Headlines News :
முகப்பு » » நோர்வூட்டில் மோடி; வரலாற்றை மீட்டிப்பார்த்தல் - ஜீவா சதாசிவம்

நோர்வூட்டில் மோடி; வரலாற்றை மீட்டிப்பார்த்தல் - ஜீவா சதாசிவம்


''நோர்­வூட்டில் தனக்கு வர­வேற்­ப­ளித்த இந்­திய வம்­சா­வளி தமிழ்த் தலை­வர்­க­ளுக்கு நன்றி'' என இந்­திய பிர­தமர் மோடி தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வர்­க­ளுடன் இணைந்து எடுத்த புகைப்­ப­டத்­து­ட­னான 'ட்வீட்டர்' செய்தி பல இலட்சம் பேரினால் சர்­வ­தே­ச­மெங்கும் பார்­வை­யி­டப்­பட்­டுள்­ளது. அதனைத் தொடர்ந்து வேறு கட்­சியை சார்ந்­த­வர்­களும், ஏனைய மக்­களை உள்­ள­டக்­கி­ய­தாக பல புகைப்­ப­டங்­க­ளையும் அவரின் முகப்­புத்­த­கத்தில் பிர­சு­ரிப்­ப­தற்குத் தவ­ற­வில்லை. உள்ளூர் ஊட­கங்கள் முதல் சர்­வ­தேச ஊட­கங்கள் வரை மீட்­டிப்­பார்க்கும் ஒரு நக­ராக,  கடந்த வாரம்  'நோர்வூட்' எனும் நகரம்  விளிக்­கப்­பட்­டது. பார­தப்­பி­ர­த­மரின் வரு­கை­யினால் நக­ருக்கும் பெரு­மைதான்!

 1970களில் கீனாக்­கொலை தொழி­லா­ளர்கள் மீது நடாத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு எதி­ரான கண்­டனக் கூட்­டம்தான்  இதற்கு முன்­ன­தாக நோர்வூட் கண்ட பெரிய  கூட்டம்  என்று கூறப்­ப­டு­கி­றது. இந்தக் கண்­ட­னக்­கூட்­டத்­திற்கு இலங்கை திரா­விட செயற்­பாட்­டா­ள­ரா­கவும்  இளம் சோச­லிஸ்­டுகள் முன்­ன­ணியின் செயற்­பாட்­டா­ள­ரா­கவும்  ஏ.இளஞ்­செ­ழி­யனே தலைமை தாங்­கினார். எல்லா தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போ­திலும் பாலா­தம்­புவும், ரோஹன விஜே­வீ­ர­வுமே உரை­யாற்­றி­னார்கள்.

ரோஹன விஜே­வீர துப்­பாக்கிச் சூட்­டினைக் கண்­டித்­தாரே தவிர மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிரச்­சினை பற்றி ஒன்­றுமே பேச­வில்லை. இதற்கு காரணம் மலை­யகத் தோட்டத் தொழி­லா­ளர்­களை இந்­திய விஸ்­த­ரிப்பு வாதத்தின் அங்­க­மாக மக்கள் விடு­தலை முன்­னணி கொள்­கையை கொண்­டி­ருந்­தது. இன்று என்­னதான் மக்கள் விடு­தலை முன்­னணி மலை­யக மக்­க­ளுக்­காக குரல் கொடுத்­தாலும் அந்த பழைய வடு அவர்கள் மீது இருக்­கவே செய்­கி­றது. பெ.முத்­து­லிங்கம் எழு­திய 'எழு­தாத வர­லாறு'  எனும் வர­லாற்று நூல் இதனை விரி­வாக பேசு­கி­றது.

இந்த வர­லாற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டே இம்­மாதம் 12இல் இதே நோர்­வூட்டில்   ஆயி­ரக்­க­ணக்­கான மலை­யக மக்கள்  பங்­கேற்ற அவர்கள் பல­த­ரப்­பட்ட விட­யங்­களை எதிர் பார்த்துச்  சுட்­டெ­ரிக்கும் சூரி­ய­னையும் எதிர்த்து தலை­வர்­களின் உரை­க­ளுக்­காக காத்­தி­ருந்த  மக்கள் மத்­தியில் தலை­வர்கள் ஆற்­றிய உரை­களில் பேசப்­பட்ட வர­லாற்று விட­யங்­களை ஆராய்­வதே இந்த வார 'அலசல்'.

இந்­திய பிர­தமர், இந்­திய வம்­சா­வளி மலை­யகத் தமிழ் மக்­களை சந்­திக்க வரும் மாபெரும் பொதுக்­கூட்டம் என பெரு­மெ­டுப்பில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­பட்டு சேர்க்­கப்­பட்ட சுமார் முப்­ப­தி­னா­யிரம் அள­வான மக்கள் கூட்­டத்தில் நான்கு உரை­களே இடம்­பெற்­றன. முத­லா­வது வர­வேற்­புரை தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் தலைவர்  மனோ­க­ணேசன் உடை­யது. இந்த உரை அவ­ருக்கு வழங்­கப்­பட்­ட­தோடு கூட்­டத்தை ஒழுங்­க­மைத்­தது தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியா? இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ரஸா? எனும் சர்ச்­சைக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்­டது. 

இ.தொ.கா சார்பில் அதன் தலைவர் முத்து சிவ­லிங்கம் இரண்டாம் வரி­சை­யிலும் செய­லாளர் ஆறு­முகம் தொண்­டமான் முதல் வரி­சையின் ஓரத்­திலும் உட்­கார வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இதனை ஒரு வார இறுதி ஆங்­கில பத்­தி­ரிகை கூட சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றது. தவி­ரவும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி கூட்­டத்­திற்­கான ஒழுங்­க­மைப்பின் உரி­மையை தன­தாக்­கிக்­கொண்­டது. அதன் தலைவர் மனோ கணே­சனின் உரையில் பேசப்­பட்­டது என்ன என்­ப­தனை  இறு­தியில் பார்ப்போம். 

அதற்கு முன்­ன­தாக, இரண்­டா­வ­தாக உரை­யாற்­றிய இலங்கைப் பிர­த­மரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த கருத்­துக்­களைப் பார்க்­கலாம். வழ­மை­யான ஏழு பேர்ச்சஸ் காணி, புதிய கிராமம் என்­ப­தற்கு அப்பால் பிர­ஜா­வு­ரிமை இல்­லா­தி­ருந்த இந்த மக்­க­ளுக்கு நாங்கள் பிர­ஜா­வு­ரிமை வழங்­கினோம் என பாரதப் பிர­த­மரை விளித்து உரை­யாற்ற அவரும் பெரு­மி­தத்­துடன் புன்­ன­கைத்து கைதட்ட கூட்­டத்­தி­னரும் கைதட்­டினர். இன்று மார்­தட்­டிக்­கொள்ளும் பிர­த­மரின் ஐ.தே.க தான் இந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த பிர­ஜா­வு­ரி­மை­யை பறித்­தெ­டுத்­தது என்­பதை எவ்­வ­ளவு இல­கு­வாக கடந்­து­போ­கிறார். அந்த நாளில் இதே இந்­திய வம்­சா­வளி மலை­யகத் தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஏழு உறுப்­பி­னர்கள் இருந்­தார்கள் என்­பதை மறந்­து­போ­கிறார். 

அந்த நாளில் ஜி.ஜி.பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் மலை­யக மக்­களின் குடி­யு­ரிமை பறிப்­புக்கு துணை­போ­னது என்­ப­தையும் மலை­யக மக்கள் மறந்­து­போ­வார்­களா என்ன? அதனை எதிர்த்தே இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தோற்றம் பெற்­ற­தா­கவும் சொல்­லப்­பட்­டது. இந்த வர­லாற்று நிகழ்­வுகள் இல­கு­வாக மறக்­கப்­ப­டக்­கூ­டி­யதா?

அடுத்து, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உரை இலங்­கையில் வாழும் ஏனைய சிங்­கள, இலங்கைத் தமிழ், முஸ்லிம், பறங்கிய மக்­க­ளுக்கு மலை­யக தமிழ் மக்­களும்  சம­மாக நடத்­தப்­ப­டு­வார்கள் என்று இந்­திய பிர­தமர் முன்­னி­லையில் உரை­யாற்­றி­யது, அர­சாங்கம் என்ற வகையில் பொறுப்­புடன் கூறு­கின்றேன் என உறு­தி­ய­ளித்­தது மகிழ்ச்­சி­ய­ளித்­தாலும், மலை­யக மக்­களின் பிர­ஜா­வு­ரிமை வழங்கும் விட­யத்தில் தனது ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் அப்­போ­தைய தலைவி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அப்­போ­தைய இந்­திய பிர­தமர் லால் பகதூர் சாஸ்­தி­ரி­யுடன் இணைந்து சிறந்த ஒரு முடிவை எடுத்­த­தாக மார்­தட்­டிக்­கொண்டார். பாரத பிர­தமர் மோடியின் முகத்­திலும் அப்­போது புன்­னகை. அவ­ருக்கு இது பற்றி ஏதும் தெரிந்­தி­ருக்­குமோ என்­னவோ?

ஜனா­தி­பதி  மார் தட்­டிக்­கொள்ளும் அள­வுக்கு என்ன இருக்­கி­றது. ஏற்­க­னவே ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் பண்­டா­ர­நா­யக்க சேர்ந்­தி­ருந்­த­போ­துதான் மலை­யக மக்­களின் குடி­யு­ரிமை பறிக்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்­லாமல் 1964 ஆம் ஆண்டு சுதந்­திர கட்சி ஆட்­சியில் மலை­யக மக்­களைக் கேட்­டுக்­கொண்டா ஒப்­பந்தம் செய்­தார்கள்?. காரண காரியம் தெரி­யாமல் குடும்­பங்­களை வேர­றுத்து உற­வு­களைப் பிரித்­தெ­டுத்து இங்கும் அங்­கு­மாக அங்­க­லாய்க்­கச்­செய்து  இன்­றைக்கு ஐம்­ப­தாண்­டு­க­ளா­கி­விட்­டன. இங்கே இவர்கள் இன்னும் 'இந்­திய தமிழர்' என்றும் அங்கு அவர்கள் இன்றும் 'சிலோன் தமி­ழர்கள்' என்றும் அழைக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். 

இலங்­கையின் சனத்­தொ­கையில் இரண்டாம் நிலையில் இருந்த சனத்­தொ­கையை நான்காம் நிலைக்குத் தள்­ளிய ஒப்­பந்­தமே சிறி­மா-­ – சாஸ்­திரி ஒப்­பந்தம் என கடந்த வாரம் இந்­தியன் எக்ஸ்­பிரஸ் கூட செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது. இன்­றைய மலை­யக மக்­களின் அர­சியல் பலத்தை கேள்­விக்கு உள்­ளாக்­கிய அந்த துரோக ஒப்­பந்­தத்தை எப்­படி அந்த மக்கள் முன்னே மார்­தட்டி பெரு­மை­யாக பேச முடி­கி­றது? மக்கள் வர­லாற்றை மறந்­த­ுவிட்­ட­தாக நினைக்­கி­றார்­களோ? அடுத்து பாரத பிர­தமர் மோடியின் உரை. 

வழ­மை­போன்றே ராஜ­பக் ஷ பாணியில் மனனம் செய்­யப்­பட்ட இரண்­டொரு தமிழ் வச­னங்கள் -மகிழ்ச்சி. இலங்கைத் தேயி­லையின் பெரு­மை­யையும் அதில் மலை­யக மக்­களின் உழைப்­பையும் மெச்­சி­ய­தோடு தான் ஒரு தேநீர் கடைக்­காரர் என சொல்­லாமல் சொன்­னது உணர்ச்­சி­மே­லீட்­டுக்­காக.  இதே­நேரம் பத்­தா­யிரம் வீடுகள் உள்­ளிட்ட சலுகை அறி­விப்­புகள் அர­சியல் கவர்ச்­சிக்­காக. எம்.ஜி.ஆரையும், முர­ளி­த­ர­னையும் நினை­வு­ப­டுத்­தி­யது கைதட்­ட­லுக்­காக. மறைந்த தொண்­ட­மானை நினை­வு­ப­டுத்­தி­யது, ஓரத்தில் உட்­கா­ர­வைக்­கப்­பட்ட ஆறு­முகன் தொண்­ட­மா­னையும் அவர்தம் ஆத­ர­வா­ளர்­க­ளையும் ஆறு­தல்­ப­டுத்த. அமரர் சௌமி­ய­மூர்த்தி தொண்­ட­மானை நினை­வு­ப­டுத்­தி­யது ஒன்றும் தவ­றில்லை. 

அவர் ஒரு தேசிய தலைவர் என்­ப­திலும் மாற்றுக் கருத்­தில்லை. உண்­மையில் 200 வருட கால இந்­திய வம்­சா­வளி மக்­களின் வரு­கையை நினை­வு­ப­டுத்­து­கையில் அவர்கள் அந்த நாளில் அடி­மை­யாக வைக்­கப்­பட்­டி­ருந்த போது மாறு வேடமிட்டு மக்­க­ளி­டையே சென்று தொழிற்­சங்க அமைப்­பையும் 1936 லேயே அர­சியல் பிர­தி­நி­தித்­து­வத்­தையும் உரு­வாக்­கிய தேச­பக்தன் கோ.நடே­சய்­யரை நினை­வு­ப­டுத்­தாமல் நேர­டி­யாக சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் நினை­வுக்கு வந்தார். இது உரை தயா­ரிப்பில் ஏற்பட்ட சூட்சுமமோ தெரியவில்லை. 

''நீங்கள் இந்­திய வம்­சா­வளி என்­பது எனக்குப் பெருமை. ஆனால், நீங்கள் உங்கள் உழைப்பால் இலங்­கையை உங்கள் நாடாக்கிக் கொண்­டீர்கள். தமிழும் பேசு­கின்­றீர்கள். சிங்­க­ளமும் பேசு­கின்­றீர்கள்'' என்ற மோடியின் அறி­விப்பு நீங்கள் தொடர்ந்தும் இந்­திய தமி­ழ­ராக இந்த நாட்டில் இருக்க வேண்­டி­ய­தில்லை என்­பதன் உட்­பொருள் எனக்­கொள்ளலாம். உரையின் இந்த பகு­திக்­காக பிர­தமர் மோடிக்கு ஒரு சபாஷ் போடலாம். அவ­ரது உரையின் மூலம் இலங்கை மலை­யகத் தமி­ழர்­க­ளுக்கு உருப்­ப­டி­யான ஒரு தக­வலை உறு­தி­யாகச் சொல்லிச் சென்­றுள்ளார்.

இறு­தி­யாக, முத­லா­வ­தாக ஆற்­றப்­பட்ட அமைச்சர் மனோ­க­ணே­சனின் வர­வேற்­புரை. மிகக் குறு­கிய காலத்தில் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி இந்த மாபெரும் கூட்­டத்தின் ஏற்­பா­டு­க­ளையும் தலை­மைப்­பொ­றுப்­பையும் கூட உரு­வாக்­கிக்­கொண்­டது பாராட்­டுக்­கு­ரி­யது. ஆனால், அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தில் இலங்கை சனாதிபதி, இலங்கை பிரதமர், இந்திய பிரதமர் முன்னிலையில் உரையாற்ற கிடைத்த அந்த வாய்ப்பை  மலையக வம்சம் பற்றி இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். 

அதுவும் ஆங்கிலத்தில், ஜனாதிபதியும், பிரதமரும் சிங்களத்தில் பேசும்போது அதனை மொழிமாற்றல் கருவி மூலம் ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுதானே இருந்திருப்பார். அதுபோல உங்களது உரையையும் தமிழில் மட்டும் ஆற்றியிருந்தால் அவர் கேட்டிருப்பார். மக்களும் கேட்டிருப்பார்கள். பாவப்பட்ட மலையக மக்களின் உண்மைத் தன்மை இதன்போது தெரிந்திருக்கும் அல்லவா? 

அதேநேரம், அடுத்த நாள் அறிக்கையாக 'மலையக தேச பிதா நடேசய்யரின் கனவை நனவாக்குவோம்' என்ற அறிக்கை அருமையாக அமைந்திருந்தது. அதை அன்றைய மேடையில் கூறியிருந்தால் (12.05.2017) அதுவே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும்.

 வரலாறு முக்கியம் அமைச்சரே. பொருத்தமான தருணங்களில்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates