Headlines News :
முகப்பு » » மலையக தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா? - சிவலிங்கம் சிவகுமாரன்

மலையக தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுமா? - சிவலிங்கம் சிவகுமாரன்


பிந்­து­னு­வெவ எதி­ரொலி சம்­ப­வத்தில் சந்­தே­கத்தில் கைதாகி 15 வரு­டங்­க­ளாக வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரும் வட்­ட­கொடை பிர­தேச இளை­ஞர்கள் பலவித இன்­னல்­க­ளுக்கு முகம்­கொ­டுத்து வரு­கின்­றனர்.

சிறை­களில் வாடும் தமிழ் அரசில் கைதி­களின் நிலை குறித்து நல்­லாட்­சிக்­கான புதிய அர­சாங்­கத்தில் ஆக்­க­பூர்­வ­மான முன்­னெ­டுப்­புகள் இடம்­பெ­று­வது போல் ஆரம்­பத்தில் தோன்­றி­னாலும் தற்­போது அது தேக்க நிலையை சந்­தித்­துள்­ளது போல் தெரி­கி­றது.

இதேவேளை, சிறை­களில் வாடும் தமிழ் அர­சியல் கைதி­களில் அடை­யாளம் காணப்­பட்ட ஒரு தொகு­தி­யினர் விடு­தலை செய்­யப்­ப­டுவர் என கடந்த வாரம் நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்­ளமை இவ்­வி­ட­யத்தில் நம்­பிக்­கை­யைத்­த­ரு­கி­றது.

சிறை­களில் வாடும் தமிழ் கைதி­களில் மலை­யக இளை­ஞர்­களும் அடங்­குவர். மலை­யக பெருந்­தோட்­டப்­ப­கு­தி­களில் பிறந்து வளர்ந்த இவர்கள் பல்­வேறு கார­ணங்­க­ளினால் புலச்­சி­த­ற­லுக்கு முகங்­கொ­டுத்து வட கிழக்கு மாகா­ணங்­களில் குடி­யே­றி­ய­வர்­க­ளாவர்.

இப்­படி சிறை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இளை­ஞர்கள் ஒரு புறம் இருக்க மலை­ய­கப்­ப­கு­தி­களில் பல்­வேறு சம்­ப­வங்­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு பின்னர் பிணையில் விடு­த­லை­யாகி நீண்­ட­கா­ல­மாக வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் இளை­ஞர்­களின் நிலை குறித்தும் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் முக்­கி­ய­மாக 2000ஆம் ஆண்டு ஒக்­டோபர் 24 ஆம் திகதி இடம்­பெற்ற பிந்­து­வெவ புனர்­வாழ்வு முகாம் சம்­பவமும் அதன் பின்னர் மலை­ய­கப் ­ப­கு­தி­களில் ஏற்­பட்ட குழப்ப நிலைகள், கல­வ­ரங்கள், அதில் சந்­தேக நபர்­க­ளாக கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்­களின் கதைகள் எவ­ருக்கும் தெரி­யாது மறக்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பிந்­து­னு­வெவ சம்­பவம்
பண்­டா­ர­வ­ளை­யி­லி­ருந்து பதுளை செல்லும் மார்க்­கத்தில் பிந்­து­னு­வெவ புன்­வாழ்வு முகாம் அமைந்­துள்­ளது. இந்த முகாமில் விடு­தலை புலிகள் இயக்­கத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்ட சுமார் 41 பேர் இருந்­தனர். புனர்­வாழ்வு பெற்று வந்­தாலும் இவர்­க­ளுக்கு இங்கு சுதந்­திரம் இருந்­தது.

பண்­டா­ர­வளை நக­ருக்கு சென்று வரு­வ­தற்­குக்­கூட இவர்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அருகில் இருக்கும் கிரா­மத்­த­வர்­க­ளுடன் இணைந்து சமூகப் பணிகள், சிர­ம­தா­னப்­ப­ணிகள் போன்­ற­வற்றை செய்து வந்த இவர்­களின் மீது அந்தப் பிர­தேச பெரும்­பான்மை இன மக்கள் நல்­ல­பி­மானம் வைத்­தி­ருந்­தனர்.

இந்த நிலை­யில ஒக்­டோபர் 24 ஆம் திகதி காலை இங்கு இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தில் முகாமில் இருந்த 41 தமிழ் கைதி­களில் 27 பேர் வெட்டிச் சிதைக்­கப்­பட்­டனர் அல்­லது இறக்­கும்­வரை தாக்­கப்­பட்­டுள்­ளனர், மற்றும் எஞ்­சிய 14 பேர் காய­முற்­ற­தோடு சிலர் படு­கா­ய­ம­டைந்­தனர். படு­கொ­லைகள் இடம்­பெற்ற காலை நேரம், 2,000 முதல் 3,000 வரை­யி­லான குண்­டர்­களால் முகாம் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஒரு குறிப்­பிட்­ட­ள­வி­லான பொலிஸ் படை தன்­னி­யக்க ஆயு­தங்­க­ளுடன் நின்­றி­ருந்த போதிலும், பொல்­லுகள் மற்றும் கத்­தி­க­ளுடன் ஆயு­த­பா­ணி­க­ளா­கி­யி­ருந்த குண்­டர்கள் முகா­முக்குள் நுழைந்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை தாக்­கும்­போது எதையும் செய்­ய­வில்லை. இது ஒரு திட்­ட­மிட்ட படு­கொ­லைச்­சம்பம் என பல­ராலும் கூறப்­பட்­டது. மலை­ய­க­மெங்கும் இச்­செய்தி காட்­டுத்தீ போன்று பர­வி­யது. அவ்­வா­றான ஒரு நிலை சம்­பவம் இடம்­பெற்று 5 நாட்­க­ளுக்­குப்­பி­றகு வட்­ட­கொடை நகரிலும் இடம்­பெற்­றது.

வட்­ட­கொடை கல­வரம்
ஒக்­டோபர் 29 ஆம் திகதி காலை 10 மணி­ய­ளவில் வட்­ட­கொடை புகை­யி­ரத நிலை­யத்தில் திரண்ட பிர­தே­ச­வா­சிகள் பது­ளை­யி­லி­ருந்து கொழும்பு நோக்­கிச்­செல்லும் உட­ரட்ட மெனிக்கே புகை­யி­ரதம் மற்றும் கொழும்­பி­லி­ருந்து பதுளை நோக்­கிச்­செல்லும் பொடி­மெ­னிக்கே புகை­யி­ர­தங்­களை சற்று தாம­தித்­துச்­செல்­லும்­ப­டியும் இது பிந்­து­னுவெவ சம்­ப­வத்­திற்கு தாம் காட்டும் எதிர்ப்பு என்றும் தெரி­வித்­தனர். பதுளை செல்லும் ரயில் வண்டி ஒரு­வாறு சென்றுவிட்­டது.

எனினும் கொழும்பு செல்ல வட்­ட­கொடை ரயில் நிலை­யத்தின் இரண்­டா­வது தண்­ட­வா­ளத்தில் (Second Flatform) தரித்து நின்ற உட­ரட்ட மெனிக்கே ர­யிலை தாம­தித்­துச்­செல்ல பிர­தே­ச­வா­சிகள் எடுத்த முயற்சி கல­வ­ரத்தில் முடிந்­தது.

ரயில் நிலைய பொறுப்­ப­தி­காரி தல­வாக்­கலை பொலிஸ் நிலை­யத்­திற்கு தகவல் வழங்க சிறிது நேரத்தில் அவ்­வி­டத்­திற்கு பொலி­ஸாரும் விசேட அதி­ரடி படை­யி­னரும் வந்து அமை­தி­யாக இருந்த பிர­தே­ச­வா­சிகள் மீது துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்ய ஆரம்­பித்­தனர்.

இதில் துரைராஜ் முத்­து­குமார் என்ற இளை­ஞரின் காலில் காயம் ஏற்­பட்­டது. எல்­லோரும் கலைந்து ஓட நின்று கொண்­டி­ருந்த ர­யிலின் காட்­சிகாண் கூடம் (கடைசி பய­ணிகள் பெட்டி) பகு­தி­யி­லி­ருந்து தீ கிளம்­பி­யது. இதை­ய­டுத்து ஒன்று சேர்ந்த வட்­ட­கொடை மேற்­பி­ரிவு கீழ்ப்­பி­ரிவு மற்றும் மடக்­கும்­பரை தோட்ட நகர்ப்­புற இளை­ஞர்கள் ர­யி­லுக்கு தீ பர­வாமல் தடுக்கும் முயற்­சி­களில் ஈடு­பட்­டனர். பய­ணி­க­ளையும் பத்­தி­ர­மாக இறக்கி மிகுதி பய­ணிகள் பெட்­டி­களை ரயில் எஞ்சின் ஓட்­டுனர் மூலம் தனி­யாக்­கினர். எனினும் இரண்டு பய­ணிகள் பெட்­டிகள் தீக்­கி­ரை­யா­கின. வட்­ட­கொடை ரயில் நிலையம் கல்­வீச்­சுக்­குள்­ளா­னது.

ரயில் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியே பொலி­ஸா­ருக்கு தவ­றான தகவல் கொடுத்தார் என பிர­தேசவாசி­களால் கூறப்­பட்­டது.

பய­ணிகள் அனை­வரும் தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­தரின் வீட்­டிலும் ஏனைய இடங்­க­ளிலும் தங்க வைக்­கப்­பட்­டனர். பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளான அவர்­க­ளுக்கு எந்த வித ஆபத்தும் நேர்ந்து விடக்­கூ­டாது என்­பதில் மிகக்­க­வ­ன­மாக இருந்த வட்­ட­கொடை இளை­ஞர்கள் பொலி­ஸா­ருடன் இணைந்து அவர்­க­ளுக்கு காவல் இருந்­தனர். உணவு சமைத்து விநி­யோ­கித்­தனர்.

இந்த சம்­பவம் இடம்­பெற்று அமை­தி­யான சூழல் திரும்­பிக்­கொண்­டி­ருந்த வேளை நவம்பர் 8 ஆம் திகதி கல­வ­ரத்தை தூண்டி விட்­டார்கள் என்ற குற்­றச்­சாட்டில் வட்­ட­கொடை பிர­தேச இளை­ஞர்கள் 12 பேர் தல­வாக்­கலை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.

கைது செய்­யப்­பட்ட அனை­வரின் மீதும் கல­வ­ரத்தை தூண்டி விட்­டார்கள் பொதுச்­சொத்­துக்கு சேதம் விளை­வித்­தார்கள் என்ற குற்­றச்­சாட்டில் வழக்கு தொட­ரப்­பட்டு பதுளை சிறைச்­சா­லையில் 3 மாத­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டனர். பின்னர் பிணையின் மூலம் வௌியில் வந்த இவர்கள் மீது தற்­போது வரை வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த 12 பேரில் சுப்­பி­ர­ம­ணியம் ஜெய­ரட்ணம் மற்றும் ராஜி பாலச்­சந்­திரன் ஆகியோர் கால­மாகி விட்­டனர்.

மிகுதி 10 பேரும் யாரு­டைய தயவும் துணையும் இன்றி கடந்த 15 வரு­டங்­க­ளாக நீதி­மன்­றுக்கு அலைந்து திரித்து சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு தமது பணத்தை செல­வ­ளித்து நிம்­ம­தி­யி­ழந்து தவித்து வரு­கின்­றனர். இவர்கள் மீதுள்ள வழக்கு 2005 ஆம் ஆண்டு கண்டி நீதி­மன்­றுக்கு மாற்­றப்­பட்­டது பின்னர் 2009 ஆம் ஆண்டு நுவ­ரெ­லியா மாவட்ட நீதி­மன்றில் உயர்­நீ­தி­மன்ற பிரிவு ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் அங்கு மாற்­றப்­பட்­டது. அந்த ஆண்­டி­லி­ருந்து இது வரை நுவ­ரெ­லியா நீதி­மன்றில் வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இவர்­க­ளுக்கு எதி­ராக சாட்­சி­யங்கள் திரட்­டப்­ப­ட­வில்லை. ஆரம்­பத்தில் இவர்கள் பிணையில் வௌியே வர அப்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த அமரர் சந்­தி­ர­சே­கரன் உறு­துணை புரிந்தார். அவர் இறந்த பிறகு எந்த ஒரு அர­சியல் பிர­மு­கர்­களும் இந்த அப்­பாவி இளை­ஞர்­களை கண்டு கொள்­ள­வில்லை. இவர்கள் அங்கம் வகித்த தொழிற்­சங்கம் இது வரை இவர்­களை ஏறெ­டுத்தே பார்க்­க­வில்லை. ஆரம்­பத்தில் இந்த இளை­ஞர்­க­ளுக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான சேனா­தி­ராஜா,ராஜ­கு­லேந்­திரன் மற்றும் ராஜ­துரை ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­மையை இங்கு குறிப்­பிடல் அவ­சியம்.

மரண் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு விடு­தலை
பிந்­து­னு­வெவ சம்­ப­வத்­திற்கு கார­ண­மா­வர்கள் என கைது செய்­யப்­பட்ட 41 பேரில் பண்­டா­ர­வளை மற்றும் தியத்­த­லாவை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் உள்­ள­டங்­க­லாக 19 பேர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளாவர். விசா­ர­ணை­களின் பின்னர் 2003 ஜுலை ௧ ஆம் திகதி இரண்டு பொலிஸ் அதி­கா­ரிகள் மற்றும் இரண்டு பெரும்­பான்­மை­யின நபர்கள் உட்­பட நால்­வ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது ஏனையோர் விடு­தலை செய்­யப்­பட்­டனர். . இதை எதிர்த்து இவர்கள் மேன்­மு­றை­யீடு செய்­தனர். அதன் பின்னர் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் பின் 2005 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் மீதான குற்­றச்­சாட்­டுகள் தள்­ளு­படி செய்­யப்­பட்டு அனை­வரும் விடு­தலை செய்­யப்­பட்டு விட்­டனர்.

இவர்­க­ளுக்கு எப்­போது விடு­தலை?
வட்­ட­கொடை கல­வர சம்­ப­வத்தில் கைதாகி பிணை­யி­லி­ருக்கும் இந்த 10 பேரும் தமக்கு விடு­த­லையா அல்­லது தண்­ட­னையா அது எப்­போது , தீர்ப்பு எப்­ப­டி­யாக அமையும் என காத்­தி­ருக்­கின்­றனர். குறித்த சம்­ப­வத்­திற்கும் தமக்கும் எவ்­வித தொடர்பும் இல்லை எனவும் நாம் கல­வ­ரத்தில் ஈடு­பட்டோம் என எவரும் சாட்சி கூறாத நிலையில் சந்­தே­கத்தின் பேரில் எவரோ எமது பெயர்­களை கொடுத்­துள்­ளனர் எனத்­தெ­ரி­விக்கும் இவர்கள் அனை­வரும் குறித்த சம்­ப­வத்தின் விளை­வாக கைது செய்­யப்­பட்­டமை சிறை­யி­லி­ருந்­தமை தற்­போது வழக்­குக்கு அலைந்து திரிந்து கொண்­டி­ருப்­பதால் மன­ரீ­தி­யாக பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

சில இளை­ஞர்கள் தலை­ந­கரில் தொழில் பார்த்­தாலும் வழக்கு தின­மன்று கட்­டாயம் நீதி­மன்றில் ஆஜ­ராக வேண்­டி­யி­ருப்­பதால் விடு­முறை பெற்­றுக்­கொள்­வ­திலும் சிக்­கல்கள் எனத்­தெ­ரி­விக்­கின்­றனர். இந்த வழக்கு விசா­ரணை கார­ண­மாக பலரும் தம்மை சந்­தே­கக்­கண்­கொண்டு பார்ப்­ப­தா­கவும் நிரந்­த­ர­மான தொழில் ஒன்றை பெற்­றுக்­கொள்­வதில் சிர­மங்கள் உள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

சிறை­யி­லி­ருக்கும் தமிழ் அர­சி­யல்­கை­தி­களின் நிலை குறித்து இப்­போது அனை­வரும் பேசு­கின்­றனர். இதில் அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் அக்­க­றை­யுள்­ள­வர்கள். அவர் தலை­வ­ராக உள்ள தமிழ் முற்­போக்­குக்­கூட்­டணி சார்பில் எமது மண்­ணி­லி­ருந்து தெரி­வாகி தற்­போது ுந்து தெரிவாகி தற்போது அமைச்சராக இருக்கும் பி.திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோர இது குறித்து பிரதமர் ரணில் மற்றும் ஜனாதிபதி மைத்ரி ஆகியோரிடம் பேசி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்து அல்லது பொது மன்னிப்பை பெற்றுத்தர ஆவண செய்வார்களா என கோரிக்கை யை ஊடகங்கள் மூலம் விடுத்திருந்தனர்.

அமைச்சர் மனோவின் முயற்சி
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு இது தொடர்பில் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது இந்த இளைஞர்கள் மீதுள்ள வழக்கின் நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சு நடத்தியதாக அறிவித்தார். அது குறித்த விளக்கங்களை தனக்கு உடன் வழங்குமாறு பிரதமர் ,பிரதி சட்டமா அதிபருக்கு பணித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை இந்த வழக்கு விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வரும் இளைஞர்கள் அனைவரையும் தான் விரைவில் சந்தித்து இதற்கான தீர்வை பெறுவதற்கு முயற்சி செய்வதாக அமைச்சர் மனோ கணசன் தெரிவித்தமையானது இவர்களின் விடுதலை குறித்து நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates