சிந்திப்பதற்கு…………
நாட்டின் இரண்டு பிரதான அரசியல் சக்திகளான ஐக்கிய தேசிய முன்னணியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன.
இரண்டு தரப்பினரும் தேசியப் பாதுகாப்புக்கே முன்னுரிமையளித்துள்ளனர். நாட்டுக்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமென்பதை இருதரப்பினரும் வெவ்வேறு வகையில் விளக்கமளித்துள்ளர்.
19ஆவது திருத்தச்சட்டத்திலிருந்து முன்னோக்கி நகருவோமென சஜித் பிரேமதாச கூறியுள்ளதுடன், 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவோமென கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கிராமிய பொருளாதாரம், புத்தாக்கம், முயற்சியாண்மை, நவீன தொழில்நுட்பம், உயர்கல்வி, முன்பள்ளி, சமூக சமச்சீரான பொருளாதாரம், பெண்களுக்கு முன்னுரிமை, ஊழல் - மோசடியற்ற ஆட்சி, அடிப்படைவாதத்திற்கு எதிரான போர், போட்டிமிக்க உலக மற்றும் உள்நாட்டு சந்தையை உருவாக்கல், போதைப்பொருளுக்கு எதிராக கடும் சட்டம், இலங்கைக்கு முன்னுரிமை, இலங்கையின் அமைவிடம், சட்டவாட்சி, சுதந்திரமான ஊகத்துறை, வினைத்திறன் வாய்ந்த பொதுச் சேவை, போக்குசரத்து, சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞானம் கவர்ச்சிகரமாக வெளியிடப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு, நட்புறவுடனான வெளிநாட்டுக் கொள்கை, ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம், மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசியலமைப்பு மீள்திருத்தம், மாற்றம் கொண்ட பிரஜை – வளமான மனித வளம், மக்களை மையப்படுத்திய பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப விருத்தி, பௌதீக வள அபிவிருத்தி, சுற்று சூழல் பாதுகாப்பு முகாமைத்துவம், சட்டத்தினை மதிக்கும் ஒழுக்கமுள்ள சமூகம் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டிருந்து.
இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞானங்களிலும் சுதேசிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முன்னுரிமை சஜித்தின் தேர்தல் விஞ்ஞானம் கவர்ச்சிகரமாக முன்வைத்துள்ளது. அதேவேளை, நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கும் சஜித் உறுதியளித்துள்ளார்.
இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் மலையகத்துக்கு யார் முன்னுரிமையளித்துள்ளர்?
கோட்டாபயவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,
- தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்
- மேலதிக வருமானங்களை பெற்றுக்கொள்வதற்காக பாவனைக்கு உட்படுத்தாதுள்ள நிலங்களில் விவசாயம் செய்வதற்காக வழிவகைகள் செய்யப்படும்
- பெருந்தோட்டங்களில் மேலதிக கணித, விஞ்ஞானப் பாடசாலைகள் உருவாக்கப்படும்
- சகல வசதிகளுடனும் கூடிய குறைந்த மாடிவீடுத்திட்டமொன்று அறிமுக்கப்படுத்தம்
- கர்ப்பணி மற்றும் குழந்தைகளுக்கு போஷாக்கை பெற்றுக்கொடுக்க புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும்
- மலையக இளைஞர்களின் தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான பல்கலைகழக சபைபொன்று ஹட்டனில் ஒதுக்கப்பட்டுள்ள காணியில் ஸ்தாபிக்கப்படும்.
- மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை திறப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும்
- என்பதுடன், தோட்டத்துறையை மையப்படுத்திய கைத்தொழில் வலயமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கையெடுத்தல்.
- தோட்டத்துறையை அபிவிருத்தி செய்ய சிறந்த முகாமைத்துவ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும்
என்பவை கோட்டாபய ராஜபக்ஷவால் மலையக மக்களுக்காக கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளாகும்.
இவரின் வாக்குறுதியில் மலையக புத்திஜீவிகளின் நீண்டகால கோரிக்கையாகவுள்ள தனிப் பல்கலைக்கழம் குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லை.
அதேபோன்று தோட்டத்தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக ஆக்கப்பட வேண்டுமென விடுக்கப்படும் கோரிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்படவில்லை.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,
- தோட்டத் தமிழ் விவசாயிகளின் நிலையான வருமானத்துக்கு உத்தரவாதமளிக்க அவுட் - க்ரோவர் திட்டம் குறித்து தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த பொறிமுறை.
- தோட்டப் பகுதிகளில் 10 தேசிய பாடசாலைகள்
- கௌரவம், சமத்தும், அபிவிருத்தி, பொருளாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
- தொழில்துறை மற்றும் சேவைத்துறைக்கு மலையக இளைஞர்கள் உள்ளீர்பு
- 7 பேர்ச் காணியுடன் தனி வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும்.
- நியாயமான மற்றும் சமமான சம்பள அதிகரிப்பு
- பெருந்தோட்ட சுகாதாரமானது ஏனைய பகுதிகளை போன்று தரமுயர்த்தப்படும்.
- உயர் கல்வியை மேம்படுத்த ஹைலேண்ட் பல்கலைக்கழகம் திறக்கப்படும்.
- நாடு முழுவதும் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் மலையகத் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான விசேட செயற்றிட்டம்
- மலையக இளைஞர்களுக்கான தொழில்பயிற்சியை உறுதிப்படுத்தல்
உள்ளிட்டவை மலையக மக்களுக்கான உறுதிமொழிகளாக சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன்,
- மலையக சமூக மேம்பாட்டுக்காக விசேட ஜனாதிபதி செயலணி
- தொழில் வலயங்களும், அவற்றுடன் தொடர்புற்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களும் தோட்ட பிரதேசங்களில் இங்குள்ள இளைஞர்களுக்காக அமைக்கப்படும்.
- தோட்டத்தொழிலாருக்கு ரூ.1500 நாளாந்த சம்பளம்.
உள்ளிட்ட உறுதிமொழிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மலையக புத்திஜீவிகளின் கோரிக்கையாகவுள்ள தனிப் பல்கலைக்கழகத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதுடன், தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக மாற்றியமைப்பதற்கான ஆரம்ப படிமுறையாக ‘தோட்டத் தமிழ் விவசாயிகள்’ என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்த அவுட் - க்ரோவர் திட்டம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களில் சஜித் தேர்தல் விஞ்ஞானம் மலையக மக்களுக்கு ஒரளவு நம்பிக்கைத்தரும் வகையில் அமைந்துள்ளனது.
இறுதி தீர்மானம் மக்கள் கைகளில்…………
நிஷாந்தன் சுப்பிரமணியத்தின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...