மூவாயிரம் ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில்
தமது பெயரை பதித்துக்கொள்ள முண்டியடித்துக்கொண்டிருக்கின்ற நூறு நாள் வேலைத்திட்ட
அரசியலில் முதலில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகளை வெளியிட்ட பிறகு நேர்முகப்
பரீட்சையை நடத்தும் திகதியை தீர்மானிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மூவாயிரம்
ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர்
ஆறுமுகன் தொண்டமானின் பணிப்பின் கீழ் ஆரம்பத்திலிருந்து இந்த விடயத்தை கையாண்டதன்
காரணமாக சில விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. இவ் ஆசிரிய உதவியாளர் நியமனத்தை
வைத்து சிலர் அரசியல் ரீதியான அறுவடையை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் இந்த பரீட்சைக்கு
தோற்றிய பரீட்சார்த்திகளின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாது அரசியல் இலக்குகளை
மையப்படுத்தி நியமனங்களை வழங்க முற்பட்டால் எதிர்மறையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய
நிலை ஏற்படும். அத்துடன் இவ்விடயத்தை சரியாகவும் நேர்மையாகவும் கையாளாவிட்டால்
எதிர்வரும் நாட்களில் பரீட்சைக்கு தோற்றியவர்களை அழைத்து நியாயம் கேட்க தயார்படுத்தவேண்டிய
நிலையும் ஏற்படும். பரீட்சைக்கு விண்ணப்பித்த ஒவ்வொருவரும் இந்த பரீட்சைக்காக பணம்
செலுத்தியுள்ளனர். தமது பரீட்சை பெறுபேற்றை அறிந்துகொள்வதற்கு அந்தந்த பரீட்சார்த்திகளுக்கு
உரிமை இருக்கிறது. பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள்
கோரப்பட்டிருந்ததால் பாடசாலைகளையும், அந்தந்த
பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகளையும் வெளியிட்டு
நேர்முகப் பரிட்சையை நடத்துவது என கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுர திசாநாயக்கவின்
தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதை புதிய
நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தாமல் நேர்முகப்பரீட்சைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம்
மலையகத்தில் படித்துவிட்டு வேலையை எதிர் பார்த்து காத்திருக்கின்ற பல்லாயிர
க்கணக்கான இளைஞர், யுவதிகளின் எதிர்பார்பை உதாசீனம்
செய்யும் வகையில் அமையாமல் திறமை அடிப்படையில் நியாயமாக அமை யவேண்டும் எனவும்
கணபதி கனக ராஜ் தெரிவித்துள்ளார்.
பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாத
நிலையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான தமிழ் மொழி மூல ஆசிரியர் உதவியாளர்களை
தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை இடம்பெற உள்ளமை தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமையானது விண்ணப்பதாரிகளிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாகவும்
கூறப்படுகின்றது.
மலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கென்று
தமிழ்மொழி மூல ஆசிரிய உதவியாளர்கள் மூவாயிரத்து 24 பேரை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியில்
இடம்பெற்றது தெரிந்ததாகும். இப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கமையவும் ஏனைய தகுதிகளையும்
பெற்றவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விண்ணப்பதாரிகள் பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர்.
இதற்கிடையில் அண்மையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட
போதும் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையே காணப்படுகின்றது.
இதற்கிடையில் மலையக பெருந் தோட்ட ஆசிரிய உதவியாளர்களை தெரிவு செய்வதற்கான
நேர்முகப் பரீட்சைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை பிரதான இடங்களில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப பதுளை, கண்டி, நுவரெலியா, களுத்துறை,
இரத்தினபுரி போன்ற இடங்களில் நேர்முகப் பரீட்சைகள்
இடம்பெற உள்ளன. இதற்கான கடிதங்கள் சில விண்ணப்பதாரிகளுக்கு கிடைத்துள்ள அதேவேளை
மேலும் சிலருக்கு நேர்முக பரீட்சைக்கான கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும்
தெரிய வருகின்றது. நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் ஆசிரிய உதவியாளர்களுக்கு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியளவில் நியமனங்கள் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பரீட்சை பெறுபேறுகளை விண்ணப்பதாரிகள்
எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்று ஒரு தொகுதியினர் நேர்முகப் பரீட்சைக்கு
அழை க்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரிகளிடையே குழப்ப நிலை தோன்றியுள்ளது. பரீட்சை
பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் நேர் முக பரீட்சைகள் இடம்பெற்றிருந் தால் அது பொருத்தமாக இருந்திருக்கும்
என்று விண்ணப்பதாரிகள் கருதுகின்றனர். இவ்விடயம் தொட ர்பில் கல்வி இராஜாங்க
அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் கவனத் திற்கும் கொண்டு வந்துள்ளதாக
விண்ணப்பதாரிகளில் சிலர் தெரி விக்கின்றனர். அரசியல் தொழிற் சங்க பேதங்களுக்கு
அப்பால் தகுதி யானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் இவர்கள் வலி
யுறுத்துகின்றனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...