நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத்
தொடர்ந்து ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றிக் கொண்டுள்ளது.
மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்னா ண்டோ
புதிதாக தமிழ்க் கல்வி அமை ச்சை உருவாக்கி அதன் பொறுப்புக்களை வடிவேல் சுரேஷிடம்
ஒப்படைத்துள்ளார்.
20 வருடங்களின் பின்னர் ஊவா மா காண
சபையில் மீண்டும் தமிழ்க் கல்வியமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாகாணத்திலுள்ள
203 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும் ஆளணி மற்றும்
பெளதீக வளங்களுடன் அபிவிரு த்திப் பாதையில் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.
தமிழ்க் கல்வி அமைச்சர் வடிவேல் சுரேஷ்
மாகாணத்தில் தனியான தமிழ்க் கல்விப் பிரிவை ஏற்படுத்துவதற்குரிய நட வடிக்கைகளில்
ஈடுபட்டுள்ளார். இந்நடவடிக்கையின் மூலம் மாகாணம் வலயம் மற்றும் கோட்ட மட்டங்களில்
தமிழ்க் கல்விப் பணிப்பாளர்கள் முறையான ஒதுக் கீடுகளுக்கு அமைவாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களின் பதவிகளுக்குரிய
அதிகாரங்களுடன் கடமையாற்றவும் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.
ஊவாவின் தமிழ்க் கல்வி கடந்த காலங்களில்
பின்னடைவை கண்டிருந்தது. க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் என்பவற்றில் கல்வி
கற்ற மாணவர்க ளின் பரீட்சைப் பெறுபேறுகள் சிங்கள மொழி மூல கற்கை மாணவர்களின் பெறுபேறுகளுடன்
ஒப்பிடுகையில் வீழ்ச்சிப் போக்கைக் காட்டியிருந்தது.
மாகாணத் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில்
முழுமையான உயர்தர வகுப்புக்களுக்குரிய கணித, விஞ்ஞானப் பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்காமையினால் உயர்தர வகுப்புக்களில்
கணித, விஞ்ஞான பாடங்களைத் தெரிவு செய்து கற்க விரும்பிய
மாணவர்கள் வெளிமாவட்டங்களில் உள்ள பாடசாலையிலே தங்கியிருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருந்தது.
மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை
நிலவியது மட்டுமன்றி, பல பாடசாலைகள் பெளதீக வளப்பற்றாக்குறையுடன்
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன. இவ்வாறான பிரச்சினைகளுக்கு
தீர்வை விரைவாகப்பெற்றுக் கொள்ளும் வாய்ப்புத் தமிழ்க் கல்வி அமைச்சு மாகாணத்தில்
ஏற்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் உருவாகியுள்ளது.
ஊவா மாகாண தமிழ் மொழிப் பாடசா லைகளுக்கு தேசிய அரசாங்கத்தால் வழங்
கப்படவுள்ள 956 ஆசிரிய உதவியாளர் நியமனத்திற்கு புறம்பாக
மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சின் மூலமாக 1000 ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும்
20ஆம் திகதிக்கு முன்னர் வெளிவரவுள்ள தென தமிழ்க் கல்வியமைச்சர் வடிவேல்
சுரேஷ் தெரிவித்திருக்கின்றார்.
இதன் மூலம் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில்
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான
சந்தர்ப்பத்தில் ஆரம்பப்பிரிவு பாடசாலைகள் தொட்டு உயர்தர பாடசாலைகள் வரை முறையான
வேலைத்திட்டத்துடன் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைக்கக்கூடிய நிலைமை உருவா கும். பாடசாலைகளின்
கல்வித் தரமும் பரீட்சைப் பெறுபேறுகளும் உயர்வு நிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதுளை மாவட்டத்திலுள்ள 5 தமிழ் மொழி மூல உயர்தர பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகள்
ஸ்தாபிக்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்காக கல்வி இராஜாங்க அமைச்சரின் ஆலோசகர் அ.
அரவிந்த் குமாரும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மாகாணத்திலுள்ள அதிபர்களுடன் நடத்தியிருந்தார்.
இங்கு முக்கிய நகர் பகுதிகளை மையப்படுத்திய வகையில் பாடசாலைகளில் இப்பிரிவுகள் தாபிக்கப்படவுள்ளமையானது
அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத் தியுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் 100 நாள் வேலை த்திட்டத்தில் பாடசாலைகளின் பெளதீக வளங்களை விரிவுபடுத்துவதற்கும் தேவை யான முக்கிய வளங்களைப் பெற்றுக்
கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. பாடசாலைகளில் விளையா ட்டு மைதானங்களை
அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜா ங்க
அமைச்சர் கே.வேலாயுதம் தமது அமைச்சின் பெருந்தோட்ட காணிகள் உள்ளடங்குவதால் பெருந்தோட்டப் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குரிய 2 ஏக்கர் காணிகளை 100 நாள் வேலைத்திட்டத்தில்
முறையான ஆவணங்களுடன் பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக
குறிப்பிட்டிருக்கின்றார்.
பாடசாலைக்குரிய காணிகளை முறையான ஆவணங்களுடன் பாடசாலை நிர்வாகங்களின் கீழ் கொண்டுவராத அதிபர்கள் உரிய ஆவணங்களுடன் கைத்தொழில் இராஜாங்க அமைச்சரை அணுகுவதன் மூலம் காணிப்பிரச் சினைக்கு தீர்வினை
பெற்றுக் கொள்ளக் கூடிய
நிலை உருவாகியுள்ளது.
அத்தோடு அமைச்சர் வேலாயுதம் க.
பொ.த.சாதாரண வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளுக்கு முழுமையான கணி னிப் பிரிவை ஏற்படுத்தவும் தமது அமை ச்சின்
மூலம் 100 நாள் வேலைத்திட்
டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளில் காணப்படும் தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படவுள்ளன.
பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியால யம், அப்புத்தளை தமிழ் மகா வித்தியால யம் என்பவற்றில் முழுமையான கணித,
விஞ்ஞான பிரிவுகள் தாபிக்கப்பட்டவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் மூலம் மாகாணத்திலுள்ள மாணவர்கள் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வியை அதிகளவில் தொடர வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த காலங்களைப்போல் அல்லாது தேசிய அரசாங்கத்தில்
அங்கம் வகிக்கும் மலையக அமைச்சர்கள் ஒன்றிணைந்து சமூகத்தின் அபிவிருத்திக்காக பணியாற்
றத் தொடங்கியுள்ளனர். மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் தேசிய மற்றும்
மாகாண அரசாங்கங்களிலிருந்து உதவிகள் இவர்களூடாகக் கிடைக்கின் றமை மகிழ்ச்சிக்குரிய
விடயமாகும்.
மாகாண தமிழ் கல்வியமைச்சர் வடிவேல்
சுரேஷ், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க
அமைச்சர் வேலாயுதம், கல்வி இராஜாங்க அமைச்சரின் ஆலோசகர் அரவிந்த்
குமார் ஆகியோர் பாடசாலைகளின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பு வழங்குவது தமிழ் மொழி மூல
பாடசாலைகளின் கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்வதற்கு வழிவகுக்கும்.
இச்சந்தர்ப்பத்தை முறையாக பயன்படுத்தி
கொண்டு எமது சமூகம் கல்வியில் உயர் நிலையை அடைவதன் மூலம் ஊவா வில் உள்ள மலையக
சமூகம் விரை வான தளமாற்றத்தை
காண்பதற்கான வாய்ப்புக் கள் அதிகளவில் உள்ளன. இதையுணர்ந்து அனைவரும் செயற்பட
வேண்டியது அவசியமாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...