அட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக நல நிறுவம் (CSC) 2012ஆம் ஆண்டு மலையகத்திற்கான தனித்துவமான நாட்காட்டி ஒன்றினை வெளியிட்டிருந்தது. வழமையான நாட்காட்டி என்பதற்கு மாற்றாக ஒரு வரலாற்று ஆவணமாக இதனை காணமுடிகின்றது. அதுவும் மலையத்திற்கான தனித்துவத்தினை தன்னகத்தே கொண்ட இந்நாட்காட்டி மலையகம் சார்ந்த வரலாற்றினை பதிவு செய்துள்ளது.
நாட்காட்டியினுள் காணப்படும் விசேட அம்சங்கள்
1.புகைப்படங்கள்
•19அம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து தமிழர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமைக்கான காரணிகளை காட்டும் படங்கள்
•இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சிறிய படகுகளில் தொழிலாளர்கள் ஏற்றி வரப்படும் காட்சிகளை கொண்ட படங்கள்
•தோட்டங்களில் தொழிலாளர்களை கட்டுக்குள் வைத்திருந்த பெரியங்கங்காணிகளின் படங்கள்
•கோப்பி தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைசெய்யும் காட்சிகளை காட்டும் படங்கள்
•தேயிலை, இறப்பர் தோட்ங்களுக்கு அதிகமான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்ட காட்சிகள்
•வெள்ளையர்களின் காலத்தில் தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்கள், அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை காட்சிப்படுத்தும் படங்கள்
•பிரஜாவுரிமை பரிக்கப்பட்ட காலத்திய தலைவர்களின் படங்கள்
•மலையக பகுதிகளில் ஆரம்பிக்கபட்ட புகையிரத சேவை, தேயிலை கொண்டுச் செல்லும் கப்பல் என்பவற்றை பிரதிபலிக்கும் படங்கள்
•மலையக கல்வித்துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் படங்கள்
•நாட்டின் இன முரண்பாடுகள் மலையகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை பிரதிபலிக்கும் படங்கள்
•மலையக தொழிலாளர்களின் வாழ்விடச்சூழல்கள், தொழிற் தளங்கள், அபிவிருத்தி திட்டங்கள், கூட்டு ஒப்பந்த நிகழ்வுகள் முதலானவற்றை பிரதிபலிக்கும் படங்கள்
•தேயிலை தொழற் துறையில் மாற்றம் இல்லாத போதும் உலக சந்தையில் தேயிலைக்கான கிராக்கி உயர்வடைதல், மலையகத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களை குறியீட்டு வடிவில் குறிக்கும் படங்கள்
2.விசேட தினங்கள் - சர்வதேச நினைவுத்தினங்களும் இலங்கைக்கு உரிய விசேட தினங்களும் அவ்வந் திகதிகளின் மேல் குறிப்பிடப்பட்டுள்ளது.
3.வரலாற்றில் சில நபர்கள் (மறைவு தினம்) எனும் தலைப்பில் மலையகத்தில் முக்கியத்துவம் பெறும் நபர்களினதும் உலகளவில் பிரபல்யமான பலரின் நினைவுத்தினங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
4.வரலாற்றில் சில நிகழ்வுகள் எனும் தலைப்பில் மலையகத்தில் விளைவுகளை ஏற்படுத்திய பல நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக போராட்டங்கள், சட்டங்கள் போன்றவை)
5.நபர்களின் படங்கள் - நாட்காட்டியின் கீழ்ப்பகுதியில் சிறிய அளவிலான தனி நபர்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இப்படங்கள் மலைய தியாகிகள், தொழிற்சங்கள மற்றும் அரசியல் தலைவர்கள் என்பவற்றோடு உலக பிரசித்தி பெற்றவர்களின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்படியான தலைப்புகளில் ஒவ்வொரு மாதத்தையும் காட்டும் பக்கங்களில் வெவ்வேறான பல அரிய குறிப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மலையக நாட்காட்டியினை அநேகமானோர் பார்த்திருப்பதற்கான சாத்தியங்கள் குறைவானதாக இருந்திருக்கும் என்ற யாதார்த்தத்தை புரிந்து இக்குறிப்புக்கள் இங்கே வழங்கப்படுகின்றன. ஆர்வர்கள் பயன்பெறுவர் என நம்புகின்றோம். அட்டன் சமூக நல நிறுவனத்திற்கும் இவ் நாட்காட்டியை உருவாக்கியளித்தவர்களுக்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...