நேற்று (22-11-2014) இலங்கை கல்விச் சமூக சம்மேளம் அதிபர் -ஆசிரியர்களுககான பிரமாணக் குறிப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்றினை அட்டன் -டிக்கோயா நகர சபை மண்டபத்தில் ஒழுங்கமைத்திருந்தனர். செயலமர்வில் வளவாளராக சமூக அர்பணிப்பும் நேர்மையும் மற்றும் இத்துறையில் புலமைத்துவ தேடலையும் கொண்டிருந்த சம்மேளனத்தின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு. பி. ஈ. ஜி.சுரேந்தின் கலந்துக் கொண்டார். நூற்றுக்கணக்கானவர்கள்( ஆசிரியர்- அதிபர்- ஆசிரிய ஆலோசகர்கள்- கல்வி அதிகாரிகள்) கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வை ஒழுங்கமைப்பதில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ். குமார், பத்திரிகை மற்றும் பிரச்சாரக் குழு தலைவர் எம். எஸ். இங்கர்சால் முதலானோர் முனைப்புடன் செயற்பட்டுள்ளனர்.
முகப்பு »
அறிவித்தல்
» அதிபர், ஆசிரியர்களுக்கான பிரமாணக் குறிப்பு பற்றிய செயலமர்வு- இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்
அதிபர், ஆசிரியர்களுக்கான பிரமாணக் குறிப்பு பற்றிய செயலமர்வு- இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்
Labels:
அறிவித்தல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...