பதுளை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் மூத்த தொழிற்சங்கவாதியுமான கே.வேலாயுதம் (65) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
அண்மையில் இந்தியாவுக்கு சென்ற அவர் அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் நீண்டகாலம் தொழிற்சங்க துறையில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் கடந்த அரசில் முதன் முறையாக ராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பையா வேலாயுதம் இன்று (2015.10.13) மாலை இந்தியா சென்னை அப்பலோ மருத்துவ மனையில் காலமானார நீண்டகாலமாக சுகவீனம் அடைந்திருந்த அவர் சிகிச்சைக்காக இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையிலேயே மரணமடைந்தார் 1950.04.06 ஆம் திகதி பிறந்த இவர் 04 ஆண் பிள்ளைகளின் தந்தையாவார். உடபுஸ்ஸல்லாவையை பிறப்பிடமாகவும் பதுளையை வசிப்பிடமாக கொண்ட அவர் ஊவா கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். மாகாணசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். . காலம் சென்ற காமினி திசாநாயக்காவுடன் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் தொடர்ந்து 43 வருடங்கள் ஐ.தே.கட்சின் தொடர் அங்கத்தவராக இருந்துள்ளார்.
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளராகவும். பல சமூக அமைப்புகளுடன இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா. திருஞானம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...