மலையக பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்களே மிகவும் வறிய சமூகப் பிரிவினராக இருக்கின்றனர் என ஐ.நா. அமைப்புக்கள், சர்வதேச தொழில் நிறுவனம் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்களின் ஆய்வறிக்கைகளும் பல உள்நாட்டு அமைப்புக்களின் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இவ்வாய்வுகளைப் புறந்தள்ளி, ‘இல்லை இப்போது முன்னரைப் போல் அவ்வளவு வறியவர்களாக இல்லை; ஓரளவு நல்ல முறையில் வாழ்கின்றார்கள்’ என்று வாதிடுவோர்களும் உள்ளனர். மலையக மக்கள் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை சற்று அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் வறுமை அவர்களை எவ்வெவ்விதங்களில் பாதித்துள்-ளது என்பது தெரியவரும்.
தீராத நோய்கள்
வறிய மக்கள் எப்போதும் தீராத நோய்களையுடையவர்களாயிருக்கின்-றார்கள். மலையகத்தில் தீராத நாட்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் அதிகள-வாகக் காணப்படுகின்றார்கள். நம்மக்கள் வாயில் அடிக்கடி வெளிவரும் வார்த்தை-கள்தான் “மேலுக்கு சரியில்லைங்க”. வறுமை சோர்வை ஏற்படுத்துகின்றது. மலை-யக மக்களில் பெரும்பாலானோர் எவ்போதும் சோர்ந்தவர்களாகத்தான் இருக்கின்-றார்கள். இதனால் அதிகளவில் ஆஸ்த்மா, நீரிழிவு ஆகிய நோய்களினால் பாதிக்-கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
மாரடைப்பு ஆபத்தும் அதிகரித்தே காணப்படுகின்றது. நோய்க்கான உரிய மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதை வறுமை நிலை தடுக்கின்றது.
குறைவான ஆயுட்காலம்
நாட்டின் ஏனைய பகுதியினரை விடவும் மலையக மக்கள் குறைவான ஆயுட்காலம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். சராசரியாக ஏனையோரை-விட ஐந்தாண்டு காலம் குறைவான ஆயுட்காலம் கொண்டவர்களாயிருக்கின்-றார்கள் என்று புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. பெண்களைப் பொறுத்தவரை ஆண்களைவிட குறைவான ஆயுட்காலம் கொண்டவர்களாகவேயிருக்கின்றார்கள்.
மிக மெதுவான சமூக அசைவியக்கம்
சமூகத்தின் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வேறு வகைகளில் வகைப்ப-டுத்தக்கூடிய மனிதர்கள், சமூக அடுக்குக்களின் இடையிலோ அதற்கு அப்பாலோ இயங்குவது சமூக அசைவியக்கம் எனப்படுகின்றது. இவ்வகைவியக்கமே ஒரு சமூகத்தில் வசதிபெற்ற மத்தியதர வர்க்கத்தை உருவாக்குகின்றது. தேவைகள் பற்-றிய விருப்பத்தைத் தூண்டுகின்றது. கண்டு பிடிப்புகளையும் கடின உழைப்பையும் போட்டியையும் வளர்க்கின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் மலையகத்தில் சமூக அசைவியக்கம் மிக மெதுவாகவே நிகழ்கிறது. இதனால் மேற்குறிப்பிட்டவைகளின் வளர்ச்சியும் மெதுவாகவே இருக்கின்றது. சமூகவளர்ச்சி காரணமாக ஏற்படும் விருப்பங்களை வறுமை மலையகத்திலிருந்து முற்றாகவே களைந்து விட்டிருக்கிறது.
இடம்பெயர்தல்
வறுமை குறித்த ஆய்வாளர்கள் தெரிவிக்கும் ஒரு விஷயம், வறுமை சில பிரதேசங்களில் குவிகின்றது, பீடித்திருக்கிறது என்பது. நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர், எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், என்ன தொழில் புரிபவர் என்பதைவிட நீங்கள் எந்தப் பிரதேசத்தில் வாழ்கின்றீர்கள் என்பது உங்களை வறுமைக்கு உள்-ளாக்கக்கூடும். இந்த வகையில் பெருந்தோட்டப்பிரதேசங்களில் வாழ்பவர்கள் என்ப-தனாலேயே மக்கள் வறியவர்களாயிருக்கின்றார்கள்.
பெருந்தோட்டப் பிரதேசங்களிலிருந்து பெருந்தொகையான 15 24 வயதிற்-குட்பட்ட இளைஞர்கள் கிராமப்புறங்களுக்கு அல்லது நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளமை சமீபகாலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் அறிக்கையின்படி வருடாந்தம் 8%, 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் பெருந்தோட்டங்களிலிருந்து இடம்பெயர்கின்றார்கள்.
தமது வறுமை நிலையிலிருந்து நீங்கி வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே இவர்கள் நோக்கமாகும். இனக்கலவரங்கள் மற்றும் தனிப்-பட்ட காரணங்களுக்காகவும் சிலர் இடம் பெயர்கின்றார்கள்.
குடும்பத்தோடு இடம்பெயர்வதே அவர்களுக்கு பெரும் செலவான காரிய-மாகும். இவ்வாறு இடம்பெயரும் அனைவருமே வறுமையிலிருந்து நீங்கி நல்-வாழ்வை அமைத்துக் கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதமேதுமில்லை.
இத்தகையவர்கள் ‘புவியியற்சார் வறுமை வலையில் சிக்கியவர்கள்’ எனப்ப-டுகின்றார்கள். புதிய இடங்களில் இவர்கள் தம் நல்வாழ்விற்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
மோசமான குடியிருப்பு வசதிகள்
பெருந்தோட்டத்துறை மக்களுக்கு சுமார் இரண்டு இலட்சம் வீடுகள் தேவை-யென்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகச் சொல்லப்படும் வீடமைப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓராண்டுக்கான நிதியின் கணக்கில் பார்த்தால் தேவையான வீடுகளை அமைத்து முடிக்க 800 ஆண்டுகள் ஆகுமென்று சமீபத்தில் ஒரு தகவல் வெளிவந்திருந்தது.
இன்னமும் பெரும்பாலான மக்கள் ஆரம்பகாலங்களில் அமைக்கப்பட்ட லயன் அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். பெருகி வந்த சனத்தொகைக்-கேற்ப மலையகத்தில் ஒரு போதும் வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவே இல்லை. வீடமைப்புத்திட்டங்கள் என்ற பெயரில் அவ்வப்போது அமைக்கப்பட்ட நூறும் இருநூறுமான வீடுகள் இவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. எந்தவொரு திட்டமும் வெற்றிகரமாகவும் முழுமையாகவும் நிறைவு செய்யப்பட்டதாகவும் தெரியவில்லை.
மிகச் சிலர் லயன் அறைகளை நவீனமயப்படுத்தி வசதியான வீடுகளை அமைத்துக் கொண்டிருப்பதென்னவோ உண்மைதான். மிகப் பெரும்பாலானோர் லயன் அறைகளில் இடவசதி போதாததன் காரணமாக சிறு அறைகள், கொட்-டில்கள், குடிசைகள் அமைத்து வாழ்வதை பெரும்பாலான தோட்டங்களில் காணலாம்.
பெருந்தோட்டங்களில் 61 வீதமான வீடுகள் வாழ்வதற்குத் தகுதியற்ற மிக மோசமான வீடுகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வறுமை நிலைதான் இதற்குக் காரணம்.
வாழ்நாள் கடனாளிகள்
தோட்டத்தொழிலாளர்கள் எப்போதும் முடிவுறாத கடனாளிகளாகவே இருக்கக் காண்கின்றோம். கடன் வாங்காமல் தமது வாழ்வின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். திருமணம், மரணம், மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்பா-ராத செலவுகள் போன்ற எல்லா விடயங்களுக்குமே அவர்கள் கடன்பட்டே தீர-வேண்டியிருக்கின்றது. வட்டிக்குக் கடன் வாங்கி, அந்த வட்டியைக் கட்டுவதற்காக மேலும் கடன்வாங்கி, இப்படி வாழ்நாள் பூராகவுமே கடன்பட வேண்டிய நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் வாழ்வின் ஒரேயொரு உத்தரவாத-மாக இருக்கின்ற ஊழியர் சேமலாப நிதியினையும் பெற்று தமது கடன்களைச் செலுத்தப்பயன்படுத்தியவர்களும் இருக்கின்றார்கள். தமது தீயபழக்கங்களினால் வீணாகக் கடன்படுகிறவர்களும் இல்லாமல் இல்லை. இவர்கள் மிகக் குறைவான வீதத்தினரே. (தொடரும்)
மனித உரிமைகளற்ற ஒரு சமூகம்
மனித உரிமைகள் உலகளாவியவை. அனைத்து மக்களுக்கும் பொதுவா-னவை ஆனால் வறியவர்கள் என்று வரும் பொழுது அவர்கள் மனித உரிமைக-ளுக்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதப்படுகின்றார்கள். இலங்கை பெருந்தோட்டத்-துறையைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு இந்நிலையே காணப்படுகின்றது. இது விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும். காலம் காலமாக அவர்களு-டைய அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு வருவதே இதற்கு சிறந்த உதாரண-மாகும். சில காலங்களுக்கு முன்பு நாடற்ற பிரஜைகள் என்றொரு பிரிவினர் இருந்து வந்தது நாமறிந்ததே. இது, ஒவ்வொருவருக்கும் நாட்டின் குடியுரிமை உரித்துடையது என்ற மனித உரிமையை மீறுவதாகும். இப்போது இந்த நிலை இல்லாத போதும், பெருந்தோட்டத் துறையில் நாளாந்தம் எவ்வளவோ மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. இவற்றைக் கண்டு கொள்வோர் இல்லை.
பெண்கள் நிலை
எந்தவொரு வறிய சமூகத்திலும் அதன் மோசமான பாதிப்புக்கள் அச்சமூ-கத்தின் பெண்களையே சாரும். நாட்டில் புரதச்சத்துக்கள் குறைந்த உணவை உண்-போரில் பெருந்தோட்டத் துறைப் பெண்களே முதலிடம் வகிக்கின்றார்கள். அதனால் மூன்றிலொரு பங்கினரான பெண்கள் மந்த போஷணத்தினால் பாதிக்கப்பட்டிருக்-கின்றார்கள். குருதிச் சோகையுடையோரும் அதிகளவில் உள்ளன பெருந் தோட்டத்-துறையிலேயே இவர்கள் மிக மோசமாக நடத்தப்படுகின்றார்கள். பல்வேறு துஷ்பிர-யோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். வறுமையின் காரணமாக வீட்டில் போதியளவான உணவு இன்மையினால்தான் இவர்கள் இறுதியாக மிஞ்சிய உணவை உண்பவர்களாக இருக்கின்றார்கள் என்ற உண்மை போலியான சம்பிரதா-யங்களால் மறைக்கப்பட்டிருக்கின்றது.
குழந்தைகள் நிலை
நாட்டின் எந்தப் பகுதியினரையும் விட பசியால் வாடும் குழந்தைகள் மலை-யகத்திலேயே மலிந்திருக்கின்றார்கள். ஐந்து வயதிற்குக் குறைந்தோரில் 30% வீத-மானோர் நிறை குறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள். 13 வயது குழந்தைகளில் புரதச் சத்துடைய உணவுகளை மிகக் குறைவாக உண்போர் மலையகத்திலேயே அதிகமாக உள்ளனர். இதனால் மலையகக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லை. பசியினால் குழந்தைகள் நச்சுசார் அழுத்தத்திற்கு உள்-ளாகின்றனர். இது உளரீதியான பிரச்சினைகள், சோர்வு, வாழ்க்கையின் வாய்ப்புக்-களை உக்கிரமாகக் குறைத்துக் கொள்ளல் ஆகியவற்றைத் தோற்றுவிக்கின்றது.
அடிப்படையில் இக்குழந்தைகள் வறுமையிலும் பட்டினியிலும் பிறக்கின்-றன. வளர்ந்து அழுத்தம் நிறைந்த குறுகியகால வாழ்வினை வாழ்கின்றன. வறு-மையிலும் பட்டினியிலும் இறக்கின்றன. இதுவோர் நச்சுவட்டம். எவரும் இது குறித்து எதுவும் செய்வதில்லை.
இவை எல்லாவற்றையும் விட வருந்தத்தக்கது என்னவென்றால் நாட்டின் ஏனைய பிரதேசங்களையும் விட குழந்தைகள் குறுகிய ஆயுளுடன் இறப்பது மலையகத்திலேயே. வறுமையின் காரணமாக பெற்றோர்கள் போதிய கல்வியறிவற்று இருப்பதும் இதற்கோர் காரணமாகச் சொல்லப்படுகின்றது. வறுமை பெருந்தோட்ட மக்களின் ஆத்மாவை தொழில் வாய்ப்புக்களை ஆரோக்கியத்தை மட்டும் அழிக்கவில்லை. அது அவர்களுடைய குழந்தைகளையும் எடுத்துச் செல்கின்றது.
மலையக மக்களை வறுமை எவ்வெவ் விதங்களில் பாதிக்கின்றது என்பது குறித்த சில விடயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டு அவை குறித்த சிறு அறிமுகம் மாத்திரமே இங்கு தரப்பட்டுள்ளது. இவையும் இவையோடு இணைந்த பல்வேறு விடயங்களும் புள்ளி விவரங்களும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டியவைகளாகும். அப்போது மேலும் விரிவான படப்பிடிப்பைப் பெறலாம்.
பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் இவையொன்றும் இல்லாதது போல் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கின்றோம். இதற்குக் காரணம், சமூகப்பிரச்சினைகள் குறித்து அவர்கள் எந்தவிதமான பிரஞையுமில்லாதிருப்பதோடு, சில பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எந்த விதமான ஆய்வுகளுக்கும் கணக்கெடுப்புகளுக்கும் உட்படாதிருப்பதே பெரும்பாலான ஆய்வுகள் குறிப்பிட்ட பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளைக் (SAMPLE) கொண்டே செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...