1. மத்திய மாகாண சபைத்தேர்தலில் பொதுஜன ஐக்கிய மக்கள் முன்னணி அரசுடன் சேர்ந்தே நீங்களும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் போட்டியிடுகிறீர்கள். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் இரு கட்சிகளுக்குமிடையில் ஏற்படும் மோதலுக்கு என்ன காரணம்?
நாங்கள் தொழிலாளர்தேசிய முன்னணி எனும் தனித்துவமான கட்சியாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறோம். இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக உள்ளது.
நான் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அவர்களது வெற்றிக்கு உழைத்தவன். அப்போது நான் மத்திய மாகாண சபை உறுப்பினர்மாத்திரமே. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட்ட இ.தொ.கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் வெற்றி பெற்றதும் அவருடன் ஒட்டிக்கொண்டார்கள். நான் மாகாண சபை உறுப்பினராகவே தொடர்ந்தும் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வந்தேன். அந்த காலகட்டத்தில் (2006) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்திற்கு செல்லும் பேராளர்கள் பட்டியலில் என்னுடைய பெயர்சேர்க்கப்பட்டதற்கு ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியிடம் ஆட்சேபனை தெரிவத்தார். எனினும் ஜனாதிபதி அதனை பொருட்படுத்தாது என்னை தூதுக்குழுவில் இருந்து விலக்க மறுத்தார். இறுதியில் தாழ்வுச்சிக்கல் காரணமாக ஆறுமுகன் தொண்டமான அதில் கலந்துகொள்ளவில்லை.
இதிலிருந்து மலையகத்தில் தங்கள் குடும்ப அதிகாரம் தவிர்ந்த வேறுயாரும், குறிப்பாக மலையக மண்ணின் மைந்தர்கள் அரசியல் ரீதியாக தலைமையேற்பதை தொண்டமான். பரம்பரையினர்விரும்புவதில்லை என்பதை நான் விளங்கிக்கொண்டேன். அன்றிலிருந்து இந்த ஆதிக்க குழுமத்தை அடக்கும் அரசியல் வியு+கங்களை வகுத்து இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸை அதன் பாணியிலேயே எதிர்கொள்வது எனும் முடிவினை எடுத்துச் செய்ற்படுகின்றோம். ஆளும் அரசாங்கத்துடன் அங்கம் வகித்துக்கொண்டு மலையக மக்களை தங்களது அடிமைகளாக நடாத்த எண்ணும் குடும்ப கட்சிக்கு மாற்றாக ஒரு அரசியல் சக்தியை கட்டியெழுப்புவது என தீர்மானித்து இன்று அவர்களுக்கு சவால் விடுக்கும் அரசியல் இயக்கமாக தொழிலாளர்தேசிய சங்கத்தையும் தொழிலாளர்தேசிய முன்னணியையும் கட்டியெழுப்பியுள்ளோம்.
இ.தொ.கா அங்கம் வகிக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறோம் என்பதற்காக அவர்களுடன் கைகோர்த்து விட முடியாது. தற்போதைய கூட்டமைப்பு அரசாங்கத்தில் இதனை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகக்கூட நீங்கள் இதனை பார்க்கலாம். இனத்துவ கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் கூட ஒரே அரசின் பங்காளிகளாக உள்ளன. நாங்கள் அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சி என்ற அடிப்படையிலும் இ.தொ.கா அரசின் பங்காளி கட்சி என்ற அடிப்படையிலும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றோம். தவிர எங்களுக்குள் மலையக மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்த மாறுப்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன.
2. எந்த விதத்தில் நீங்கள் உங்கள் இரண்டு கட்சிகளுக்கிடையிலான நிலைப்பாடுகளில் உள்ள வேறுபாட்டினை காட்ட முற்படுகிறீர்கள்?
அமரர்கோ.நடேசய்யர்உருவாக்கிய மலையகம் எமது மண் என்ற கோஷம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இருக்குமாயின் இனை;றைய மலையக மக்களி;ன் நிலை இத்தகைய அவல நிலையை அடைந்திருக்காது. அந்த காலத்தில் இந்திய பெரும் முதலாளிகளுக்கு எதிராக எழுந்த சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு பலிக்கடாக்களாக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் பணயம் வைக்கப்பட்டனர். தங்களது வணிக நலனுக்காக இந்திய முதலாளிவர்க்கம் தொழிலாளர்களையும் இந்திய வம்சாவளி என்ற வலைக்குள் கொண்டுவந்து தங்களது நலன்களை அனுபவித்துக்கொண்டனர். அதில் தேயிலைத் தோட்ட முதலாளிகளாக இருந்தவர்களும் நன்மை அடைந்துகொண்டார்கள். அப்போது தோற்றுவிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ்தான் முதலாளிகளின் நோக்கம் நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை தொழிலாளர்காங்கிரஸ் ஆனது. எனவே இது தொழிலாளிகளின் பிரச்சினைகளை தூரநோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சியோ தொழிற்சங்கமோ அல்ல.
எனினும் அந்த காலத்தில் இருந்தே மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மீது அக்கறைகொண்டிருந்த பல கல்விமான்கள் இலங்கை இந்திய காங்கிரஸிலும் இலங்கை தொழிலாளர்காங்கிரஸிலும் அங்கம் வகித்தார்கள். இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸின் ஸ்தாபக தலைவரே ஆர்.ராஜலிங்கம் அவர்கள்தான். ஜனாப் அஸீஸ், அமரர்களான சோமசுந்தரம்,வௌ;ளையன், சி.வி.வேலுப்பிள்ளை என பல கல்விமான்கள் இந்த அமைப்பில் நம்பிக்கையுடன் செய்றபட்டனர். எனினும் தேயிலை தோட்ட முதலாளியாகவிருந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பணபலம் இவர்களை ஒவ்வொருவராக வெளியேறச் செய்தது. இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸை தமது குடும்பச் சொத்தாக இ.தொ.கா வரித்துக்கொண்டது. அஸீஸ் அவர்கள் ஜனநாயக தொழிலாளர்காங்கிரஸையும், இலங்கை இந்திய காங்கிரஸின் பொதுச்செயலாளராகவிருந்த வி.கே.வௌ;ளையன் அவர்கள் தொழிலாளர்தேசிய சங்கத்தையும் ஆரம்பித்தனர். பின்னாளில் மலையக மக்கள் முன்னணி உருவாக்கத்தின்போது அமரர்சந்திரசேகரனும் இ.தொ.காவில் இருந்தே இணைத்துக்கொள்ளப்பட்டார். தற்போதைய இலங்கை தொழிலாளர்ஐக்கிய முன்னணியும் ஆறுமுகன் தொண்டமானின் அட்டகாசம் தாங்காமல் இ.தொ.காவின் ஐந்து உப தலைவர்களுடன் பிரிந்து வந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான். இவ்வாறு காலத்திற்கு காலம் பலரும் பிரிந்து சென்று புதிய அரசியல் அமைப்புக்களை உருவாக்கக் காரணம் அவர்கள் இ.தொ.கா தொழிலாளர்மக்களுக்கான அமைப்பு இல்லை என்பதைக் கண்டுகொண்டதால்தான்.
தொழிலாளர்தேசிய சங்கத்தை அமரர்வௌ;ளையன் அவர்கள் ஸ்தாபக தலைவராக இருந்து ஆரம்பித்த போது அவர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கையாக இருந்ததே தொழிலாளர்பரம்பரை தமது அமைப்புக்கு தலைமை வகிக்க வேண்டும் என்பதுதான். அந்த அடிப்படையிலேயே சி.வி.வேலுப்பிள்ளை எனும் கல்விமான்கள் கூட தலைமைப்பொறுப்பை ஏற்காது நிர்வாகப் பொறுப்பை எற்றார்கள். இன்றுவரை நாங்கள் அந்த பண்பாட்டினை பேணுவதற்கு முயற்சிக்கிறோம். கட்சியில் கற்றவர்களுக்கு இடமளிக்கிறோம். ஜனநாயக ரீதியான நிர்வாகத்திற்கு இடம் அளிக்கின்றோம். தொழிலாளர்களை மதிக்கின்றோம். நான் நேரடி தொழிலாளி இல்லாதபோதும் ஒரு தொழிலாளியின் பிள்ளையாக லயத்தில் பிறந்தவனுக்கே உரிய வலியோடும் வேதனையோடும் எமது மக்களை உணர்ந்து தொழிலாளர்தேசிய சங்கத்துக்கு தலைமைகொடுத்து வருகின்றேன். இந்த பண்புகளை நீங்கள் இ.தொ.காவில் காண முடியாது. நன்கு அவதானித்துப்பாருங்கள் தொண்டமான் என பெயர்கொண்ட ஒருவருக்கும் அவரது உறவினர்களுக்கும் வழங்கப்படும் முக்கியத்துவம் இ.தொ.காவில் வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. சௌமியமூர்த்தி தொண்டமான இறந்த பிறகு தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய கல்விமான் பி.பி.தேவராஜ் புறக்கனிக்கப்பட்டார். அதேநேரம் இந்தியாவில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தவர்கள் தலைவராக்கப்பட்டார்கள். அதற்கு முன்பதாக அமரர்வௌ;ளையனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய நியமன எம்.பி.பதவி அண்ணாமலை எனும் அவர்களது உறவினருக்கு வழங்கப்பட்டது.1989களில் எத்தனையோ அனுபவமிக்க உறுப்பினர்கள் இருக்க மத்திய மாகாண கல்வி அமைச்சு இராமநாதன் தொண்டமானுக்கு வழங்கப்பட்டது. கடந்த மத்திய மாகாண சபையில் இருந்து இராதாகிருஸ்ணன் அவர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவுடன் அங்கு இதர உறுப்பினர்களான ராம், ரமேஸ்,சிங்.பொன்னையா ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்பட்டடிருக்கவேண்டிய கல்வி அமைச்சுப்பதவி அண்ணாமலையின் மகளான அனுஸ்யா சிவராஜாவை உறுப்பினராக்கி அவருக்கு வழங்கப்பட்டது. ஊவாவில் இ.தொ.காவின் தொண்டனாக இருந்து சேவையாற்றிய சச்சிதானந்தன் திட்டமிடப்பட்ட வகையில் ஓரம் கட்டப்பட்டு செந்தில் தொண்டமான் என புது தந்தையை உருவாக்கியிருக்கிறார்கள். நான் அறிந்த வரையில் அரது அப்பா கதிரேசன் எனும் பெயரே. ஏப்படியோ அவருக்கும் தொண்டமான் ஆகிவிட்டது. இவ்வருட இ.தொ.கா மேதினத்தில் ஆறுமுகனின் மகனுக்கு மாலையிட்டு அடுத்த தொண்டமானை தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆகவே இ.தொ.கா என்பது -இந்திய தொண்டமான் காங்கிரஸ்- என்பதுவாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.
நாங்கள் தொழிலாளர்களின் பிள்ளைகள் மலையக மக்களுக்காகப் போராட்டிக்கொண்டிருக்கிறோம்.
3. ஒரு சின்னத்திலேயே போட்டியிட்டுக் கொண்டு இவ்வாறான மோதல் சம்பவங்களில் ஈடுபடுவதால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
இல்லை. மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.1977க்குப்பின் மலையகக் கட்சிகள் தேசிய கட்சிகளுடன் இணைந்துப் போட்டியிட்டால்தான் குறிப்பிடத்தக்க ஆசனங்களைப்பெற முடியும் எனும் நிலைமை உள்ளது. இது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் உள்ள குறைபாடு. விரும்பியோ விரும்பாமலே மலையகத்தில் தேர்தல் அரசியல் நடாத்தும் கட்சிகள் எல்லாம் இந்த நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வட கிழக்கு தமிழ் கட்சிகளோடு இந்த நிலைமையை ஒப்பிட முடியாது. நாங்கள் மலையகத்தவர்கள் வியு+கம் வகுப்பதில் கொஞ்சம் தடுமாறினாலும் எமது பிரதிநிதித்துவம் பறிபோய்விடும். வடகிழக்கில் கட்சிகள் மாறு பட்டாலும் அவர்களது சமூகம் சார்ந்தவர்களே தெரிவு செய்ப்படுவார்கள். எங்கள் நிலைமை அப்படியல்ல. நாம் சிங்கள மக்களுடன் இரண்டரக்கலந்து வாழுகிறோம். எனவே அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தேசிய கட்சிகளில் ஆசனங்களைப்பெறும்போது நாம் நிதானமாக செயற்பட்டு எமது ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியுள்ளது. தேசிய கட்சிகள் ஆசனங்களை ஒதுக்கும்போது எமது பிரதிநிதித்துவத்தை குறைக்கும் சூழ்ச்சிகளைச் செய்யும். அதனையும் புரிந்து கொள்ள வேண்டும். இம்முறை நுவரெலியா மாவட்ட ஐ.தே.க.பட்டியலைப்பார்த்தால் இந்த உண்மை புரியும். இவ்வாறான குழறுபடிகள் தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்தாலும் மக்கள் தெளிவாக மூன்று இலக்கங்களுக்கு வாக்களித்து எமக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தி வந்துள்ளனர். அதனால் மக்கள் தெரிவில் குழப்பமடையமாட்டார்கள்.
மாறாக, ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடுகையில் மோதல் என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டியது. இ.தொ.கா. என்றால் அதற்கு இன்னொரு பெயர்அராஜகம். இந்த அராஜகத்துக்கு அவர்களுக்கு இப்போது பதிலடி கிடைப்பதுதான் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வழமையாக இ.தொ.கா தான் அரசாங்கத்துடன இணைந்திருக்கும்போது அதே அரசாங்கத்துடன் இணைந்துள்ள இன்னுமொரு மலையகக் கட்சியின் வாக்குகளை சூறையாடும் சூழ்ச்சியை செய்யும். குறிப்பாக முன்பெல்லாம் மலையக மக்கள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்களுக்கு மேல் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். அரசாங்கக் கட்சிக்கு அழுதத்தத்தைக்கொடுத்து மற்றைய கட்சிக்கு இரண்டு ஆசனங்களைக்கொடுத்து அதில் மூன்றாவது வாக்கை தமக்கு இழுத்துக்கொள்வார்கள். கடந்த முறை மலையக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையேனும் பெறமுடியாது போனது இதனாலேயே.
2004 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியில் ஆறு உறுப்பினர்களை நுரெலியா மாவட்ட்தில் இருந்து பெற்றுக் கொண்டடிருந்தது. எனினும் நாம் 2009 ஆம் ஆண்டு வகுத்த வியு+கம் அவர்களை 3 ஆகவும் (போனஸ் உடன் 4) எதிர்கட்சியில் போட்டியிட்ட மாற்றக் கட்சியினருக்கு ஐந்து உறுப்பினர்களையும் (தொழிலாளர்தெசிய சங்கம் 2, தொழிலாளர்ஐக்கிய மன்னிணி 2, ஜனநாயக மக்கள் மன்னணி 1)பெற்றுக்கொடுத்தது.
இம்முறை நாம் ஆளும் கூட்டமைப்பு பட்டியலில் 3ஆசனங்களைப் பெறுவதை இ.தொ.கா எத்தனையோ பிரயத்தனம் செய்தும் தடுக்க முடியவில்லை. நேரடியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் சென்று தொழிலாளர்தேசிய சங்கத்துக்கு 2க்கு மேல் கொடுக்கக் கூடாது என மண்டியிட்டு இருக்கிறார்கள். நான் மேலேகூறிய ஆசன வெற்றி விகிதத்தை சுட்டிக்காட்டி திகாம்பரத்திற்கு 3 அசனம் வழங்கக்கூடிய அளவு பலம் உள்ளது. உங்களுக்கு வேண்டுமானால் ஆறுக்கு மேல் தரலாம் ஆனால் அவருக்கு 3கொடுக்க வேண்டாம் என நீங்கள் கோரிக்கை விடுக்க முடியாது என திருப்பி அனுப்பியுள்ளார்.அன்றிலிருந்து இவர்களுக்கு மண்டைக்குழப்பம் அதிகரித்து விட்டது. அதுதான அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள். எனவெ எங்களது வியு+கம் எமக்கு மூன்று ஆசனத்தைப்பெற்றுக் கொடுக்கும் மக்கள் இதனைப் புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள். இ.தொ.கா அடுத்தவனுக்கு குழிபறிக்கப் போய் தாங்களே அந்த குழியில் விழுந்து தடுமாறுகிறார்கள். நாங்கள் 3 ஆசனங்கள் கிடைத்திருக்காதபட்சத்தில் வெற்றிலைச்சின்னத்தில் அல்லாது தனியாகப் போட்டியிட்டிருப்போம். அந்த சுதந்திரம் எங்களுக்கு உண்டு. நாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குகிறோமே தவிர அமைச்சர்பதவி பெற்று சுகபோகம் அனுபவிக்கவில்லை. ஆனால் அவ்வாறு தனித்து போட்டியிடும் வல்லமையோ சுதந்திரமோ இ.தொ.காவுக்கு இல்லை. அவர்கள் அமைச்சுப்பதவியை விட்டுக்கொடுத்து எந்த தீர்மானத்தையும் எடுக்க மாட்டார்கள்.
நாம் அமைதியான வழியிலேயே எமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம். எம்மீது அராஜகம் பிரபோகிக்கப்பட்டால் அதற்கு அவ்வாறே பதிலடி கொடுப்போம்.
4.. நீங்கள் இவ்வளவு காலமும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டே வெற்றியடைந்திருந்தீர்கள். இம்முறை ஆளும் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடப் போகிறீர்கள். இதன் பிரதிபலிப்பு எவ்வாறானதாக அமையும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
இவ்வளவு காலம் எனும் உங்கள் கேள்வி எத்தனைக் காலத்தை குறிக்கிறது என தெரியவில்லை. நாம் இரண்டு முறை மாத்திரம் ஐக்கிய தேசிய கட்சி பட்டியிலில் அதுவும் தொழிலாளர்தேசிய சங்க வேட்பாளர்களாகப் போட்டியிட்டுள்ளோம். இரண்டு உள்ள+ராட்சி மன்றத் தேர்தல்களில் மலையகக் கட்சிகளுடன் கூட்டணியாக இணைந்து ஏணி,மண்வெட்டி மற்றும் மயில் ஆகிய சின்னங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளோம்.
இவ்வாறு சின்னங்கள் மாறுவது ஒவ்வொரு தேர்தலுக்கமான வியு+கமே அன்றி நாம் எந்த ஒரு கட்சியுடனும் இரண்டரக்கலக்கவில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்த நாட்டில் உள்ள தேர்தல் முறைக்கு அமைய ஒவ்வொரு தேர்தலையும் ஒவ்வொரு விதமாக எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அதில் எமது கட்சிக்கு எவ்வாறு பிரதிநிதித்துவம் உறதிப்படுத்தப்படுகின்றது என்பதுதான இறுதி இலக்கு.
இந்த நடைமுறைக்கு இலங்கையில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. உதாரணமாக ஸ்ரீலங்கா சுந்த்திரக்கட்சி கை சின்னத்தை கைவிட்டு பல ஆண்டுகாளாயிற்று. ஆனால் இன்றும் கட்சி உள்ளது. இ.தொகா. சேவலை எப்போதாவது தூக்கும். மலையக மக்கள் முன்னணியும் அப்படியே. தமிழரசு கட்சி வீட்டை விட்டு நீண்டகாலம் உதய சூரியனில் நின்றது. மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளது. ஜே.வி.பி கூட தன்னுடைய பாரம்பரிய மணியை விட்டு அன்னத்திற்கும், வெற்றிக்கிண்ணத்துக்கும் மாறியது. முஸ்லிம் காங்கிரஸ் மரம், யானை என மாறி வாக்கு கேட்டதுண்டு. இ.பி.டி.பி. வீணையிலும் வெற்றிலையிலும் வாக்கு கேட்பதுண்டு. வீராப்பு பேசும் ‘பஸ்’ கூட யானை மீது ஏறித்தான் பயணித்தது. ஐக்கிய தேசிய கட்சியே கூட தனது பாரம்பரிய யானையை ஓரம் கட்டிவிட்டு கடந்த ஜனாதபதி தேர்தலில் அன்னத்தில் பயணித்ததை மறுக்க முடியாது. இடது சாரி கட்சிகள் கூட நிரந்தர சின்னம் ஒன்றோடு இப்போது இல்லை. விளக்கு,சாவி, குடை மட்டுமல்ல சங்கும், வில்லும் அம்பும் கூட வெற்றிலையில் நிற்கிறது. எனவே இவை தேர்தல் வியு+கங்களே அன்றி அதனை கட’சிக் கொள்கை கோட்பாடுகளோடு இணைத்துப்பார்க்க முடியாது.
தொழிலாளர்தேசிய சங்கமும அதன் அரசியல் முன்னணியும் தனக்காக உறுப்புரிமை பலத்தையும் வாக்கு பலத்தையும் ஆதரவ தளத்தையும் நிலையானதாகக் கொண்டுள்ளது. எனவே எந்த சின்னத்தில் கேட்டாலும் தொழிலாளர்தேசிய சங்க உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் எமக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
4. மத்திய மாகாணத்தில் உங்களது கட்சியின் வெற்றி எவ்வாறானதொரு நிலையில் உள்ளது?
நாம் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச்சின்னத்தில் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறோம். ஆறுவேட்பாளர்களை நிறுத்தியவர்களுக்கு கூட மலையகத்தின் முதுகெலும்பாகத்திகழும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க முடியாத நிலையில் நாம் எமது மகளிரணி பொறுப்பாளரான சரஸ்வதி சிவகுரு அவர்களையும், தொழிற்சங்க அனுபவம் வாய்ந்த சிங்.பொன்னையா அவர்களையும், ஸ்ரீதரன் எனும் பட்டதாரி ஆசிரியர்ஒருவரையும் வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கிறோம். எனவே எமது தெரிவு பல்துறை சார்ந்ததாக அமைந்துள்ளது. தொழிலாளர்களும் பெண்களும் கல்விகற்ற சமூகமும் எம்மைத் தெரிவு செய்வதற்குரிய வாய்ப்பினை வழங்கியுள்ளோம். அதேபோல கண்டி மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் எமது அரசியல் பீட உறுப்பினரும் கண்டி மாவட்ட அமைப்பாளருமான முதுமாணிபட்டதாரி முத்துக்குமார்போட்டியிடுகின்றார். மாத்தளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை உறதிபடுத்தவதற்காக நாம் தனியாக களம் இறங்கவில்லை. நுவரெலியா மாவட்டத்திலும் கண்டியிலும் எமது வெற்றி இன்றைய நிலையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எமக்கான ஆதரவு தளம் பலமாகவுள்ளது.
5. இராஜதுரை எக்காரணத்துக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விட்டு வெளியேறியுள்ளார்?
அதற்கான காரணத்தை விரிவாகவே அவர்தனது பேட்டிகளின் ஊடாக பதிவு செய்துள்ளார்.இ.தொ.காவில் கற்றவருக்கு எப்போதும் உரிய இடம் வழங்கப்படுவிதில்லை. இதனை வரலாற்று ரீதியாக நாம் பார்க்கலாம்.அஸீஸ், இராஜலிங்கம்,வௌ;ளையன், சி.வி.வேலுப்பிள்ளை,பி.பி.தேவராஜ், என அந்த பட்டடியல் நீளும். தங்களுக்கு கீழே இருந்து ஆமாம் சாமி போடுபவர்களை மட்டுமே இ.தொ.கா வைத்தக்கொள்ளும்.
இராஜதுரை அவர்கள் தொழிலாளர்குடும்த்தில் பிறந்து வளர்ந்து தனது சொந்த ஊரிலேயே சட்டத்தரணியாகவும் பதில் நீதிவானாகவும் உயர்வு பெற்றவர். இவருக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு காரணமாக இ.தொ.கா பட்டியலுக்குள் பலரது பிரயத்தனங்களுக்கு மத்தியில் உள்ளீர்க்கப்பட்டார். அப்போது கற்றவர்கள் மத்தியில் ராஜதுரை மீது ஒரு விமர்சனம் எழுந்தது. இவர்ஏன் இ.தொ.கா பட்டியலில் போட்டியிடுகிறார்.இ.தொ.கா கற்றவர்களுக்கு உரிய இடம் தராதே என அங்கலாய்த்தனர். அதுபோலவே ராஜதுரை அவர்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி வாக்குகளை சேகரித்துக்கொண்டு அவருக்கு இ.தொ.கா என்கிற கட்சியில் எவ்வித பதவியும் வழங்காது உதிரியாகவே வைக்கப்பட்டிருந்தார்.மக்கள் பிரதிநிதியாக ஒரு பாராளுமன்ற உறப்பினராக மட்டுமே அவர்செயற்பட்டு வந்துள்ளார். இவர்இ.தொ.காவில் இணைந்துகொண்டதன் பின்னர்வேறு கட்சியில் இருந்து இ.தொ.காவில் இணைந்துகொண்டவர்களுக்கு கூட உபதலைவர்,உதவி செயலாளர்பதவிகள் கூட வழங்கப்பட்டுள்ளன. ராஜதுரைக்கு இ.தொகாவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட எவ்வித பதவியும் கட்சியில் வழங்கப்படவில்லை. இ.தொ.கா எவ்வாறு கற்றொரை உள்வாங்;கி செயற்படத்தயராகவுள்ளது என்பதனைப் புரிந்தகொள்வதற்கு இது ஒன்று போதும்.
6. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து இராஜதுரையை உங்களுடன் இணைத்துச் செயற்படுவதற்கு என்ன காரணம்?
எங்கள் கட்சி தொழிலாளர்நல்ன சார்ந்தது. தொழிலாளர்பரம்பரை வழிவந்த எவருக்கும் முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்தும். அதெபோல அதன் ஆரம்ப காலம் தொட்டே கல்வியாளர்களையும் எழுத்தாளர்களையும் தன்னகத்தேகொண்டு செயற்பட்டுள்ள கட்சி. எங்களுடைய தற்போதைய தொழிலாளர்தேசிய சங்க உயர்சபையில் இரண்டு பட்டதாரிகளும் அரசியல் துறையில் ஐந்து பட்டதாரிகளும் உள்ளனர். ராஜதுரை அவர்களின் வருகையோடு அது ஆறாக அதிகரித்துள்ளது. அவர்ஒரு சட்டத்தரணி, ஒரு பதில் நீதிவானாக கடமையாற்றியவரும் கூட. எனவே தொழிலாளர்தேசிய சங்கத்தின் பண்பாட்டு அடிப்படையில் அவரது இணைவு அமைந்தள்ளது. அவர். இ.தொ.காவில் செயற்படுவதற்கு முன்பு இருந்தே எமது கட்சியில் அங்கம் வகிக்கும் உயர்பீடத்தினருடன் வெவ்வேறு சமூகப் பண்பாட்டுத்தளங்களில் ஒன்றாக செயற்பட்டிருந்தவர். அதேபோல சக பாராளுமன்ற உறுப்பினராக என்னுடன் நல்ல உறவைப் பேணிவந்தவர். எனவே எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு உள்ளது. அவர்இ.தொ.காவில் போட்டியிட்டது ஒரு தற்செயல் நிகழ்ச்சி மட்டுமே. தவிரவும் ராஜதுரை அவர்களின் ஆளுமையை முழுமையாக பயன்படுத்தி தொழிலாளர்தேசிய சங்கத்தில் அரசியல் தொழிற்சங்க பணிகளில் ஈடுபடுவதற்கு பொருத்தமாக அவருக்கு சங்கத்தின் பிரதித் தலைவர்பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல ராஜதுரையின் வருகையுடன் பாராளுமன்றத்தில் தொழிலாளர்தேசிய சங்கத்தின் உறுப்பினர்எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இ.தொகாவுக்கும் தற்போது இரண்டு உறுப்பினர்களே உள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்இராதாகிருஸ்ணணன் அவர்கள் ஏற்கனவே மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்துகொண்டுள்ளார். எனவே இ.தொ.காதான் மலையக மக்களின் ஏகப்பிரதிநிதி என்கிற நிலையை மாற்றி அதற்கு சவாலான மக்கள் சக்தியாக தொழிலாளர்தெசிய சங்கம் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
7. நீங்கள் அரசுடன் சேர்ந்து செயற்படுகின்ற நிலையில்இ உங்களது பிரதேச மக்களுக்கு எவ்வாறான உதவிகளை அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கிறது?
அரசுடனான எங்கள் உறவு புரிந்துணர்வுடனானது. எங்களது புரிந்துணர்வு என்பது அமைச்சர்பதவியை நிபந்தனையாகக் கொண்டது அல்ல. நாம் சுயாதீனமான அமைப்பாகவே அரசுக்கு ஆதரவ வழங்குகின்றோம். கொள்கை அரசியல் ஒரு புறமிருக்க அபிவிருத்தி அரசியலிலும் கவனம் செலுத்த வெண்டியுள்ளது. எங்களுக்கு போட்டியாகவுள்ள இ.தொகா மத்தியில் இரண்டு அமைச்சுக்களையும் மாகாணத்தில் இரண்டு அமைச்சுக்களையும் கொண்டு செய்றப்டுகின்றது. அந்த நிலையில் உறுப்பினர்களை தக்கவைத்துக்கொள்ள நாம் அபிவிருத்தி அரசியலிலும் கனவம் செலத்த வேண்டியுள்ளது. எங்களது அரச ஆதரவு மூலமாக தோட்ட உட்டகட்டமைப்பு வசதிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவும் ஜனாதிபதியின் நேரடி நிதியீட்டத்தின் ஊடாகவும் எஙகளால் மெற்கொள்ள முடிகின்றது. எங்களால் நுவரெலியா மாவட்டத்திற்கு வெளியே உள்ள மலையக மாவட்டங்களுக்கு சேவையாற்ற முடியாது. எனவே அத்தகைய பிரதேசத்தை காட்டி நீங்கள் மலையகத்தலைமைகள் என்ன செய்கிறீர்கள் எனும் கேள்வியை என்னிடம் எழுப்புவது யதார்த்தம் அற்றது. எமது நிதி நுவரெலியா மாவட்ட செயலகத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதுவே நிர்வாக முறையாக அமைந்துள்ளது.
மாறாக பல மாவட்டங்களிலும் பணியாற்றக் கூடிய அதிகாரம் அமைச்சுப்பதவி வகிப்போருக்கு உண்டு அவர்கள் அதனை சரிவரச் செய்கிறார்களா எனும் கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது. பு+ண்டுலோயா நகருக்கு அருகே ஒரு புறம் டன்சினன் எனும் எமது மக்கள் வாழும் பெருந்தோட்டமுள்ளது. மறுபக்கம் கொத்மலை எனும் கிராமம் உள்ளது. ஆனால் கொத்மலை பால் உற்பத்தி உள்ளதே தவிர டன்சினன் எனும் பால் உற்பத்தியைக் காண கிடைப்பதில்லை. அதேபோல நுவரெலியா நகருக்கு அடுத்து பல பெருந்தோட்டங்கள் உண்டு அம்பேவலையும் அங்குதான் உண்டு. ஆனால் அம்பேவலையில் மட்டும் பால் உற்பத்தி நடக்கிறது ஆனால் பெருந்தோட்டம் சார்ந்து எந்த பண்ணை உற்பத்தி முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எமது மக்கள் தேயிலைத் தொழிலுக்கு அடுத்து சுயதொழிலாளக் மாடு வளர்ப்பு, மரக்கறி செய்கையில் ஈடுபடுவது நாம் அறிந்ததே. ஆனால் அந்த மக்களை பிரதிநிதித்துவ்ப்படுத்தி இரண்டு தொண்டமானகள் கால்நடை அபிவிருத்தி அமைச்சராகவிருந்த நாடு இது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
8. இராஜதுரை போன்று வேறு யாராவது உங்களது கட்சியுடன் இணையும் நோக்கில் உள்ளார்களா?
பலர்தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் நாம் எல்லோரையும் உள்வாங்கும் எண்ணத்தில் இல்லை. இன்னும் சில பிரதேச சபை உறுப்பினர்கள் இ.தொ.காவில் இருந்து எம்முடன் இணையும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். நாம் மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இருப்பதால் அது குறித்த பேச்சுவார்தைகளில் கவனம் செலுத்த முடியாதுள்ளது. மாகாண சபை தேர்தல் முடிந்தவுடன் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
9. உங்களது ஆதரவாளர்கள் மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி?
மலையக சமூகம் இந்த நாட்டில் கால்பதித்த நாள் முதலே பல்வேறு அடக்குமறைகளுக்கும்,ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்தே வந்துள்ளனர். நமது பயணம் பட்டுக்கம்பளத்தில் நிகழ்ந்ததல்ல. ஒவ்வொரு அடியும் வலிநிறைந்த முட்பாதையில் நிகழ்ந்தது. இன்றைய எமது அடைவு என்பது பல்வேறு தலைவர்களினதும் தொழிலாளர்களினதும் அர்ப்பணிப்பில் கிடைக்கப்பெற்ற ஒன்று. இனவாத ஒடுக்குமுறை மட்டுமல்ல ஆதிக்க ஒடுக்குமுறைக்குள்ளும் நாம் அகப்பட்டே வந்துள்ளோம். ஆதிக்க சக்தியினருக்கு எதிராக நமது தலைவர்கள் பலரும் பலவிதமாக போராடியுள்ளார்கள். நாமும் போராடுவதன் மூலமே வெற்றியை அடைய முடியும்.
நமது மண் மலையக மண். இது நாம் வியர்வை சிந்த வளர்த்தெடுத்த பு+மி. இதனை ஆளும் உரிமை எமக்கு இருக்கிறது. இறக்குமதி தலைவர்களை நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. இன்று நமது தொழிலாளர்மக்களின் பிள்ளைகள் ஆசிரியர்களாக, வைத்தியர்களாக,பொறியியலாளர்களாக, முகாமைத்துவ நிபுணர்களாக, சட்டத்தரணிகளாக மட்டுமல்லாது இந்த நாட்டில் நீதிபதிகாளக் கூட உயர்ந்து நிற்கிறோம். ஆனால் நமக்கான தலைமை மட்டும் என்றும் இந்திய இறக்குமதியாகவே இருக்க வேண்டும் என்பதற்கில்லை. நமக்கு நாமே தலைமை ஏற்போம். அதற்காக நாம் எந்த சவாலையும் ஏற்போம். அறவழியில் எதனையும் எதிர்கொள்வோம். எம்மீது அராஜகம் பிரயோகிக்ப்படின் அதனை எதிர்கொள்ளவும் தயாராகவே உள்ளோம். அராஜகத்திற்கு எதிரான போராட்டத்தினை தொடர்வோம். நமக்கான தலைமையை நாமே உருவாக்குவோம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...