Headlines News :
முகப்பு » , , , » ஜனாதிபதி தேர்தல்களின் பிரதிபலிப்புகள் - விக்டர் ஐவன்

ஜனாதிபதி தேர்தல்களின் பிரதிபலிப்புகள் - விக்டர் ஐவன்


யுத்தம் முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அந்த யுத்தத்தினை முன்னின்று நடாத்திய வீரர்கள் இருவருக்கிடையிலான பாரிய போட்டியொன்றாக 2010 ஆம் ஜனாதிபதி தேர்தலை குறிப்பிடலாம். குறித்த தேர்தலின் ஊடாக யுத்தகளத்தில் நின்று தலைமைத்துவம் வழங்கிய சரத் பொன்சேகா தோற்கடிப்பட்டு யுத்தத்திற்காக அரசியல் தலைமை வழங்கிய மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானார். எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தனக்கு எந்த விதத்திலும் நிகராக கருத முடியாத பொலன்னறுவப் பிரதேசத்தவர் ஒருவரிடம் தோற்றுப் போனார்.

பல காலம் இருந்து வந்த உள்நாட்டு யுத்தத்தின் முடிவு, போர் வீரர்கள் மூவரை உருவாக்கியிருந்தது. மஹிந்த ராஜபக்ச, ஜெனரால் சரத் பொன்சேகா, கோத்தாபய ராஜபக்ச என்பதாக அவர்கள் மூவரையும் முறையே குறித்திக் காட்டலாம். ஜெனரால் பொன்சேகா மஹிந்த ராஜபக்சவிடம் தோல்வி கண்டார். மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்டார். இந்த முறை ஜனாதிபதித் தேர்தல் ஊடாக மூன்றாவது போர் வீரரான கோத்தாபய ராஜபக்சவின் பலம் பரிசீலனைக்கு உற்படுத்தப்படுகின்றது.

சுமார் முப்பதாண்டு காலமாக நடைபெற்றுவந்த உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக நீண்டகாலமாக இடம்பெற்றுவந்த நாசகார கலவரங்கள் தேசத்தையும் சமூகத்தையும் உச்ச அளவில் பாதிப்படையச் செய்திருக்கின்றன. இவ்வாறு மிகவுமே பாரதூரமான பாதிப்புககளுக்கு உள்ளாகியிருந்த தேசத்தையும் சமூகத்தையும் மீள்கட்டியெழுப்பும் திறன்கள் ஆளும் கட்சிகளிடம் இல்லாத நிலையில் நாடு பாரியதொரு பின்னடைவைச் சந்திக்கும் என்பதாக கடந்த காலங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். இது குறித்து அன்றைய காலகட்டங்களில் வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குறிப்பிட்டதுடன் 2011 ஆம் ஆண்டில் ஒரு புத்தகம் ஊடாகக்கூட விடயங்கள் குறித்து எனது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றேன்.

சரத் பொன்சேகா.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜக்சவுக்கு எதிராக சரத் பொன்சேகா கலமிறக்கசப்படுவார் என்பதனை அவரது பெயர் முன்மொழியப்படுவதற்கு முன்னதாகவே நான் அறிந்திருந்தேன். இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவள் எனக்கிருந்துவந்தது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னை தொலைபேசியில் அழைத்த ஒரு சந்தர்ப்பத்தில் இது குறித்து அவரிடம் வினவினேன். ஜெனரால் சரத் பொன்சேகா அடுத்த தேர்தலில் உங்களை எதிர்த்து போட்டியிடுவது குறித்த உங்களது அபிப்பிராயம் என்ன? என்பதாக அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

ஜனாதிபதி எனது கேள்வி குறித்த அவரது ஈடுபாட்டடினை உணர்த்திய போதிலும் ஜெனரால் சரத் பொன்சேகா தனக்கு எதிராக போட்டியிடுவார் என்ற நம்பிக்கை அப்போது அவரிடம் இருக்கவில்லை. முப்படைகளின் தலைவர்களும் அவர்களது மனைவியர்களும் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் தன்னுடன் பகலுணவு அருந்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அவர்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் என்னிடம் குறிப்பிடலாம் அல்லது சிறாணியிடம் குறிப்பிடலாம். முப்படைத் தலைவர்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரத்தினை நான் வழங்கியிருக்கின்றேன். வெளிநாட்டிலிருந்து இலங்கை வருகின்ற அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்கின்ற விருந்துகளில் கூட அவர்களைக் கலந்துகொள்ளச் செய்கின்றேன். என்பதாக குறிப்பிட்டுவிட்டு சரத் பொன்சேகா எனக்கெதிராக தேர்தலில் போட்டியிடுவார் என்பதாக நான் நம்பவில்லை என்றார்.

அதற்கு சில தினங்களின் பின்னர் ஜனாதிபதி தொலைபேசி ஊடாக என்னைத் தெடர்புகொண்டார். “நீங்கள் ஒரு விசித்திரமானவரல்லவா” என்பது போன்ற ஒரு வார்த்தையை அன்று குறிப்பிட்டதாக எனக்கு நினைவில் இருக்கின்றது. ஜெனரல் சரத் பொன்சேக்கா தேர்தல் போட்டியிடுவது குறித்து நான் அவரிடம் வினவியதைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக கோத்தாபய ராஜபக்ச மற்றும் புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரிகள் என்பவர்களிடம் வினவியிருக்கின்றார். சரத் பொன்சேகா போட்டியிடுவது குறித்து அவர்கள் எவருமே அறியாதிருந்திருக்கின்றனர். ஜெனரால் சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சரியாகத் தெரிந்து கொண்டதன் பின்னரே என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டிருகின்றார். “சரத்பொன்சேகா போட்டியிடுவது குறித்து கோத்தா அறிந்திருக்கவுமில்லை புலனாய்வுப் பிரிவு அறிந்திக்கவுமில்லை எனினும் விக்டர் ஐவனுக்கு தெரிந்திருக்கின்றது” என்பதாக கூறி அன்றைய தொலைபேசி உரையாடலின் இறுதியில் குறிப்பிட்டார்.

நான் அந்த உரையாடலை அத்துடன் முடித்துக்கொள்ள விடாமல் இன்னுமொரு கேள்வியை அவரிடம் முன்வைத்தேன். படைத்தலைவர் என்ற அடிப்படையில் யாரேனும் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதானால் அதற்கான அனுமதி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டால் மாத்திரமே குறித்த நபருக்கு தேர்தலில் போட்டியிட முடியுமாக அமையும். எனவே சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் போட்டியிட நீங்கள் அனுமதியினை வழங்குவீர்களா என்பதாக அவரிடம் வினவினேன். “ஆம் அவருக்கு அனுமதி வழங்குவேன் அவர் வெற்றிபெற்றால் இறைவனின் பாதுகாப்பு எனக்கு கிடைக்க வேண்டும், நான் வெற்றி பெற்றால் இறைவனின் பாதுகாப்பு அவருக்கு கிடைக்கவேண்டும்.” இது ஜனாதிபதி தந்த குறுகிய பதிலாகும். தான் முகம்கொடுக்கவிருக்கும் சவால்களைப் பொருட்படுத்தாது பொன்சேகாவுக்கு போட்டியிட அனுமதி வழங்கியமையானது அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

2010 ஜனாதிபதி தேர்தல்
உள்நாட்டு யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருவதில் ஜெனரால் பொன்சேகா பாரிய பங்களிப்புச் செய்தவராவார். இது தொடர்பில் நான் அவர் மீது மரியாதை வைத்திருந்த போதிலும் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த உடனேயே ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவது குறித்து நல்லபிப்பிராயம் என்னிடம் இருக்கவில்லை. மிலிடரி மனப்பாங்கு யத்தம் தொடர்பான பணிக்கு தேவையானதொரு விடயம் என்ற போதிலும் அரசியல் தலைவர் ஒருவருக்கு மிலிடரி மனப்பாங்கு இல்லாமல் ஜனநாயக மனப்பாங்கு இருத்தல் வேண்டும் என்பதாக கருதுகின்றேன். சரத் பொன்சேகா என்பவர் போன்ற ஒருவர் நாட்டின் தலைவராக வேண்டுமெனில் அவர் ஜனநாயக அரசியலில் சில காலம் ஈடுபட்டு அதன் உடாக ஜனநாயக மனநிலையை உருவாக்கிக் கொண்டதன் பின்னர் தான் நாட்டின் தலைவராவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக இருந்தது. இது தொடர்பான எனது நிலைப்பாட்டினை அன்றைய காலப்பகுதியில் வெளிப்படுத்தியதுடன் அன்று நாட்டில் பின்பற்றிவந்த கணிப்பீட்டு முறைகளைத் தாண்டி இந்த இருவரது போட்டியில் மஹிந்த ராஜபக்ச இலகுவான வெற்றியைப் பெற்றுவதற்காள அதிக வாய்ப்புகள் இருப்பதாக எனது அனுமானத்தினையும் வெளியிட்டிருந்தேன்.

2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடாது யுத்தத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த அரசியல் தலைவரின் வெற்றிக்காக தமது பங்களிப்பினை வழங்கியிருக்க முடிந்திருப்பின் அதன் ஊடாக நாட்டுக்கு நலன்கள் ஏற்பட்டிருக்க காரணமாக அமைந்திருக்கும். இதன் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சி கூட பல நலன்களை ஈட்டிக்கொண்டிருக்கும். அன்று யுத்தத்தினை வெற்றி கொண்டதன் விளைவாக மஹிந்த ராஜபக்ச நாட்டுமக்களின் மத்தியில் பெற்றிருந்த நன்மதிப்பின் அளவுக்கு ஏற்ப அவரை தோல்வியடையச் செய்வதற்கான இயலுமையை ஐக்கிய தேசியக் கட்சி அன்று பெற்றிருக்கவில்லை. இந்த நிலையைப் புரிந்துகொண்டு யுத்தத்தின் வெற்றிக்கு செய்கின்ற மரியாதையொன்றாக கருதி குறித்த தேர்தலில் தமது சார்பில் அபேட்சகர் ஒருவரை கலமிறக்காது மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக பங்களித்து அதற்கு பகரமாக அரசியல் சீர்திருத்தமொன்றைக் கோரியிருப்பின் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கி வீழ்ச்சியடையாமல் இருந்திருக்கும். அத்துடன் பலமான பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி ஒன்றையும் தன்வசம் தக்கவைத்துக்கொள்ள முடியுமாக அமைந்திருக்கும். அவ்வாறு நடந்திருக்குமாயின் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்பவற்றிற்கிடையிலான வைராக்கிய நிலை வளர்ச்சி காணாது எதிர்க்கட்சி கோருகின்ற அரசியல் சீர்திருத்தத்தினை கொடுக்க வேண்டிய நிலை மஹிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்டிருக்கும். இந்த ஒட்டு மொத்த நடவடிக்கைகளின் பிரதி பலானக அடக்குமுறை ஆட்சி முறைக்கு பதிலாக சுமூகமான ஆட்சிமுறை ஒன்று ஏற்பட்டிருக்கும் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கி வீழ்ச்சி கண்டிராமலும் இருந்திருக்கும்.

2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடனான சந்திப்பொன்றின் போது எனது எண்ணப்பாடு குறித்து அவரிடம் தெரிவித்தேன். திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்துகொணட அந்த சந்திப்பில் நான் கூறிய விடயங்களை கவனமாக செவிமடுத்துவிட்டு “ அது குறித்து அந்த அளவிற்கு நாம் சிந்திக்கவில்லை” என்பதாக ரனில் விக்ரமசிங்க பதிலளித்தார்.

பொன்சேகாவிடம் பழிதீர்த்துக்கொள்ளல்
தேர்தல் முடிவுகளை கேட்பதற்காகவென நான் பொதுவாகவே தூக்கம் துறப்பதில்லை. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நேர காலத்தோடு நித்திரைக்குச் சென்று அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து தேர்தல் முடிவுகளுக்கு காதுகொடுத்தேன். தேர்தல் குறித்த கரு ஜயசூரியவின் கருத்து என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக காலை 5.00 மணியளவில் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அந்த அழைப்புக்கு அவரிடமிருந்து அதிர்ச்சியானதொரு பதில் கிடைத்தது. ஜெனரால் பொன்சேகா தங்கியிருந்த ஹோட்டல் பாதுகாப்புப் படையினரால் சுற்றிவலைக்கப்பட்டுள்ளதாகவும் இரவு அங்கு தங்கியிருந்தவர்களில் பலர் அவ்விடத்தைவிட்டும் சென்று விட்ட நிலையில் பொன்சேகாவை தனிமையில் விட்டுச் செல்ல முடியாத நிலையில் தான் அங்கேயே தங்கியிருப்பதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டார். இது தொடர்பில் ஜனாபதியுடன் கதைக்கவில்லையா என நான் அவரிடம் கேட்டதற்கு, ஜனாதிபதி அறியாத நிலையில் இவ்வாறான ஒரு விடயம் நடைபெற முடியாது என்பதால் தான் ஜனாதிபதியுடன் இது தொடர்பாக கதைக்கவில்லை என்பதாக அவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் இன்னும் சிலருக்கு அழைப்பெடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விடயங்களை அறிந்துகொண்டேன்.

அன்றைய தினம் ஜனாதிபதியின் தொலைபேசிக்கு அழைப்பெடுப்பது அவ்வளவு எளிதான காரியமாக அமையாது என்பதனால் காலை 7.00 மணியளவில் காஞ்சனா ரத்வத்தைக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டேன். அதிஷ்டவசமாக காஞ்சனா ரத்வத்தை அந்த நேரம் ஜனாதிபதியின் அருகிலேயே இருந்தார். தொலைபேசியை ஜனாதிபதியிடம் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். “ நீங்கள் பாரிய தேர்தல் வெற்றியொன்றினைப் பெற்றுக்கொண்ட போதிலும் வெளிநாட்டு ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக அந்த வெற்றிகள் குறித்து குறிப்பிடப்படவில்லை. மாறாக எதிர்த்துப் போட்டியிட்டவர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவே செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன” என்பதாக தெரிவித்தேன். அந்த தகவல் ஜனாதிபதிக்கு மகிழச்சியை ஏற்படுத்துவதாக இருக்கவில்லை என்பதுடன் குறித்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக பல காரணங்களைக் குறிப்பிட்டார். தேர்தல் நடைபெற்ற தினத்தன்று இரவு வேளையில் சரத் பொன்சேகா இராணுவத் தலைவர்கள் பலருடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் குறித்த தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றிபெற்றிருந்தால் தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தொலைபேசி உரையாடலின் முடிவில் சரத்பொன்சேக்காவை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்துமாறு என்னிடம் வேண்டினார்.

ஜெனரால் பொன்சேகா குறித்த தினமன்று கைதுசெய்யப்படாத போதிலும் பின்னரான ஒரு தினத்தில் கைதுசெய்யப்பட்டு உயர்ந்தபட்ச அழுத்தத்திற்கு உற்படுத்தப்பட்டார். குறித்த தேர்தலில் ஜெனரால் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால் மஹிந்த ராஜபக்வின் நிலையும் இதற்கு சமனான அல்லது இதனையும் விட பயங்கராமான விதமாகவே இருந்திருக்கும் என்பதாகவே நினைத்திருந்தேன்.

கோத்தபய ராஜபக்ச
மஹிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு முதலாவது வெற்றியைப் பெற்றுக்கொண்டது முதல் தேல்வியடைந்த வருடமான 2015 ஆம் ஆண்டு வரையான 10 வருட காலப்பகுதியில் ஜனாதிபதிக்கு மாத்திரமே இரண்டாம் நிலையாகும் அடிப்படையிலான பலத்தினைக் காண்பித்த ஒரு நபராக கோத்தாபய ராஜபக்சவை அடையாளப்படுத்தலாம்.

சீ.ஏ. சந்திரபிரேம என்பவரால் எழுதப்பட்ட கோத்தாபயவின் யுத்தம் என்ற புத்தகத்தில் காணப்படும் தகவல்களுக்கு அமைய கோத்தாபய கெடெட் அதிகாரியாக 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இலங்கை இராணுவத்தில் இணைந்திருக்கின்றார். இராணுவப் பயிற்சிகளை நிறைவு செய்ததன் பின்னர் 1972 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது லுதினனாக பதவி நியமனம் பெறுகின்றார். வடமராச்சி சண்டையின் போது இரண்டு படையணிகளின் கட்டளைத் தளபதிகளாக டென்சில் கொப்பேகடுவ மற்றும் கேர்னல் விஜேவிமலரத்ன கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் கேர்னர் விமலரத்ன தலைமையிலான அணியில் கமான்டராக கோத்தாபய செயற்பட்டிருக்கின்றார். அதன் பின்னர் ஜே.வீ.பீயின் இரண்டாவது கலவரத்தின் போது மாத்தளை மாவட்ட பாதுகாப்பு இணைப்பாளராகவும் செயலாற்றியுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது பாதுகப்புப் படையணி பாரிய தோல்விகளைச் சந்தித்து வந்த காலப்பகுதியில் லுதினன் கேர்னல் பதவியிலிருந்த நிலையில் பாதுகாப்புப் படையிலிருந்து ஓய்வு பெற்று ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றார். அமெரிக்காவின் கெலிபோனியா மாகாணத்தில் மவூன்ட் ரோயல் சட்டக் கல்லூரியில் கணனி நிர்வாகியாக சேவையாற்றிக்கொண்டிருந்த போது 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தனது சகோதரருக்கு உதவுவதற்காக மூன்று மாத விடுமுறையில் இலங்கை வருகின்றார். குறித்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுகின்றார்.

வெள்ளை மற்றும் கருப்பு பக்கங்கள்.
அந்தக் காலப்பகுதியில் பாதுகாப்புப் படையானது மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே காணப்பட்டது. தொடரான தோல்விகள் படையினரின் மனநிலையைப் பெரிதும் பாதித்திருந்ததுடன் போதுமான மனித வளங்களும் ஆயூதங்களும் கிடைக்காத நிலை காணப்பட்டது. பாதுகாபப்புப் படையினது இந்த நிலையைப் போக்கி வெற்றிகரமாக யூத்தமொன்றை மேற்கொள்ளும் அளவில் பாதுகாப்புப் படையினைப் பலப்படுத்திய பெருமைக்குரியவர் கோத்தாபய ராஜபக்சவேயாவார்.

கோத்தாபயவிடம் ஒளிவீசும் ஒரு பக்கம் இருந்தது போலவே இருளான இன்னொரு பக்கமும் காணப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான விசாலமான அதிகாரங்களை தன் வசம் வைத்திருந்த காலப்பகுதியில் மிகவும் பயங்கரமான சம்பவங்கள் சிலவும் நடந்தேரின. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் யுத்த களத்தில் ஏற்பட்ட பயங்கரமான நிகழ்வுகள் குறித்து நான் இங்கு குறிப்பிடவில்லை. எனினும் யுத்தத்துடன் தொடர்பில்லாத அப்பாவி மக்கள் கொலை செய்யப்படல், கடத்திச் சென்று காணாமலாக்கிவிடல், தெரிவு செய்யப்பட்ட சிலரை பயங்கரமான முறையில் தாக்குதல் போன்ற பல சம்பவங்கள் அந்த காலப்பகுதியில் நிகழ்ந்திருகின்றன.

அவற்றில்
(1) கொழும்பு அதிபாதுகாப்பு வலயத்தில் ஊடகவியாளரான தராகி என அழைக்கப்படும் தர்மரத்ன சிவராம் என்பவரை கடத்திச் சென்று கொலை செய்துவிடல் (2005 ஏப்ரல் 28).

(2) திருக்கோணமலை கடற்கரையில் அரட்டையடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் 5 பேர் கொலை செய்யப்படல் (2006 ஜனவரி 02)

(03) தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா ரவிராஜ் கொழும்பு அதிபாதுகாப்பு வலயத்தினுல் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்படல்.(2006 நவம்பர் 10)

(04) நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளர் கீத் நோயார் கடுமையாக தாக்கப்படல் (2008 மே 22)

(05) சிரச ஊடக நிறுவனம் தாக்கப்படல் (2009 ஜனவரி 07)

(06) சன்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் லசன்த விக்ரமதுங்க கொலைசெய்யப்படல் (2009 ஜனவரி 08)

(07) ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த கடத்திச்செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்படல் (2010 ஜனவரி 24)

(08) பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாகச் செய்யப்படல். (2010 ஜனவரி 24)

(09) முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர் செயற்பாட்டாளர்களான லலித் வீரராம், குகன் முருகநாதன் ஆகியோர் காணாமலாக்கப்படல்.

(10) செல்லப்பிராணியான நாய் ஒன்றை ஏற்றி வருவதற்காக வெறும் விமானம் ஒன்றை பயன்படுத்தியது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடம் தொலைபேசி ஊடாக வினவிய பெட்ரிகா ேஜன்ஸ் என்ற ஊடகவியலாளருக்கு மோசமான வார்த்தகளைப் பிரயோகித்து ஏசுதல் மற்றும் பயமுறுத்தல் என்பன அவற்றில் பிரதானமானவை.

பொத்தல மற்றும் பெட்ரிகா
பொத்தல ஜயந்த மீதிருந்த அச்சுறுத்தல் தொடர்பில் அவரது கோரிக்கைக்கு இணங்க சுதந்திர ஊடகவியாளர்கள் அமைப்பின் பிரமுகர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளையிலேயே பொத்தல ஜயந்த கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். அன்று குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்தவன் நானாவேன்.

நாங்கள் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது பொத்தல ஜயந்த கடப்பட்ட விடயத்தினை அமைச்சர் டலஸ் அலகபெறும ஊடாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த செய்தியைக் கேட்டவுடன் ஜனாதிபதி அதிர்ந்துபோனது மாத்திரமன்றி கோபமடையவும் செய்தார். ஜனாபதியின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் சில விடயங்கள் நிகழ்வதாக அவரது உடலசைவுகள் எமக்கு உணர்த்தியது.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச தனக்கு துசன வார்த்தைகாளால் ஏசி அச்சுறித்தியது தொடர்பிலான தனது அனுபவங்களை பெட்ரிகா என்னுடன் பகிர்ந்துகொண்டார். குறித்த சம்பவம் நிகழ்ந்ததற்கு அடுத்த தினம் அல்லது அதற்கு அடுத்த தினம் அப்போது ஜனாதிபதியின் ஊடக செயலாளராக கடமையாற்றிய பந்துல ஜயசேகர (தற்போது சிரச நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்) என்னைத் தொடர்புகொண்டு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் சிலருக்காக ஜனாதிபதி மாளிகையில் இராப் போசன விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எனக்கு அழைப்பு விடுத்தார். மேற்படி அசிங்கமானதொரு நிகழ்வுக்கு பின்னர் நடைபெறுகின்ற இராப் போசன விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பில்லை என்பதாக நான் அவருக்கு பதிலளித்தேன்.

சிறிது நேரத்தின் பின் பந்துல மீண்டும் தொடர்புகொண்டார். நான் கூறிய விடயங்களை அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவூம் குறித்த இராப் போசன விருந்தில் கட்டாயமாக கலந்துகொண்டு குறித்த விடயம் சம்பந்தமாக தன்னிடம் கதைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார். நான் குறித்த நிகழ்வில் பங்குகொள்வதாக குறிப்பிட்டேன்.

இராப் போசன விருந்து
நான் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மாளிகையின் கீழ் மாடிக்குச் சென்று ஆசனமொன்றில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் கோத்தபயவும் அங்கு வருகை தந்து நான் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகில் இருந்த ஆசனமொன்றில் அமர்ந்துகொண்டார். மேல் மாடிக்குச் சென்ற போது கூட நான் அமர்ந்திருந்த ஆசனத்திற்கு அருகில் இருந்த ஆசனமொன்றிலேயே அமர்ந்துகொண்டார். குறித்த நிகழ்வில் ஜனாபதி உற்பட சன்டே டய்ம்ஸ், தி அய்லன்ட், டேலிமிரர், லங்காதீப போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர்காளான சிங்க ரத்னதுங்க, பிரபாத் சகபந்து, சம்பிகா லியானாரச்சி, சிறி ரணசிங்க ஆகியோரும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் பந்துல ஜயசேகர ஆகியோரும் குறித்த நிகழ்வில் பங்குகொண்டனர்.

அங்கு மதுபானம் பரிமாரப்பட்ட போது ஜனாதிபதி வைன் குவளை ஒன்றைப் பெற்றுக்கொண்டார். காரமான மதுபான வகைகள் இருந்த போதிலும் நானும் ஒரு வைன் குவளையையே கையில் எடுத்துக்கொண்டேன். எனது அந்த தெரிவைக் கண்ணுற்ற ஜனாதிபதி “ விக்டர் நீங்கள் காரமான மதுபானத்தையல்லவா பொதுவாக தெரிவுசெய்வீர்கள் ஏன் இந்த மாற்றம்” என்பதாக அனைவருக்கும் கேட்கும் விதத்தில் என்னிடம் கேள்வி எழுப்பினார். “ சிந்தனையை நல்ல நிலையில் பேணிக்கொள்ள வேண்டிய தருணங்களில் நான் வைன் மாத்திரம் தான் எடுத்துக்கொள்கின்றேன்” என அதற்கு பதிலாக குறிப்பிட்டேன்.

மது பரிமரலுடன் நடைபெற்ற அரட்டைகளுக்கு இடையே பத்திரிகை எழுத்தாளர்கள் என்ற அடிப்படையில் நாம் இங்கு அழைக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதாக ஜனாபதியிடம் வினவினேன். ஏதும் கூறுவதற்கான விடயங்கள் இருப்பின் அவற்றைக் கூறுமாறு ஜனாதிபதி என்னைக் கேட்டுக்கொண்டார். உங்களது சகோதரரிடம் ஒர ஊடகவியலாளர் தொலைபேசி ஊடாக விபரம் கேட்டபோது அவர் கடுமையான வார்த்தைகளால் தூற்றப்பட்டிருக்கின்றார் என்பதைக் கூறி அவருக்கு இத்தகைய அதிகாரம் எங்கிருந்து வந்தது என்பதாக கேட்டு எனது விமர்சனத்தையும் முன்வைத்தேன். கோதாபயவின் முகம் இருண்டு போயிருந்ததுடன் அவர் எதுவுமே பேசவில்லை. நான் பேச ஆரம்பித்து சிறிது நேரத்தில் அவர் அந்த இடத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் வந்து எனக்கருகிலேயே அமர்ந்துகொண்டார். கோத்தாபய அந்த இடத்தை விட்டு சென்ற பொது “இந்த பிரச்சினையைப் பொறுத்த வரை கோதாவின் பக்கம் பிழை இருக்கின்றது” என்பதாக தனது அருகில் இருந்த டேலிமிரர் ஆசிரியரிடம் ஜனாபதி கூறுவது எனக்கு கேட்டது.

இராப் போசனத்திற்காக சாப்பாட்டு மேசைக்கு சென்றதன் பின்னர் அடுத்தவர்கள் உணவு உண்டு முடிப்பதற்கு முன்னர் எனது உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்த அனைவரையும் நோக்கி “பாதுகாப்புச் செயலாளரின் பிரச்சினை குறித்து என்னைத் தவிர வேறு எவரும் பேசவில்லை. சில நேரம் அவ்வாறு நடப்பதற்கு நான் அங்கிருந்தது காரணமாக அமையலாம். அதனால் நான் இல்லாத நிலையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக சந்தர்ப்பமளித்து நான் இங்கிருந்து விடைபெறுகின்றேன்” எனக் கூறி ஜனாதிபதி உற்பட அங்கிருந்த அனைவரிடமும் விடைபெற்று சென்றுவிட்டேன்.

2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அலுத்கமவில் நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் குறித்து “நான் கோத்தாபயவின் நிழலாவேன்” என்ற தலைப்பில் அது குறித்து எழுதியிருந்தேன். குறித்த சம்பவங்கள் தொடர்பில் எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு நடைபெற்ற பயங்கரமான செயற்பாடுகளுக்கும் கோத்தபயவுக்கும் சம்பந்தம் இருந்திருக்கும் என்று நான் நம்பியதன் காரணமாகவே அந்த கட்டுரையை எழுதினேன். கோத்தாபயவின் மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்திராத மேற்படி இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த விதமான அச்சுறுத்தல்களும் கோத்தாவிடமிருந்து எனக்கு வரவில்லை என்பதனையும் குறிப்பிடுகின்றேன்.

கோத்தாபயவின் காலத்தில் நடந்த அனைத்து சம்பவங்கள் குறித்தும் அவர் பொறுப்பேற்க வேண்டும் என்பதாக நான் கருதவில்லை. எனினும் அரசியலுடன் தொடர்புடைய மேற்படி பிரச்சினைகளுக்கு அவர் நேரடியாகவோ வேறு முறைகளிலோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதாக எண்ணுகின்றேன். அவை பாதுகாப்பு அதிகாரிகளின் சுயதேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் என்பதாக கருத முடியாது.

அப்படியான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற ஒருவர் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுதித்துக்கொள்ளும் வரை பெயரளவிலேனும் ஒரு நாட்டின் தலைவராக தகுதியானவரல்ல. அவ்வாறான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற ஒருவர் குறித்த பதவிக்கு போட்டியிடுவது கூட பொறுத்தமான ஒன்றல்ல.

ராவயவில் வெளிவந்த கட்டுரையில் மொழிபெயர்ப்பு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates