தோட்டக்காட்டீ |
மலையக மக்களின் துயர வாழ்வியலை பதிவு செய்த இரா. வினோத்தின் தோட்டக்காட்டீ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
தமிழக பிரபல வார இதழின் நிருபரான இரா. வினோத் எழுதிய இலங்கை மலையக மக்களின் கண்ணீர் கலந்த துயர வாழ்வியலை பதிவு செய்த நூலான ‘தோட்டக்காட்டீ’ என்ற கவிதை நூல் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை 18/08/2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை எழும்பூர் – பாந்தியன்சாலை கன்னிமாரா நூலகம் எதிரில் உள்ள இக்சா மையத்தில் மேற்படி நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
உலகத் தமிழர் அமைப்பு மேற்படி நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியது.
வினோத்தின் தோட்டக்காட்டீ கவிதை நூல் தொடர்பில் சண். சரவணகுமார் பதிந்துள்ள தகவல்கள்:
வலிக்கும்… வேதனைக்கும்… அழுகைக்கும்… அறச்சீற்றத்திற்கும்… எதுகையும் மோனையும் ஏது?? எந்த மொழியிலும் சொல்லத் தேவையில்லை கண்ணீரின் மொழியை… இப்படித்தான் அணிந்துரையோடு ஆரம்பிக்கிறார் நண்பர் இரா.வினோத்.
‘வாழ்ந்த வரலாறும், வீழ்ந்த வரலாறும் ஒரு மானுடத்தின் சாட்சி’, இதுவரை சொல்லப்பட்ட ஏறத்தாழ எல்லா வரலாறுகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு புனைக்கப்பட்டு திணிக்கப்பட்ட கதைகளாகவே இருந்து வந்ததை பல இடங்களில் காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.
‘தோட்டக்காட்டீ’ ஒடுக்கப்பட்ட காலம் காலமாக தேயிலை கூடைகளை ஆண்டு கணக்கில் முதுகில் சுமந்து சுமந்து முதுகெலும்பு முறிந்துபோனவர்களின் முகவரி. அட்டைப்பூச்சிகளுக்கு இரத்தத்தை அன்றாடம் உணவரகத் தந்துவிட்டு மழைக்கும் பனிக்கும் கடும் குளிருக்கும் தேகங்களை திண்ணக்கொடுத்து உயிர்கொடுத்து உழைப்பைத் தந்தவர்களின் உண்மையான வரலாறு.
பலநூறு ஆண்டுகளானாலும் தேயிலை மரத்தை கவாத்து வெட்டப்பட்டு தேயிலை மரத்தை, செடியாகவே வளர்க்கும் நுட்பம் போல மலையகத் தமிழர்களின் வாழ்க்கையும் வெட்டப்பட்டு புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு கவனிக்கப்படாமல் இருந்த ஒரு மனித இனத்தின் வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் இலங்கையின் இன்னொரு முகம் என்று தோட்டாக்கட்டீயை!
‘காடு – நாடு’ ஆகிப்போனதன் பின்னணியில் முதுகெலும்பு முறிக்கப்பட்டு அழகான இலங்கை நாடு உருவாக அச்சாணியாக இருந்தவர்கள் மலையகத் தமிழர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது கேள்விக்குறி.
வரலாறு பொய்களால் பூசி மறைக்கப்பட்டு கிடப்பதை வெளியில் கொண்டு வர வினோத்திற்கு மறைமுக மிரட்டல்கள் எச்சரிக்கைகள் என ஏகப்பட்டவை. அவையெல்லாம் இன்று மலையகத் தமிழர்களுக்காக உழைப்பாக கவிதை நூலாக மாறியிருப்பது வினோத்தின் நேர்மைக்கு கிடைத்த விருது.
அம்மக்களின் தேசங்களுக்கே சென்று அவர்களுடன் வாழ்ந்து பழகி நம்பிக்கையை பெற்று இன்று கவிதைத் தொகுப்பாக கொண்டு வந்திருப்பதும் இலங்கை என்றாலே மலையகத் தமிழர்கள்தான் என்ற உண்மையை இன்று உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறார்.
இதேவேளை தோழர் பெ.முத்துலிங்கம் தொகுத்த ‘பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்’ என்ற நூலும் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...