சுகவாழ்வு சஞ்சிகை ஆசிரியர் சட்டத்தரணி இரா. சடகோபன் எழுதி வீரகேசரி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள கண்டிச் சீமையிலே என்ற இலங்கையின் கோப்பிக்கால வலாற்று ஆவண நூலின் வெளியீட்டு விழா மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் சாஹித்திய ரத்னா விருது பெற்ற தெளிவத்தை ஜோசப் தலைமையில் 14 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு வெள்ளவத்தை கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறும்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளும் இவ்விழாவில் வீரகேசரி நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன், முன்னணி தொழிலதிபர் தெ. ஈஸ்வரன், ஹில் நீட்ஸ் நிறுவன அதிபர் டி. கிருஷ்ணமூர்த்தி, பா.உ. ஆர். யோகராஜன், தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் டாக்டர். எஸ். மோகன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், முன்னாள் பிரதி அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமார், சமூக நிலைமாற்றத்துக்கான அமைப்பின் தலைவர் பி.பி. தேவராஜ், மட்டக்குளி அறிவொளி மன்ற அமைப்பாளர் கே.டி. குருசாமி, மலையக தேயிலை அருங்காட்சியக ஸ்தாபகர் பி. முத்துலிங்கம் ஆகி யோர் சிறப்பு அதிதிக ளாகக் கலந்துகொள்கின்றனர்.
நூலின் முதல் பிரதியை வெள்ளவத்தை லிட்டில் ஏசியா எம்போரியம் நிறுவனத்தின் அதிபர் ஆர்.பி.எஸ். ராமசாமி ராஜரட்ணம், இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் பெற்றுக்கொள்வார். நூலாய்வினை விமர்சகரும் சமூக ஆய்வாளருமான எம். வாமதேவன், கருத்துரை மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம், நூல் அறிமுகவுரை கல்வியமைச்சின் பணிப்பாளர் கவிஞர் சு. முரளிதரன், வெளியீட்டுரை வீரகேசரி ஐ.ரி. முகாமையாளர் எஸ்.ரி. தயாளன், வரவேற்புரை செல்வி எஸ். ஷாமினி, தமிழ் வாழ்த்து சக்தி சுப்பர் ஸ்டார் செல்வி வைசாலி யோகநாதன், ஏற்புரை நூலாசிரியர் இரா. சடகோபன், நன்றியுரை கல்வியமைச்சின் தமிழ்ப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜி. சடகோபன், நிகழ்ச்சித்தொகுப்பு மல்லியப்பு சந்தி திலகர் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...