Headlines News :
முகப்பு » » ஊவாவில் அதிக உறுப்பினர்களை தெரிவு செய்ய ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் - எம்.செல்வராஜ்

ஊவாவில் அதிக உறுப்பினர்களை தெரிவு செய்ய ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும் - எம்.செல்வராஜ்


ஊவா மாகாணசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஆறு இலட்சத்து ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தாறு (609,966)பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ் வாக்காளர்கள் ஒரு இலட்சத்து நாற்பத்தாராயிரத்து எழுநூற்று இரண்டு பேரும் முஸ்லிம் வாக்காளர்கள் நாற்பத்தேழாயிரத்து ஏழு பேரும் உள்ளடங்குவர்.

பதுளையில் 54,327 பேரும் பசறையில் 61,933 பேரும்,ஆலிஎலையில் 68,278 பேரும் பண்டாரவளையில் 82,025 பேரும் அப்புத்தளையில் 64,135 பேரும், வெலிமடையில் 73,308 பேரும்,ஊவா  பரணகமையில் 61,925 பேரும், வியலுகமையில் 50,648 பேரும், மகியங்கனையில் 95,387 பேருமாக மொத்தம் 609,966 பேர் பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இப்புள்ளிவிபரம் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பதுளை மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பாகும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் 595,532 வாக்களிப்பார்களாகும். இதன் பிரகாரம் 2013 ஆம் ஆண்டில் 14,434 வாக்காளர்களால் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் பிரகாரம் 591,292 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதன்படி 2012ஆம் வருட கணக்கெடுப்பு பட்டியலில் 4,240 வாக்காளர் கள் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கின்றது.

2012ஆம் வருடத்திற்கும் 2013 ஆம் வருடத்திற்குமாக 14,432 வாக்காளர் அதிகரிப்பினை அவதானிக்க முடிகின்றது.

1988ஆம் ஆண்டு தொடக்கம் இது வரைக்குமான இருபத்து ஐந்து வருட காலப் பகுதியில் ஊவா மாகாண சபையின் தமிழர் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பின்வருமாறு இருந்தன.

முதல் மாகாண சபை – 1988ஆம் ஆண்டு
எம்.சுப்பையா, எம்.சச்சிதானந்தன், கே.வேலாயுதம், ஏ.எய்ச்.எம். சித்திக்.
இரண்டாவது மாகாண சபை 

– 1993 ஆம் ஆண்டு
எம். சுப்பையா, எம். சச்சிதானந்தன், சிவம் யோகநாதன், கே.வேலாயுதம்.

மூன்றாவது மாகாண சபை  – 1999 ஆம் ஆண்டு
கே.வேலாயுதம், வேலுசாமி குமரகுருபரன், எம்.எச்.எம். முபாரக், ஏ.சி.அமீர் மொகமத், வீரன் சென்னன், கே.விஸ்வநாதன்.

நான்காவது மாகாண சபை  – 2004ஆம் ஆண்டு
கே.விஸ்வநாதன், மதார் சாய்பு, பொன்னு சாமி பூமிநாதன், கே.வேலாயுதம், அ.அரவிந்குமார், அமீர் மொகமத், எம்.யோகநாதன்

ஐந்தாவது மாகாண சபை  – 2009ஆம் ஆண்டு
செந்தில் தொண்டமான், கே.வேலாயுதம், அ.அரவிந்குமார்

இதன் பிரகாரம் தமிழ் பிரதிநிதித்துவங்கள் குறைந்து செல்லும் நிலையினைக் காண முடிகின்றது. இதேபோன்று முஸ்லிம் பிரதி நிதித்துவங்களிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன் ஆரம்ப மாகாண சபையிலிருந்து ஐந்தாவது மாகாண சபை வரை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கே.வேலாயுதம் தொடர்ந்தும் தமது இருப்பினை தக்கவைத்துள்ளார்.

நான்காவது, ஐந்தாவது மாகாண சபைக ளில் மலையக மக்கள் முன்னணி சார்பாக அ.அரவிந்குமார் தொடர்ச்சியாக பிரதிநிதித்துவம் செய்து வந்துள்ளார். ஆனால் முஸ் லிம் சமூக பிரதிநிதித்துவம் ஆரம்பத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தில் ஆரம்பித்து 3ஆம், 4 ஆம் மாகாண சபைகளில் இரண்டு பிரதிநிதித்துவங்களாக அதிகரித்த அதேவேளை ஐந்தாவது மாகாண சபையில் எந்தவொரு முஸ் லிம் பிரதிநிதித்துவமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களிடையே வாக்குகள் சிதறாமல் ஐக்கியப்பட்டு ஒன்றிணைந்து செயல்படுவார்களேயானால் இரு பிரதிநிதித்துவங்களை பெற்றுக் கொள்ள கூடிய வாய்ப்புகள் உள்ளன.
பதுளை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து எழுநூற்று இரண்டு பேர் தமிழ் வாக்காளர்கள் இருந்தும் தமிழர் பிரதிநிதித்துவங்களில் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

தமிழ் வாக்காளர்களில் சுமார் இருபத்தையாயிரம் பேர் வரையில் மத்திய கிழக்கு நாடு கள் மற்றும் கொழும்பு போன்று வெளியூர்க ளில் தொழில் செய்து வருகின்றனர். இவர்க ளால் வாக்களிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனாலும் கொழும்பு போன்று வெளியூர்களில் தொழில் செய்யும் இளைஞர், யுவதிகளை வாக்களிக்கச் செய் யும் செயல்பாடுகளை மலையகத் தலைமைகள் மேற்கொள்ளல் வேண்டும். மேலும் நிராகரிக்கப்படும் வாக்குகள் எண்ணிக்கையை குறைப்பதற்கும் வாக்களிக்கும் முறைமை பற்றி தோட்டங்கள் தோறும் தெளிவுபடுத்த வேண்டும்.

இம்முறை மாகாணசபைத் தேர்தலில் மீண் டும் மாகாண அமைச்சர் செந்தில் தொண் டமான், கே.வேலாயுதம், அ.அரவிந்குமார், எம்.சச்சிதானந்தன், கே. விஸ்வநாதன், எம். யோகநாதன், அமீர் மொகமத் ஆகியோர் போட்டியிடுவார்களென தெரியவருகிறது.

அவர்களுடன் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் வடிவேல் சுரேஸ், தொழிலாளர் தேசிய சங்க சார்பில் எஸ். இராஜமாணிக்கம், பசறை பிரதேச சபைத் தலைவர் எம்.எம். ஏ.காதர், மக்கள் விடுதலை முன்னணி சார்பாக இராமலிங்கம் சந்திரசேகர், பண் டாரவளை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய குரு சுதாகர சர்மா ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுவார்களென எதிர்பார்க்கப்படு கிறது.

நன்றி - வீரகேசரி 22.06.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates