மலையகத்தில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெறுகி வருகின்றமையை காணலாம். குறிப்பாக வீடுகளிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும், தோட்ட முகாமைத்துவத்தின் கீழும் பல்வேறுபட்ட இன்னல்களை இவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் தொழில் நிமித்தம் பெண்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும், வன்முறைகள் மற்றும் சுரண்டல்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு இலங்கையின் சட்டத்தொகுப்பில் பல்வேறுபட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
அவ்வாரான ஏற்பாடுகளை மலையக பெண்களுக்கு மாத்திரமன்றி அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் முகமாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. அந்தவகையில் தனியார் மற்றும் அரசாங்க ,பெருந்தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்குறிய சட்ட பாதுகாப்பானது பின்வருமாறு காணப்படுகின்றது.
ஒரு பெண்ணை இரவு வேளைகளில் வேலைக்கு அமர்த்த கூடாது. அவ்வாறு பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமாயின் பின்வரும் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அவர் இரவு வேளைகளில் வேலைகளில் ஈடுபடுத்த கூடாது. இவ் ஏற்பாட்டிற்கு எதிராக வேலைகளில் ஈடுபடுத்துவது தண்டனைக்குறிய குற்றமாகும்.
இரவு பத்து மணிக்கு பிறகு ஒரு பெண்ணை வேலையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் தொழில் ஆணையாளரிடமிருந்து அதற்குறிய எழுத்திலான உத்தரவை பெற வேண்டும்.
காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை வேலையில் ஈடுபடு:த்தப்பட்ட பெண்ணொருவர் இரவு பத்து மணிக்கு பிறகு வேலையில் ஈடுபடுத்த கூடாது.
இரவு வேளைகளில் ஈடுபடுத்தப்படும் பெண்ணொடுவருக்கான ஊதியம் சாதாரண நேரத்தில் வழங்கப்படும் ஊதியத்திலும் பார்க்க 2ஃ1 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
இரவு நேரத்தில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்களின் நலனை கவனிப்பதற்காக பெண் மேற்பார்வையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும்.
பேண் தொழிலாளர்களுக்கு இளைப்பாரும் அறை, சிற்றுண்டிசாலை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். (தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு, வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்களுக்கு)
எந்தவொரு பெண் தொழிலாளியும் ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு அதிகமாக இரவு நேரத்தில் வேலையில் ஈடுபடுத்தப்படல் தடைசெய்யப்பட்டுள்ளது. (ஆனால் மலையகத்தில் இருந்து தலைநகர் பகுதிகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் மாதம் முழுவதும் 15 நாட்களுக்கு அதிகமாக இரவு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.)
மேற்கூறிய வகையில் பெண்களை தொழில் ரீதியாக சுரண்டுவதில் இருந்து பாதுகாப்பு பெருவதற்கு இலங்கை சட்டத்தில் ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும் பெண்கள் மத்தியில் இச்சட்டங்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வின்மையால் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இன்று தலைநகர் பகுதிகளில் வீட்டு வேளைகளுக்காக சென்றுள்ள மலையக பெண்கள் அதிகாலை 04 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்ச்சியாக வேளைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுவதில்லை.
இவ்வாறு வேலைகளில் ஈடுபடுத்துவது பெண்களுக்கு எதிரான வன்முறைகளாகவே கணிக்கப்படுகின்றது. ஆகவே மேற்கூறிய சட்ட ஏற்பாடுகளை எமது சமூகத்திற்கு எடுத்து செல்வதற்கு, இக்கட்டுரையை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வது பெண்ணினத்தை வன்முறையில் இருந்து பாதுகாப்பதற்கு உங்களுடைய பங்களிப்பாக அமையும்.
நன்றி - கூக்குரல் முகநூல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...