ஹப்புத்தளையில் மத்தியமாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் |
பயிற்சிக்கும், ஆசிரியர் பதவிக்குமுள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் மலையக அரசியல்வாதிகளாக இருப்பது நகைப்புக்குறியது என மத்தியமாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஹப்புதளையில் ஆசிரிய உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு தயாராகும் விண்ணப்பதாரிகளுக்கு இலவச உசாதுனை கை நூல்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வின் அவர் மேலும் பேசியபோது…
நடத்தப்படவிருக்கின்ற ஆசிரியர் உதவியாளர் போட்டிப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்றவர்களுக்கு உதவும் நோக்கில் அமைச்சர் ஆறுமுகன் தொhண்டமானின் அனுசரனையோடு நாடளாவிய ரீதியில் இலவசமாக பயிற்சிகளையும், அதற்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கிவருகின்றோம். ஆனால் சில அரசியல்வாதிகள் ஆசிரிய உதவியாளர்கள் தொடர்பில் சரியான விளக்கங்களை பெற்றுக்கொள்ளாமல் வெறுமனே விதன்டாவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் குருகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்கு உபாயம் தேடும் இழிவான வழிமுறையை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு மனசாட்சியோடு சிந்தித்தால் தற்போதய நிலையில் ஒரே முறையில் 3000ம் மலையக இளைஞர்கள் அரசதுறையில் இணையப்போகிறார்கள் என்ற சமூகசந்தோசத்தை உணர்வார்கள். மலையகத்தில் சிலர் தமது அரசியல் விளையாட்டுக்கு எமது இளைஞர்களை மைதானங்களாக பயன்படுத்த முயற்சிக்காமல் தமது அரசியல் அந்தஸ்த்தை மைதானங்களாக்கி இளைஞர்களுக்கு களம் அமைத்து கொடுக்க வேண்டும்.
நமது நாட்டில் ஆசிரியர் தொழிலிற்கு அடிப்படை தகுதியாக ஒன்றில் பல்கலைக்கழக பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதைக்கூட அறியாமல் தொடர் அறிக்கை விடுகிறார்களா? அல்லது தமது அரசியல் இருப்பிற்காக அறிக்கை விடுவதை தவிர வேறு வழி இல்லை என்பதனால் நாடகமாடுகிறார்களா? ஆசிரிய உதவியாளர் என்பது பயிற்சி காலத்திலேயே பட்டதாரிகளாக அல்லது ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களாக மாற்றி அவர்களை ஆசிரிய சேவைக்கு உள்வாங்க செய்யும் வேலைத்திட்டமாகும். தற்போது ஆசிரிய உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களில் பெரும்பாண்மையோர் பல்கலைக்கழகத்திற்கோ அல்லது கல்வியல் கல்லூரிகளுக்கோ செல்வதற்கு போதுமான இசெட் புள்ளிகளை பெற்றிருக்காதவர்கள் இவர்களுக்கு கல்வியல் கல்லூரிகளுக்கு சென்று ஆசிரியராக வருவதற்கு ஒப்பான மாற்று வழிதான் இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனமாகும்.
ஆசிரியர் உதவியாளர்களுக்கு 6000 ரூபா கொடுப்பணவாக வழங்கப்படவிருப்பதை பலர் கொச்சைப்படுத்தி பேசுகின்றனர். இது ஆசிரிய பதவிக்கான சம்பளம் அல்ல. அவர்கள் பயிற்சியை முடிப்பதற்கான உதவுதொகை மட்டுமே. பயிற்சியின் பின்னர் இவர்கள் அரசாங்க ஆசிரியர் சேவையில் உள்ள சம்பளத்திற்கு உரித்துடையவர்களாவார்கள். பயிற்சியை முடிப்பதற்கான அதி உச்ச காலம் 5 வருடங்களாகும். ஆனால் ஆசிரியர் பயிற்சியை இரண்டு வருடங்களில் கூட முடிக்க முடியும். இதில் பலர் பல்கலைகழகங்களில் படித்துக்கொண்டு வெளிவாரி பட்டங்களை பெற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்.
தற்போது நாட்டில் கூடுதலான ஆசிரிய நியமன்ஙகள் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சியை முடித்தவர்களுக்கே வழங்கப்படுகிறது. கல்வியல் கல்லூரிகளுக்கு அனுமதிப்பெற கூடுதலான இசெட் புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். இது பல்கலைக்கழக அனுமதிக்கு ஒப்பானது. இந்த முறையில் 3000ம் பேருக்கு ஆசிரியர் நியமனத்தைப்பெற 15 வருடங்கள் செல்லும். அத்துடன் கல்வியல் கல்லுரிகளில் பயிலுபவர்களின் பயிற்சி காலம் 3 வருடங்களாகும். இதில் 2 வருடங்கள் உள்ளக பயிற்சியும், 1 வருடம் கள பயிற்சியும் வழங்கப்படுகிறது. கள பயிற்சி காலத்தில் மட்டும் ஒரு பயிற்சியாளருக்கு 2500 ரூபா கொடுப்பணவு வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்து சுமார் ஒரு வருடங்கள் நியமனத்திற்கு காத்திருக்க வேண்டும். அதுவும் நியமனத்திற்கான உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்காது. அப்டியென்றால் இலங்கையில் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா பயிற்சியை பெரும் அனைவரும் நான்காம் தர பிரஜைகளா? எமது சமூகத்தை இழிவுபடுத்திப் இன்பம் காண்பதில் பெருமைகொள்ளும் மன நோயாளர்களின் கருத்துக்களை புறந்தள்ளி மலையக இளைஞர்கள் சாதனைப்படைத்து காட்டவேண்டும். பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுபவர்களுக்கு அரசாங்கம் சம்பளத்தையோ வேலை உத்தரவாதத்தையோ வழங்குவதில்லை. நாட்டில் பெரும்பாலான பட்டதாரிகள் வருடக்கணக்கில் வேலையற்றிருக்கின்றனர். அந்தவகையில் ஆசிரிய உதவியாளர் நியமனம் 6000 ரூபா உதவு தொகையுடன் வேலை உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இது மலையகத்திற்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலம் கிடைத்த வரபிரசாதமாகும்.
ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பான சில அரசியல்வாதிகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை விதைத்து சமூகத்தை பிழையாக வழிநடத்த முற்படுகின்றனர். ஆனால் வினைவிதைத்தவர்கள் அதையே அறுவடை செய்வார்கள் என்பதை கடந்த காலம் பலமுறை பாடம்புகட்டி காட்டியிருக்கிறது. எமது சமூகம் மிக புத்திசாதூரியமானது எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)
நன்றி - malayagam.lk
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...