மாத்தளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதி இளைஞர் சமுதாயம் மற்றும் அங்குள்ள பாடசாலை மாணவர்கள் எதை நோக்கிப் பயணம் செய்கின்றனர் என்ற கவலைக்குரிய கேள்வி அண்மைக் காலமாக மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்-றது.
ஒரு காலத்தில் கசிப்பு பழக்கத்துக்கு அடிமையாக இருந்த பெருந்தோட்ட மக்கள், மலையக சமூகத்துக்கு ஒரு சீரழிவு வரலாற்றை ஏற்படுத்த முனைந்தபோது ஓய்வு நேரத்தில் அம்மக்களின் கவனத்தை மாற்று திசையில் திருப்ப வேண்டுமென்-பதற்காக அமரர் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான் தோட்டங்கள் தோறும் விளையாட்டுக் கழகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற முனைப்புடன் செயல்பட்டு அதன்மூலம் அம்மக்கள் ஓரளவு கசிப்பு பாவனையிலிருந்து விடுபட ஆத்மார்த்த ரீதியிலான ஒரு ஆரம்பகட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதனை நமது பெருந்-தோட்ட சமூகம் எந்தளவுக்குப் புரிந்து செயற்பட்டது என்பதற்கான ஆதாரபூர்வ தக-வல்கள் இல்லாவிட்டாலும் கூட, முழு மலையகத்திலும் அவரது தீர்க்க தரிசனம் வெற்றி பெற்றிருந்த தன்மையை மறுக்க முடியாது.
அதற்குப் பின்னர் நமது மக்களை போதைப்பொருள் கலாசார சிந்தனையிலி-ருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அமரர் தொண்டமானின் வழிவந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.சிவஞானம் பெருந்தோட்டப் பகுதி கோவில்கள் அனைத்தையும் புனரமைப்பதற்கும் அங்கு வருடாந்த தேர்த்திருவிழா நடத்தப்படுவதற்கும் அக் கோவில்களுக்குத் தேவையான மூர்த்திகளின் சிலைகள், ஒலிபெருக்கிக் கருவிகள் என்பவற்றை பாரிய சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம் தோட்டப்புறங்களில் கசிப்பு கலாசாரம் குறைவதற்கான சூழ்நிலை உருவானதை மறுக்க முடியாது. இது தவிர, மாத்தளை மாவட்ட பெருந்-தோட்டத் துறை வாழ் மக்களின் எதிர்கால சந்ததியினரின் நலன்களை பேணுவதற்-கான உற்சாகமளிக்கும் வகையில் பல அமைப்புகள் முன்னின்று உழைத்து வருவது உண்மை.
தற்போது மாத்தளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசா-லைகளின் வளங்கள் பாரிய அளவில் அபிவிருத்தி அடைந்துள்ளன. குறைபாடுகள் சில இருந்தாலும் அப்பாடசாலைகளின் மூலம் மாணவர்கள் தமது கல்வித் தராத-ரத்தை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு நிறையவே உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பெருந்தோட்டத்துறையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள மாத்தளை சுபீட்சம் இந்து சமூக நலன்புரி ஒன்றியம் கிட்டத்தட்ட பத்து அறநெறி பாடசாலை-களை தாமே முன்னின்று நடத்திவருவதோடு வாராந்தம் அங்குள்ள பாடசாலைக-ளுக்கும் சென்று பெற்றோரை சந்தித்து பல சமூக முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதுதவிர, மாத்தளை ஸ்ரீ முத்து மாரியம்மன் தேவஸ்தான கல்விப் பிரிவு, மாத்தளை சைவ மகா சபை, மாத்தளை சுவாமி விபுலாந்தர் கலா-மன்றம், மாத்தளை மகாத்மாகாந்தி சபை, மாத்தளை இந்து இளைஞர் பேரவை, மாத்தளை இந்து மகாசபை என பல்வேறு அமைப்புகள் தமது சேவைகளை அவ்வ-மைப்புகளின் உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் தமது நேரம், காலம், நிதி அனைத்-தையும் நன்நோக்குடன் செலவிட்டு சேவை செய்து வந்தாலும் கூட குறித்த அமைப்புகளின் அர்ப்பணிப்புகள் அனைத்தும் நீரில் கரைந்து சென்று கொண்டிருப்பது இப்போது நிதர்சனமாகத் தெரியவருகிறது.
முழு நாட்டையுமே சவாலுக்குள்ளாக்கி வரும் போதைப் பொருள் பாவனை மலையகப் பகுதிகளிலும் ஊடுருவி வருவது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தப்போவதில்லை.
மாத்தளை கந்தேநுவர எல்கடுவ பகுதிகளைச் சூழவுள்ள தோட்டங்களில் அண்மைக்காலமாக கசிப்பு, சாராயம் ஆகியவற்றுக்கு அப்பால் போதைப்பொருள் கலந்த பாக்கு, புகையிலை, மாவா எனக்கூறப்படும் போதைப்பொருள் என்பவை மிகத் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது பற்றியும் இவற்றைத் தோட்டப் புறங்களிலுள்ள சில பிரபலங்களின் வழித்தோன்றல்களே முன்நின்று நடத்திவருவ-தாகவும் குறிப்பிடும் இப்பகுதிப் பெற்றோர், தமது வீடுகளில் நாளாந்தம் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் மேற்படி போதைப்பொருள் பாவனை காரணமாகவே தமது சொந்த பிள்ளைகளாலேயே இடம்பெறுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் அவர்களின் இளைய சந்ததியின-ரையும் தலைதூக்கி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பாரிய அளவில் அர்ப்பணிப்பு செய்துவரும் அமைப்புகள் இவ்வாறான போதைப்பொருள் பாவ னைக்கு எதிரான நடவடிக்கைகளை பெருந்தோட்டப் பகுதிகள் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன.
பல்வேறுபட்ட அரசியல், தொழிற்சங்க, பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துவரும் மலையக சமூகம் தமது எதிர்கால சந்ததிகள் திசைமாறி செல்வதை எவ்விதத்திலும் அனுமதிக்கக்கூடாது என்றாலும் இன்றைய நவீனமய சூழல் இதற்கு இடம்கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறியே!.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...