இலங்கை கல்வி சமூகச் சம்மேளனத்தின் வெளியீடான வெண்கட்டி இதழ் விமசன நிகழ்வு எதிவரும் 09-04-2016 அன்று காலை 10.00 மணிக்கு ஹட்டன் பொஸ்கோ கல்லூரியில் நடைப்பெறும். சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைப்பெறவுள்ள இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கலந்துக் கொள்வார். நூல் பற்றிய அறிமுகவுரையை திரு. எம். எஸ். இங்கர்சால் வழங்க, கிழக்குப் பல்கலைகழக பேராசிரியர் செ. யோகராசா, சூரிய காந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் விமர்சனவுரைகளை வழங்க சம்மேளனத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் எம். மதன்ராஜ் ஏற்புரையை வழங்குவார். இலங்கை கல்விச் சமூக சம்மேளன இசைக் குழுவினர் வழங்கும் ‘மங்கியதோர் நிலவினிலே.. என்ற தலைப்பிலான இசை நிகழ்ச்சியும் நடைப்பெறும். நன்றியுரையை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் நிகழ்த்துவார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...