Headlines News :
முகப்பு » , » தமிழ்க் கவியின் மூலக் கட்டுரையும் அவசரக் கருத்துக்களும்

தமிழ்க் கவியின் மூலக் கட்டுரையும் அவசரக் கருத்துக்களும்

தமிழ்க்கவி மலையக மக்கள் குறித்து எழுதிய கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக ஆகியிருக்கிறது. 
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற கலாச்சார நிகழ்வுக்காக வெளியிடப்பட்டுள்ள 'கரை எழில்' என்கிற நூலில் வெளிவந்த “கிளிநொச்சியும் மலையக தமிழர்களும்” என்கிற அவரின் கட்டுரையில் இருந்த ஒரு சில வசனங்களையே இந்த சர்ச்சைக்கு இழுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. 
சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவிடுபவர்கள் பலர் இந்த கட்டுரையை முழுமையாக இதுவரை பார்க்காதவர்களே. “தமிழ்வின்” வெளியிட்ட செய்தியொன்றில் 8 பக்கங்களைக் கொண்ட அவரது கட்டுரையில் இருந்து ஒரு சில வரிகளை எடுத்து வெளியிட்டு இந்த சர்ச்சையை கிளப்பியிருப்பதாகத் தெரிகிறது. 
தமிழ்க் கவியை அறிந்தவர்கள் அவர் அவ்வாறு மலையக மக்கள் மீது வெறுப்புணர்ச்சி கொண்டிருக்கக் கூடியவர் அல்லர் என்பதை அறிவார்கள். அவர் பக்க கருத்தை அறிவது இந்த இடத்தில் முக்கியம். நமது மலையகத்துக்காக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் கொழும்புக்கு அவசர விஜயமாக இன்று 12ஆம் திகதி சென்றிருப்பதாக அறியக் கிடைத்தது. வெளியில் இருந்தபடி சமூக ஊடகங்களின் பரப்புரை வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வல்லமை அவரிடம் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொண்டு அவரின் கருத்துக்காக பொறுமை காப்பதே நல்லது.
இந்த சர்ச்சையை சரிப்படுத்தும் நோக்கில் அவரின் முழுமையான கட்டுரையையும் இங்கே பதிவிடுகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் கருத்துக்களை முன்வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் நண்பர்களே.
-நமது மலையகம் 

கிளிநொச்சியும், மலையகத்தமிழரும்
-தமிழ்க்கவி-

அப்போதுதான் ஆள்பதியாக இருந்த "ரிச்வேஅவர்கள் தன் பெரு முயற்சியின் காரணமாக இலங்கையில் விவசாய முயற்சிகளுக்கு தேவையானவற்றை செய்து நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முயன்றார்.

இதன் பயனாக முதன்முதலாக நீர்ப்பாசனத் திணைக்களம் என்றொரு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு பொறுப்பாக கென்றி பாக்கள் என்பவர் இருந்தார். இவரது முயற்சியால் நிர்ப்பாசனத்துக்கென 50,000 ரூபாக்கள் ஒதுக்கப்பட்டது. இது தமிழர் பிரதேசத்துக்காகும். உடனடி யாகவே கட்டுக்கரைக் குளத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதே போன்று கனகராயன் ஆற்றின் இருவேறு கிளைகளை இணைத்து கரைச்சியில் ஒரு விவசாயக்குளம் ஆக்கப்பட்டது. இரு ஆறுகளின் அணையானதால் இரணைமடுவெனப் பெயர் கொண்ட இக்குளம் 1902ம் ஆண்டு பெயர் சூட்டி ஆரம்பிக் கப்பட்டபோது, அதிலிருந்து இருபதாயிரம் ஏக்கர் நிலம் நீர் ப் பர்சனத்தைப் பெறும் என்று

கணிப்பிடப்பட்டது. (நோத் முதல் கோபல் லாவ வரை க.சி குலரத்தினம். பக். 208, 209) இக்குளக் கட்டின் நடுவே மதில் போன்று ஈயம் காச்சி ஊற்றப் பட்டிருப்பதாக ஒரு முதியவர் கூறினார். கிளிநொச்சி வனங்கள் அடர்ந்த பகுதியாகும். வனங்களின் நடுவே பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் விவசாயி களும் குடியிருக்கிறார்கள்.

அக்கராயனிலிருக்கும் அம்பலப் பெரு மாள் சந்தி ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்தியாகும். அந்த நாற்சந்தி மேற்கே வன்னேரிக்குளம் வழியாக முழங்காவில் பூநகரி வீதியைத் தொடும். வடக்கே கந்த புரம், முக் கொம் பண் நல்லுார் ஊடாக கேரதீவுப் பாதையைத் தொடும். தெற்கே கோட்டைகட்டியகுளம் தென்னியன் குளச் சந்தி, உயிலங்குள மூடாக துணுக்காயை அடையும். கிழக்கே அக்கராயன்குளம் வழி யாக திருமுறி கண்டியை கண்டி யாழ்ப் பாணம் கற்பாதையைத் தொடும்.

நாம் இப்போது விழிபுத்டும் திருமுறி கண்டிப் பிள்ளையாரும் அவ்விடத்துக்கு வந்தேறு குடிதான். 2ண்மையில் முறி கண்டிக்குளம் கொக்காவில் அருகே செல்லும் ஐயன்கன்குள வீதியில், புத்துவெட்டு வான் கடந்தால் வரும் கிரவல் வீதியில் மூன்று மீட்டர் தொலைவில் உள்ளது. அழகிய பெரிய குளமும் அதன் கீழ் நெல் வயல்களும் பெரும் பனைமரச் சோலையும் பழமரங் களும் அதன் தொன்மை சொல்லி நிற்கின்றன.

இன்னமும் நகர வாடையற்ற கிராமத்தில் மக்கள் மீன்பிடி, விவசாயம் வேட்டை என தன்னிறைவோடு வாழ்கிறார்கள் அதேசமயம் பிள்ளைகள் வெளியே சென்றும் படிக்கி றார்கள். இங்குதான் முறிகண்டிப் பிள்ளை யார் பிறந்தார். இந்திமக்கள் வேற்றுாருக்கு செல்லும் போது (கால் நடைப் பயணம்) யானைகள் எதிர்ப்படாமல் காக்க இந்தப் பிள்ளையாரையும் துாக்கிச் சென்று பிரதான கற்பாதையில் வைத்து விட்டுச் செல்வா முறிகண்டியானும் பேரருள் படைத்தவன்.

இதே போல அக் கராயனிலிருந்து சுண் டிக் குளம் வழியாக யாழ்ப்பாணம் செல்வோர் கொக்காவில் இருக்கும் பக்கமாக திரும்பி பழைய பிள்ளையாரை நினைந்து சந்தியில் கற்பூரம் கொளுத்தி தேங்காய் உடைத்துவிட்டு செல்வது வழக்கமாயிற்று. கால்நடைப்பயணிகள் கரலாற அதிலிருந்து சமைத்து உண்டு செல்வதுண்டு. இதனால் முதலில் அதில் ஒரு சாப்பாட்டுக் கடை வந்தது. அந்தக் கடை பல வருடங்கள் இருந்தது. அந்தக் கடையருகே யானைக் குட்டி, கரடிக்குட்டி, மான் மரைக்குட்டிகள் கட்டியிருக்கும். இவை வேட்டைக்காரரால் பிடித்து வரப்பட்டு விற்பனை செய்யப் படுகிறது என்று எண் பூட்டி சொல்வாள். அந்தக் கடை வடைக்குப் பெயர் பெற்றது. இலங்கையின் எப் பகுதியிலிருந்து வரு வோரும் முறிகண்டி வடையில்லாமல் வீட்டுக்குப் போகமுடியாது. அவ்வளவு புகழ்பெற்ற வடை முறிகண்டி வடை.

நாளடைவில் முறிகண்டிக் கிராமப் பிள்ளையார் வந்திருந்த இடத்தில் பழைய பிள்ளையாராயும் இப்போது உள்ள இடத் தின் நிரந்தர வாசியாகவும் மாறிவிட்டார். வர்த்தகம் பெருகவே அவ்விடம் நகரமாகி வருகிறது. 1902ம் ஆண்டுதான் முதலாவது கார் இலங்கைக்கு வந்தது. அதனை அடுத்து 1916ம் ஆண்டுதான் இலங்கையில் புகை யிரதம் ஓடியதாக தெரிகிறது. முதல் புகை யிரதப் பாதைகள் கண்டிநகரையும் கொழும் பையும் ஏனைய நகரங்களுடன் இணைப்ப தாகவே அமைந்தது.

கொழும்பு யாழ்ப்பாணம் புகையிரதப் பாதை கற்பாதையை அண்டியதாக அமைந் தாலும் அது சில இடங்களில் குளங்களை நோக்கி வளைந்துள்ளதைக் காணலாம். காரணம் புகைவண்டியானது அக்காலத்தே கரிக்கோச்சி என அழைக்கப் பட்டு வந்தது. நீராவி இயந்திரங்களினால் இவை இழுத்துச் செல்லப்பட்டன. ஆங்காங்கே நீர் நிரப்பவும் கரியைப் பெறவுமாக இப்பாதைகள் குளங் களை அண்டியதாக அமைக்கப்பட்டது. என்பதுடன் நீர் வழங்கும் குளங்களின் மேற்குளங்கள் எதுவும் நீர் வழங்கும் குளம் வான் போடும் வரை அடைத்தலாகாது என்று ஒப்பந்தங்களும் எழுதப்பட்டுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சிக் கற்பாதையையும் புகைவண்டிப் பாதையையும் அண்மித்ததாக கனகாம்பிகைக் குளம் உள்ளது. இக்குளம் இரணைமடுவிலிருந்து வற்றாது பேணப் பட்டு வந்ததாகும்.

1936ம் ஆண்டின் காணிகளுக்காகக் காடுகளை வழங்கி அவற்றைத் திருத்திப் பயிர்ச் செய்கையை ஏற்படுத்தும் முயற்சியில், ஆள்பதிறிச்வே காலத்தில் பெருமளவு காணிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி யிலும் அரச சேவைகளிலிருந்தோர் இதன் சட்டதிட்டங்களை அறிந்து கொண்டு பெருமளவு நிலங்களைப் பெற்றார்கள். அந்தவகையில் சேர் பொன். இராமநாதன் ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரராயினார்.

அதே போன்று இங்குள்ள அரச வேலை களை குத்தகை எடுத்தவர்களும் நூறாண் டுக்குத்தகையாக பெருமளவு நிலங்களைப் பிரதான வீதியை அண்டியதாக கொள்வனவு செய்தனர். இவை தவிர மத்தியதர வகுப் பாருக்கென ஏக்கர் 50 ரூபாவாக ஒவ்வொரு வருக்கும் பத்து ஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை வழங்கப்பட்டதாக அறியக்கிடக்கிறது. யாழ்ப்பாணத்தின் சன அடர்த்தியைக் குறைக்கவும், கிளிநொச்சி பிரதேசத்தினது உருவாக்கத்திற்குமாக குடியேற்றப்பட்டாலும் இயந்திரங்கள் அற்ற அக்காலத்தே காட்டுக்கத்தி கோடரி கொண்டு காடுகளை வெட்டவும் பின் மண் வெட்டி கொண்டு கட்டை பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தி வேளாண்மை செய்யவும் போதிய கூலியாட்கள் இல்லாமல் போன தால் பெரும்பகுதி காடாகவே இருந்தது.

இந்தியாவின் தென்பகுதிகளில் தொற்று நோய்களாலும் வறுமையாலும் அல்லல் பட்ட மக்கள், தோணிகளிலேறி இலங்கைக்கு வருவாராயினர். அக் காலம் இலங்கை இந்தியா என அனைத்துமே ஒரே ஆட்சியி லிருந்ததாலும் கடவுச்சீட்டு தேவை யற்றதாக இருந்ததாலும் நாடு கடப்பவர் அம்மை குத்தி யிருத்தலும் தொற்று நோய்த் தடுப்பு ஊசி போடுவதும், அப்படிப் போட்ட பதினைந்து நாட்களின் பின்னே தான் பயணிக்கலாம் என்ற விதிமுறையுமிருந்தது.

ஆனால் இவர்கள் அவற்றை பின்பற்றாமல் வருபவர்கள் அவர்களை தமது கமத்துக்கு காவலாகவும், தோட்ட வேலைகளுக்காகவும் பெரிய முதலாளிகள் தமது கமங்களில் குடியிருத்தினர். 1949ம் ஆண்டு நாடற்ற வராக்கப்பட்ட மலையக மக்கள், 1961ன் பின்நாடுகடத்தப்பட்டனர். இவர்கள் திடுதிப் பென வீடு புகுந்த பொலீசாரால் கைதுசெய் யப்பட்டு அப்படியே கப்பலேற்றி தனுஷ் கோடியில் இறக்கப்பட்டனர். இந்த நிலையி லிருந்து தப்புவ தற்காகவும் மலையகத்தி லிருந்து பலர் வடபகுதியுள் நுழைந்தன ராயினும் யாழ்ப்பாண சாதியமைப்பு அவர் களை அங்கு வாழ அனுமதிக்கவில்லை. ஆனால் இவர்கள் வவுனியா மன்னார் கிளிநொச்சி போன்ற இடங்களில் இஉை யறாத வேலை வாய்ப்பை யும் தங்கியிருக்க ஒரு கொட்டில் போட இடமும் கிடைத்த தால். இவ்விடங்களில் தங்கிவிட்டனர். என்றாலும் இவர்கள் சுயமாகத் தொழில்இடமளிக்கவில்லை.

1961ல் பதவியேற்ற சிறிமாவோ அம்மை யார் தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சிக் கென அUம் டாடுபட்டார். காடாகவே கிடந்த நிலங்களை களனியாக்க முனைந்தார். முதலில் படித்த வேலையற்றோ ருக்காக மாதம் 50 ரூபா உபகார நிதி வழங்கப்பட்டது. படித்த வாலிபர்களுக்கான அடுத்த திட்ட மாக விசுவமடு வட்டக்கச்சி, மல்லாவி வவுனிக்குளம் கல்மடு முத்தையன் கட்டு, என காணிகள் முதலில் கூட்டாக இவர்கள் தொழிற்பட்டாலும் காலப்போக்கில் அது சாத்தியமற்றதாயிற்று இரணைமடு படித்த பெண்களுக்கானது. மிருசுவில் படித்த பெண்களுக்கான காணி வழங்கல்கள் என காணிகள் கிடைத்தன. மிளகாய்ச்செய்கைக் காக குளப் பாசனத்தில் நாலு ஏக்கரும் தென்னை பழ மரச் செய்கைக்காக நாலு அல்லது இரண்டு ஏக்கரும் வழங்கப்பட்டது.

அதனைத்திருத்தி பயிர் செய்ய யாழ்ப் பாணச் சமூகம் முயலிவில்லை. வன்னிக் காட்டில் எப்படி வாழ்வது ஆனை புலி கடும் வெயில், வன்னிக்காடு வெக்கை என இப் படியே சாக்குப்போக்குச் சொல்லி, யாழ்ப் பாணத்திலேயே இருந்தனர். அரசாங்கம் பிரச்சார நிகழ்ச்சிகளை முடுக்கி விட்டது. வானொலி நாடகங்களும் வீதி நாடகங் களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தின.லண்டன். கந்தையா” “வெளிக் கிடடி விசுவமடுவுக்கு" தணியாத தாகம் போன்ற நாடகங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கிளிநொச்சி நகரத்தை விட்டு இன்னும் ஆழமான காடு கிளிடையே வாழ்க் கை நடாத்தும் மக்கள் அநேகர் முக்கொம்பனைக் கடந்து வனத்துள்ளே இருக்கும் சோலைக்செய்து முன்னேற இவர்களை ஆதரித்தோர் கிராமமும் அத் கையதுதான். கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ள இடத்தில் குடிநீர்க்கிணறுகள் மிகக் குறைவு. வேட்டை மீன்பிடி தேன்பாலைப் பாணி, உலுவிந்தம் பாணி இலுப்பைப் பாணி, இவற்றுடன் வனத்தின் நடுவே உரு களப்பில் உப்பும் விளைகிறது. இவர்களுக்காக, வன்னேரிக் குளத்தின் பின்னே மணியங்குளம் அதற்கும் பின்னே அரை ஏக்கர் நிலத்தில் குடியிருக்கும் மக்களை யுத்த கால்த்தில் பார்த்தோம். அங்கே எந்த வசதியுமில்லை. வெளியே சென்று கூலி செய்து படுத்துறங்க மட்டும் வீட்டுக்கு வருகிறார்கள்.

பொன்னேரி கிழக்கு மேற்காக அமைந் துள்ளதால் காலை முதல் மாலை வரை சூரியனின் பொற் கிரணங்கள் பட்டு தகதக வென் மின்னிக் கொண்டே இருப்பதால் அது பொன்னேரி எனப்படும் பொன்னேரி மருவி பொன் னகரி பூநகரியாகி விட்டதாக பேராசான் சொக்கன் தன் சங்கிலயத்தில் குறிப் பிடுகிறார். பூநகரி, வேரவில், கறுக்காய்த் தீவு போன்றவை சோலை, கரியாலை நாகபடு வான் என உள் ஒழிந்திருக்கும் வளமான கிராமங்களும் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட வரலாற்றுச் சிறப்பினைத் தன்ன கத்தே கொண்டது. கிளிநொச்சியின் எல்லை கள் காலத்துக்குக் காலம் வேறுபட்டு நின்ற துண்டு. இந்த பூநகரி ஒருபோதில் மன்னார் மாந்தையுடன் சேர்ந்தும் விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் கோவிலடி வவுனியா வுடனும் திருமுறிகண்டியின் ஒரு புறம் முல்லைத்தீவாயும் ஒருபுறம் கிளிநொச்சி யாயும். பச்சிலைப்பள்ளி யாழ்ப் பாணத்து டனும் மாறிமாறி வந்தன. 1984ம் ஆண்டு ஒரு வரையறுக் கப் பட்ட எல்லைகளுடன் கிளிநொச்சி ஒரு தனி மாவட்டமானது.

மீண்டும் ஒரு தொகுதி மலையக மக்கள் கிளிநொச்சி பளைப் பகுதிகளுக்கு ஓடி வந்தனர். இவர்கள் கள்ளக்குடியேற்றக்காரரை கைது செய்து நாடுகடத்தும் நடவடிக்கைக்கு த்தப்பியே ஓடிவந்தனர். பளை இயக்கச்சிப் பகுதிகளில் பெரும் தென்னைத் தோப்புகளை உருவாக்கி வளர்த் வர்கள் இவர்களே. புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டுக் கொண்டு ஆடு வளர்க்கவும் பெருந்தோட்டங்களில் வேலை செய்யவும் கமத்துக்குக் காவல் காக்கவும் இவர்கள் போனார்கள். அதேசமயம் இவர்களது பிள்ளைகள் இந்த கமக்காரர்களின் வீடுகளில் வேலைசெய்வதற்குப் போனார்கள்.

வேலை தட்டுப்பாடில்லாமல் கிடைத் தது. தங்கப் போதிய இடம் கிடைத்தது, அது வே போதுமென இம்மக்கள் வாழ்ந்தனர். இவர்கள் கடின உழைப்பாளிகள் அத்தோடு எதிர் வார்த்தையாடாமல்சரிங்க” "ஆமாங்கநல்லாங்க" என்று குனிந்து கட்டளைகளை ஏற்றும் நடந்தார்கள். நாளடைவில் அவர் களது உறவினர்களும் வேலைக்கென இங்கு வந்தனர்.

1958ம் ஆண்டின் இனக்கலவரத்தில் பெருமளவு மக்கள் கிளிநொச்சிக்கு வர வில்லை. அப்போது பாதிக்கப்பட்டவர்கள் வவுனியாவில் தங்கியவர்கள் போக, ஏனை யோர் மீண்டும் மலையகத்துக்கே திரும்பிச் சென்றனர். 1977ல் நடந்த இனப்படு கொலை ஆயிரக்கணக்கானவர் களை நிலைகுலைய வைத்தது. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட வர்களை தெருவழியாக தமிழர் பிரதேசங் களுக்குக் கொண்டு வரவும் முடியவில்லை. அவர்கள் பலாலியில் விமானத்திலும் காங் கேசன்துறையில் கப்பலிலுமாக வந்திறங்கினர்.

அங்கிருந்தே பல தொண்டு நிறுவனங்கள் இவர்களைப் பராமரிக்க ஏற்றுக் கொண்டது. அதற்கான நிலத்தை அரசாங்கம் கையளித்தது. இந்தவகையிலும் இந்த மக்களை சமயநிறுவனமொன்று பொறுப் பேற்றது மக்களது நன்கொடையைப் பெற்று வீரகேசரி நிறுவனம் 50 குடும் பங்களைப் பொறுப் பேற்றது. இப்படி பொறுப்பேற்றவர் களை வீரகேசரி நிறுவனம் புளியங்குளத்தில் குடியேற்றியது. அவர்களுக்கென கைத் தொழில் பயிற்சி கூட்டுப் பண்ணை என முயன்றாலும் அங்கும் இந்த மக்களுக்கு கிடைத்தது அரை ஏக்கர் நிலமே.

கிளிநொச்சியில் கற்பாதைக்கும் புகை யிரதப்பாதைக்கும் இடையே உள்ள நிலப் பகுதி இந்த மக்களைக் குடியேற்ற சமய நிறுவனம் ஒன்று பெற்றுக் கொண்டது. அங்கும் ஆளுக்கு அரைஏக்கர் நிலமே கிடைத்தது. யானை கரடிகள் வந்து பகலிலும் மேயும் கானகத்தில் இவர்கள் கூட்டாகப் பயிர் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். குறித்த சமய நிறுவனம் இவர்களை மதம் மாற்றும் பணியில் தோல்வியையே சந்தித்தது. எனவே அது தன் பணியை இடையில் நிறுத்தியது. பலர் கூலிவேலைக்கு மாறினர்.

1959,1960, 1961 காலப்பகுதியில் தமிழர சுக்கட்சி சட்ட மறுப்பு இயக்கதில் அரச காணிகளை வெட்ட அறிவித்தல் விட்டது. ஆனால் அதற்கு முன்பே அரச காணிகளை அடாத்தாக வெட்டி வீடுகட்டவும் பயிர் செய்யவும் பணம் படைத் தோர் முன் நின்றனர். இவர்களுக்குக் கூலிகளாக இந்த அகதிகளாக வந்த மலையகத் தமிழர்கள் கிடைத்தனர்.

காடுகளை வெட்டியதற்காக பொலீசில் பிடிபட்டு விளக்க மறியல் இருக்கவும் அவர்களுக்காக வழக்கை சந்திக்கவும், இந்த மலையக மக்களே அகப்பட்டனர். இவ்வாறாக இரத்தினபுரம் கிளிநொச்சி, வட்டக்கச்சி மாயவனுார், குஞ்சுப் பரந்தன், கல் மடு இராமநாதபுரம் பகுதிகளில் காடுகளை வெட்டினர்.

இந்த மக்களை ஒரு வெளிநாட்டு நிறுவனமான ரெட்பானா நிறுவனம் விசுவ மடுவில் புதிதாக குடியேற்றி பட்டுப்பூச்சி வளர்ப்புக்கான நடவடிக்கைகளை மேற் கொண்டது. இங்கு இவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் கிடைத்தது. அந்த முயற்சியில் வெற்றி பெறாவிடினும் மக்கள் சுயமாக கிணறுகளை வெட்டிப் பயிர் செய்தனர்.

போராட்டம் வலுவடைந்த காலத்தில் 1983லும் ஒரளவு மக்கள் கிளிநொச்சிக்குள் பிரவேசித்தனராயினும் பெருமளவு நிலமற்ற வர்களாகவே இருந்தனர். பிரதேச மக்களால் ஒதுக்கப்பட்ட நிலங்களை இவர்கள் பிடித் துக் காணிகளாக்கினர். இந்தக்காலப்பகுதி யில் உருவான சாந்தபுரம் கிராம வீட்டுத் திட்டம், மணியர்குளம், காந்திக்கிராமம், திலகா குடியிருப்பு, பாரதிபுரம், மலையாள புரம், கிருஷ னாநகர் என்பவை முற்று முழுதாக மக்களுடையவை யாகும். எனினும் பலர் நிலங்களை கைமாற்றி விட்டுப் பழையபடியே தமது சொந்த (மலையகம்) இடங்களுக்கு திரும்பிவிட்ட னர். முறிகண்டியிலிருந்து இரணைமடுச் சந்தி வரை குடியேற்றப்பிட்ட மக்களை வன விலங்குகளிடமிருந்து காப்பாற்ற மதபோதகர் சொன்ன வழி "அனைவரும் பொன்னகருக்கு வாருங்கள் ஆளுக்கு கால் ஏக்கர் நிலத்தில் வீட்டைக்கட்டி நெருக்கமாக வாழுங்கள். வயல் செய்யும் காலத்தில் உங்கள் நிலத்தில் பயிரிட்டுவிட்டு இங்கே வந்து இருங்கள் என்பதாகும். அல்லாமலும் கனகாம்பிகைக் குளம் பெருகும் போதெல்லாம் இவர்கள் வீடுவாசல்கள் வெள்ளத்தில் மூழ்குவதும் வழமையான நிகழ்ச்சிதான்.

சாந்தபுரம் குடியிருப்பு இயக்கப் பண்ணை களுக்கான கூலிகளை இலக்கு வைத்து போடப்பட்டது என்பது தான் உண்மை. அங்கும் ஒருகுடும்பத்துக்கு முழுதாக இரண்டு பரப்பு நிலம்கூட வழங்கப்படவில்லை. சுமார் பத்துக் குடும் பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஏனையோர் தமது முயற்சியிலேயே வீடு கட்டினார்கள்.

மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.

இதே போலக் காந்திக் கிராமத்திலும் வளர்ந்து திருமணம் செய்த ஆண்களுக்கும் அவர்கள் மகன்களுக்கும் பிறப்பு ஆதாரம் இல்லை. மகன் தனக்கு மோட்டார் சைக்கி ளோட அனுமதிப்பத்திரம் எடுக்க முயன்ற போதே இவற்றின் அவசியம் தெரிந்தது. மலையக மக்களில் எழுதப் படிக்கத்தெரியா தவர்கள் அதிகம்தான். அது மட்டுமல்ல பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பு வதற்காக பாடசாலையிலிந்து மறித்தல் தாய்க் குப்பிறக்கப்போகும் அடுத்த பிள்ளையை வளர்ப்பதற்காக பாடசாலை செல்ல முடி யாமற் போனவர்கள் என நிறையவே சந்தித் தோம். எம்மிடையே வாழ்ந்து கொண்டி ருக்கும் இந்தக் குடும் பங்களிலிருந்து போராடப் போனவர்களும் அதிகம். காரணம் தேசப்பற்றல்ல அவர்களுக்குமொரு சமூக அந்தஸ்து தேவைப்பட்டது தான் . கிளிநொச்சியின் காடழித்து களனியாக்கிய மக்களில் பலர், தமக்கொரு குடிநிலமில்லாமல் இன்னும் பெரும் தனக்காரர்களையே தஞ்சமடைந்துள்ளனர். ஏன் அண்மையில் நீர்வற்றிக் குளங்கள் வரண்டுபோக கனகாம் பிகைக் குளத்தில் பல்லால் கடித்தும் உறிஞ்சி நீர் கொண்டு வந்து வயல் விளைய வைத்தவர் களில் இந்த மலையகத் தமிழர்களின் வாரிசுகளும் இருந்தனர். மலையக மக்கள் கிளிநொச்சியை உருவாக்க உதவினார்கள். உருவான பின்னும் உழைக்கிறார்கள். தாமும் வாழ்கிறார்கள் இதே கிளிநொச்சியில் இடம் பெயர்ந்து வந்து கல்விகற்ற ஒரு சிறுவன் இன்று பாராளு மன்றில் தன்மக்களுக்காக குரல் கொடுக்கிறார் என்பது பெருமை, இப் போது மலையக மக்களும் தமது பிள்ளைகளை கல்வியில் உயர்த்த முனைப் போடு நிற்கிறார்கள். வளர்க வளம் பெருக என நாமும் வாழ்த்துவோம்.


 நன்றியுடன் - கரை எழில் தொகுப்பிலிருந்து...

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates