மலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள்.
இவர்கள் "ஆண்ட பரம்பரை” என மார்தட்டுபவர்கள். தமிழ் பரம்பரையை போலவே இவர்களது பரம்பரையும் ஆண்ட பரம்பரையே. இவர்கள் முற்றுழுதாக இந்து, தமிம் கலாசாரத்தினை கொண்டிருந்தாலும் வீட்டில் பேசும் மொழி மூலம் தனித்துவம் பேணுகின்றனர். இவர்களது வரலாற்றினையும் மலையக வரலாற்றுடன் ஆய்வு செய்ய வேண்டும். இக் கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே.
திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி மலையான்ம, மலயாய்ம எனவும் அழைக்கப்பட்டது. மலையாளம் என்பது ஒரு நாட்டையும் பின்னர் மொழியையும் குறித்தது. மலையாள நாட்டை அல்லது மலையாளிகளை "மலபார்” என அரேபியரே முதலில் அழைத்தனர். இதனையே சிலர் கேரள மொழி என அழைத்தனர். கேரளா என்பது தென்னை நாடு என பொருள்படும்.
கன்னியா குமரி முதல் கோகர்ணம் வரை மலையாள தேசம் என அழைக்கப்பட்ட போதும் பிற்காலத்தில் கன்னியா குமரி தமிழ் நாட்டுடன் இணைந்தது. இதில் பூமி நாடு, கற்கா நாடு, குட்ட நாடு, குட நாடு ஆகியவையும் அடங்கியுள்ளன. பரசுராமன் மலையாள பூமியை கடலினின்று மீட்டு வந்தார் என புராணக் கதைகள் கூறுகின்றன. மலையாள தேசம் கேரள தேசம் என்றே அழைக்கப்படுகிறது. மலையாள தேசமும், கோயம்புத்தூரும், சேலம் மாவட்டமும் சேரருடைய ஆட்சியில் இருந்துள்ளது. எனவே இது சேர நாடு எனவும் அழைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில மக்களான மலையாளிகள் தமிழ் நாட்டில் சேலம், வட ஆற்காடு, அம்பேத்கார், தென் ஆற்காடு, திருச்சிராப்பள்ளி பெரியார் மாவட்டங்களிலும், சேர்வராயன் மலை, கொல்லி மலை, சவ்வாத்து மலை, ஏலகிரி மலை, பச்சை மலை பகுதிகளிலும் வாழ்ந்தனர்.
மலையாளிகளிடமும் வெள்ளாளர், கொங்க வெள்ளாளர், மலைக்கவுண்டன், கவுண்டன் என பல சாதிகள் இருந்தன.
மலையாளிகள் பொதுவாக ஆவியுலக கோட்பாடு, மந்திரம், மந்திர ஜாலம் ஆகியவற்றி நம்பிக்கையுடையவர்கள். விஷ்ணுவ அதிகம் வழிபடுவர். கரியராமர், தர்மராசா, அய்யனார், காளி, கருப்பன், பிடாரி, மாரி போன்ற தெய்வங்களையும் வழிபடுவர். மலையாளிகளே 'வர்மனை' அதிகம் வழிபடுவார்கள். அவர்கள் பச்சைக் குத்திக் கொள்ளும் பழக்கமுடையவர்கள்.
“தெனுகு”, “திரிலிங்கமு”, “ஆந்திரமு” என சொல்லப்படும் தெலுங்கு மொழி இந்தியாவில் முக்கிய மொழிகளில் ஒன்றாகும். இதுவும் திராவிட மொழிகள் ஒன்றாகும். தெலுங்கு பிரதேசத்தினை தெலுங்கு நாடு என்றும், ஆந்திரா நாடு என்றும் அழைக்கின்றனர். விஜயநகர பேரரசு, நாயக்கர் காலம் என்பதெல்லாம் இவர்களது காலமேயாகும். ஆந்திராவின் தலைநகர் விஜய நகராகும். தெலுங்கு நாட்டைப் பொறுத்த வரை 1509 - 1530 ஆட்சி புரிந்த ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் முக்கியமானவர். அவர் காலத்தில் தென்னகத்தில் ஆட்சி புரிந்த வல்லரசனாகத் திகழ்ந்தார் என வரலாறுகள் கூறுகின்றன.
விஸ்வாமித்திரர் காலத்தில் அம் மக்கள் ஆரிய சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டு வந்திரராகி விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவர்கள் கோதாவரி பிரதேசத்தில் வாழ்ந்த தெலுங்கரோடு கூடி ஆந்திரா ராஜ்யத்தினை ஏற்படுத்தினர் என்பது வரலாறு. தெலுங்கு என்பதற்கு த்ரிலிங்கு கேசம் என்பது பொருள். ஸ்ரீ சைலம், தாஹாராமம் (பீமேசுரம்), காளேசுரம் என மூன்று தெலுங்கு தேசத்தினை கொண்டது.
தெலுங்கர் மூலமே கோலாட்டம் பாடலு, படவ பாடலு, ஏதம் பாடலு, லாலி பாடலு (தாலாட்டு), பெள்ளி பாடலு (கலியாணப் பாடல்), ரோகடி பாடலு (தானியம் இடிக்கும் போது அல்லது குத்தும் போது பாடும் பாடல்) என்ற பதம் பாவிக்கப்பட்டது.
இவர்களது மூதாதையரான தியாகையர் சிறந்த பக்திக் கவிஞர். இவர் இயற்றிய பக்திப் பாடல்கள் சங்கீதத்திற்கு ஆரம்பமாயிற்று. சங்கீதத்தின் தந்தையான இவர் 1767 - 1847 காலப்பகுதியில் வாழ்ந்தவர். கர்நாடக சங்கீதத்தின் ஆரம்பகர்த்தாவாக கொள்ளப்படுகிறார். இவர்களிடையே ஒன்பது பிரிவுகள் உள்ளன. "உகடி" - வருடப் பிறப்பு "டுசார” பெருநாள் மற்றும் மொகாரம் இவர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றும் இலங்கையில் கிட்டத்தட்ட 1,50,000 தெலுங்கர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இப் பெருநாளினை கொண்டாடுகிறார்கள். இவர்களில் பலருக்கு நாயுடு, ரெட்டி, ராவ் என்ற பெயர்கள் உண்டு. இவர்களது ஒன்பது பிரிவில் இவையும் அடங்கும். இலங்கையில் இவர்களை இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தற்போது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இலங்கையில் இவர்களின் வரலாற்றினை நோக்குவோமாயின் இலங்கை தெலுங்கு மக்கள் இந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆந்திரா அல்லது தெலுங்கு தேச வழித்தோன்றல்களேயாகும். ஆந்திராவில் கோயா, செஞ்சு, சாவரா இனக்குழுவினர் களின் வழித்தோன்றல்களே தமிழ் நாட்டு தெலுங்கர்கள். மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் ஆந்திரர்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த ஆந்திர ஆட்சிக்காரருள் ஒருவர் பல்லவ வம்ச மன்னர் வீரகுரச்சவர்மாவிற்கு தன் மகளை மணமுடித்ததன் பின்னர் வீரகுரச்சவர்மா தனது மாமனாரிடம் அரசின் தென்பகுதியை வாரிசுரிமையாக பெற்றுள்ளான். இது காஞ்சி வரை காணப்பட்டுள்ளது.
ராஜ ராஜ சோழர் காலத்தில் ஆந்திர நாட்டின் தென் மாவட்டங்கள் பட்டாபி, ரேநாடு, நெல்லூர் ஆகியவற்றை சோழர்கள் ஆண்டனர். சோழர்களுக்கு காகிதிய வம்சம் உதவியது. காகதிய வம்சம் ஆட்சிக்கு வந்தது. இதன் பின்னர் கடைசி காகிதிய அரசன் வராங்கல்லின் பிரதாப ருத்ர தேவாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1323ல் துணைத் தலைவராக இருந்த ஹரிஹரா புக்கா விஜயநகர அரசை உருவாக்கினான். இதன்பின் விஜய நகர பேரரசு ராஷசா தெங்காடி போரில் வீழ்ந்தது. பின்னர் படிப்படியாக தெலுங்கு நாடு குதுப்ஷாஹிகளின் கட்டுப்பாட்டிலும் பின்னர் ஹைதராபாத் நிஜாமின் கீழும் வந்தது. குண்டூர், கிருஷ்ணா , கோதாவரி விசாக மாவட்டங்கள் நிஜாமால் ஆங்கிலேயரிடம் பரிசளிக்கப்பட்டன. காக்கிநாடா, ஏனம் பிரான்சுகாரர்கள் வைத்திருந்தனர். தேலுங்கர்கள் இந்து மதக் கூறுகளை உளவாங்கியிருந்தாலும் தங்கள் சொந்த இயற்கை ஆண், பெண் தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர்.
சோழ மன்னர்கள் வங்கக் கடலுக்கு அப்பாலும் புலிக் கொடியுடன் ஆண்டனர். - 12ம் நூற்றாண்டு தமிழர் வரலாற்றில் ஒரு பொற்காலம். அக்காலத்தில் சோ சாளுக்கியருடன் போர் புரிந்துள்ளனர். சோழ மன்னன் இராஜராஜன் ே நாட்டைத் தாக்கினான். வேங்கியிலிருந்து பொண்னையும் பொருளையும் கொ வந்து இராசராசேசுவரர் கோயிலைக் கட்டினான். இக்காலத்தில் வேங்கையாக சோழ அரசுடன் திருமண உறவு கொள்ள காரணமாயிற்று. கீழைச் சாளுக்கியர் ஒருவனான விமலாதித்தியன் (கி.பி.1015 - 1022) இராஜராஜன் மன்னன் மகன் குந்தவையை திருமணம் புரிந்தான். இதைத் தொடர்ந்து சோழ, சாளுக்கிய மன்னர்களது திருமணங்கள் நடைபெற்றன. சாளுக்கிய அரச பரம்பரையில் வந்த இராஜராஜ நரேந்திரன் (1022 - 1061) சோழ அரசனான முதலாம் இராஜேந்திரனுடைய மகளாகிய அம்மங்கை தேவியை மணந்தான்.
இராஜராஜ நரேந்திரனுடைய மகன் தாய் வழியில் கங்கை கொண்ட சோழனது பேரன். இவரையே இரண்டாம் இராசேந்திரன் என்று அழைப்பர். இவர் தழிமைப் பயின்று தமிழராகவே நடந்தார். இளவரசனான இவனே பின்னர் அரசனானான். இவனே குலோத்துங்க சோழன் என அழைக்கப்பட்டான். இதன் மூலம் சோழ நாடும் வேங்கி நாடும் இணைந்தது. வேங்கி நாடு சோழ நாட்டின் ஒரு பகுதியானது. இதன் மூலம் தெலுங்கு நாட்டுப் பகுதிகள் தமிழ் நாட்டின் ஆட்சிக்குட்பட்டன. குலோத்துங்க சோழன் தந்தை வழியால் சாளுக்கியனாகவும் தாய் வழியில் சோழனுமாக விளங்கினான்.
குலோத்துங்கனுக்கு திறை செலுத்தி வந்தவன் கலிங்கநாட்டரசன். இவ் அரசன் அனந்தவர்மன் (சோழகங்கன்) திறை செலுத்த மறுத்ததால் குலோத்துங்கன் படை கரணாகர தொண்டமான் தலைமையில் கவிங்கத்தின் மீது போர் தொடுத்தது. குலோத்துங்கன் கலிங்கத்தினை வென்றான். இதுவே கலிங்கத்துப்பரணி எனப்படும். சயங்கொண்டார் இவ்வெற்றியை பாடினார். குலோத்துங்க சோழன் தன்னுடைய மக்களாகிய இராஜஇராஜ மும்முடி சோழன், வீர சோழன், சோழங்கன், விக்கிரம சோழன் ஆகியோரை ஒருவர் பின் ஒருவராக வேங்கியை ஆளச் செய்தான். அதன் பின் தெலுங்கு நாட்டு சோழருள் ஒருவனான சோடன் வேங்கிநாட்டு தலைவரானான். இதன் பின் விக்கரம சோழனும் அதன் பின அவன் மகன் 2ம் குலோத்துங்க சோழனும் பட்டத்துக்கு வந்தனர். இதன்பின் 3ம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் தெலுங்கர் திறை செலுத்த மறுத்தனர். இதன் பின் 3வது இராஜஇராஜ சோழன் ஆட்சிக்கு வந்தான். இதன் பின் சோழ அரசு வீழ்ச்சியடைந்தது.
சடையவர்மன் சுந்தர பாண்டியன் காரணமாக பாண்டியர் எழுச்சியுற்றனர். சுந்தர பாண்டியன் காஞ்சியின் மீது படையெடுத்து கோபாலன் எனும் தெலுங்கு சோழனை வென்றான். இவருக்குப் பின் வந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டி நாட்டை ஆண்டு வந்தான். இவன் தனது மகன் சுந்தரபாண்டியனுக்கு அரசை வழங்காமல் வைப்பாட்டியின் மகனான வீரபாண்டியனுக்கு முடி சூட்டினான. 5 காலத்தில் ஏற்பட்ட போர் காரணமாக சுந்தரபாண்டியன் முகம்மது பின் துகள் துணையை வேண்டினான். மாலிக்கபூர் சுந்தரபாண்டியனைப் பற்றி வீரபாண்டியனைப் பற்றியோ கவலையில்லாமல் மதுரை மீது படையெடுத்து கோயில்களை சூறையாடினான். மாலிக்கபூருக்குப் பின்னர் பல முஸ்லீம்கள் தமது நாடு மீது படையெடுத்தனர். தமிழ் நாட்டில் இஸ்லாம் ஆரம்பம் உருவாகியது. - பின்னரே விஜயநகர கிருஷ்ண தேவராயர் படையெடுத்து ஆட்சியை. பாண்டியருக்கு வழங்கி வரும்படி நாகம நாயகனை படையுடன் அனுப்பினார். இந்த கிருஷ்ண தேவராயரே தெலுங்கு மன்னராவார். இவர் அனுப்பிய நாகம நாயகர் கல் நாயகர் பெயர் தொடங்குகிறது. நாகம நாயகர் போரில் வென்று பாண்டியனிடம் நாட்டை கொடுக்காது தானே ஆட்சி செய்தான். இதற்கு எதிராக மகன் விசுவநாதநாயகரை அனுப்பி தந்தையுடன் போரிட செய்தார். மகன் வென்றான். விசுவநாதநாயகரை கிருஷ்ண தேவராயர் மதுரைக்கு தலைவராக்கினார். 1559 ஆண்டிலிருந்து பாண்டி நாடு நாயகருடைய ஆட்சிக்குட்பட்டது.
பாண்டி நாடு விஜய நகர பேரரசுக்கு கீழ் வர முன்னரே தெலுங்கு மக்கள் பலரும் தமிழ் நாட்டில் குடியிருந்தனர். இவர்களே பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். விசுவநாதருக்குப் பின் அவரது புதல்வர் குமார கிருஷ்ணப்ப நாயகர் பட்டத்துக்கு வந்தார். இவர் இலங்கையின் மீது படையெடுத்தார். கண்டியை வென்று தம் மைத்துனர் விஜயகோபால நாயகரை தம் பிரதிநிதியாக அமர்த்தினார். விஜய நகர அரசனாகிய 2ம் ஹரிகரனும் (1379 - 1406) 2ம் தேவராயனும் (1438) இலங்கையைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். கடலாதெனிய, லங்காதிலக விஹாரைகள் விஜய நகர சிற்ப முறையில் கட்டப்பட்டுள்ளன. 14ம் நூற்றாண்டில் கம்பளை இராசதானிக் காலத்தில் இந்தியக் கட்டிடக் கலை நிபுணர்களையும், சிற்பக் கலை நிபுணர்களை - கணேஷ்வர ஆச்சாரியார் இஸ்தாபதிராயர் ஆகியோர்களை வரவழைத்து இவ்விஹாரைகளை கட்டியுள்ளனர். இவ்விஹாரையஜனை கட்டியபோது அதில் மலையாளிகளும் பணிபுரிந்துள்ளனர். பிரதான கூரையினை வடிவமைத்து செய்தவர் ஒரு மலையாளி ஆகும். இலங்கையுடன் விஜயநகர மன்னர்கள் பலர் தொடர்புபட்டுள்ளனர்.
முதலாம் ஹரிஹரன் (1336), முதலாம் புக்கன்(1356), 2ம் ஹரிஹரன்(1377), இரண்டாம் புக்கன்(1404), முதலாம் தேவராயன்(1406), வீர விசயன்(1422), 2ம் தேவராயன்(1425), வீரபாஷர்(1465), ப்ரொட் தேவராயன்(1485), வீர நரசிம்மன்(1486), இம்மடி நரசிம்மன்(1492), கிருஷ்ண தேவராயன்(1509) இதில் 2ம் ஹரிகரனே இலங்கையில் காணிக்கை பெற்றதாகவும் லக்கண்ணா தலைமையில் இலங்கை மீது படையெடுத்ததோடு இவரது கடற்படை இலங்கையை கைப்பற்றியுள்ளது. விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தெலுங்கு மொழி அரசின் ஆதரவை இழந்து விட்டது. மதுரை நாயக்க மன்னர்களும், தஞ்சை அரசுகளும் தெலுங்கு மொழிக்கு ஆதரவு வழங்கினர். 15ம், 16ம், 17ம், நூற்றாண்டுகளில் தெலுங்கர் தெலுங்கு நாட்டில் இருந்து குடி பெயர்ந்து தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நிரந்தரமாகத் தங்கினர். தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகம் வாழ்ந்தனர். தஞ்சையையும், மதுரையையும் ஆண்ட நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெலங்கர் பல இடங்களுக்கும் குடிபெயர்ந்தனர்.
தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயகர் (1600 - 1631) இரண்டாவது கிருஷ்ண தேவராயர் என்றே அழைக்கப்பட்டார்.
மலைநாட்டினைப் பொறுத்தவரை நாயகர் ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது. நாயகர் வம்சம் எவ்வாறு ஆட்சிக்கு வந்தது என்பதை நோக்கில் சேன சம்பத் விக்ரமபாக (1473 - 1511), ஜயவீர(1511 -1551), கரலியத்த பண்டார (1551 - 1581), 1ம் இராஜசிங்கன்(1581 - 1590) 1ம் விமலதர்மசூரியன்(1590 - 1604), செனரத் (1605 - 1635), 2ம் இராஜசிங்க ன் (1635 - 1687), 2ம் விமலதர்மசூரியன் (1687 - 1706), மகன் நரேந்திரசிங்கன் (1706 - 1739) ஆட்சியாளனானார்கள். 2ம் விமலதர்மசூரியன் தஞ்சாவூர் மன்னனின் மகளை திருமணம் செய்தான். 1706ல் கண்டிய மன்னனுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர், கோவில்பட்டு, இராஜபாளையம், திருநெல்வேலி பகுதிகளில் குடியேறியுள்ளனர். இங்கு தொழில் காரணமாகவும், பஞ்சத்தினாலும் - மாவட்டத்தில் குடியேறினர். இங்கு நாயகர்கள் இவர்களை ஆதரிக்க இடையறு செய்துள்ளனர். தெலுங்கு மன்னர்கள் நாயகர்கள் தம் ஆட்சி எல்லை விரிவுப்படுத்தியபோது தெலுங்கு பிராமணர்களையும், தெலுங்கு சக்கிலியர்களையும் உடன் அழைத்து வந்துள்ளனர். இவர்கள் மதுரையில் திருமலை நாயகர் அரண்மனையைச் சுற்றி பத்துதூண், விளக்கத்தூண், அனுப்பானடி பகுதிகளில் அரண்மனையைச் சுற்றி பத்துதூண், விளக்கத்தாண். - கங்குவதற்கும், நெசவு தொழில் செய்வதற்கும் ஆடை துவைத்தலக் குடியமர்த்தினர். பிராமணர்களுக்கு வைகை ஆற்றின் தென் பகுதியை வல வேதபாராயணம் செய்வதற்கான சூழலை ஏற்படுத்தினர். தெலுங்கு சக்கிலியர்கள் வளரின் ஒதுக்குப்புறமாக இடமளித்து காலணி உற்பத்தி, நகர சுத்திகரிப்ப. ஆகியவற்றில் ஈடுபடுத்தினர். இவர்களிடையே சாதி முரண்பாடு என் குடும்பங்களோடு விரும்பிய பகுதியில் தொழில் செய்ய சென்றனர். இவர்கள் நாயகர் ஆட்சிக் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் இலங்கைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
மலையாளிகளின் இலங்கை விஜயம் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளது. எல்லாளன் - மன்னன் துட்டகாமினியால் தோற்கடிக்கப்பட்ட ஏழாவது நாளில் இவரின் மருமகன் பல்லுவ அல்லது வல்லுகன் தலைமையில் 6000 வீரர் கொண்ட படை மாந்தோட்டத்தில் வந்திறங்கியுள்ளனர். இப்படை துட்டகாமினியின் படைத்தளபதி புஸ்ஸதேவ என்பவரால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படையில் மலையாளிகளும் தெலுங்கரும் இருந்துள்ளனர்.
கரிகால சோழன் (110 - 112) 12000 இலங்கையரை சிறைப்பிடித்து காவிரிக்கு அணை கட்டினான். கஜபாகு மன்னர் இவர்களை மீட்டதோடு இருமடங்கு தமிழரை மீட்டு வந்தார் எனக் கூறப்படுகிறது. இவர்களோடு வந்தவர்களுள் மலையாளிகளும் தெலுங்கர்களும் இருந்துள்ளனர். இந்த மீட்பு சேரன் செங்குட்டுவனுடன் நட்பு ரீதியாக திகழ்ந்ததாக சில வரலாற்று நூல்கள் கூறுகின்றன. சேர நாடு தமிழ், தெலுங்கு மக்களைக் கொண்டதாகவே காணப்பட்டது. கஜபாகு கொண்டுவந்தவர்களை 'பெரும்பாகம்' என்ற இடத்தில் குடியமர்த்தினார். இவர்களுல் பெரும்பாலானவர்களை குடியேற்றியதால் பெரும்பாகம் எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதையே மகா - தளய என்றும் இப்போது மாத்தளை என்றும் பெயர் வரக் காரணமாயிற்று. இவர்கள் அநேகமானோர் தெலுங்கு வம்சாவழிகளே எனக் கருத வேண்டியுள்ளது.
பூஜாவலி என்ற நூலிலே 13ம் நூற்றாண்டில் கலிங்க மாகனிடம் 44000 வீரர்களும், ஜெயபாகுவிடம் 40000 வீரர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. சூழவம்சப்படி ஜெயபாகுவுக்கு துணையாக 44000 கேரள படை வீரர்கள் இருந்ததாக்க கூறப்படுகிறது. இதனை சில நூல்கள் கேரள தமிழர்கள் எனக் கூறுகிறது. இவர்கள் மலையாளிகளாகவும் இருக்கலாம் அல்லது மலையாளிகளும் உள்ளடக்கப்பட்டி ருக்கலாம். இக்காலத்திலேயே அதிக மலையாளிகள் இலங்கையில் வாழ்ந்துள்ளன. 1590களில் அரசியல் காரணங்களினால் தோற்கடிக்கப்பட்ட மலபாரகள் (மலையாளிகள்) இலங்கைக்கு வந்து குடியேறியுள்ளனர்.
போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையில் குடியேறிய பரவர்கள் தரும் உறவுகளை மலையாளிகளுடன் ஏற்படுத்தியுள்ளனர். இதன்பின் டச்சுக்காரர் பெண்கேட்டு மதுரைக்குச்சென்ற தூதுக்குழுவில் சிதம்பரநாத், அடையப்பான் என்ற வாண்டு தமிழர்கள் இருந்துள்ளனர். அவர்கள் தம்முடன் எடுத்துச்சென்ற விண்ணப்பம் சிங்களம் தமிழ் தெலுங்கு மொழிகளில் இருந்துள்ளது. இக்காலத்தில் தமிழ் நாட்டினர் போர் வீரர்களாக வந்தனர். இவர்களை 'வடகத்தையர்' என அமைத்தனர். இவர்களுள் தெலுங்கரும், மலையாளிகளும் காணப்பட்டனர். தஞ்சாவூர் அரசியின் மகனே நரேந்திரசிங். நரேந்திரசிங்கனின் மனைவியின் சகோதரனே ஸ்ரீ விஜயராஜசிங்கன் (1739 - 1747) அவனது மனைவியின் சகோதரனே கீர்திதி ஸ்ரீ இராஜசிங்கன் (1747 - 1781) அவனது சகோதரன் இராஜாதி இராஜ சிங்கன் (1781 - 1798) அவரது மனைவியின் சகோதரனே விக்ரமராஜசிங்கன் (1798 - 1815) நரேந்திர இராஜசிங்கனுக்குப் பின் வந்த நாயகர்கள் இவர்கள் 76 ஆண்டுகள் ஆண்டுள்ளனர். இவர்கள் காலத்தில் தெலுங்கரும், மலையாளிகளும் பலர் குடும்பம் குடும்பமாக இங்கு வந்துள்ளனர்.
நாயக்கமன்னர்களினால் தலதா மாளிகை கட்டப்பட்டபோது தலதாமாளிகை கூரையினை வடிவமைத்து செய்தவர் ஒரு மலையாளி ஆவார். தலதாமாளிகைகட்டும் பொழுது பல மலையாளிகளும் தெலுங்கர்கள் பணிபுரிந்ததாக தலதாமாளிகை வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது.
மலையாளிகள் வாழ்ந்த வீதி மலபார் வீதி என கண்டியிலும், கம்பளையிலும் உள்ளது. மலபார் வீதி என்பது முன்னர் நாயக்கர்கள் வாழ்ந்த வீதி. அப்போது, அது குமரப்பா வீதி என அழைக்கப்பட்டது. இராஜசிங்கனின் இரண்டாவது மனைவியாக மலையாளி ஒருவரை திருமணஞ் செய்த பின்னர், அவரது குடும்பத்தினர் இங்கு குடியமர்ததப்பட்டனர். இவர்கள் மன்னருக்கு விசுவாசமானவர்களாக இருந்தனர். எனவே இவர்கள் இவ்வீதியில் குடியமர்த்தப்பட்டதால் குமரப்பா வீதி, மலபார் வீதி ஆயிற்று. இக்காலத்திலேயே மன்னர்களை தெய்யோ எனவும் நாணக்கர்களை நாயக்க தெய்யோ எனவும் மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
1710களில் மாப்பிள்ளை நாயகர், நரெனப்ப நாயகர், நடுகாட்டு சாமி நாயகர், கபடதுரை நாயகர், நாம் நாயகர் எனப் பலரும் குடும்பங்களுடன் இங்கு வந்து செல்வாக்குடன் வாழ்ந்துள்ளனர். நரெனப்ப நாயகரின் மகளே விஜயராஜசிங்கனின் மனைவியாகும். விக்கிரமராஜசிங்கனின் ஆட்சிக்குப் பின் ஆங்கிலேயருக்குப் பயந்து நாயக்க வமிசத்தினர் குருநாகல், மெல்சிரிபுர, கலிகமுவ, ஜோசப்வாஸ்புரம், வில்பாவ (வீரபாகுபுரம்) ஆகிய பகுதிகளுக்கும் ஹங்குரங்கெத்த, ஹாரகம, ஊருகொல்ல, குண்டசாலை பகுதிக்கும் சென்றுள்ளனர். கம்பளை ஆட்சிக் காலத்தில் அளகக்கோனார் குடும்பத்தினரின் ஆட்சி வலுப்பெற்று விளங்கியுள்ளது. இவர் சேர நாட்டு தலைநகரான வஞ்சியில் இருந்த பிரதான குடும்பத்தவர்கள். இவர்கள் றைகமவில் வாழ்ந்ததோடு அமைச்சர்களாகவும் விளங்கினர்.
கண்டி மன்னரின் கடைசிகாலத்தில் முன்னூறு மலபார்கள் காவலில் அமர்த்தப்படாது சுதந்திரமாக திரிகின்றனர் என்ற செய்தி தேசாதிபதி பிரவுண்றிக்குக்கு கடைத்துள்ளது. இதுவும் கண்டி படைவலிமை குறைந்துள்ளது என்பதை அவருக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
நாயகர் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு பேசும் பல்வேறு சாதியினர் ஆந்திராவிலிருந்து இடம் பெயர்ந்து முதலில் இராமநாதபுரம், அரும்புக்கோட்டை, விருதுநகர், காலத்தில் டச்சுக்காரர்கள், யாழ்ப்பாணத்தமிழர்களை மலபார் அழைத்துள்ளனர். மலையகத்தில் வழ்ந்த இந்திய வம்சாவளி கேரள மலையான் வேறு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 1796ல் பிரித்தானியர் இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றிய போது இங்கு வரி சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மலையாளிகளாகவும், தெலுங்கர்களாக இருந்துள்ளனர்.
1818ல் இலங்கையில் ஆங்கிலேயருக்கு எதிரான சிங்களவரின் கிளர்ச்சி. அடக்குவதற்கு ஐந்தாயிரம் தென்னிந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் மலையாளிகளும் தெலுங்கர்களும் அடங்கியிருந்தனர்.
இதன் பின் கோப்பி மற்றும் தேயிலை பயிர்ச்செய்கையின் ஆரம்பகாலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கூலி தோட்டத் தொழிலாளர்களும் மலையாளிகளும் தெலுங்கரும் இருந்துள்ளனர். நாயுடு பெயருடைய பலர் இக்காலத்தில் வருகை தந்துள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இறுதியாக செட்டியார்களைப் போல வியாபார நோக்குடன் ”கொச்சி” வியாபாரிகள் என அழைக்கப்படும் மலையாளிகள் வருகை தந்துள்ளனர்.
இதன் பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சி செல்வாக்கு செலுத்திய காலத்தில் தெலுங்கர் பல நாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆங்கிலேயர் காலத்து தொழிலாளர்கள் வருகை பற்றி பல்வேறு நூல்கள் உண்டு. இதில் சாதி அடிப்படையில் விகிதாசாரங்கள் தொகைகள் கூறப்பட்டுள்ளன. நாயுடு, ராவ், நாயர் சாதியினர் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
கேரள நாட்டின் அல்லது மலையாளிகளின் முக்கிய நகரமாக கொச்சின் விளங்குகிறது. கேரள இலங்கையைப் போல தென்னை மரங்கள் உண்டு. தென்னை சாராயத்திற்கும், கல்லுக:கம் பிரசித்தி பெற்ற இடம். இலங்கையிலும் கேரளக்காரர்களே அதாவது மலையாளிகளே அதிகம் பார்கள் அல்லது தவரணைகள் நடத்தினர். சாராயம், கல்லு இவர்களது முக்கிய வியாபாரமாகும். இவர்களது தவரணைகள் ”கொச்சி தவரணை” அல்லது ”கொச்சி பார்” என்றே அழைக்கப்பட்டது.
இலங்கையிலுள்ள கேரள வம்சாவழி மலையாளிகள் ஓனம் பண்டிகை, விசு ஆகிய பெருநாள்களை கொண்டாடுகின்றனர். இது தைப் பொங்கல் போல சூரியனுக்கு புது அறுவடையினை வழங்கும் விழாவாகும்.
எனவே இவ்விரு பிரிவினரைப் பற்றியும் தனித்தனியாக ஆராய வேண்டியதும் இவர்களது பதிவுகளை முன்கொணர வேண்டியதும் அவசியமாகும்.
உசாத்துணை நூல்கள்
- அரங்கநாதன்.பு.சு, 1974, விஜய நகரப்பேரரசு கிரட்டிண தேவராயர், சென்னை , தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்.
- சர்மா, சி.ஆர், 1987, தெலுங்கு இலககியம் ஒரு கண்ணோட்டம் சென்னை , தமிழ்நாடு பாரி நிலையம்.
- நீலகண்ட சாஸ்திரி, கே.ஏஈ 1966, தென் இந்திய வரலாறு. இலங்கை அரசாங்க பாஷைப்பகுதி.
- மாணிக்கம், தா.சா, 1974, தமிழும் தெலுங்கும், சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.
- வாழ்வியல் களஞ்சியம் தொகுதி - பத்து, 1988. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழம் தஞ்சாவூர்
ஆர்.மகேஸ்வரன் சிரேஷ்ட துணை நூலகர், பேராதனை பல்கலைக்கழகம்
நன்றி - மத்திய மாகான சாகித்திய விழா சிறப்பு மலர் 2018 -
+ comments + 1 comments
பதிவில் பட தகவல்கள் தவறு. மேலும் ஏகப்பட்ட எழுத்துப்பிழை.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...