப்பிவிசர்' (இணிழூழூழூ ஆச்ணடிச்) பரவ ஆரம்பித்தது. கோப்பிப் பயிர்ச் செய்கை பற்றி ஒன்றுமே தெரியாத, பணம் வைத்திருந்த எல்லோரும் கோப்பித் தோட்டம் வாங்க படையெடுத்தனர்.
இதற்கு முக்கிய காரணம் கோல்பு×க் சீர்திருத்தத்தின் கீழ் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை தனியாருக்கு கொடுக்கத் தீர்மானித்தது தான். அப்போது ஆளுநராக இருந்த பார்ண்ஸ் கோப்பிச் செய்கையை தனியாரிடம் ஒப்படைக்க விரும்பாத போதும் அரசின் பணிப்புரையை அவரால் தடுக்க முடியவில்லை. எனவே, அரச காணிகள் கோப்பி பயிர் செய்ய விரும்புபவர்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக  வழங்கப்பட்டன. எனினும், எல்லாரும் அதில் ஈடுபடுவதைத் தடுக்கும் முகமாக 1836ஆம் ஆண்டு ஏக்கர் 5 சில்லிங்குகளுக்கு விற்கப்பட்டன. கவர்னர் பார்ண்ஸ் தொடங்கி உயர் இராணுவ அதிகாரிகள், மிஷனரிமார்கள், சிவில் உத்தியோகத்தர்கள் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு கோப்பித் தோட்டங்களை ஆரம்பித்தனர். இதற்கு முக்கிய காரணம் கோப்பிப் பயிர்ச் செய்கைக்கு அதிக முதலீடு, பராமரிப்பு, உரப்பாடனை, தொழிலாளர் என்பன அதிகமாகத் தேவையில்லை என்று பலரும் கருதியதாகும்.
ஆரம்ப கால கோப்பிச் செய்கையாளர்கள் சிறு அளவிலான தோலுரிக்கும் இயந்திரத்தையும், உள்ளோட்டைக் கழற்றி பிரித்து விதையை எடுப்பதற்கான மில் ஒன்றையும் பயன்படுத்தினர். அறுவடைக் காலத்தைத் தவிர ஏனைய காலங்களில் புல் வெட்டுவதற்கு மாத்திரம் சில தொழிலாளர்களை வைத்துக்கொண்டனர். தோட்டத்துக்கான உரத்தைப் பெற ஆடு, மாடுகளை வளர்த்தனர். அறுவடைக்கு மட்டுமே அதிக தொகை தொழிலாளர் தேவைப்பட்டனர்.
மேலும், கோப்பிப் பயிர்ச் செய்கைக்கு காணிகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு 1840ஆம் ஆண்டு 12ஆம் இலக்க  அரச காணிச் சுவீகரிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டத்தின்  பிரகாரம் யாருடையதும் உரிமையில் இல்லாத உரிமைகளை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியாத, ஏதும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத காணிகள் அரசால் சுவீகரிக்கப்பட்டன.
1840ஆம் ஆண்டு ஒரே நாளில் மாத்திரம் 13,275 ஏக்கர் காணிகள் அரசின் உயர் அதிகாரிகளுக்கு ஏக்கர் 5 சில்லிங்குகள் பிரகாரம் வழங்கப்பட்டன. அவை பின்வருமாறு

1. நீதிபதி டபிள்யூ.ஒ.கார் மற்றும் கப்டன் ஸ்கின்னர் (பெருந்தெருக்கள் ஆணையாளர்... 826 ஏக்கர்)
2. ஸ்டூவர்ட் மெக்கன்சி, ஆளுநர் 1,120 ஏக்கர்.
3. எப்.பி.நொரிஸ், நில அளவையாளர் நாயகம்.... 762 ஏக்கர்.
4. ஜி.டர்னர் (கண்டி அரச அதிபரும், உதவி இராஜாங்க செயலாளரும்... 2217 ஏக்கர்)
5. எச்.ரைட், கண்டி மாவட்ட நீதிபதி மற்றும் ஜி.பர்ட் ..... 1751 ஏக்கர்)
6. சேர்.ஆர் அர்புத்நோட், இராணுவ கமிஷனர் மற்றும் கப்டன் வின்ஸ்லோ... 855 ஏக்கர்.
7. டி.ஒஸிலின், மாவட்ட நீதிபதி...545 ஏக்கர்.
8. சி.ஆர்.புலவர், அரச அதிபர்.... 764 ஏக்கர்.
9. கப்டன் லேயார்ட் நிறுவனம்... 2264 ஏக்கர்.
10. பி.ஈ.ஒடேஹவுஸ், அரச அதிபர் மற்றும் இராஜாங்க செயலாளர்.... 2135 ஏக்கர்.

இக்காலத்தில் மேற்படி பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து காணிகளின் விலை அதிகரித்தது.  ஏக்கர் 5 சில்லிங்குகளுக்கு வாங்கிய பலரும் 2 பவுண்களுக்கு அவற்றை விற்று காசாக்கிக் கொண்டனர்.  
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates