திருகோணமலை, நகர சபைக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடச் சென்ற அருட்தந்தை பொன்கலன், கடலில் மூழ்கி திங்கட்கிழமை (29/02/2016) இரவு உயிரிழந்தார்.
யாழ் மண்ணில் மலர்ந்து வளர்ந்து ஆரம்பக் கல்வியைப் பயின்று, பெல்ஜியத்தில் தனது உயர் கல்வியைக் கற்று மலையகத்தில் சமூகப் பணிக்காக தனது வாழ்க்கையை அர்பணித்த திருப்பணியாளர் சந்தியாப்பிள்ளை கீத பொன்கலன் அடிகளார் 29-02-2016 அன்று அகால மரணமடைந்தார். அடிகளார் மலையகச் சமூகம் சார்ந்த ஒரு சிறந்த ஆய்வாளரும், பதுளையில் உஸ்கொட் என்ற சமூக நிறுவனத்தையும், பண்டாரவளையில் லியோதா மார்ங்கா ஆச்சிரமத்தையும் அமைத்து அவற்றில் தனது இறுதி காலம் வரை சமூகக் களப்பணியாற்றிய சேவையாளருமாவார்.
மலையக ஆய்வாளரான இவர் 20க்கு மேற்பட்ட மலையக நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளதுடன் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவராவார்.
மலையகத்தில் ஏற்பட்ட முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளில் போதெல்லாம் தனது காத்திரமான கருத்துக்களை துணிச்சலுடன் முன்வைத்து வந்தவர். மலையகம் குறித்து தெளிவான தூர நோக்கு பார்வையைக் கொண்ட ஒரு புத்திஜீவி. மலையகத்தைப் பொருத்தவரையில் ஒரு பேரிழப்பு .
அவரின் பிரிவால் துயருறும் அனைவருடனும் "நமது மலையகம்" இந்த வேளை துயரைப் பகிர்ந்துகொள்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...