Headlines News :
முகப்பு » , » மீரியபெத்த யோகராஜா அவர்களுடன் நேர்காணல்

மீரியபெத்த யோகராஜா அவர்களுடன் நேர்காணல்


2014 அக்டோபர் 29 இல் மீரியபெத்த – கொஸ்லந்த பகுதியில் நடந்த மன்சரிவலில் பெருமளவான மலையக தோட்டத்தொழிலாளர்கள் தமது வீடு, மற்றும் இருந்த சொத்துக்களோடு மண்ணோடு மண்ணாக புதையுண்டு மாண்டனர்.

காலை 07.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கொடுமையான அனர்த்தம் நிகழ சற்று முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்களும் தொழிலார்கள் சிலரும் மாத்திரமே தப்பித்தனர்.

அப்படி தப்பிய தொழிலாளர் ஒருவர் தான் யோகராஜா. 
அவரது மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளை என ஐவர் புதையுண்டு மாண்டனர். அவரது மனைவியின் உடலும் ஒரு சில மாத பேரக்குழந்தையின் உடலும் மாத்திரமே மண்ணுக்குள் இருந்து சடலங்களாக மீட்க கிடைத்தன.

சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. எஞ்சிய பலர் அகதிமுகாம்களில் வாழ்கிறார்கள். அனர்த்தம் நிகழ்ந்த இடத்திலிருந்து அனைவரும் வெளியேறிவிட்டாலும் இன்னமும் அருகாமையில் ஒரு வீட்டில் தங்கியிருகிறார் யோகராஜா. இரவு நேரங்களில் இழந்த குடும்பங்களை நினைத்து அந்த மலைக்கு மேல் நடந்து உலாவித்திரியும் மனிதர். அதன் பின்னர் தான் அறைக்கு வந்து அவர்களின் புகைப்படங்களை பார்த்து அழுதுவிட்டு நித்திரைகொள்பவர். தினசரி அதனை செய்பவர். இது ஒரு அனர்த்தம் அல்ல. படுகொலை என்று கூறி ஒரு முறைப்பாடையும் மனித உரிமை ஆணையகத்தில் செய்திருப்பவர். முக்கிய நாட்டு தலைவர்களுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் இன்னமும் இது குறித்து முறைப்பாடு செய்து வருபவர்.

நமது மலையகம் குழு அவரை சந்தித்து மேற்கொண்ட விரிவான பேட்டி இது.

சுவாரசியமான பல தகவல்களை இங்கு நமக்கு வழங்குகிறார். கூடவே ஆறுமுகம் தொண்டமானின் முகத்திரையை கிழிக்கிறார்.

இந்த நேர்காணலை மேற்கொள்ள திலகர், பழனி விஜயகுமார் ஆகியோர் சென்றிருந்தோம்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates