இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை(10.00 AM) அன்று ஹட்டன் மாணிக்கப்பிளிளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.அமரர் எஸ் திருச்செந்தூரன் நினைவு அரங்கு திரு லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும்.இவ்விழாவில் வரவேற்புரையினை இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின். பொதுச்செயலாளர் திரு .ஆர் சங்கரமணிவண்ணன் நிகழ்த்துவார்.
பிரதம அதிதியாக யாழ்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை கல்வியியல்பேராசிரியர் மா. சின்னத்தம்பி அவர்களும் கௌரவ அதிதிகளாக பேராதனைப் பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் அவர்களும் இலங்கையின் கல்வி நிர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு பீ.ஆறுமுகம் அவர்களும் கலந்துகொள்வார்கள். மாலை கலைஞர்+ என் சாம்பசிவமூர்த்தி அரங்கில் நடைபெறவுள்ள இசைச்சங்கமம், மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் சம்மேளனத்தின் கலாச்சாரக்குழு தலைவர் திரு எஸ் சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் நடைபெறும்.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மெட்ரோ செரமிக் உரிமையாளர் திரு எஸ் பொன்னுசாமி அவர்கள் கலந்து கொள்வார். கௌரவ அதிதிகளாக சமூகசெயற்பாட்டாளரும், கல்வியியலாளருமான திரு. எம். நாகலிங்கம் சூரியகாந்தி ஆசிரியர் திரு சிவலிங்கம் சிவகுமாரன் மற்றும் மலையகத்தின் முன்னனி இசையமைப்பாளர் ரீ.எம் சிறீதரன் அவர்களும், கலந்து சிறப்பிப்பர். சம்மேளனத்தின் பிரதம இணைப்பாளர் திரு.எஸ். சேகர் நன்றியுரை வழங்குவார். நிகழ்ச்சசித் தொகுப்பிணை சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் ஜே.ஜெலூசன் வழங்குவார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...