தமிழகத்திலிருந்து காலனித்துவவாதிகளால் பல்வேறு நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழர்களின் இருநூறு ஆண்டு (1817 – 2017) நிறைவை ஒட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் சிறப்பு நிகழ்வும், அதையொட்டிய சிறப்பு மலர் வெளியீடும் இந்தியா - தமிழகத்தில் இடம்பெறவுள்ளது. இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, தென்னாபிரிக்கா, மொரிசியஸ் மற்றும் காலனித்துவவாதிகளால் தமிழர்கள் குடியேற்றப்பட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை 'காலனியத்தால் சிதைக்கப்பட்டத் தமிழர்கள் இயக்கம்' செய்கின்றது. தமிழகத்தில் இயங்கும் 'மலையக மக்களுக்கான ஜனநாயக இயக்கம்' இதன் பிரதான இணைப்பு பாத்திரத்தை வகிக்கின்றது. இலங்கையில் இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டாளராக 'மலையக சமூக ஆய்வு மையம்' செயற்படுகின்றது.
இந்நிகழ்வுக்காக வெளியிடப்படவுள்ள சிறப்பு மலருக்கு இலங்கையில் வதிவோரிடமிருந்து ஆக்கங்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்கள் கீழ்வரும் ஏதாவது ஓரு தலைப்பில் எழுதப்பட வேண்டும். ஆக்கங்கள் 2,500 சொற்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். நிபுணத்துவக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் ஆக்கங்கள் வெளியிடப்படவிருக்கும் சிறப்பு மலரில் பிரசுரிக்கப்படும். ஆக்கங்களுக்கான தலைப்புகள் கீழ்வருமாறு,
1. இணையமும் இன்றைய மலையகமும்
2. உலகமயமாக்கலும் தேசிய இன உரிமைகளும்
3. காலனிய வருகையும், புலம்பெயர்வும், விளைவுகளும்
4. உழைக்கும் பெண்களும் மலையகமும்
5. தேசியவாதத்தின் மறுபக்கம்
6. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தேசிய இனம் குறித்தப் பார்வை
7. குடியேற்றப்பட்ட தமிழர்களின் மொழி, பண்பாடு, தேசியம்
8. பெருந்தோட்ட உற்பத்தியும், கொத்தடிமைத் தொழில் முறையும்
9. தமிழ் சமூகத்தில் சாதியம்
10. உடன்படிக்கையும் விளைவுகளும்
11. தாயகம் திரும்பியோர் நிலை குறித்து
12. மலையகமும் தொழிற்சங்கமும்
ஆக்கங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக கீழ்வரும் முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.
இணைப்பாளர்
மலையக சமூக ஆய்வு மையம்
இல.09, மாதம்பிட்டிய பாதை
மோதர
கொழும்பு - 15
தகவல் - ப.விஜயகாந்தன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...