மலையக பெருந்தோட்ட மக்கள் நாட்டின் ஏனைய சக பிரஜைகளைப் போல் அபிவி ருத்தி திட்டங்களை அனுபவிக்கத் தடையாக உள்ள பிரதேச சபை சட்டத்தின் 33ஆவது உறுப்புரையை நீக்க அல்லது மாற்ற மற்றும் தோட் டக்குடியிருப்புப் பகுதிகளை கிராமமாக அங்கீகரிக்க கோரி 50 ஆயிரம் கையொப்பங்களை சேகரித்து முன்னாள் ஜனாதிபதிக்கு கையளிக்கும்படி கண்டி அரசாங்க அதிபரிடம் சமர்பிக்கப்பட்டது.
பிரதேச சபையின் 33ஆவது உறுப்புரையை நீக்கும்படி கோரும் வகையில் கடந்த 25.05.2011 இல் 50 ஆயிரத்துக்கும் அதிகமான கையொப்பங்களைப் பெற்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமும் அதன் தலைவர் பெ.முத்துலிங்கமும் பெருந் தோட்டத்துறை சமூக மாமன்றத்துடன் இணைந்து அதன் அங்கத்துவ நிறுவனங்கள் மூலமாகவும் மலையகத்தின் பிரதான தொழிற் சங்கங்கள் மற்றும் குடிமைச் சமுதாய அமைப்புகள் மூல மாகவும் மேற்கொண்டு வந்தது குறிப்பிட த்தக்கது.
மேற்கூறப்பட்ட கையொப்ப வேட்டை கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதுடன் அவ்வாறு திரட்டப் பட்ட கையொப்பத் திரட்டு கண்டி அரசாங்க அதிபரிடம் பெருந்தோட்ட சமூக மாமன்றம் சமர்ப்பித்து கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டது.
அந்தக் கலந்துரையாடலில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக தலைவர் பெ.முத்துலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் சர்வதேச விடயங்களுக்கான சர்வதேச இயக்குநர் எஸ்.மதியுகராஜா, பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கிம் ஆகியோர் கலந்துகொண்டு மேற்படி பிரதேச
சபை உறுப்புரையின் 33ஆவது சரத்து பற்றி யும் தோட்டங்களைக் கிராமமாக அங்கீக ரிப்பது பற்றியும் எடுத்துரைத்தனர்.
இக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த அப்போதைய அரசாங்க அதிபர் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்வதும் கிராம சேவகர் பிரிவுகளை அதிகரிப்பதும் மிகவும் அவசியமான விடயம் என கூறியதுடன் தாமும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரும் இதுபற்றி பல சந்தர்ப்பங்களில் கருத்து க்களை எடுத்துரைத்துள்ளதாகக் கூறினார்.
இதேவேளை, மலையக மக்கள் சார்பாக இவ்வாறான யோசனைகளை முன்வைப்பதை தாம் வரவேற்பதாக கூறியதுடன் அரச அதிகா ரிகளை தாங்கள் தமது கணிப்பீட்டின் படி நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச சபை களை உருவாக்கும்படி கோரியுள்ள தாகவும் கூறினார்கள். அதிக மக்கள் தொகையையும் நிலப்பரப் பையும் கொண்ட நுவரெலியா மற்றும் அம்ப கமுவ பிரதேச சபைகளில் அரச நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொள்ள பிரதேச சபைகளை அதிகரிப்பது அவசியமா னது என்று கூறிய துடன் அரச அதிகாரி என்ற ரீதியில் இம்மு யற்சிக்கு தாம் பூரண ஒத்துழை ப்பு வழங்கத் தயார் எனக் கூறினார்கள்.
இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள், தோட்டங்களை கிராமப் பிரிவுகளாக பிரிக்கும் பொழுது மக்களின் இனத்துவ பிரதிநிதித்துவத்தைப் பாதிக்காத வகையில் மீள் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசா ங்க அதிபரிடம் கேட்டுக்கொண் டனர்.
பெருந்தோட்டங்கள் பிரதேச சபை எல்லைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் விஸ்தரிக் கப்பட வேண்டும் என கண்டி சமூக அபிவி ருத்தி நிறுவகம் 1994ஆம் ஆண்டு முதல் கருத்தினை முன்வைத்து வந்தபோது, பல அரசியல் ஆய்வாளர்கள் அரசியல்வாதிகள் உட்பட தொழிற்சங்கவாதிகள் கூட இது ஒரு பொய்யான வாதம் என விசனம் தெரிவித்து வந்தனர். அத்தோடு பல்கலைக்கழக பேராசி ரியர்கள் இக்கருத்தினை ஆரம்பத்தில் மறுத்த போதிலும் பின்னர் ஏற்றுக்கொண்டனர்.
உள்ளூராட்சி மன்றங்கள் நாட்டின் நிர்வாக முறையில், நாட்டின் அபிவிருத்தியில் ஓர் முக்கிய பங்கினை வகிக்கின்றது. கருவறை முதல் கல்லறை வரை என்ற நோக்குடன் செயற்படும் இவ்வமைப்பின் சேவைகளை முழுமையாக அனுபவிக்க முடியாத ஒரு பிரிவினராக பெருந்தோட்டத்துறை மக்கள் இது நாள் வரை வாழ்ந்து வந்துள்ளமை வேத னைக்குரியது.
சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தேடலு க்கும் ஆய்வுக்கும் வலு சேர்க்கும் வகை யில் தமிழ் முற்போக்கு கூட்டணி செயற்பட் டுள்ளது என்பது உண்மை. அதேவேளை தோட்டக் குடியிருப்புக்கள் உட்பட அவர்களது நிலப்பகுதி பிரதேச சபை எல்லைக்குள் உள் வாங்கப்பட வேண்டும் என்ற கருத்தினை பல செயலமர்வுகள் மூலம் ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டு வந்தவர் சமூக அபிவி ருத்தி நிறுவக தலைவர் பெ.முத்துலிங்கம். அவர் பல சர்வதேச அரங்குகளிலும் இக்க ருத்தினை ஆதார பூர்வமாகவும் ஆய்வுகள் மூலமாகவும் முன்வைத்துள்ளார்.
இதற்கு சான்றாக "பிரதேச சபையும் மலை யக மக்களும்" என்ற நூலின் மூலம் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழு உலகிற்கும் தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக விளக்கம் தேவைப்படுவோர் என்னோடு இலவசமாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவ கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, வரலாற்றை திரிவுபடுத்தி அறி க்கை விடுவதும் உண்மைக்கு முரணாக பத்திரிகை அரசியல் நடத்துவதன் மூலம் மக்களை பிழையான வழியில் திசை திருப்பு வதும் பிழையான தகவல்களை கொடுப்பதும் முறையற்றது.
யார் குற்றினால் என்ன? நமக்கு அரிசி தான் முக்கியம் என்றாலும் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலை அடையாளம் கண்டு அனைத்துத் தரப்பி னரையும் ஒன்றிணைத்து ஒரு வெற்றியை காணும்போது அதன் ஆணிவேராக இருந்த வரை அடையாளப்படுத்துவது ஒரு முக்கிய மான செயலாகும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...