பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
தேயிலை மற்றும் இறப்பர் விலைகள் வரலாறு காணாத வகையில் சரிவை பதிவு செய்துள்ளதை தொடர்ந்து உற்பத்தி செலவீனம் பெருமளவு அதிகரித்திருந்த நிலையில் கடந்த வருடத்தில் (2014) இறப்பர் மற்றும் தேயிலை ஆகியவற்றின் மீது 19 பெருந்தோட்ட கம்பனிகளும் 2850 மில்லியன் ரூபாவரை நஷ்டத்தை பதிவு செய்துள்ள-தாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மேலும் தெரிவிக்கையில், 2014 இன் இறுதியில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் தேயிலைக்கு அண்ணளவாக 30 ரூபா சரிவை பெருந்தோட்டக் கம்பனிகள் பதிவு செய்-திருந்தன. சராசரி உற்பத்தி செலவு என்பது 455 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், தேறிய விற்பனை சராசரி பெறுமதி 425 ரூபாவாக பதிவாகியிருந்தது. இறப்பரை பொறுத்தமட்டில் கிலோ ஒன்றின் மீதான இழப்பு 35 ரூபாவைவிட அதிகமாக காணப்-பட்டமை குறிப்பிடத்தக்கது. சராசரி உற்பத்தி செலவு 327 ரூபாவாக காணப்பட்டதுடன் தேறிய விற்பனை சராசரி பெறுமதி 292 ரூபாவாக பதிவாகியிருந்தது.
2015ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாத காலப்பகுதியினுள் கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் சராசரி தேயிலை விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக தற்-போது இந்த நிலைவரம் மேலும் மோசமடைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் பதிவாகி-யிருந்த விலைகளுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் விலைகள் மேலும் வீழ்ச்சிய-டைந்திருந்தன. உற்பத்தி செலவீனம் இந்த காலப்பகுதியில் பெருமளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
2015 பெப்ரவரி மாதம் கொழும்பு தேயிலை ஏல விற்பனையில் பதிவாகியிருந்த சராசரி தேயிலை கிலோ ஒன்றின் விலை 418 ரூபாவாகும். இது 2014 பெப்ரவரி மாதம் பதிவாகியிருந்த 482 ரூபாவுடன் ஒப்பிடுகையில் 64 ரூபா சரிவு என்பது குறிப்பிடத்தக்-கது.
2013 பெப்ரவரி மாதத்தில் இந்தப் பெறுமதி 423 ரூபாவாக பதிவாகியிருந்தது. சில பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் விற்பனையாகிய தேயிலை கிலோ ஒன்றின் மீது 50 ரூபாவுக்கு மேல் இழப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை கருத்து தெரிவிக்கையில், புறக்காரணிகள் காரணமாக தேயிலை சந்தை தற்போது பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. நிலையாண்மையுடன் இயங்குவது என்பது பெரும் சிக்கலான நிலையாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் வெவ்வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை சர்வதேச தேயிலை ஏல விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 2 அமெரிக்க டொலர்கள் எனும் விலையில் விற்பனையாகின்றன. இதன் காரணமாக பெருமளவான விற்பனையாளர்கள் குறைந்த விலையில் காணப்-படும் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.
எமது தேயிலை விலை சாதாரணமாக கிலோ ஒன்றுக்கு 3 அமெரிக்க டொலர்க-ளாகவும் அதைவிட சற்று அதிகமாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில் எமது பெருந்தோட்டங்களைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்களின் உடனடி வாழ்வாதாரம் மற்றும் பிழைப்பு ஆகியன அபாயகரமான நிலையை எதிர்நோக்கியுள்-ளன. எமது நாளாந்த செயற்பாடுகளை கையாள்வது தொடர்பில் நாம் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளோம் என்றார். "சகலரும் உற்பத்தி திறன் மேம்படுத்தல் தொடர்பில் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறான பங்களிப்பு வழங்கப்ப-டாத சந்தர்ப்பத்தில் துறையில் சரிவிலிருந்து மீட்சிப்பெற முடியாது. துறையில் எதிர்-கால நிலைத்திருப்பு என்பது பெருமளவில் தொழிலாளர்களின் கரங்களில் தங்கியுள்ளது. அவர்களின் நாளாந்த பங்களிப்புகளை அவர்கள் இலகுவாக அதிகரித்து இந்த உற்பத்தி செலவீனத்தை குறைத்துக்கொள்ள உதவலாம். இதன் மூலம் எம்மால் சர்வதேச சந்-தையில் மீண்டும் போட்டிகரத் தன்மை வாய்ந்த நிலையை எய்த முடியும்.
தற்போது உலகளாவிய ரீதியில் எமது உற்பத்தி செலவீனம் மிகவும் உயர்வாக அமைந்துள்ளது. எமது தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது” என அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ஒரு ரூபாவை அதிகரிக்கும்பட்சத்தில் தேயிலை உற்பத்தி செலவு கிலோகிராம் ஒன்றுக்கு 52 சதத்தால் அதிகரிக்க செய்யும் என அவர் சுட்டிக்-காட்டினார்.
தேயிலைக்கான கேள்வி வரலாற்று ரீதியில் பெரும் சரிவை எதிர்நோக்கியுள்ள நிலையில் கொள்வனவாளர்கள் தற்போது குறைந்த தர தேயிலையை குறைந்த விலையில் கொள்வனவு செய்கின்றனர். இதன் காரணமாக பெருந்தோட்டக் கம்பனிக-ளுக்கு மேலதிக சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாராந்த தேயிலை ஏல விற்பனைக-ளின்போது பெருந்தோட்டக் கம்பனிகள் தமது கடன் வாங்கல்களை அதிகரித்து சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என ரொஷான் ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.
எமது தொழிலாளர்களுக்கு மாதமொன்றில் 25 நாட்களுக்கான வேலையை வழங்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதுடன் இறப்பர் விலையைவிட உற்பத்தி செலவு அதிகமாக காணப்படுகின்றது என லங்கெம் தேயிலை மற்றும் இறப்பர் பெருந்தோட்-டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் பீரிஸ் தெரிவித்தார். எதிர்வு கூறல்க-ளுக்கு அமைவாக இந்த ஆண்டிலும் விலைகளில் உயர்வு ஏற்படாது என கணிப்பிடப்-பட்டுள்ளது.
தேயிலை விலைகளின் மீதான சரிவு என்பது பல காரணங்களினால் ஏற்பட்டுள்-ளது. ரஷ்யா, மத்திய கிழக்கு மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளில் நிலவும் அமைதி-யற்ற சூழ்நிலை இதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து ஏற்-றுமதி செய்யப்படும் 70 சதவீதமான தேயிலை இந்த நாடுகளை சென்றடைகின்றன. எண்ணெய் விலைகளில் ஏற்பட்டுள்ள சடுதியான சரிவு காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளமையும் இராணுவ செயற்பா-டுகள் அதிகரித்துள்ளமையும் அந்நாட்டின் நாணயத்தின் பெறுமதிகளி ல் சரிவை ஏற்ப-டுத்தியுள்ளது. இதன் காரணமாக இலங்கை ேதயிலைவிலைகள்மீட்சிப்பெறமுடியாதநிலையை எதிர்நோக்கியுள்ள சர்வதேச சந்தையில் இறப்பர் விலைகள் சரிவடைந்துள்ள நிலையில் அவற்றின் விலைகளும் விரைவில் அதிகரிக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...