Headlines News :
முகப்பு » » ”கல்வியில் மக்கள் பங்கெடுப்பதற்கான வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்” சம்மேளனத்தின் கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார்

”கல்வியில் மக்கள் பங்கெடுப்பதற்கான வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்” சம்மேளனத்தின் கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார்


அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கு- கண்டி
(இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்)

கடந்த ஞாயிறு (07.06-2015) இலங்கை கல்விச் சமூக சம்மேளனர் அதிபர் தரம் 111 போட்டிப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கை  கண்டியில் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில்  ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் கண்டி வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு. பி. ஸ்ரீதரன் கலந்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் ” கண்டி  பிரதேசத்தில் கல்வித் துறையில் வாண்மைத்துவ அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் இங்கு வந்து இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவது வரவேற்றக்கத்தக்கது.  கல்வித் துறை மேம்பாட்டுக்கான பயிற்சிகள்  பாடசாலைக்குள்ளேயும் வெளியேயும் இடம்பெறுகின்றன. தற்காலத்தில் கல்வித் துறைச் சார்ந்தவர்கள் புதிய வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வாண்மைத்துவ அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இடமளிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வகையான செயலமர்வுகள் பரீட்சையை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல் கல்வித் துறைச் சார்ந்த அபிவிருத்திகளை நோக்கியும் பயணிக்க வேண்டும். இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் இப் பணியை சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவ்வமைப்பினருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து அவா்களது பணி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்“ என்றார்.

சம்மேளனத்தின் நோக்கு, அதன் இயங்குதளம் குறித்து உரையாற்றிய சம்மேளனத்தின் கல்விக் குழு தலைவர் எஸ். குமார் தமது உரையில்

”மக்களிடம் ஒரு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தேவைப்படும் கலாசார மாற்றத்தை கல்வித் துறையினூடாக ஏற்படுத்துவதற்கான மக்கள் பங்கேற்க கூடிய வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.ஒரு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் ஜனநாயக தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டுமானால் உறுப்பினர்கள் விவாதிப்பதற்கும், தங்களது கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதற்குமான திறந்த வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒருவகையில் இவ்வகையான செயலமர்வுகளின் ஊடாக இத்தகைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றோம். எமது இத்தகைய செயற்பாடுகள்  நாகரிகமிக்க சமுதாயத்தின் ஒரு பகுதி தேவையையாவது உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனபதை ஒரு துளி கர்வமும் இல்லாமல் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம்.   "எனக் குறிப்பிட்டார்.

சம்மேளனத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் விளக்கினார்.வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அதிபர்கள் சார்பில் திருவாளர்கள் மகேஸ்வரன்  கலந்துக் கொண்டார். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின்  உப தலைவர். ஆர். திலிப்குமார், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், கலாசாரக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீறிஸ்கந்தராஜா,  கண்டி பிரதேச இணைப்பாளர் எஸ்.இரட்ணகுமார் ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் செயலமர்வில் கலந்துக் கொண்டனர்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates